நீயா? நானா?

போர் அடிக்குதா… இந்த `நீயா நானா’ எபிசோடுகளைப் பாருங்க!

16 வருடங்கள்… 500+ எபிசோடுகள்… கடந்து வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது நீயா நானா. இத்தனை வருடங்கள் கடந்து இன்றும் அதே ஸ்டைல், அதே ஆங்கர், அதே வரவேற்பு என மக்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. நீயா நானா ஷோ பிடிக்கும் எல்லாருக்குமே இருக்கும் ஒரே கேள்வி, ‘இந்த டாபிக்லாம் எப்படியா பிடிக்குறீங்க?’ என்பதே. விதவிதமான டாபிக் பிடிப்பதுதான் இந்த ஷோவின் வெற்றி ரகசியம். சொன்னால் நம்பமாட்டீர்கள் வெறும் ‘வார்த்தை’ என்கிற டாபிக்கிலேயே ஒரு நீயா நானா டிபேட் நடந்திருக்கிறது. நிறைய சீரியஸான, டாபிக்கலான டாபிக்கில் நீயா நானா விவாதித்திருந்தாலும் சில ஜாலியான, ரசனையான தலைப்புகளை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறோம். Watchlist ல போட்டு வச்சி போர் அடிக்கும்போது பார்த்துக்கோங்க.

காதலும் இசையும்

இசைக்கும் காதலுக்கும் எப்பவுமே ஒரு கனெக்சன் இருக்கும். அதைத்தான் இந்த நீயா நானாவில் பேசி.. ம்ஹூம் பாடியிருப்பார்கள். ஒரு பையன் பெண்கள் கூட்டத்துக்கு நடுவுல உக்காந்து என்னவளே பாடி வைரலானாரே அந்த எபிசோடுதான் இது. கண்டிப்பா பார்க்கலாம். செம ஜாலியா இருக்கும்.

https://www.hotstar.com/1000166701

தமிழ் பாய்ஸ் Vs நார்த் இந்தியன் கேர்ள்ஸ்

ஒரு ரகளையான எபிசோடு இது. அந்த பக்கம் நார்த் இந்தியன் கேர்ள்ஸ் அழகாக தமிழ் பாடல்கள் பாட, நம்ம பயலுக ‘துஜே தேக்கா தோயே’ என்று ஹிந்தி பாடலைக் கொன்னு எடுத்திருப்பார்கள். நார்த் இந்தியன் கேர்ள்ஸ்க்கு நம்ம பசங்ககிட்ட ரொம்ப பிடிச்ச குணம் எதுனு கேட்டா அசந்துடுவீங்க.

https://www.hotstar.com/1100034645

குழந்தைகளின் உலகம்

குழந்தைகளை பற்றிய டாபிக் என்றால் நீயா நானாவுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. இது அப்படியான ஒரு அல்வா எபிசோடு. நிலத்தை உழுவுறதுனா ஒரு வாண்டு நிலத்துல விழுகுறதுனு புரிஞ்சு வச்சிருப்பான். ஒரு பொடிசு சாதினா என்னானு கேட்டு பெரியவர்களை திகைத்த வைத்த சம்பவமும் இந்த எபிசோடில் நடந்தது.

https://www.hotstar.com/1000200957

தமிழ்நாட்டின் உணவுகள்

நீயா நானாவின் ஒரு பெஸ்ட் எபிசோடு இது. நீங்க வட தமிழ்நாடா? தென் தமிழ்நாடா? ஆக்சுவலா நீங்க எந்த சைடா இருந்தாலும் இந்த எபிசோடுல கெத்தா காலரைத் தூக்கிவிடும் சீனும் வரும். முக்காடு போட்டு தலைமறைவாகுற சீனும் வரும். ரெண்டு சைடும் ‘எங்க ஊரு உணவுதாண்டா பெஸ்ட்டு’ என்று வெறித்தனமாக சண்டை செய்திருப்பார்கள். Don’t miss.

https://www.hotstar.com/1100035413

மீம் கிரியேட்டர்கள்

நம்ம மீம் பாய்ஸ் கலந்துகொண்ட எபிசோடு. அதிரிபுதிரி ஹிட் அடித்த டாபிக் இது. சோசியல் மீடியால நாங்கள்லாம் ரவுடியாக்கும் என்று விரைப்பு காட்டிய மீம் கிரியேட்டர்களிடம் போலீஸை அனுப்பி பிராங்க் செய்தது நீயா நானா டீம். அத்தனை பேரும் அரண்டு போன அந்தக் காட்சியை கண்டிப்பா பார்க்கலாம்.

https://www.hotstar.com/1000161612

திருக்குறள் ஸ்பெஷல்

சமயங்களில் டிபேட் இல்லாமல் ரெண்டு பக்கமும் ஒரே விஷயத்தை பேசுவார்கள். அப்படி ஒரு டாபிக் இது. டீசர்ட் போட்ட இளைஞர்கள் திருக்குறளை இவ்வளவு கொண்டாடுறாங்களா? என்று உங்களை ஆச்சர்யப்படுத்தும். ஒவ்வொரு குறளையும் அவர்கள் ரசித்துச் சொல்லும் அழகே அழகு.

https://www.hotstar.com/1000052356

செல்லப் பிராணிகள்

செல்லப்பிராணிகள் என்றால் நாய் வளர்ப்பார்கள், பூனை வளர்ப்பார்கள். இவர்கள் வளர்க்கும் மிருகங்களையெல்லாம் கேட்டால் ஆத்தாடி ஆத்தா…! தமிழ்நாட்டில் இப்படியும் ஆளுங்க இருக்காங்களா என்று வியந்து போவீர்கள்.

https://www.hotstar.com/1100011213

கவுண்டமணி Vs வடிவேலு

கவுண்டமணியா? வடிவேலுவா? யார் பெருசுனு அடிச்சுக்காட்டு என்று ரசிகர்கள் மல்லுக்கட்டிய டாபிக். இரண்டு காமெடி லெஜண்டுகளைப் பற்றிப் பேசும்போது காமெடிக்கு பஞ்சம் இருக்குமா என்ன? விழுந்து விழுந்து சிரிக்கலாம். அவ்வளவு ஜாலியான எபிசோடு.

https://www.hotstar.com/1000185778

அறிஞர் அண்ணா

நீயா நானா அவ்வப்போது விவாதங்களின்றி சில லெஜண்டுகளைக் கொண்டாடும். அப்படி ஒரு பெஸ்ட் டாபிக் இது. பேரறிஞர் அண்ணா பற்றி வேறு ஒரு வடிவத்தில் காட்சிப்படுத்திய மிக முக்கியமான எபிசோடு. அரசியல் ஆர்வமிருப்பவர்கள் நிச்சயம் மிஸ் பண்ணக்கூடாத எபிசோடு.

https://www.hotstar.com/1000193947

பெண்களும் இசையும்

என்னுடைய பெர்சனல் ஃபேவரிட் இந்த டாபிக். காலேஜ் கேர்ள்ஸூம் இல்லத்தரசிகளும் இரு அணியாகப் பிரிந்து தங்களுடைய இசை ரசனையை பகிரும் சூப்பரான எபிசோடு. ஒரு அம்மா வீட்டில் யாருமில்லாத போது டாடி மம்மி வீட்டில் இல்ல பாட்டு கேட்பேன் என்று சொல்வது, தங்களுக்குப் பிடித்த காதல் பாடல்களை பகிர்வது என்று ஆரம்பம் முதல் இறுதி வரை ரசனையாக இருக்கும். பார்த்து ரசியுங்கள்.

https://www.hotstar.com/1000070188

Also Read : அறிமுகம், பீக், இப்போ…. எப்படி இருக்காங்க இந்த 16 பேரும்!? #TimeTravel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top