`எஸ், அவரு இந்திய சேனலுக்கு பேட்டிக் கொடுக்குறாரு!’ – யாரா இருக்கும்? கொஞ்சம் கெஸ் பண்ணுங்க. சரி ஒரு சின்ன க்ளூ தர்றேன். தென்கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல இசைக்குழு ஒன்றின் உறுப்பினர் அவர். இப்போ யாருனு தெரியுதா? சரி அந்த இசைக்குழு என்னனு கண்டுபிடிச்சிங்களா? நெஜமா சொல்லுங்க, பி.டி.எஸ் இசைக்குழுனுதான நினைச்சீங்க. அவங்க இல்லை. சரி அவங்க யாருனு சொல்றேன்.’எக்ஸோ’ இசைக்குழுவைச் சேர்ந்த ‘எக்ஸோ கை’தான் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி சேனலுக்கு பேட்டிக் கொடுக்க இருப்பதாகப் பேசிக்கிறாங்க. கொரியன் இசைக்குழுக்களை தெரிஞ்சவங்களுக்கு எக்ஸோ இசைக்குழுவையும் நன்றாக தெரியும். கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி எக்ஸோ கை, சக்ஷ்மா ஸ்ரீவஸ்தவா என்ற பத்திரிக்கையாளருக்கு பேட்டி கொடுக்க இருப்பதாக பேச்சுகள் வருவதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள எக்ஸோ ஃபேன்ஸ் மகிழ்ச்சியில் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
எக்ஸோ இசைக்குழு
தென்கொரியா மற்றும் சீனாவைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் இணைந்த இந்த இசைக்குழுவை எம்.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. கே-பாப் இசையின் மன்னர்கள் என இந்த இசைக்குழுவைக் குறிப்பிடலாம். Suho, Xiumin, Lay, Baekhyun, Chen, Chanyeol, D.O, Kai, மற்றும் Sehun என மொத்தம் ஒன்பது பேர் இந்த எக்ஸோ குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஒன்பது பேர் கொண்ட இசைக்குழு எக்ஸோ-கே மற்றும் எக்ஸோ-எம் என இரண்டு குழுவாக உள்ளது. உலகில் மிகப்பெரிய ஆண்கள் இசைக்குழுவில் இதுவும் ஒன்று. 2014-ம் ஆண்டு முதல் எக்ஸோ குழு தனித்துவம் வாய்ந்த இசைக்குழுவாக உள்ளது. இந்தக் குழுவைச் சேர்ந்த பிரபல பாடகர், டான்ஸர், மாடல் என பல திறமைகளை உள்ளடக்கியவர்தான், எக்ஸோ கை.
Also Read : `உலகையே கலக்கும் பி.டி.எஸ் இசைக்குழு!’ – யார் சாமி இவங்க?
எக்ஸோ கை
தென்கொரியாவில் உள்ள சன்சியோன் பகுதியில் ஜனவரி 14-ம் தேதி 1994-ம் ஆண்டு எக்ஸோ கை பிறந்தார். இவரின் உண்மையான பெயர் கிம் ஜாங் இன். தி நட்கிரேக்கரின் பாலட் நடனங்களை சிறுவயதில் பார்த்த இவர், தன்னுடைய மூன்றாம் வகுப்பில் இருந்து பாலட் நடனங்களை கற்க ஆரம்பித்துள்ளார். தன்னுடைய நான்காம் வகுப்பில் ஜாஸ் இசை நடனங்களை ஆட ஆரம்பித்தார். எக்ஸோ-கை சிறுவயதில் டேக்வன்டோ மற்றும் பியானோ கற்க வேண்டும் என்பது அவரின் பெற்றோர்களின் ஆசையாக இருந்துள்ளது. பெற்றோர்களின் உந்துதலோடு 2007-ம் ஆண்டு தன்னுடைய 13 வயதில் எஸ்.எம் நிறுவனத்தோடு இணைந்து பணியாற்ற ஒப்பந்தமானார். ஆரம்பத்தில் ஹிப் ஹாப் பயிற்சி பெற்ற இவர் பின்னாட்களில் கே பாப் இசையையும் கற்றுக்கொண்டார். XOXO, Exodus, Ex’Act, The War,Don’t Mess Up My Tempo, Obsession, Countdown போன்ற ஆல்பங்களை எக்ஸோ இசைக்குழு வெளியிட்டுள்ளது. அவற்றில் பல பாடல்கள் மக்கள் மத்தியில் பரவலாக வரவேற்பைப் பெற்றது. எக்ஸோ கை-யின் `Mmmh’ பாடல் அவரது ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் பாடல். 2021-ம் ஆண்டு வெளிவந்த கை-யின் Peaches பாடல் அவரது ரசிகர்களின் மற்றுமொரு ட்ரீட்டாக அமைந்தது.
எக்ஸோ கை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
கை-யின் பாடலுக்கு மட்டுமல்ல அவரது நடனத்துக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். நிஜ வாழ்க்கையில் எக்ஸ்ட்ரீம் கியூட்டாகவும் மேடையில் பீஸ்டாகவும் கை இருப்பார் என அவரது ரசிகர்கள் சொல்வது உண்டு. பாலிவுட் நடிகரான டைகர் ஷெராஃப் எக்ஸோ கை-யின் மிகப்பெரிய ரசிகர்.
எக்ஸோ கை மிகவும் எளிமையான மனிதர், அமைதியானவர், கூச்ச சுபாவம் மற்றும் சாஃப்ட்டானவர் என கூறப்படுவதுண்டு.
தன்னுடைய உதட்டை கடிக்கும் பழக்கம் உடையவர் கை.
பாடல், நடனம் ஆகியவற்றைத் தாண்டி வீடியோ கேம் விளையாடுவதில் எக்ஸோ கைக்கு மிகப்பெரிய ஆர்வம் உண்டு.
எக்ஸோ கைக்கு ‘kkamjong’ என்ற பட்டப்பெயரும் உண்டு. இதற்கு `Dark Skin’ என்று பொருள்.
எக்ஸோ இசைக்குழு இடைவேளையில் இருக்கும்போது பைக் ரைடு, புத்தகம் படிப்பது, பாடல்கள் கேட்பது, நடனம் ஆடுவது மற்றும் யூ டியூப் வீடியோக்கள் செய்வது ஆகியவற்றில் நேரத்தை செலவிடுவார்.
பி.டி.எஸ் குழுவைச் சேர்ந்த ஜிமின் மற்றும் கை இருவரும் நெருங்கிய நண்பர்கள். கை, எக்ஸோ குழுவை விட்டு வெளியேறி பி.டி.எஸ் குழுவில் இணைய இருப்பதாகக்கூட வதந்திகள் உண்டு.
கை-யின் ரோல் மாடல் ‘மைக்கேல் ஜாக்ஸன்’.
பி.டி.எஸ் குழுவுக்கு இணையாக ரசிகர்களை வைத்து, சமூக வலைதளங்களில் கலக்கிக்கொண்டிருக்கும் எக்ஸோ கைதான் இந்திய ஊடகத்துக்கு பேட்டி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ஜாய் பண்ணுங்க எக்ஸோ கை ஃபேன்ஸ்!
Also Read : பி.டி.எஸ் டீமின் கேப்டன் ஆர்.எம் பற்றிய 21 சுவாரஸ்ய தகவல்கள்!