கூகுள் சாம்ராஜ்யத்தையே சில ஸ்வைப்புகளில் காலி செய்து கொண்டிருக்கிறார்கள் Gen Z (அதாம்பா, நம்ம ஊர் வழக்கத்துல சொல்ற 2K kids) இளைஞர்கள். அப்படி என்ன செய்திருக்கிறார்கள், கூகுளுக்கு அதனால் என்ன நட்டம் என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக, 80s, 90s கிட்களுக்காக ஒரு சின்ன டிக்சனரி விளக்கம்.
Gen Z/2K kids என்றால் என்ன?
1997-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் என ஒரு விளக்கமும், 1990-ம் ஆண்டுகளின் மத்தியில் இருந்து 2010ற்குள் பிறந்தவர்கள் என இன்னொரு விளக்கமும் உண்டு.
இவர்களுக்கு Zoomers, 2K kids, digital natives என்று இன்னும் பல பெயர்களும் உண்டு.
அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு கலை, இலக்கியம், சினிமா, வணிகம் அத்தனையையும் கட்டியாளப்போகும் தலைமுறையும் இதுதான்.
கூகுளின் சாம்ராஜ்யத்தில் அப்படி என்ன சேதாரத்தை இந்த Gen Z/2k kids செய்துவிட்டார்கள்?
கூகுள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அதன் சேவைகளைப் பயன்படுத்துபவர்களைப் பற்றியும் இணையத்தைப் பயன்படுத்துபவர்களைப் பற்றியும் சில ஆய்வுகளை மேற்கொள்ளும். அந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அவர்களுடைய சேவைகளில் என்ன விதமான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற முடிவுகளை எல்லாம் இந்த Big data analytics அடிப்படையில் தான் முடிவெடுப்பார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் எடுத்த ஒரு ஆய்வு முடிவு கூகுள் நிறுவனத்தைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது. இணையத்தைப் பயன்படுத்தும் நாற்பது சதவிகித அளவிலான இந்த Gen Z இளைஞர்களும்/இளைஞிகளும் ஒரு விஷயத்தைத் தேடுவதற்கு கூகுளைப் பயன்படுத்துவது இல்லையாம்.
கூகுள் சர்ச் இன்ஜினைப் பயன்படுத்தாமல், Duck Duck Go, Bing போன்ற சேவைகளைப் பயன்படுத்துவார்களாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அங்குதான் நம்ம Gen Z/2k Kids வித்தியாசப்படுகிறார்கள்.
ஒரு விஷயத்தைத் தேடுவதற்கும், ஒரு இடத்தைத் தேடுவதற்கும் கூகுள் போன்ற சர்ச் இன்ஜின்களைப் பயன்படுத்தாமல், Instagram, Tik Tok (இந்தியாவில் தான் டிக் டாக் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், உலகம் முழுக்கவே இன்னும் டிக் டாக் ஹிட்தான்) போன்ற சேவைகளைத் தான் பயன்படுத்துகிறார்கள்.
இதுல எப்டிணே லைட் எரியும்னு செந்தில் மாதிரி அப்பாவியா நீங்க யோசிக்குறீங்களா…? அப்போ நீங்க கண்டிப்பா 80s, 90s kids தான்.
இதற்கு முந்தைய தலைமுறை எதையெல்லாம் கொண்டாடினார்களோ அதையெல்லாம், ப்ப்ப்ப்பூ… இவ்வளவுதானா என உடைத்துப் போடுவதும்… எதையெல்லாம் முந்தைய தலைமுறை பயன்படுத்தியதோ அதையெல்லாம் வேறு விதமாகப் பயன்படுத்தி திகிலைக் கூட்டுவதையுமே இந்த Gen Z, 2K கிட்ஸ் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படித்தான், கூகுளை சர்ச் இன்ஜினாகப் பயன்படுத்தாமல் இன்ஸ்டாகிராமையும் டிக்டாக்கையும் பயன்படுத்தி கூகுள் நிறுவனத்தின் தலைமையில் இருப்பவர்களை ஆட்டம் காண வைத்திருக்கிறார்கள்.
Also Read : Yahoo வீழ்ந்தது ஏன்… எங்கே சறுக்கியது அதன் பிஸினஸ்?
இதனால் கூகுளுக்கு என்ன நஷ்டம்?
இந்த GenZ-க்கள் தான் அடுத்த 15-20 வருடங்களுக்கு கலை, இலக்கியம், சினிமா, ஒட்டு மொத்தமாக வணிகத்தை ஆளப்போகிற சந்தை. அதிலும் டிஜிட்டல் சந்தையே இவர்களை நம்பித்தான் இருக்கிறது. இவர்களைக் கவராத, இவர்களை ஈர்க்காத எந்த ஒரு புராடெக்டும், பொருளும் மதிப்பிழந்து போகும்.
Digital Natives-களான இந்த 2K kids-களில் 40 சதவிகித GenZ-க்கள் கூகுளைப் பயன்படுத்தாதது அடுத்த பத்து ஆண்டுகளில் கூகுளுக்கு மிகப்பெரிய சரிவைத் தரும்.
இவர்களைக் கவரும் விதமாக இனி கூகுளில் பல மாற்றங்களைத் திட்டமிடுவார்கள். அவை என்னென்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள் என கமெண்ட் செய்யுங்கள்.
x0gmhn