Siri வாய்ஸ் அசிஸ்டெண்ட் ஐபோன் வைத்திருப்பவர்களின் டார்லிங். சிரியை உருவாக்கியவர்களின் ஒருவரான Dag Kittlaus தனக்குப் பெண் குழந்தை பிறந்தால் ‘சிரி’ என்று பெயர் வைக்க நினைத்தார். சிரி என்றால் ‘வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் பெண்’ என்று அர்த்தம். அது அவருடன் பணியாற்றிய பெண்ணின் பெயராம். ஆனால் அவருக்கு ஆண் குழந்தைதான் பிறந்தது. பிறகு தான் உருவாக்கிய வாய்ஸ் அஸிஸ்டெண்ட்டுக்கு ‘சிரி’ என்று பெயர் சூட்டினார். இந்தப் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு பிடிக்கவே இல்லையாம். ‘இதுக்கு மேல வேற நல்ல பெயரா யோசிக்க முடியலை இதுவே இருக்கட்டும்’ என்று வேறு வழியில்லாமல் ஓக்கே சொன்னாராம் ஜாப்ஸ்.
Also Read : 12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை!