1990களில் டிவி வீடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. கறுப்பு, வெள்ளையிலிருந்து கலருக்கு டிவி மாறியதன் சாட்சியாக 90ஸ் கிட்ஸ்கள் வலம்வந்தனர். ஞாயிற்றுக்கிழமைதோறும் தூர்தர்ஷனில் சக்திமான் தொடங்கி வெள்ளிக்கிழமைகளில் ஒலியும் ஒளியும் வரை பார்த்து வளர்ந்தவர்கள் சன் டிவியில் மாயாவி மாரீசனையும் விஜய் டிவியில் காத்து கறுப்பையும் பின்னாட்களில் ரசித்தனர்.
டிவி நிகழ்ச்சிகள் அளவுக்கு விளம்பரங்களுக்கும் தனி ரசிகர் வட்டம் இருந்தநிலையில், பல விளம்பரங்களின் பாடல்களும் இசையும் இன்றும் பலருக்கு மனதுக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. அந்தவகையில் 1990களின் இறுதி தொடங்கி டிவி பிரபலமான தொடக்க காலகட்டம் முதல் சாட்டிலைட் சேனல்களின் ஆதிக்கத்தின் ஆரம்பகால கட்டத்தில் ஒளிபரப்பான விளம்பரங்கள் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு நினைவிருக்கிறது. பத்து சிம்பிள் கேள்விகள் மூலம் தெரிஞ்சுக்கலாம் வாங்க…
[zombify_post]