ரஜினி - அஜித்

`இது அதுல்ல..’ ‘அண்ணாத்த’ vs `விஸ்வாசம்’ போஸ்டர் ஒப்பீடு

`விஸ்வாசம்’ ப்ளாக்பஸ்டருக்குப் பிறகு இயக்குநர் சிவா ரஜினியுடன் இனைந்திருக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சமீபத்தில் வெளியான மோஷன் போஸ்டரில் ‘விஸ்வாசம்’ பட சாயல் இருப்பதாக சில விமர்சனங்களும் எழத்தான் செய்தது.  இந்த இரண்டு பட போஸ்டர்களில் உள்ள சில ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் பற்றி பார்க்கலமா?

ஒற்றுமை நம்பர் 1 : வெள்ளை வேட்டி

`அண்ணாத்த’ ரஜினி
`அண்ணாத்த’ ரஜினி

இயக்குநர் சிவாவுக்கு ஹீரோக்களை வெள்ளை வேட்டி சட்டையில் காட்டுவதென்றால் மிகவும் பிடிக்கும்போல. ஸ்டைஷான ‘விவேகம்’ படத்தில்கூட ஒரு காட்சியில் அஜித்தை வேட்டி சட்டையில் காட்டியிருப்பார் சிவா. அந்தவகையில் ‘விஸ்வாசம்’ படத்தில் எப்படி அஜித்தை முழுக்க முழுக்க வெள்ளை வேட்டி சட்டையில் காட்டியிருந்தாரோ அதேபோல இதில் ரஜினியையும் வெள்ளை வேட்டி உடைகளில் காட்டியிருக்கிறார்.

ஒற்றுமை நம்பர் 2 : பைக்கும் ஹெல்மெட்டும்

‘அண்ணாத்த’ மோஷன் போஸ்டரில் ரஜினி ஹெல்மெட் அணிந்து பைக்கில் வருவதுபோன்ற அதே ஸ்டைலில்தான் ‘விஸ்வாசம்’ படத்தின் போஸ்டர்கள் பலவும் இருக்கும். பொதுவாக அஜித் பைக் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஹெல்மெட் இல்லாமல் தோன்றமாட்டார். அவரிடமிருந்து இதைக் கற்றுக்கொண்ட சிவா, ரஜினிக்கும் அதை அப்ளை செய்திருக்கிறார்.

`அண்ணாத்த’ ரஜினி
`அண்ணாத்த’ ரஜினி

ஒற்றுமை நம்பர்-3 : அரிவாள்

கிராமத்துப் படம் என்றால் அரிவாள் இல்லாமலயா..? அதுவும் சிவா படம் என்றால் கேட்க வேண்டுமா..இந்தப் பட போஸ்டர்களிலும் ‘விஸ்வாசம்’ பட போஸ்டர்களைப் போலவே அரிவாள் இருக்கத்தான் செய்கிறது.

ஒற்றுமை நம்பர்-4 : டெக்னிக்கல் டீம்

‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்த அதே கூட்டணியுடன்தான் ‘அண்ணாத்த’ படத்துக்கும் களம் கண்டிருக்கிறார் சிவா. அதனாலேயே மோஷன் போஸ்டரிலேயே ‘எ ஃபிலிம் பை சிவா & டீம்’ என மறக்காமல் அவர்களுக்கும் கிரெடிட் கொடுத்திருக்கிறார் சிவா. படத்தின் இசையமைப்பாளர் இமான் தொடங்கி, ஸ்டில் ஃபோட்டோகிராஃபர் சிற்றரசுவரை அனைவருமே ‘விஸ்வாசம்’ படத்தில் பணியாற்றியவர்கள். இதுவே இந்தப் படத்தின் போஸ்டர் தொடங்கி, அவுட்புட் வரைக்கும் ‘விஸ்வாசம்’ சாயல் அடிக்க பெரிதும் காரணமாக அமைந்திருக்கிறது.

சரி, இந்தா போஸ்டர்களில் வேற்றுமைகளே இல்லையா.. நிச்சயமாக பெரிய அளவில் இல்லை. இருந்தாலும் தேடிப் பார்த்தவகையில் இந்த இரண்டு வேற்றுமைகள் எங்கள் கண்ணில் பட்டிருக்கிறது. (வேறு ஏதாவது உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட் பாக்ஸில் நிச்சயம் தெரிவிக்கவும்)

`அண்ணாத்த’ ரஜினி
`அண்ணாத்த’ ரஜினி

வேற்றுமை நம்பர் -1 : இரண்டு விதமான தோற்றம்

‘விஸ்வாசம்’ பட போஸ்டர்களில் அஜித் கருப்பு தாடி-மீசை, வெள்ளை தாடி-மீசை என இரண்டு விதமான தோற்றங்களில் வந்திருப்பார். ஆனால், ‘அண்ணாத்த’ படம் தொடர்பான வெளியான அனைத்து போஸ்டர்களிலும் ரஜினி ஒரே தோற்றத்திலேயேதான் இருக்கிறார்.

வேற்றுமை நம்பர்-2 : ஜிப்பா

‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு வேட்டி சட்டை கொடுத்த சிவா, இந்தமுறை ரஜினிக்கு வேட்டியும் ஜிப்பாவும் கொடுத்திருக்கிறார். அதுவும் படத்தின் இரண்டாம் பாதியில் மட்டும்தான் அந்த தோற்றத்தில் வருவார் என தெரிகிறது.

இதுபோக, வேறு என்னனென்ன ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் ‘அண்ணாத்த’ படத்தில் இருக்கிறதென படம் தீபாவளிக்கு வெளியாகும்வரை காத்திருப்போம்.

Also Read – `அமராவதி’ அஜித்; `வலிமை’ அஜித் – 6 வித்தியாசங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top