கமல்ஹாசன்

கமலின் டாப் 10 கெட்டப்கள்! (பகுதி-1)

தென்னிந்திய சினிமாவில் கெட்டப் என்றால் கமல்.. கமல் என்றால் கெட்டப் என்றாகிவிட்டது. பெரும்பாலான ஹீரோக்களுக்கு மெனக்கெட்டு நடிப்பது சிரமம் என்றால் கமலுக்கோ மெனக்கெடல் இல்லாமல் நடிப்பதுதான் சிரமம். அப்படிப்பட்ட கலைஞன் தரித்த மிகச்சிறந்த பத்து கெட்டப்களைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் சிரமமான காரியம்தான் இருப்பினும் முயற்சி செய்கிறோம். (குறிப்பு : இவை தரவரிசைப் பட்டியல் அல்ல)

அப்பு – ‘அபூர்வ சகோதரர்கள்’

`அப்பு’ கமல்
`அப்பு’ கமல்

சாதாரண டபுள் ஆக்சன் காட்சிகளையே தத்ரூபமாக எடுக்க தமிழ் சினிமா தடுமாறிவந்த காலகட்டத்தில்தான் கமல், இரண்டு கேரக்டர் அதில் ஒன்று குள்ளம் என இரண்டு கெட்டப்களை வடிவமைத்து அதை தத்ரூபமாக நடித்தும் காட்டியிருப்பார். படத்தில் அந்த குள்ள கமல் கேரக்டர் கால் மேல் கால் போட்டெல்லாம் நடித்தது எப்படி போன்ற ‘அப்பு’ கேரக்டரின் சீக்ரெட்ஸ்களை இன்னமும் யாராலும் விளக்கமுடியாத ரகசியமாகவே இருந்துவருகிறது என்பதெல்லாம் கமல் செய்த தரமான சம்பவம்.

சிவம் – ‘அன்பே சிவம்’

`அன்பே சிவம்’ கமல்
`அன்பே சிவம்’ கமல்

‘அன்பே சிவம்’ படத்தில் வரும் இரண்டு கெட்டப்களில் ஒன்றான சிவம் கெட்டப் மிகத் தனித்துவமானது. முகம் எங்கும் தழும்புகள், துண்டு விழுந்த மீசை, கோனல் வாய், ஒற்றைக்கால் மட்டும் குட்டை என கமல் அந்த கெட்டப்பில் அசத்தியிருப்பார்.  அந்த கெட்டப்பில் கமல் அணிந்திருக்கும் பவர் கண்ணாடியானது உண்மையிலேயே அதிக பவர் கொண்டதாம்.   அந்த கண்ணாடியை கொஞ்ச நேரம் அணிந்துபார்த்த மாதவனுக்கு உடனே தலைவலி வந்துவிட்டதாம். அப்படிப்பட்ட கண்ணாடியை அணிந்துகொண்டுதான் படம் முழுக்க நடித்திருக்கிறார் கமல்.

சேனாபதி – ‘இந்தியன்’

`இந்தியன்’ கமல்
`இந்தியன்’ கமல்

இந்தியாவில் முதன்முறையாக ப்ராஸ்தெட்டிக் மேக்கப்பை அறிமுகப்படுத்தியது கமல்தான். அது ‘இந்தியன்’ பட சேனாபதி கேரக்டருக்குத்தான். சரி, ப்ராஸ்தெட்டிக் மேக்கப்தானே இதில் என்ன ஸ்பெஷல் இருக்கிறதென நினைக்கிறீர்களா.. ப்ராஸ்தெட்டிக் மேக்கப் போட்டுக்கொள்ள வேண்டுமென்றால் அதிகாலை 4 மணிக்கு மேக்கப் போட ஆரம்பித்தால் அடுத்த 4 மணி நேரத்துக்கு கொஞ்சம்கூட அசையமுடியாது. அதன்பிறகு மேக்கப்பை கலைக்கும்வரை திரவ உணவு மட்டும்தான் எடுத்துக்கொள்ள முடியும். சாதாரணமாக இருப்பதுபோல பேசவோ, சிரிக்கவோ முடியாது. அதையெல்லாம்விட ப்ராஸ்தெட்டிக் மேக்கப் போட்டிருக்கும்போது அவ்வளவாக முகத்தில் உணர்ச்சிகளை காட்டியும் நடிக்கமுடியாது. இந்த இன்னல்களையெல்லாம் தாண்டிதான் கமல், சேனாபதிக்கு உயிர் தந்திருப்பார்.

ஷண்முகி மாமி – ‘அவ்வை ஷண்முகி’

`அவ்வை ஷண்முகி’ கமல்
`அவ்வை ஷண்முகி’ கமல்

இந்த கெட்டப்பும் ப்ராஸ்தெட்டிக் மேக்கப் உதவியுடன்தான். ஆனால் ப்ராஸ்தெட்டிக் மேக்கப் இருந்துவிட்டால் யார் வேண்டுமானாலும் இந்த ஷண்முகி மாமி கெட்டப்பை போட்டுவிட முடியுமா என்ன..? அச்சு அசல் ஒரு பேரிளம் பெண்ணுக்குரிய உடல் மொழியையும் பாவத்தையும் வழங்கி நடிக்க கமலால் மட்டும்தானே முடியும். போதாதென்று பெண் குரலிலும் அவரே பேசி அசத்தியிருப்பார். அந்த குரலில் ஒரு பாட்டும் வேறு. ஹப்ப்ப்ப்பா!!!

வேலு நாயக்கர் – ‘நாயகன்’

`நாயகன்’ கமல்
`நாயகன்’ கமல்

கமலின் மற்ற கெட்டப்களைக் காட்டிலும் நாயகன் படத்தில் அவ்வளவு மெனக்கெடல்கள் இல்லைதான் ஆனால், ஒரே படத்தில் வேலு நாயக்கரின் இளமைப்பருவம் தொடங்கி முதுமைப்பருவம் வரைக்குமான தோற்ற மாறுபாடுகளை அதற்கு முன்புவந்த எந்த தமிழ் சினிமாவிலும் பார்த்திருக்க முடியாது.  அந்தந்த வயதுக்கேற்ப நடக்கும் நடைத் தொடங்கி, உடல் மொழி, நிற்கும் தொணி ஏன் அழுகைவரைக்கும் வேறுபாடு காட்டியிருப்பார் கமல்.

Also Read – சின்னத்திரை டு வெள்ளித்திரை – கோலிவுட்டில் கலக்கும் 5 ஹீரோயின்கள்!

11 thoughts on “கமலின் டாப் 10 கெட்டப்கள்! (பகுதி-1)”

  1. Remarkable! Its actually remarkable piece of writing, I have got
    much clear idea concerning from this piece of writing.

    Have a look at my webpage: vpn

  2. Wow, incredible blog format! How lengthy have you ever been blogging for?
    you make running a blog look easy. The full glance of your web site
    is magnificent, as well as the content!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top