baby lying near dog plush toy

“பிறந்த குழந்தைகளுக்குப் பொருட்கள் வாங்கும்போது என்ன பண்ணலாம்… பண்ணக் கூடாது!?” – அலர்ட் பெற்றோர்களே…

குடும்பத்தில் குழந்தை பிறக்கப் போகிறது என்று தெரிந்து விட்டாலே அனைவருக்கும் மகிழ்ச்சி தான். மேலும் பெற்றோர்கள் தங்கள் குடும்பத்திற்கு வரவிருக்கும் புது வரவிற்கு என்ன வாங்குவது என்று சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். பிறக்கப் போகின்ற குழந்தைக்கு மற்றும் பிறந்த குழந்தைக்கு என்றே பல வகையிலான பொம்மைகளை கடைகளில் விற்கிறார்கள். 

அவற்றில் குழந்தைக்குத் தேவையானதாகவும், கவனமாகவும் தேர்வு செய்து வாங்க வேண்டும். நீங்கள் ஒரு சில விஷயங்களைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொண்டால்  குழந்தைக்கு வாங்கி வைத்து, வரவேற்கத் தயாராகலாம். 

குழந்தைகளுக்கான பொம்மைகள் எப்படி வாங்கலாம்?
Photo by Singkham on Pexels.com

சிறு துணியாக இருந்தாலும், அது பருத்தியால் ஆனதாகவும், நல்ல காற்றோட்டம் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதுவே குழந்தையின் மேனிக்கு ஏற்றது.

ஏனென்றால் பிறந்த குழந்தையின் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும். 

குறிப்பாகப் பிறந்த குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் மற்றும் மலம் கழிப்பார்கள். அதனால் எளிதாகச் சுத்தம் செய்யப் பருத்தி போன்ற இயற்கையான பஞ்சால் ஆன படுக்கையாக வாங்க வேண்டும். 

வண்ணமயமான பொம்மைகளை வாங்கித் தரலாம். மேளம் அடிப்பது,  பீப்பி ஊதுவது, டிக் டிக் சத்தம் வருவது, மென்மையான இசையைக் கொண்டிருப்பது போன்ற பொம்மைகளாக இருக்கலாம். இவை  குழந்தைகளுக்கு உற்சாகமளிக்கும்.

 கனமான மற்றும் கூர்மையான பகுதிகள் உள்ள பொம்மைகளைத் தவிர்த்து விடுங்கள். 

குழந்தைகளின் வயதுக்கேற்ற பொம்மைகளை வாங்கிக் கொடுக்க வேண்டும். ‘வளர்ற பிள்ளைதானே’ என வயதுக்கு மீறிய பொம்மைகளை வாங்கிக் கொடுக்க வேண்டாம். அந்தப் பொம்மைகளைக் கையாள்வதில் இருக்கும் சிரமங்கள் குழந்தைகளைச் சோர்வடையச் செய்யும். 

குழந்தைகளுக்கான பொம்மைகளை எப்படி வாங்கலாம்?
Photo by Alexandr Podvalny on Pexels.com

க்ரியேட்டிவிட்டி மற்றும் கற்றலை ஊக்கப்படுத்தும் பொம்மைகளை வாங்கிக் கொடுங்கள். அதே சமயம் ஏற்கனவே வாங்கிக் கொடுத்த பொம்மைகளை மீண்டும் வாங்கிக் கொடுக்காதீர்கள்.

எப்போதும் குழந்தைகளுக்குத் துணிகளால் ஆன டயப்பரை பயன்படுத்துவது மிக நல்லது. ஏனெனில், புதிதாய் பிறந்த குழந்தையின் சருமம் என்பது மிகவும் sensitive-ஆக இருக்கும். நல்ல கம்பெனி டயப்பரைத் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது.

கீழே விழுந்தால் எளிதில் உடையாத பொம்மைகளாகத் தேர்வு செய்வது நல்லது. உறுதியான பொம்மைகள் நீண்ட நாட்கள் நீடித்து உழைக்கும். குழந்தைகளுக்குப் பிரியமான பொருளாகவும் இருக்கும். 

Also Read : பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி… பெற்றோர்கள் செய்ய வேண்டியதென்ன?

குழந்தை உடைய கைக்கு அடக்கமாக இருக்க வேண்டும் என்று சிறிய பொருளாக வாங்கித்தரக் கூடாது. கார் பொம்மையாக இருந்தால் சக்கரம், கதவு, ஸ்டீயரிங் போன்றவை தனியாக வரும் பட்சத்தில் அளவில் சிறியதாக இருக்கும் போது அவை குழந்தையின் வாய்க்குள் சென்றுவிட வாய்ப்பு உண்டு. 

குழந்தைகளுக்கான குறுக்கெழுத்துப் புதிர்கள், வடிவங்களை வரிசைப்படுத்தும் பெட்டி, எண் மற்றும் எழுத்துக்களின் புதிர்கள், கட்டுமான தொகுதிகள் போன்ற பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம். 

குழந்தையைப் பிடிக்க மற்றும் தூக்கிச் செல்லத் தோதாகப் பெரிய துண்டுகளை வாங்க வேண்டும். சற்று கெட்டியான பஞ்சு போன்ற துண்டு ஒன்றையும் தயாராக வாங்கிவிடவும். இதைக் குழந்தை குளித்த பிறகு துவட்டப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிறந்த குழந்தைக்கு எப்போதும் கதகதப்பான சூழல் சற்று அதிகமாகவே தேவைப்படும். தாய் எப்போதும் அரவணைத்துக் கை அல்லது மார்பு சூட்டில் வைத்துக் கொண்டே இருக்க முடியாது. இது போன்ற கை உரை மற்றும் கால் உரைகளைக் குழந்தைக்கு அணிந்து விடுவதால், குழந்தை பாதுகாப்பான உணர்வோடு இருக்க முடியும்.

இன்று கொசுக்களின் தொல்லை மிக அதிகம். பிறந்த குழந்தைகள் கூட டெங்கு, மலேரியா போன்ற நோய்களுக்கு ஆளாகுகின்றனர். இதைத் தவிர்க்க ஒரு நல்ல கொசுவலையையோ, அதனுடன் சேர்ந்த தொட்டிலோ வாங்கலாம்.

மிகப் பிரகாசமான மின்சார விளக்குகள் மற்றும் பெருத்த ஒலியுடன் இருக்கும் பொம்மைகள் பிள்ளைகளின் கற்பனைத் திறனைப் பாதிக்கும்.

அழகான பொருட்களைக் காட்டிலும் உடல் ஆரோக்கியத்தைக் குறைக்காத தரமான பொருட்களைத் தேர்வு செய்வதே முக்கியம். 

10 thoughts on ““பிறந்த குழந்தைகளுக்குப் பொருட்கள் வாங்கும்போது என்ன பண்ணலாம்… பண்ணக் கூடாது!?” – அலர்ட் பெற்றோர்களே…”

  1. I would like to thnkx for the efforts you have put in writing this blog. I am hoping the same high-grade blog post from you in the upcoming as well. In fact your creative writing abilities has inspired me to get my own blog now. Really the blogging is spreading its wings quickly. Your write up is a good example of it.

  2. naturally like your web site but you have to test the spelling on quite a few of your posts. A number of them are rife with spelling problems and I in finding it very troublesome to tell the reality however I will certainly come back again.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top