தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி சார்புல கலைஞரின் நூற்றாண்டு விழால ரஜினி பேசும்போது சீட்கள் காலியா இருந்துச்சுனு ஒரு குரூப்பும் இல்ல அப்படியெல்லாம் நடக்கவே இல்லனு ஒரு குருப்பும் கம்பு சுத்திட்டு இருக்காங்க. உண்மைல நிகழ்ச்சில என்ன நடந்துச்சு… நேர்ல பார்த்த வகையில சில விஷயங்களை இந்த வீடியோல பகிர்ந்துக்கிறோம்.
ஏற்பாடுகள்
கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்துல பங்ஷன்… அந்த இடத்துல இருந்து பல கிலோ மீட்டர்கள் முன்னாடி இருந்தே பாதுகாப்பு ஏற்பாடுகளை நம்மால பார்க்க முடிஞ்சது. பார்வையாளர்கள் ஒவ்வொரு செக்ஷனுக்கும் ஒரு பார்க்கிங். ரேஸ்கோர்ஸ் மைதானத்தை ஒட்டிய எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி, போலீஸ் குவார்ட்டர்ஸ், வேளச்சேரி ரோட்ல மைதானத்தோட சுற்றுச்சுவரை இடிச்சு கார் பார்க்கிங்குனு வழினு ஏற்பாடுகள் சிறப்பா பண்ணிருந்தாங்க. டிராஃபிக்கை ஒழுங்குபடுத்துறல இருந்து வர்றவங்களை சரியா பாஸ் வைஸ் பிரிச்சு அனுப்புற வரை போலீஸ், வாலண்டியர்ஸ்னு பக்காவான ஸ்கெட்ச். விஐபிகள் தவிர பிளாட்டினம், டைமண்ட், கோல்டு, சில்வர்னு 20,000 பார்வையாளர்களுக்கான இருக்கைகளோட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்துச்சு. பைக், காரை பார்க் செய்துவிட்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து போய் அமர வேண்டிய நிலை இருந்தது. பார்வையாளர்கள் முறையா உள்ளேபோய் உட்காருர வரைக்கும் சரியா செஞ்சிருந்தாங்க. 4 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும்னு சொல்லப்பட்டிருந்துச்சு. ஆனா, ஈவெண்டோட முக்கிய நிகழ்ச்சியா இயக்குநர் விஜய் டைரக்ட் பண்ணிருந்த டாகுமெண்ட்ரி போட்டு ஆரம்பிக்குறப்போ மணி ஆறரையைத் தாண்டியிருந்துச்சு. அதேமாதிரி நிகழ்ச்சி நள்ளிரவு பண்ணிரெண்டைத் தாண்டிதான் முடியவே செஞ்சது.
செலிபிரெட்டீஸ்
ரஜினி, கமல் தொடங்கி சூர்யா, தனுஷ், பார்த்திபன், வடிவேலு, அருண் விஜய், சூரி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் வரை தமிழ் திரைப்பட உலகின் பல முக்கிய பிரபலங்கள் கலந்துக்கிட்டிருந்தாங்க. சூர்யா பேசும்போது, கலைஞர் அரசியலை கலையாவும் கலையை அரசியலாவும் பார்த்தவர்னு சொன்னதோட கைரிக்ஷாவையும் ஒழிச்சவர்னு புகழாரம் சூட்டுனாரு. தனுஷ் பேசும்போது முதன்முதலில் அவரை சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அதேமாதிரி, கமல் பேசுகையில் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தின்போது தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளைப் பாராட்டியதோடு கலைஞருடனான பல அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். கலைஞரோட தாக்கத்தாலதான் மக்களோட நேரடி தொடர்புல இருக்கணும்னு பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறேன்னும் பகிர்ந்துக்கிட்டார் கமல்.
ரஜினி
ரஜினியோட ஸ்பீச் கலைஞர் 100 நிகழ்வோட ஒன் ஆஃப் தி ஹைலைட்னே சொல்லலாம். கிட்டத்தட்ட 19 நிமிஷங்களுக்கு மேல பேசுன அவரு கலைஞருடனான பல நெகிழ்ச்சி தருணங்களைப் பகிர்ந்துக்கிட்டாரு. முதன்முதலில் கலைஞரின் கான்வாய்க்காக வழிவிட்டது தொடங்கி பல தரமான சம்பவங்களை அவர் சொல்லச் சொல்ல கிரவுட் சைட்ல இருந்து செம ரெஸ்ஃபான்ஸ். அதுல ஹைலைட்னு பார்த்தா ஒரு சம்பவத்தைச் சொல்லலாம், `கலைஞர் எப்பவும் ஒரு நடிகர்கூடதான் படம் பார்ப்பாரு. தேர்தல் வாக்குப்பதிவு அன்னிக்கு இப்படி ஒரு படம் பார்க்க ஏற்பாடு பண்ணிருந்தாங்க. அன்னிக்கு ஓட்டுப் போட்டுட்டு வெளில வந்து அவர் அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டிருக்கதா சொன்னது வைரலாகிருச்சு. ஈவ்னிங் கலைஞரோட படம் பார்க்க இருந்த சம்பவத்தையே அந்த நடிகர் மறந்திருந்தாரு. ஈவ்னிங் வைரமுத்துகிட்ட இருந்து போன் வந்து அவர் ஞாபகப்படுத்தவும் அந்த நடிகர் அதைத் தவிர்க்க நினைச்சு குளிர் காய்ச்சலா இருக்குனு சொல்லிருக்கார். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு நீங்க வந்ததாதான் படமே போடணும்னு கலைஞர் சொல்றாருனு சொன்னதும், அதைத் தவிர்க்க முடியாம நேர்ல போயிருக்காரு அந்த நடிகர். அப்போ அவரைப் பார்த்து குளிர் காய்ச்சல்னு சொன்னீங்களாமே சூரியன் பக்கத்துல உக்காருங்க, எல்லாம் சரியாயிடும்னு சொல்லிருக்காரு. அந்த நடிகன் நான்தான்’னு ரஜினி சொல்லி முடிக்கும்போது மொத்த கிரவுடும் ஆர்ப்பரிச்சுச்சு.
கே.எஸ்.ரவிக்குமார் ஸ்கிட்
விழாவோட முக்கியமான ஹைலைட்டே கலைஞரோட தசாவதாரம்னு டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பண்ண ஸ்கிட்தான். இதுல வந்த சீன்ஸ்ல ஒவ்வொரு சீன்லயும் கலைஞரா ஒவ்வொருத்தர் வந்தாங்கங்குறதோட, அந்த மொத்த ஸ்கிட்லயும் கலைஞர் கேரக்டர் வொயிட் அண்ட் வொயிட்ல வர மத்த மொத்த க்ரூவும் பிளாக்ல இருந்தது அட்டகாச பிளானிங். டைரக்டரோட ஸ்பெஷல் டச் அது. மிசால ஜெயில்ல இருந்த ஸ்டாலினைப் பார்த்து கலைஞர் பேசுற சீன்ல ஸ்டாலினா விதார்த்தும் கலைஞரா தம்பி ராமையாவும் பண்ண பெர்ஃபாமன்ஸைப் பார்த்து ஸ்டாலின் கண்கலங்கினார். அந்த ஒரு ஸ்கிட்ல இவங்க மட்டுமில்லாம கே.எஸ்.ரவிக்குமார், ரமேஷ் கண்ணா, கௌதம் கார்த்திக், மாஸ்டர் மகேந்திரன் உள்பட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இந்த ஸ்கிட் பத்தி ரஜினியே தன்னுடைய ஸ்பீச்சில் குறிப்பிட்டு பாராட்டியிருந்தார்.
Also Read – கொஞ்சம் வரலாறு… இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோற்ற முதல் தேர்தல்
பெர்ஃபாமன்ஸ்கள்
சாந்தி மாஸ்டர் ஒருங்கிணைத்த கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெற்ற கலை நிகழ்ச்சிகளோடு ஈவெண்ட் தொடங்கியது. சிலம்பாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் என ஆரம்பமே அதகளமாகத் தொடங்கியது. அதன்பிறகு, நடிகை லட்சுமி மேனன் டான்ஸ், ஜீவா பெர்ஃபான்ம் பண்ண ராப் சாங், கே.எஸ்.ரவிக்குமாரின் ஸ்கிட், எஸ்.ஜே.சூர்யா ஆக்ட், அதிதி ஷங்கரோட டான்ஸ்னு பல முன்னணி கலைஞர்களோட நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. அதேபோல, நெல்சன் டைரக்ஷன்ல சாயீஷா டான்ஸ் பிளஸ் ரெடின் கிங்ஸ்லியோட ஆக்டும் ஒரே பேக்கேஜா அரங்கேற்றமாச்சு. மேலும், கலைஞர் – எம்.ஜி.ஆர் – சிவாஜியா தம்பி ராமையா – சத்யராஜ் – நாசர் பண்ண ஒரு பெர்ஃபாமன்ஸும் இருந்துச்சு. கே.எஸ்.ரவிக்குமார் ஸ்கிட், லட்சுமி மேனன் டான்ஸ், ஜீவா – ரமேஷ் ராப் பெர்ஃபாமன்ஸ், அதிதி ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா பெர்ஃபாமன்ஸ்களுக்கு செலிபிரட்டீஸ் சைட்ல மட்டுமில்லாம ஆடியன்ஸ் சைட்ல இருந்தும் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்துச்சு. இடையில் டிரம்ஸ் சிவமணி – லிடியன் நாதஸ்வரம் காம்போவில் வந்த மியூசிக்கல் பெர்ஃபாமன்ஸையும் கிரவுட் முழுக்கவே ரசித்தார்கள்.
சொதப்பல்ஸ்
கலைஞர் ஏன் தனித்துவமான அரசியல்வாதினா அவரு ஒவ்வொரு ஜெனரேஷனுக்கு ஏத்தபடி கடைசில டிவிட்டர், ஃபேஸ்புக் டிரெண்ட் வரைக்கும் அப்டேட் ஆகிட்டே வந்தவரு. ஆனா, அவருக்கான விழாவா எடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சில இன்னிக்கு இருக்க யங்ஸ்டர்ஸுக்கான கனெக்டா எதுவுமே வொர்க் அவுட் ஆகலங்குறதுதான் நெசம். சுவாரஸ்யங்கள் எதுவும் இல்லாத டிரையான பிளானிங், வெறும் சாங் – பெர்ஃபாமன்ஸ்னு 20 வருஷத்துக்கு முந்தைய டெம்ப்ளேட் வொர்க் அவுட் ஆகலைனுதான் சொல்லணும். பார்வையாளர்களுக்கு வாட்டர் பாட்டில், ஃபுட் ஏற்பாடு பண்ணிருந்தாலும் அதை டிஸ்ட்ரிபியூட் பண்ணதுல ஏகப்பட்ட குளறுபடிகள். 4 மணிக்குத் தொடங்குறதா அறிவிக்கப்பட்டிருந்த ஈவெண்ட்ல ஃபுட், வாட்டர் பாட்டில் டிஸ்ட்ரிபியூஷன்ங்குறது சரியா எல்லார்கிட்டயும் போய் சேருறப்ப மணி பத்தரையைத் தாண்டிருச்சு. இதப் பார்த்தப்போ, `ஓபனிங் நல்லாத்தான்யா இருக்கு’ங்குற வடிவேலு டயலாக்தான் நியாபகத்துக்கு வந்துச்சு.
கலைஞர் 100 ஸ்பெஷல் லோகோவோட அச்சிடப்பட்டிருந்த ஃபுட் பாக்கெட்ல மில்க் லட்டு, ஒரு ஸ்வீட், கேரளா நேந்திரம் சிப்ஸ், ஒரு ஜூஸ் பாக்கெட் இருந்துச்சு. அதேமாதிரி ஒவ்வொரு ஸ்வீட்டும் தனித்தனி கவர்கள்ல இருந்ததோட அதுல ஒவ்வொண்ணுலயும் தமிழ் வாழ்கங்குறதோட மு.க-ங்குற கலைஞரோட இனிஷியல்ஸும் பொறிக்கப்பட்டிருந்துச்சு. லேட்டா டிஸ்ட்ரிபியூட் பண்ணதால, ஈவெண்ட்ல இருந்த வாட்டர் பாட்டில்ஸ், ஃபுட் பாக்கெட்டுகளை மக்கள் அதிக அளவுல அள்ளிட்டுப் போய்ட்டு இருந்ததையும் பார்க்க முடிஞ்சது. அதேபோல சரியான முறைல குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாததுனால கிரவுண்ட்ல ஆங்காங்கே சாப்பிட்டுட்டு குப்பைகளை மக்கள் அப்படியே போட்டுட்டுப் போயிருந்தாங்க. கே.எஸ்.ரவிக்குமார் ஸ்கிட் ஷோ அப்போ கலைஞர்கள் பலரோட மைக் வொர்க் ஆகாம டெக்னிக்கலாவும் பல பிரச்னைகள் இருந்துச்சு. அதுபோக, உடல்நிலை சரியில்லாம இருந்த முதல்வர் ஸ்டாலின் கிளம்புற நிலைமைல அதுக்காகவே ரஜினி, கமலை முன்னாடியே பேசவைச்சதோட நிகழ்ச்சியோட முக்கியமான நிகழ்வான மலர் வெளியீடு மாதிரியான விஷயங்களையும் முன்னாடியே முடிச்சாங்க. ஆனா, அதுக்கப்புறமும் நிகழ்ச்சி இருக்குனு சரியான முறைல பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்தாதுனால ஈவெண்ட் முடிஞ்சிருச்சோனு நிறைய மக்கள் குடும்பத்தோட வெளியேறுனதையும் பார்க்க முடிஞ்சது.
தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி நடத்துன கலைஞர் 100 நிகழ்ச்சி பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!