விக்ரம்னு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து அதிர வைச்சார் லோகேஷ் கனகராஜ். பல வருஷங்களா ஒளிஞ்சுக்கிட்டு இருந்த கமல் ரசிகர்கள் மறுபடியும் காலரை தூக்கிவிட்டு வலம் வந்தாங்க. பீஸ்ட்ல கொஞ்சம் அடி வாங்கின நெல்சன், ஜெயிலர்ல மறுபடியும் ஃப்ரூவ் பண்ணினார். விக்ரமுக்கு அப்புறம் லோகி விஜய்னா கூட சேர்ந்தப்போவே எக்ஸ்பெக்டேஷன் எகிறிப்போச்சு. ஆனா ஜெயிலர் ரிலீஸானப்போ ரஜினி ரசிகர்கள் விஜய் ரசிகர்களை போட்டு பொளந்தாங்க. ஆனா இப்போ விஜய் ரசிகர்கள் அதை ரஜினி ரசிகர்களுக்கே திருப்பி செய்றாங்க. நீங்க என்ன வசூலைத்தான உடைச்சீங்க. நாங்க தியேட்டரையே உடைப்போம்னு கிளம்பியிருக்காங்க. ஆனா இந்த ஜெயிலர், லியோவுல ஒர்க் பண்ற பெரிய டெக்னீசியன்னு பார்த்தா அது அனிருத்துதான். அனிருத் நெல்சன் கூடவும், லோகி கூடவும் விதவிதமான மியூசிக்குகளை அள்ளித் தெளிக்கிறார். இதுல அனிருத்-லோகி, அனி-நெல்சன் இந்த ரெண்டு கூட்டணியில எது மாஸ்னுதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
இதுல சீனியர்னு பார்த்தா நெல்சன்தான்.. முன்னாடியே அனிருத்கூட பழக்கமானவர். கோலமாவு கோகிலா பட வாய்ப்பையே நெல்சனுக்கு வாங்கிக் கொடுத்தவர். தேபோல நெல்சன்- அனி- எஸ்கே கூட்டணி இணைந்து செய்யும் சிங்கிள், டிரெய்லர் புரோமோ வீடியோக்கள், டிரெய்லரைத் தாண்டி அதிக வியூஸ்கள் போகும். மூன்றுபேருக்குள்ளும் அவ்ளோ அண்டர்ஸ்டேண்டிங் இருக்கும். ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு பள்ளி நண்பர்கள்போல இருந்து வருகிறார்கள். அதேபோல பேட்டிகளில் கலந்து கொள்ளும்போதும் எல்லோரையும் ஜாலியான மனநிலையில வைச்சிருப்பார். அதுவும் ‘சோக பாட்டுன்னா, அன் தலைவன் ஆர்மோனியத்தை ஏர்ல வச்சு வாசிப்பாப்ல’னு அனிருத்தை கலாய்க்கிறதெல்லாம் வேற லெவலில் இருக்கும். நட்புக்கு அதிகமா மரியாதை செய்யக் கூடியதும் நெல்சனே. இன்னைக்கு பாட்டுக்கு இசையமைப்பாளர்கள் விடுற புரோமோவுக்கு நெல்சன்தான் முன்னோடினு கூட சொல்லலாம். இன்னைக்கு நெல்சனோட ப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கிற முதல் ஆள் அனிருத்தான். இன்னைக்கு ஜெயிலர் படம் இயக்குறதுக்கு முக்கியமான காரணம் அனிதான். இதைவிட ஒரு நண்பன் வேறு ஒரு நண்பனுக்கு எப்படி உதவி செய்துவிட முடியும். அதேபோல நெல்சனின் படங்கள் பேசுவதற்கு முக்கியமான காரணம், அனிருத்தின் இசைதான். இன்னைக்கும் பீஸ்ட்டில் விஜய் பெயருக்கு அடுத்தபடியாக அனிருத் பெயர்தான் வரும். அதுதான் நெல்சன் அனிக்கு செய்யும் கைமாறு. வெளியே இரண்டுபேரும் சிரித்து விளையாடிக் கொண்டாலும் வேலைன்னு வந்துட்டா சீரியஸ் மோட்தான். தனக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்குறதுலயும் நெல்சன் கில்லாடி.

அதேபோல அனிருத்தும் நெல்சனை தாங்கி பிடிக்கிறதுல முக்கியமானவர். நெல்சனுக்கு ஜெயிலர் கிடைக்க காரணமானவர்கள்ல ஒருத்தர் அனிதான். ஜெயிலரை இறங்கி விளையாட வைச்சது நெல்சனோட திரைக்கதைன்னா, அதை உச்சத்துக்கு கொண்டுபோன காவாலா பாட்டும், ஹூக்கும் பாட்டையும் கொடுத்தது அனிதான். நெல்சன் ஜெயிக்கணும்னு அனிருத் கண்ணும் கருத்துமா ஜெயிலரை பார்த்து பார்த்து பண்ணார். விக்ரம்ல லோகேஷ் கூட வொர்க் பண்ணது வேற ரகம். ஆனா நெல்சன்கூட தரைலோக்கலா இறங்கி அடிச்சார். ரெண்டுமே ஹிட்டுதான். ஆனா ஜெயிலரை கம்பேர் பண்றப்போ, லியோவுல நா ரெடிதான் பாட்டைத் தவிர பெரிசா மத்த பாட்டுக்கள் இல்லைனுதான் சொல்லணும், ஆனா ஜெயிலர்ல ரத்தமாரே வரைக்கும் பின்னியிருந்தார், பிஜிஎம் வேற லெவல்னு சொல்லிட்டே போகலாம்.
அனிருத்தும் லோகேஷும் ஒன்னா சேர்ந்து வொர்க் பண்ணியிருக்காங்க. ஆனா அனிருத் ஸ்டுடியோவுக்கு பாடல் வாங்க அதிகமா நேர்ல போனது இல்லை. எனக்கு இது வேணும்னு லோகேஷ் விட்டுட அதை அனி பார்த்துக்கிட்டார். இங்கதான் லோகேஷோட ஸ்டைல் வேரியாகுது. லோகி திரைக்கதையில அதிக கவனம் செலுத்துவார். ஒவ்வொரு டைரக்டரும் ஒரு வொர்க்கிங் ஸ்டைல் இருக்கும்ல. அப்படி தான் ஸ்கிரீன்பிளே எழுதும்போதே நிறைய OST தீம்களை கேட்டுட்டே அந்த மூடை செட் பண்ணுவேன்னு பல இடங்கள்ல லோகேஷ் சொல்லிருப்பாரு. அந்த அளவுக்கு இசையின் காதலன்தான் லோகேஷ் கனகராஜ். அவர் ஸ்கிரிப்ட் எழுதும்போதே ஃபைட் சீக்வென்ஸும் எப்படி இருக்கணும்னு டீடெய்லிங் பண்றவர். மியூஸிக்னு வரும்போது இதுல அனிருத் இந்த இடத்துக்கு இப்படி பண்ணுவார்னு மனசுல வைச்சுகூட திரைக்கதையில எழுதுறதுக்கும் வாய்ப்புகள் இருக்கு. பாட்டுகள் ஒருபக்கம்னாலும் மாஸ்டர்ல விஜய்யோட இன்ட்ரோ தீம், விக்ரம்ல I’m Wastedனு யுனீக்கான கண்டெண்ட்ஸை கொடுக்குறதுல இந்த காம்போவை அடிச்சுக்கவே முடியாது. பாடல்களுக்காவே படங்கள் ஓடுன வரலாறு கொண்ட தமிழ் சினிமாவுல, பேக் ரவுண்ட் மியூஸிக்குக்கு தனி அழுத்தம் கொடுக்கணும்னு புதுசு புதுசா டிரை பண்ணிட்டு இருக்கு லோகேஷ் – அனி டீம். அதை இதுக்கு முன்னாடியே பல சீனியர்ஸ் பண்ணிருக்காங்கன்னாலும், அதை இவங்க அணுகுற விதம் கொஞ்சம் யுனீக்கானதுதான். இதைப் பத்தி நீங்க என்ன நினைகிறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க. ஜெயிலர்ல தீம் மியூசிக்குகளே நிறைய இருக்கும். அதுக்கெல்லாம் விதை விக்ரம்ல அனிருத் போட்ட இசைதான். அதுல பக்காவா டிரை பண்ணி பார்த்த பின்னால, ஜெயிலர்ல அதை அசால்ட்டா பண்ணார்.
Also Read – கிஸாவுல சொருவுது கண்ணு.. காரணம் ஜாயிண்டு ஒண்ணு.. மஜா சாங்க்ஸ்!
அனிருத் ஒரு இசையமைப்பாளரா ரெண்டுபேர்கூடவும் நல்ல பாண்டிங்லதான் வொர்க் பண்ணிட்டிருக்கார். ஆன ரசிகர்கள்தான் இப்போ சண்டைபோட்டுக்கிட்டு இருக்காங்க. நெல்சன் மாதிரி லோகேஷ் அனிருத்கூட ஒட்டலைன்னாலும், அனி – நெல்சன் பாண்டிங் பக்காவா இருக்கு. நெல்சன்கூட 4 படங்கள் அனிருத் வொர்க் பண்ணியிருக்கார். லோகி கூட 3 படங்கள் வொர்க் பண்ணியிருக்கார். பட எண்ணிக்கையில கம்மின்னாலும் ஒன்னுக்கொன்னு சளைச்சது இல்ல. எல்லாமே டூத கோர் இறங்கி வேலை பார்த்திருக்கார் அனி.
இங்க முக்கியமான விஷயம் நெல்சன்- அனியா? லோகேஷ் – அனியா?னு ஒரு பெரிய பேச்சே போயிட்டு இருக்கு. ஆனா நெல்சனும், லோகியுமே பெஸ்ட் ப்ரெண்ட்ஸ். ரெண்டு பேருக்குள்ளேயும் ஒரு புரிதல் இருக்கு. இதுக்கான பல பேட்டிகளை உதாரணமா சொல்லிட்டே போகலாம். பீஸ்ட் விழுந்தப்போ, விக்ரம்க்காக லோகி பேட்டி கொடுக்கும்போது நெல்சனுக்கு ஆதரவா நிறைய பேசியிருந்தார். இருந்தாலும் கம்பேரிசன் பண்ணாம இருக்க முடியாதே ப்ரோ…

மாஸ்டர்ல ஆல்பம் ஹிட் கொடுத்தவர், விக்ரம்ல உச்சம் தொட்டார். மத்த படங்களை கம்பேர் பண்றப்போ லியோவுல கொஞ்சம் டவுனாத்தான் இருக்கு. கோலமாவு கோகிலாவுல ஆரம்பிச்ச பயணம் ஜெயிலர் வரைக்கும் மேல போய்கிட்டே இருக்கு. பீஸ்ட் ப்ளாப் ஆனப்போ கூட அனிருத் அந்த படத்தை இசையால கவனிக்க வைச்சார். இதுதான் அனிருத்தோட ஸ்பெஷல்னே சொல்லலாம். படம் நல்லா இருக்கு இல்லை, நான் மியூசிக் போட்டுக்கிட்டே இருப்பேன் அப்படிங்குற மூட்லதான் அனிருத் பயணிக்கிறார். நெல்சன் கூட எல்லாமே ஹிட் கொடுத்திருந்தாலும், மாஸ் மியூசிக்குகள் லோகிக்குத்தான் அனி அதிகமா கொடுத்திருக்கார். மாஸ்னா அது லோகி, க்ளாஸ்னா நெல்சன்னுகூட சொல்லலாம்.
கடைசியா எந்த கூட்டணி மாஸ்னுதானே கேக்குறீங்க?
என்னைப் பொறுத்தவரைக்கும் நெல்சனா-லோகியான்னா நெல்சன்தான் அனியோட அதிகமா ஹிட் கொடுத்திருக்கார். அந்த கூட்டணிதான் ஸ்பெஷல்னு தோணுது. மாஸ்னா அது லோகி- அனிருத்துதான்.. உங்களைப் பொருத்த வரைக்கும் எந்த கூட்டணி பெஸ்ட்னு கமெண்ட்ல சொல்லுங்க.
Your article helped me a lot, is there any more related content? Thanks!
I am extremely impressed together with your writing skills as neatly as with the format for your blog. Is that this a paid topic or did you customize it your self? Either way stay up the nice high quality writing, it’s uncommon to see a nice blog like this one nowadays!
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?