ஆன் ஃபீல்டுல மட்டுமில்ல ஆஃப் ஃபீல்டுலயும் பல மாஸ் மொமண்டுகளை own பண்ணிருக்கார் விராட் கோலி. 2021 டி20 வேர்ல்டு கப்போட முதல் மேட்ச் பாகிஸ்தான்கூட இந்தியா தோல்வியைச் சந்திச்சிருக்கும். முதல்முறையா வேர்ல்டு கப்ல பாகிஸ்தான்கூட இந்தியா தோத்திருந்த அந்த மேட்சுக்குப் பிறகு பிரஸ் கான்ஃப்ரன்ஸ். `ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலா இஷான்கிஷானை செலெக்ட் பண்ணிருக்கலாம்னு நினைக்கிறீங்களா’னு ஒரு பாகிஸ்தான் ஜர்னலிஸ்ட் கேள்வி கேக்க, அவரையே கொஞ்ச நேரம் உத்துப் பார்த்த கோலி, `இது ரொம்ப தைரியமான கேள்வி. எனக்கு பெஸ்ட்னு தோணுன டீமோட நான் இறங்குனேன். ரோஹித் ஷர்மாவை நீங்க டி20 இண்டர்நேஷனல் கேமோட பிளேயிங் லெவன்ல இருந்து டிராப் பண்ணுவீங்களா… நாங்க இதுக்கு முன்னாடி விளையாடுன மேட்ச்ல அவர் எப்படி பெர்ஃபார்ம் பண்ணிருந்தாருனு தெரியுமா?’னு கேள்வி கேட்டதோட, முகத்தை மூடியபடி தலையைக் கவுத்துக்கிட்டு `unbelievable’னு சொல்லிருப்பார். அத்தோட, `உங்களுக்கு காண்ட்ரோவர்ஸிதான் வேணும்னா முன்னாடியே சொல்லிடுங்க. அதுக்கு ஏத்தமாதிரி நான் பதில் சொல்றேன்’னும் தக்லைஃப் பண்ணிருப்பார்.
விராட் கோலி சென்னைல நடந்த வேர்ல்டு கப் மேட்ச்லயும் ஒண்ணு இல்ல ரெண்டு சம்பவங்கள் பண்ணாரு. அது என்னன்னு வீடியோவோட கடைசில சொல்றேன். ஒரு பாப்புலர் ஷோவோட ஒரே ஒரு எபிசோடைப் பார்க்கக் கிட்டத்தட்ட 3 லட்ச ரூபாய் வரைக்கும் செலவழிச்சவர்தான் விராட் கோலி… அப்ப என்ன நடந்துச்சுங்குறதையும் சொல்றேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
கருப்பன் சேட்டைக்காரன்னு சொல்ற மாதிரி விராட் கோலி ரொம்ப அலும்பு புடிச்ச ஆளுதான். இதுக்கு ஒண்ணு இல்ல, ரெண்டு இல்ல எத்தனையோ எக்ஸாம்பிள்ஸ் சொல்லலாம். இப்படித்தான் ஒருதடவை மும்பைல இருக்க தங்களோட ஹோட்டலுக்குப் போயிருந்தாங்க விராட்டும் அனுஷ்காவும். அப்போ வெளில ரெடியா இருந்த பாப்பராஸி போட்டோகிராஃபர்ஸ் ரெண்டுபேரையும் பேர் சொல்லிக் கூப்பிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொல்லிட்டு இருந்தாங்க. அப்போ ஒரு போட்டோகிராஃபர் அனுஷ்காவை சார்னு சொல்லி கூப்பிட்டதும், `விராட் மேம்கூடவும் கொஞ்சம் பேசுங்கப்பா’னு ஆன் த ஸ்பாட்லயே கமெண்ட் கொடுத்து கலாய்ச்சு விட்டிருப்பார்.
Also Read – ஆன்ஃபீல்டு; ஆஃப்ஃபீல்டு கில்லி.. சேவாக்கின் Thug Life Moments!
ஷிகர் தவான், இஷான் கிஷான், பும்ரா மட்டுமில்ல இன்னும் சில பிளேயர்ஸ் மாதிரிலாம் அச்சு அசலா அப்டியே இமிடேட் பண்றதுல விராட் கோலியை அடிச்சுக்கவே முடியாது. டீம் பிளேயிங் லெவன்ல இல்லாட்டியும் அந்த இடத்துல கிங்காத்தான் இருப்பார் கோலி. ஏசியா கப் பங்களாதேஷ் மேட்ச்ல வாட்டர் பாயா இவர் கொடுத்த என்ட்ரி மாஸா இருக்கும். மொமினுல் ஹாக் விக்கெட் எடுத்ததை இந்தியன் பிளேயர்ஸ் கொண்டாடிட்டு இருக்கதை விட்டுட்டு மொத்த மீடியா அட்டேன்ஷனும் வாட்டர் பாய் விராட் கோலி மேலதான் இருந்துச்சு. தலைவன் செய்கை அப்படி. மோஸ்ட் எக்ஸ்பென்சிவ் வாட்டர் பாய்னு கமெண்டேட்டர்ஸ் குறிப்பெடுத்தாங்க. அது வைரலான மீம் கண்டெண்டாவும் மாறுச்சு. இது முத தடவை இல்ல. இதுக்கு முன்னாடியே வெஸ்ட் இண்டீஸ் சீரிஸ்ல அவரும் சஹாலும் வாட்டர் பாய் ரோல் பண்ணப்பவும் இதே மாதிரி சம்பவம்தான் நடந்துச்சு.
காமெடி நைட்ஸ் வித் கபில் ஷர்மா ஷோவுக்கு இந்தியன் டீம் பிளேயர்ஸ் பலபேருமே டைஹார்டு ஃபேன்ஸ். பொதுவா பிளேயர்ஸ் எல்லாரும் ஒண்ணா உக்காந்து அந்த ஷோ பாக்குறது வழக்கமாம். ஒரு தடவை ஸ்ரீலங்கா போயிருந்தப்போ அங்க ஏர்போர்ட்ல ரொம்ப நேரம் வெயிட் பண்ற மாதிரியான சூழ்நிலை. அப்போ போரடிக்கவே, தன்னோட மொபைலை எடுத்து கபில் ஷர்மா ஷோ பார்க்கலாம்னு கோலி பிளான் பண்ணிருக்கார். ஏர்போர்ட் வைஃபை இல்லாத நிலைமைல தன்னோட மொபைல்லயே ஒரு மணி நேர ஷோவைப் பார்த்திருக்கிறார். அது 3ஜி டைம். இண்டர்நேஷனல் ரோமிங்ல பில்லு எகிறிட்டு இருக்குனு அவரோட சகோதரர் போன் பண்ணி சொன்னப்பதான் கவனிச்சிருக்கார். அதுக்குள்ள பில் அமவுண்ட் கிட்டத்தட்ட 3 லட்ச ரூபாய் வரைக்கும் வந்துருச்சாம். ஆனா, அதைப்பத்திலாம் நான் கவலைப்படல. வொர்த்துதான்னு அசால்ட் காட்டிருப்பார் கோலி.
இங்கிலாந்து யூடியூபரா ஜார்வோ ரொம்ப சேட்டை புடிச்ச மனுஷன். அங்க போய் 2021-ல இந்தியா விளையாண்ட 3 மேட்ச்கள்ல நேரா கிரவுண்டுக்குள்ளேயே போய் அட்ராசிட்டி பண்ணவர். உடனே செக்யூரிட்டீஸும் பிளேயர்ஸும் சேர்ந்து அவரை அட்வைஸ் பண்ணி வெளிய அனுப்பி வைச்சிருப்பாங்க. ஒரு கட்டத்துல அவரோட சேட்டை தாங்காம எந்த கிரவுண்டுக்குள்ளயும் அவரை விடாதீங்கனு இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அவரை பேன் பண்ணிட்டாங்க. அவருக்கு இந்தியன் டீம் மேல என்ன பாசமோ தெரில. சென்னைல நடந்த ஆஸ்திரேலியா மேட்ச் அப்பவும் இந்தியன் ஜெர்ஸியோட கிரவுண்டுக்குள்ள நுழைஞ்சிட்டாரு. உடனே அவரைப் புடிச்சு வெளிய கொண்டு போக டிரை பண்ணாங்க. அப்போ இருங்க இருங்கன்னு சொல்லிட்டே கொஞ்ச தூரத்துல இருந்து ஓடி வந்த கோலி, ஜார்வோகிட்ட கொஞ்சம் காட்டாமாவே பேசி அனுப்பி வைச்சாரு. அநேகமா ஏன்பா இப்படி தொல்லை கொடுத்துட்டே இருக்கனு சொல்லி பதௌசா அனுப்பி வைச்சிருப்பாருனு நினைக்கிறேன். அதேமாதிரி மேட்ச் முடிஞ்ச உடனே பிளேயர்ஸ் மீட்டிங்ல பெஸ்ட் ஃபீல்டர்னு மெடலும் கொடுப்பாங்க கோலிக்கு.`நான்தான் நான்தான்’னு ரெண்டு கையையும் தூக்குன மாதிரியே எண்ட்ரி கொடுத்ததோட, மெடலை கையில கொடுக்கக்கூடாது கழுத்துலதான் போடணும் கேட்டு வாங்குவார். அத்தோட, ஏசியன் கேம்ஸ் சீசன்ல இது. அப்படியே மெடலை பல்லுல கடிச்சு ஒரு போஸும் கொடுத்து அதகளம் பண்ணிருப்பாரு. வெஸ்ட் இண்டீஸ்ல கெய்லோட டான்ஸ் ஆடுனது, டங்க் அவுட் மொமண்ட், அனில் கபூர் டான்ஸ்னு இன்னும் விராட் கோலியோட பண்ண சேட்டைகளோட லிஸ்ட் கொஞ்சம் இல்ல ரொம்பவே நீளம்.
சரி ஆன்ஃபீல்டு – ஆஃப் ஃபீல்டுல விராட் கோலி பண்ண சேட்டைகள்ல உங்களோட ஃபேவரைட் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.