யூஸ்டு கார் வாங்கப் போறீங்களா… இந்த 7 விஷயங்களைக் கவனிக்க மறந்துடாதீங்க!

யூஸ்டு கார் வாங்கும் முன்னர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன… முக்கியமான 7 விஷயங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாமா?

யூஸ்டு கார்ஸ்

கார் வாங்க வேண்டும் என்பது பெரும்பாலான நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் பெருங்கனவாக இருக்கும். கார் வாங்கும்போது பட்ஜெட் அவர்களுக்கு முக்கியமான விஷயமாக இருக்கும். நல்ல கண்டிஷனில் இருக்கும் யூஸ்டு கார் அவர்களின் முதல் சாய்ஸாக இருக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது.

அப்படி யூஸ்டு கார் வாங்கும் பிளானில் இருக்கிறீர்களா… நீங்கள் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் என்னென்ன?

யூஸ்டு கார்ஸ்
யூஸ்டு கார்ஸ்

பட்ஜெட்

யூஸ்டு கார் வாங்குவதைப் பொறுத்தவரை முதலில் உங்களுக்கான பட்ஜெட்டை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். எவ்வளவு காலம் அந்த காரைப் பயன்படுத்தப் போகிறீர்கள்… மாதம் தோறும் உங்களது பயன்பாடு எவ்வளவு… உங்களின் பொருளாதார சூழல் என இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு உங்களுக்கான பட்ஜெட்டை வரையறுத்துக் கொள்ளுங்கள்.

எந்த மாதிரியான கார்?

ஒவ்வொருவருடைய லைஃப்ஸ்டைலைப் பொறுத்து, அவர்களுக்கான காரை முடிவு செய்து கொள்வது புத்திசாலித்தனம். உதாரணமாக, ஒருவர் மோசமான சாலைகளைக் கொண்டிருக்கும் பகுதியில் வசிக்கிறார் என்றால், அவர் நிச்சயம் நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட காரைத்தான் தேர்வு செய்ய வேண்டும். அதேநேரம், நல்ல நெடுஞ்சாலைப் பயணத்தை விரும்புவரோ அல்லது லக்கேஜ்கள் அதிகம் கொண்டு பயணிப்பவராக இருந்தாலோ, நிச்சயம் எம்.வி.பி அல்லது செடானைத் தேர்வு செய்யலாம். பொதுவாக உங்களது பயன்பாட்டைக் கருத்தில் கொண்டும், உங்களது பட்ஜெட்டை நினைவில் வைத்தும் உங்களுக்கான யூஸ்டு காரைத் தேடுங்கள்.

பகலில் செக் செய்யுங்கள்

யூஸ்டு கார்களைப் பொறுத்தவரை டீலர்களிடம் சென்று அவற்றைப் பார்வையிடும்போது, பேன்ஸியான லைட்டிங் செட்டப்பில் நிறுத்தி வைத்திருப்பார்கள். அப்படியான லைட்டிங்கை மட்டுமே நம்பி விடாமல், பகலில் காரை ஷோரூமுக்கு வெளியில் எடுத்து வந்து சூரிய வெளிச்சத்தில் அதைப் பார்வையிடுங்கள். இயற்கையான ஒளியில் பார்க் செய்யப்பட்டிருக்கும் காரைப் பார்வையிடுகையில், சின்ன ஸ்கிராட்ச் இருந்தாலும் அதை உங்களால் நோட் பண்ண முடியும்.

யூஸ்டு கார்ஸ்
யூஸ்டு கார்ஸ்

எத்தனை ஆண்டுகள் பழையது?

ஒரு காரைத் தேர்வு செய்கையில், அந்த கார் எத்தனை ஆண்டுகள் பழையது என்பதை முதலில் பாருங்கள். இந்த வகையில், இரண்டு ஆண்டுகள் மற்றும் 20,000 கி.மீ என்பது பொதுவான டைம்லைனாகச் சொல்வார்கள். அதேபோல், நீங்கள் தேர்வு செய்யும் காருக்கான சர்வீஸ் வசதி, ஸ்பேர்கள் மார்க்கெட்டில் எளிதாகக் கிடைக்கிறதா உள்ளிட்ட அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்சூரன்ஸ், சர்வீஸ் ரெக்கார்ட்

காரை ஃபைனல் செய்யும் முன்னர், அந்த காருக்கு எத்தனை முறை இன்சூரன்ஸ் கிளெய்ம் செய்யப்பட்டிருக்கிறது, எதெற்கெல்லாம் அதை கிளெய்ம் செய்கிறார்கள் என்பதை அலசுங்கள். அதேபோல், காரின் சர்வீஸ் ரெக்கார்டுகளையும் செக் செய்ய வேண்டியது அவசியம்.

யூஸ்டு கார்
யூஸ்டு கார்

லாங் டெஸ்ட் டிரைவ்

நீங்கள் வாங்க நினைக்கும் காரை ஒருமுறை அல்ல, முடிந்தவரை பலமுறை லாங் டெஸ்ட் டிரைவுக்கு எடுத்துச் செல்லுங்கள். அப்படியான டெஸ்ட் டிரைவின் போது ஆக்ஸிலேட்டரை அழுத்தி, அதற்கு என்ஜினின் ரெஸ்பான்ஸ் எப்படியிருக்கிறது என்பதை மறக்காமல் செக் செய்யுங்கள். மேலும், பிரேக் செயல்பாடு, ஸ்டீரியங் கண்ட்ரோல் போன்றவையையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.

மெக்கானிக்கின் ஆலோசனை

உங்களுக்கு நம்பிக்கையான கார் மெக்கானிடம் எடுத்துச் சென்று காரைப் பற்றி ஆலோசனை கேளுங்கள். என்ஜினின் நிலை, எலெக்ட்ரானிக் பொருட்களின் செயல்பாடு உள்ளிட்ட பலவற்றையும் அவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

Also Read – திருமண சீசனுக்கு முன் விலையேற்றம் – தங்கம் வாங்க இது சரியான தருணமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top