சீரியல் ஜோடிகள் | பார்த்த உடன் காதல், பார்க்காத காதல், பழகிய பின் காதல், கல்யாணத்துக்கு பிறகு காதல்-னு காதலிக்குறவங்க பல விதம் இருப்பாங்க. இதுல சீரியலில் சேர்ந்து நடிச்ச பிறகு லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட சீரியல் ஜோடிகள் பலர் சின்னத்திரையில் இருக்காங்க. சீரியலில் நடிக்கும்போதே கல்யாணம் பண்ணிக்கிட்டு அதுக்கு பிறகும் சீரியலில் சேர்ந்த நடிச்சவங்களும் இருக்காங்க. இப்படி நம்ப சின்னத்திரையில் நடிச்சு ஜோடி ஆனா நட்சத்திரங்கள் யார் யாருன்னு பார்க்கலாம்.
சித்து & ஸ்ரேயா – ‘திருமணம்’ சீரியலில் சேர்ந்து நடிச்சுட்டு இருந்த அப்போ தான் இவங்க காதல் மலர்ந்துச்சு, அந்த சீரியலில் சித்து தான் ஹீரோனே முதலில் ஸ்ரேயா -க்கு தெரியாதாம், அதே போல முதலில் மோதலில் தான் இவங்க காதல் ஆரம்பம் ஆகிருக்கு. இப்போ ஸ்ரேயா & சித்து அப்படிங்குற யூ டியூப் சேனலில் இவங்க செய்யும் அலப்பறைகளில் ஆரமிச்சு டூர் போறது, சர்ப்ரைஸ் கொடுக்குறதுன்னு மொத்தமும் போஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க.
ஆல்யா மனசா & சஞ்சீவ் – இவங்க லவ் ஸ்டோரி ஊருக்கே தெரியும், ராஜா ராணி -னு ஒரே ஒரு சீரியல் தான், சஞ்சீவ் மனசு மொத்தமா காலி. இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி இப்போ 2 குழந்தைகள் இருக்காங்க. இன்னொரு பக்கம் ரெண்டு பேரும் சன் டிவியில் கயல் & இனியா சீரியலில் தனி தனியா நடிச்சுட்டு இருக்காங்க. ரெண்டு பேருக்குமே இப்போ லைஃப் டாப்பா போயிட்டு இருக்கு.
சமீரா & அன்வர் – பகல் நிலவு சீரியலில் நடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க இந்த Couples. கல்யாணம் ஆனதும் அன்வர் எல்லாருக்கும் சொன்ன ஒரு அட்வைஸ், காசு இருந்த பிரமாண்டமா கல்யாணம் பண்ணுங்க, இல்லையா சிம்பிள்லா கல்யாணம் பண்ணுங்க, தேவை இல்லாமா இதுக்குல செலவு பண்ணாதீங்கன்னு சொல்லிட்டாரு. அதுக்கு ஏத்தா மாதிரியே நிஜமாவே இவங்க 2 பேரும் அவ்ளோ சிம்பிள்லான ஜோடிகள் தான். இப்போ இவங்களுக்கு ஒரு குட்டி பையன் பொறந்த இருக்கான்.
ஷபானா & ஆர்யன் – செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா கிட்ட எல்லாருமே ரொம்ப நாள்ல கேட்டுட்டு இருந்த விஷயம் கல்யாணம் தான். கண்டிப்பா உங்களுக்கு தெரியாமா கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு, கல்யாணத்துக்கு அன்னைக்கு வந்து ஒரு வீடியோ போட்டுட்டு, அவ்ளோ தான் போங்க கல்யாணம் முடிச்சுதுன்னு ஷாக் கொடுத்தாங்க. விஜய் டிவியில் வரும் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிச்ச ஆர்யனை தான் ஷபானா திருமணம் பண்ணியிருக்காங்க. அது எப்படி சித்தப்பு வேற வேற சீரியலில் நடிச்சுட்டு லவ்வு அப்படின்னு கேட்டா…அது அப்படி தான் தான்…!
ரட்சிதா – தினேஷ், விஜய் டிவியில் வரும் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் பார்த்து பிறகு தான் இவங்க லவ் ஸ்டார்ட் ஆச்சு. ஒரு சின்ன மனவருத்தம் காரணமா இவங்க 2 பேரும் இப்போ பிரிவுல இருக்காங்க. ரட்சிதா பிக் பாஸ்ல விளையாடிட்டு இருக்காங்க. வெளிய வந்த தான் என்ன முடிவு பண்ணுவாங்கன்னு தெரியும்.
சீரியல் ஜோடிகள் அப்படின்னு சொன்னாலே நமக்கு முதலில் இவங்க ஞாபகம் தான் வரும். அவங்க தான் செந்தில் & ஸ்ரீஜா. சரவணன் மீனாட்சி சீரியலில் இவங்க நடிக்கும்போதே வெளிய இருக்க ரசிகர்கள் இவங்க கல்யாணம் பண்ண நல்ல ஜோடியா இருப்பாங்கல அப்படின்னு யோசிச்சுட்டு இருந்த சமயத்துல 2 பேரும் நிஜமாவே கல்யாணம் பண்ணிகிட்டாங்க. ஒரு வாரத்துக்கு இது உண்மையான கல்யாணம் தானே… வேற எதுவும் புது சீரியல் இல்லையேன்னு ரசிகர்கள் கொழம்பி போயிருந்தாங்க.
இவங்க வரிசையில் இருக்க மற்றுமொரு ஜோடி, இவங்களுக்குல முன்னாடியே சீரியலில் நடிச்சு லவ் பண்ணி கல்யாணம் பண்ற ட்ரெண்டை ஸ்டார்ட் பண்ண சேத்தன் & தேவதர்ஷினி. சன் டிவியில் வந்த அத்தி பூக்கள் சீரியல் உங்க எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும். இவங்களுக்கு அந்த சீரியல் மூலமா தான் காதல் மலர்ந்தது. இவங்க 2 பேரும் இப்போ தமிழ் படங்களில் நடிச்சுட்டு இருக்காங்க.
நான் சொன்ன லிஸ்ட்ல இல்லாம இன்னும் சிலர் ஜோடியா நடிக்காம கூட சின்னத்திரையில் அறிமுகமாகி அதன் பிறகு பழகி திருமணம் செஞ்சுக்கிட்டவங்களும் இருக்காங்க. உங்களுக்கு எந்த ஜோடி ரொம்ப பிடிக்கும், யாரை மாதிரி ஒரு காதல் கணவன் இல்லை மனைவி உங்களுக்கு கிடைச்ச நல்ல இருக்கும்ன்னு பீல் பண்றிங்களோ அது யாருன்னு கமெண்ட்ல சொல்லுங்க.