ஆடம் கில்கிறிஸ்ட்

The Man and The Machine – ஆடம் கில்கிறிஸ்ட் சம்பவங்கள்!

டெஸ்ட்ல 100 சிக்ஸ் அடிச்ச முதல் வீரர்… மாடர்ன் டே கிரிக்கெட்ல விக்கெட் கீப்பர் ரோலைத் திருத்தி எழுதுன அதிரடிக்காரன். ஒன்டே – டெஸ்ட்னு ரெண்டு களத்துலயும் வித்தைகாட்டுன விசில் மன்னன்னு ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் பத்தி நிறைய சொல்லிட்டே போலாம்.. கிரிக்கெட்டின் கில்லியா கொண்டாடப்படுற கில்கிறிஸ்ட் கரியர்ல பண்ண தரமான சம்பவங்களப் பார்க்கலாம் வாங்க.

ஜென்டில்மேன்

2000-களின் தொடக்கம் முதலே புதிய எழுச்சி பெற்ற ஆஸ்திரேலியன் டீம் எந்த அளவுக்கு அதன் பெர்ஃபாமன்ஸுக்காகப் பாராட்டப்பட்டதோ; அதே அளவுக்கு சர்ச்சைகளிலும் சிக்கித் தவித்தது. ஆனால், அப்படியான எந்தவொரு சர்ச்சைகளிலுமே சிக்காத ஜென்டில்மேன் கில்கிறிஸ்ட். ஸ்ரீலங்காவுக்கு எதிரான 2003 வேர்ல்டு கப் செமி ஃபைனல் மேட்ச்ல அரவிந்த் டி சில்வா ஓவர்ல அவுட் கேக்கும்போது அம்பயர் ரூடி கொயர்ட்சன் நாட் அவுட்னு சொன்னபிறகும் அது அவுட்டுதான்னு தெரியும்னு இவராவே வெளில போயிருப்பார். `அவுட்னு தெரிஞ்ச உடனே வெளில போகணும்னு நானே முடிவு பண்ணிட்டேன்’னு பின்னாட்கள்ல இதப்பத்தி பேசிருப்பாரு. அதேமாதிரி, 2007 வேர்ல்ட் கப் ஃபைனல்ல அதே ஸ்ரீலங்கா டீமுக்கு எதிரா இவர் அடிச்ச 149 ரன்கள் ஆஸ்திரேலியாவோட வெற்றியை உறுதி செஞ்சுச்சு. 3 வேர்ல்டு கப் ஃபைனல்ல விளையாடியிருக்க அவர் முதல் இரண்டு ஃபைனல்ஸ்லயும் அரை சதங்கள் பதிவு பண்ணவர். விக்கெட் கீப்பர் ஒரு ஓப்பனராவும் குறிப்பா வெடிச்சு சிதறுற பட்டாசாவும் இருக்க முடியும்னு மாடர்ன் டே கிரிக்கெட்ல அந்த ரோலைத் திருத்தி எழுதினவரு கில்கிறிஸ்ட்.

ஆஸ்திரேலியாவோட தெற்குப் பகுதில இருக்க நியூ சவுத்வேல்ஸ்தான் கில்லியோட சொந்த ஏரியா. அந்த ஏரியாவோட அண்டர் 17 டீமுக்காக செலெக்டும் ஆனார். 1991/92 சீசன்ல நியூ சவுத்வேல்ஸ் டீமோட மெயின் விக்கெட் கீப்பரா பில் எமரி இருந்ததால பியூர் பேட்டரா அவரை செலெக்ட் பண்ணாங்க. விளையாடுன முதல் சீசன்லயே 30-க்கும் மேல பேட்டிங் ஆவரேஜ் வைச்சிருந்தும் பிளேயிங் லெவன்ல இடம் கிடைக்குறதே கஷ்டம்ங்குற நிலைமைலதான் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா டீமுக்கும் போலாம்ங்குற துணிச்சலான முடிவை எடுக்கிறார். சும்மா இல்லங்க சொந்த ஊர்ல இருந்து 3,000 கி.மீ தூரத்துல இருக்க பெர்த் WACA ஸ்டேடியத்துக்குள்ள வர்றார். பிளேயிங் லெவன்ல இடம் கண்டிப்பா கொடுப்போம்ங்குற எந்தவொரு உறுதி மொழியும் இல்லாத டைம்லயே அங்க வந்து விளையாட ஆரம்பிக்குறார். ஆரம்ப நாட்கள்ல உள்ளூர் மக்கள் வெளியூர்க்காரனாவே இந்த தெக்கத்தியானப் பாக்குறாங்க. அவர் கிரவுண்டுக்குள்ள வரும்போதெல்லாம் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகுறார். ஆனா, கொஞ்சம் கொஞ்சமா தன்னோட விக்கெட் கீப்பிங் திறமையாலும் ஸ்டைலிஷான பேட்டிங்னாலும் இவன் நம்ம பையன்தான்பா வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா ரசிகர்களைச் சொல்லவைச்சார்.

Also Read – மெஸ்ஸி ஃபுட்பால் G-O-A-T-னு தெரியும்; அவரோட காதல் கதை தெரியுமா?

அடுத்த சில சீசன்கள்லயே ஆஸ்திரேலியன் செலெக்ட்ரஸோட கவனத்தை ஈர்த்த கில்லி, 1996ல சௌத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒன்டே மேட்ச்ல அறிமுகமாகிறார். தான் விளையாடிய ரெண்டாவது மேட்ச்லயே செஞ்சுரியைப் போட்டு டீம்ல தன்னோட இடத்தை சிமெண்ட் பண்றாரு. 1999ல ஆஸ்திரேலிய டெஸ்ட் டீம்ல Debut ஆன பிறகு அந்த டீமுக்கான ராசியும் மாறுச்சுனுதான் சொல்லணும். 1999ல விளையாடுன 8 டெஸ்ட்கள்ல 3 மட்டும்தான் ஜெயிச்சிருந்த ஆஸ்திரேலியாவோட வின்னிங் ரெக்கார்டு பெர்சண்டேஜும் கூடுச்சு. 2000-ம் ஆண்டுல ஆஸ்திரேலியாவோட வைஸ் கேப்டனான அவரு, ரிட்டையர்டு ஆகுற 2008-வரைக்கும் அந்தப் பொறுப்பில் தொடர்ந்தாரு. வழக்கமான கேப்டன்களான ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங்லாம் விளையாடாத மேட்ச்கள்ல கேப்டனாவும் செயல்பட்டிருக்காரு.

2005 ஆஷஸ் சீரிஸ்ல ஃபிளின்டாஃப் குறிவைச்சு இவரோட விக்கெட்டை வீழ்த்தத் தொடங்குனாரு. அந்த சீரிஸ்ல அரவுண்ட் த விக்கெட்ல ஆஃப் ஸ்டம்புக்கு வெளில வீசிய பந்துகள்ல 5 முறை அவுட்டாகுறார் கில்லி. அதுல இருந்து கில்லியால வெளிலயே வர முடியாதுங்குற விவாதம் அப்போ பெருசா எழுந்துச்சு. ஆனால், இதுக்கெலாம் 2006 ஆஷஸ் சீரிஸ்ல 57 பால் செஞ்சுரி அடிச்சு பதில் கொடுத்தாரு. இப்பவரைக்கும் ஆஷஸ் சீரிஸ்ல அதுதான் ஃபாஸ்டஸ்ட் செஞ்சுரி. கில்கிறிஸ்டுக்கும் இந்தியாவுக்கும் இன்னோரு ரேரான கனெக்‌ஷன் இருக்கு. அவரோட இன்டர்நேஷனல் கரியர்ல டெஸ்ட், டி20, ஒன்டேனு மூணு ஃபார்மேட்கள்லயும் அவர் கடைசியா விளையாடுனது இந்தியன் டீமுக்கு எதிராத்தான்.

மிரட்டல் ஐபிஎல் கரியர்

2008ல இன்டர்நேஷனல் கிரிக்கெட்ல இருந்து ரிட்டையர்டு ஆன பிறகுதான் ஐபிஎல்லுக்கு வர்றாரு கில்கிறிஸ்ட். இரண்டாவது சீசன்லயே டெக்கான் சார்ஜர்ஸ் டீமுக்கு கேப்டனானதோட, அந்த சீசன்ல சாம்பியன் பட்டத்தையும் அடிச்சாரு கில்லி. 2013 சீசன்ல பஞ்சாப் கேப்டனா இருந்த கில்கிறிஸ்ட், மும்பை இந்தியன்ஸ் டீமுக்கு எதிரான மேட்சோட ஓய்வு பெற்றிருப்பார். அந்த மேட்ச்ல கடைசி ஓவர்ல மும்பையோட வெற்றிக்கு 51 ரன் தேவைங்குற நிலைமைல அவரே ஓவர் போட வருவார். பிரவீன் குமார் விக்கெட் கீப்பிங் பண்ண, இவர் போட்ட முதல் பால்லயே லாஸ்ட் விக்கெட்டான ஹர்பஜனை வீழ்த்துவார். தன்னோட புரஃபஷனல் டி20 கிரிக்கெட் கரியர்ல கில்கிறிஸ்ட் போட்ட ஒரே பால் அதுதான். அந்த விக்கெட்டை எடுத்தபிறகு கங்ணம் ஸ்டைல்ல ஒரு செலிபிரேஷன் டான்ஸையும் போட்டு பட்டையைக் கிளப்புனாரு கில்லி.

2007 வேர்ல்டு கப் ஃபைனல்ல கில்கிறிஸ்ட் தன்னோட பேட்டிங் கிளவுஸுக்குள்ள ஸ்குவாஷ் பாலை வைச்சு பேட் பண்ணிருப்பாரு. செஞ்சுரி செலிபிரேஷனப்ப அதை காட்டவும் செய்வாரு. மேட்சுக்குப் பிறகுதான் இந்த விஷயம் தெரியவந்து விவாதங்களைக் கிளப்புச்சு. ஆனா, இது இல்லீகல் இல்லைனு எம்சிசி ரூல்ஸ் சொல்றதா அப்போவே விமர்சகர்கள் விளக்கமும் சொல்லி பஞ்சாயத்தை முடிச்சு வைச்சாங்க. கில்கிறிஸ்ட்னு சொன்னவுடனே உங்களுக்கு டக்குனு நினைவுக்கு வர்ற விஷயம் எது. அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

1 thought on “The Man and The Machine – ஆடம் கில்கிறிஸ்ட் சம்பவங்கள்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top