கன்னட சினிமாவைக் கவனிக்க வைத்த 3 பேர்!

ராஜ் பி.ஷெட்டி, ரிஷப் ஷெட்டி, ரக்ஷித் ஷெட்டினு இந்த மூணுபேரும் நண்பர்கள். அவங்களுக்குள்ள படம் தயாரிக்கிறாங்க, நடிக்கிறாங்க, அவங்களுக்குள்ளேயே திரைக்கதையையும் எழுதிக்கிறாங்க. இப்படி unofficial-ஆ கூட மூணுபேரும் ஆலோசனை செஞ்சு படத்தை கொண்டு வர்றதையும் வாடிக்கையா வச்சிருக்காங்க. தொடர்ச்சியான கன்னடப் பட உலகோட எழுச்சிக்குப் பின்னால இருக்குற முக்கியமான மூணு பேரைப் பத்திதான் இந்த வீடியோவுல பார்க்க போறோம்.

கே.ஜி.எப்-ன் இரண்டு பாகங்களும் கொடுத்த அதிர்வு எல்லோரையும் கன்னடப் பட உலகை கவனிக்க வைத்தது. அதற்குக் காரணமா இருந்தது, அதோட பிரம்மாண்டமும், ஸ்கிரீன் பிளேயும். ஆனால் இதே வருடம் அடுத்தப் படமான காந்தாரா வெளியாகி மிரட்டலான வெற்றியைக் கொடுத்துள்ளது. தயாரிப்பு செலவு 16 கோடி, வசூல் 300 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் வெறும் தியேட்டர் வருமானம் மட்டும்19 மடங்கு லாபம். கன்னட பட உலகும் அவ்வப்போது கொஞ்சம் வித்தியாசமான கதைகளை எடுத்து வரும். அந்த வகையில் லூசியா, யூடர்ன், திதி, காவுலதாரி, மாயா பஜார் 2016-னு பல படங்கள் அப்பப்போ வந்தாலும் கொஞ்சம் கவனிக்க வைக்கும். ஆனா, தொடர்ச்சியான கன்னடப் பட உலகோட எழுச்சிக்குப் பின்னால இருக்குற முக்கியமான மூணு பேரைப் பத்திதான் இந்த வீடியோவுல பார்க்க போறோம்.

அதுக்கு முன்னால இவங்களுக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தது, ஒரு மூணு தமிழ் இயக்குநர்கள். அவங்க யார்னு யோசிச்சு வைங்க. அதை வீடியோவோட கடைசியில சொல்றேன்.

Rakshith Shetty
Rakshith Shetty

ரக்ஷித் ஷெட்டி

கன்னட சினிமாக்கள் கர்நாடகா டெம்ப்ளேட்டைத் தாண்டி வெளிய வர துடிச்சுக்கிட்டிருத நேரம், ரக்ஷித் ஷெட்டினு ஒரு இயக்குநர் Ulidavaru Kandanthe அப்படினு ஒரு படத்தை இயக்கி, எழுதி, தானே நடிச்சும் இருந்தார். அதுல காந்தாரா இயக்குநர் ரிஷப் ஷெட்டியும் ஒரு ரோல் பண்ணியிருப்பார். ‘உலிதவரு கன்டந்தே’ ஒரு க்ரைம் ட்ராமா. நான்குவிதமான கதைகளோட பயணிக்கும். ஆனா, சிக்கலும், சுவாரஸியமும் இருக்குற திரைக்கதை. கிராமிய தன்மையுடன் அமைந்த காட்சிகளும், அதுல நிறைஞ்சிருந்த அமானுஷ்யமும், அதுவரை இல்லாத கன்னட ப்ளேவர்ல இருந்தது. படம் நெடுகவே ஒரு ஆக்ரோஷம் இருந்தது. அந்தப் படத்தை தமிழில்ல ரிச்சினு எடுத்து ரிலீஸ் ஆனது. ஆனா, கன்னட கிராமிய தன்மை மிஸ் ஆனதால் ரிச்சி ப்ளாப் ஆனது. கர்நாடகாவுல படம் நல்ல வரவேற்ப்பை கொடுத்த உடனே, தன்கிட்ட வேலை பார்த்த அத்தனை அசிஸ்டெண்ட் டைரக்டர்களையும் கூப்பிடுறார், ரக்ஷித் ஷெட்டி. ‘நீங்க படம் பண்ண முயற்சி பண்ணுங்க. நான் தயாரிக்கிறேன்’னு சொன்னார். அங்க இருந்து அடுத்த இயக்குநரா வெளிய வந்தார், காந்தாரா இயக்குநர் ரிஷப் ஷெட்டி.

Rishab Shetty
Rishab Shetty

ரிஷப் ஷெட்டி!

சொன்ன மாதிரியே ரக்ஷித் ஷெட்டி நடிச்சு, எழுதி, தயாரிக்க.. கிரிக் பார்ட்டிங்குற நகைச்சுவை பொலிட்டிகல் சட்டையர் படம் மூலமா இயக்குநரானார், ரிஷப் ஷெட்டி. படமும் நல்ல ஹிட். அதே வருஷம் ரிக்கி படத்தையும் இயக்குறார், ரிஷப் ஷெட்டி. இந்த படத்துலயும் ரக்ஷித் ஷெட்டியே நடிக்கிறார். இந்த படமும் ஹிட். அதேபோல ரக்ஷித் ஷெட்டி அவ்னே ஸ்ரீமன் நாராயணாவை எழுதி இயக்க, அதுல நடிச்சிருந்தார், ரிஷப் ஷெட்டி. இந்த நேரத்துல ரக்ஷித் ஷெட்டி தாக்கத்துல ராஜ்.பி.ஷெட்டியும் படம் இயக்கிட்டிருந்தார்.

ராஜ்.பி.ஷெட்டி!

அந்த டீம்ல இருந்து அடுத்த இயக்குநரா வெளிய வந்தார், இயக்குநர் ராஜ்.பி.ஷெட்டி.
Garuda Gamana Vrishbha Vahana அப்படினு தலைப்பு வச்ச கதையோட, ரக்ஷித் ஷெட்டிகிட்ட வர்றார். அவரும் தயாரிக்கிறேன்னு சொல்லிட, ‘நீயும், ரிஷப் ‘ நடிச்சிடுங்க’னு சொல்லிடுறார். இப்போதான் அந்த மூணுபேர் கூட்டணி முதல்முறையா திரையில ஒண்ணு சேருது. ரக்ஷித் ஷெட்டி தயாரிக்க, ரிஷப் ஷெட்டி நடிக்க, ராஜ்.பி.ஷெட்டி இயக்க படமும் தயாராகுது. இதுவும் உள்ளூர் நேட்டிவிட்டி கதையை எடுத்துக்கிட்டு, மேக்கிங்கில் மிரட்டியிருந்தார் ராஜ்.பி.ஷெட்டி. அடுத்ததா ரக்ஷித் ஷெட்டி தயாரிச்ச 777 சார்லி படத்துலயும் சிறப்புத் தோற்றத்துல நடிச்சு, திரைக்கதை எழுதியிருந்தார், ராஜ் பி.ஷெட்டி.

Raj B Shetty
Raj B Shetty

Also Read – `நாமம் போட்டா நல்லவரா?’… `கோமாளி’ பிரதீப் ரங்கநாதன் ரோஸ்ட்!

ராஜ் பி.ஷெட்டி, ரிஷப் ஷெட்டி, ரக்ஷித் ஷெட்டினு இந்த மூணுபேரும் நண்பர்கள். அவங்களுக்குள்ள படம் தயாரிக்கிறாங்க, நடிக்கிறாங்க, அவங்களுக்குள்ளேயே திரைக்கதையையும் எழுதிக்கிறாங்க. இப்படி unofficial-ஆ கூட மூணுபேரும் ஆலோசனை செஞ்சு படத்தை கொண்டு வர்றதையும் வாடிக்கையா வச்சிருக்காங்க. இதுக்குக் காரணம், மூணுபேரும் துளு மொழி பேசுற மங்களூர் பக்கம் இருந்து வந்தவர்கள். கர்நாடகாவோட உள்ளூர் மொழிகள்ல துளுவும் ஒன்னு. ஆனா துளு மொழியில படம் எடுத்தா மங்களூர் தாண்டி எங்கயும் படம் ஓடாது. கன்னட இண்டஸ்ட்ரியும் துளு பேசுற மக்களை கொஞ்சம் லெப்ட்ல டீல் பண்ணாங்க. துளு மக்களோட நேட்டிவிட்டியை கன்னடத்துல எடுத்துகிட்டு வர ரொம்பவே போராடுனாங்க. அதுக்காகத்தான் கேரளாவுல இருந்து மேக்கிங்கை எடுத்துக்கிட்டு உள்ளூர் நேட்டிவிட்டியை உலக ரீதியா கொண்டாட வச்சாங்க. இப்போ வெளியாகியிருக்கிற காந்தாராவும் உள்ளூர் மக்களோட நேட்டிவிட்டியை எடுத்துக்கிட்டு அதை உலகத்துக்கே தெரிய வச்சிருக்கார், ரிஷப் ஷெட்டி. இனிமே கன்னட பட உலகம் மாறுனதுல இந்த மூணு ஷெட்டிகளுக்கும் முக்கியமான பங்கு இருக்கு.

கடைசியில இவங்க 3 தமிழ் இயக்குநர்களை இன்ஸ்பையரா எடுத்துக்கிட்டாங்கனு சொல்லியிருந்தேன். அது நம்ம இயக்குநர்களான பாலா, அமீர், சசிக்குமார்தான். மூணுபேரும் ஒன்பை ஒன்னா வந்தது மாதிரி, ராஜ் பி.ஷெட்டி, ரிஷப் ஷெட்டி, ரக்ஷித் ஷெட்டினு மூணுபேரும் வர முடிவு பண்ணித்தான் சினிமாவுக்குள்ள இறங்கினாங்க. இன்னொரு ஆச்சர்யமான விஷயம், ஆரண்ய காண்டம் தியாகராராஜா குமாரராஜா, 96 பிரேம், ரிஷப் ஷெட்டி எல்லோரும் இணைஞ்சு அசிஸ்டெண்ட் டைரக்டரா பல படங்கள்ல வேலை பார்த்திருக்காங்க

எனக்கு இவங்களோட படங்கள்ல பிடிச்சது, கிரிக் பார்ட்டியும், காந்தாராவும்தான். உங்களுக்கு என்ன படம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

43 thoughts on “கன்னட சினிமாவைக் கவனிக்க வைத்த 3 பேர்!”

  1. india online pharmacy [url=https://indiapharmast.com/#]online shopping pharmacy india[/url] best india pharmacy

  2. top 10 pharmacies in india [url=https://indiapharmast.com/#]Online medicine order[/url] reputable indian online pharmacy

  3. www canadianonlinepharmacy [url=http://canadapharmast.com/#]reputable canadian pharmacy[/url] canadapharmacyonline legit

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top