144 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நடத்த 2021-ல் முடிவு செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டு தொடங்கி இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இதையடுத்து 2023-லும் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றும் இந்தியாவால் ஃபைனல்ஸில் வெல்ல முடியவில்லை.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெல்லும் ICC Test Championship mace-ன் கதை தெரியுமா?
ICC Test Championship mace
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்குவதற்கு முன்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மேஸ், ஆண்டு இறுதியில் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் அணிக்கே வழங்கப்பட்டு வந்தது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 2017-ம் ஆண்டு முதலே டெஸ்ட் தரவரிசையில் முன்னணியில் இருந்து வருகிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்குக் கொடுக்கப்படும் ICC Test Championship mace, கடந்த 2000-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த லக்ஸுரி பிராண்டான Thomas Lyte என்ற நிறுவனம் அதை வடிவமைத்தது. கிரிக்கெட் ஸ்டம்ப் போன்ற நீளமான ஒரு கோலில் முனையில் கிரிக்கெட் பந்து ஒன்று இருப்பதைப் போன்று அது வடிவமைக்கப்பட்டிருந்தது. அதை வடிவமைத்தவர் டிரெவோர் பிரவுன். அதற்கான இஸ்பிரேஷனான பிரவுன் குறிப்பிடுவது, `ஒரு போட்டி முடிந்ததும் வெற்றிபெற்றதற்கான அடையாளமாக வீரர் ஒருவர் ஸ்டம்பைத் தூக்குவார்கள். அதை நினைவுபடுத்தவே அந்த டிசைன். வழக்கமான டிராஃபி டிசைனை விட இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று தோன்றியது. அதன் முனையில் இருக்கும் கிரிக்கெட் பந்தானது உலகத்தையும் குறிக்கும்’’ என்றார். அந்த டிசைனில் டெஸ்ட் அந்தஸ்து பெற்றிருக்கும் 12 நாடுகளின் சின்னங்களும் இடம்பெற்றிருக்கும்.
சில்வரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மேஸ், தங்க மூலாம் பூசப்பட்டது. அதன் சில பகுதிகள் ஒளியைப் பிரதிபலிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. டிரெவோர் பிரவுன் வடிவமைத்துக் கொடுத்த டிஸை தாமஸ் லைட் நிறுவனத்தின் சில்வர் தயாரிப்பு வல்லுநர்கள், டைப்போகிராஃபர்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட டீம் வடிவமைத்திருக்கிறது. அதன் கொண்டைப் பகுதியில் இருக்கும் உருண்டை வடிவ பந்து போன்ற உருளையை சில்வரில் வடிவமைப்பதுதான் சவாலாக இருந்தது என்கிறார்கள். சில்வர், தங்க மூலாம் பூசப்பட்டிருந்தாலும் எடைக் குறைவாக இருக்கும்படியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 2000-2001 ஆண்டுகளிலேயே இந்த மேஸ் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் தயாரிப்பு உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளிவராமலேயே இருந்தது.
ICC Test Championship mace எப்படி உருவாக்கப்பட்டது என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்…
Also Read – ஒரே நேரத்தில் 2 தொடர்கள்.. 2 வெவ்வேறு அணிகள்… இந்திய அணியின் அப்ரோச் சொல்லும் சேதி?