ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான் ஒரு அதிரடிக்காரன்… 9 சம்பவங்கள்!

‘சின்ன சின்ன ஆசை’ல ஆரம்பிச்சு ‘பரம சுந்தரி’ வரைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசைல இன்னமும் அதே Vibe… அதே Energy…

ஆனா, ரோஜா காலத்து ரஹ்மானுக்கும் ராயன் காலத்து ரஹ்மானுக்கும் அப்படி ஒரு மாற்றம். எப்படி நடந்துச்சு இந்த மாற்றம்?

சைலண்டா இருக்குற ரஹ்மான் அதிரடிக்காரனா மாறுன 9 சம்பவங்களைத்தான் பார்க்கப்போறோம்.

ஆஸ்கார் மேடைல ரஹ்மான் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’னு தமிழ் பேசியதே மறக்கவே முடியாது. ஆக்சுவலா அன்னைக்கு வெறுமனே தாங்க்ஸ் சொல்லிட்டு இறங்கிடலாம்னுதான் நினைச்சாராம். அப்பறம் இவ்வளவு பெரிய மேடைல பேச சான்ஸ் கிடைச்சிருக்கு இதை பயன்படுத்திக்கணும்னு யோசிச்சு என்னெல்லாம் பேசலாம். எப்படி பேசலாம்னு ரொம்ப யோசிச்சு நம்ம மொழில எதாவது சொல்லலாம்னு முடிவு பண்ணிதான் அந்த சம்பவத்தை பண்ணினாரு.

ஆஸ்காருக்கு அப்பறம் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்குதோ அங்கெல்லாம் தமிழில் பேசி அரங்கத்தை ஆச்சர்யப்படுத்துவார் ரஹ்மான். இந்திய சினிமாக்களை கவுரவிக்கும் ஐஃபா விருதுகள் விழா முழுக்க இந்தியில் பேசி கடுப்பேற்றிக் கொண்டிருக்க மேடையேறிய ரஹ்மான் ‘சிறந்த நடிகருக்கான விருது’ என்று தமிழில் பேசியது தலைவன் தக் லைஃபுக்கு ஒரு சாம்பிள்.

ஆஸ்கார் வாங்குறதுக்கு முதல் நாள் அவ்வளவு பயத்துல இருந்தேன். இதுக்கு முன்னாடி என் வாழ்க்கைல அவ்வளவு பயந்தேன்னா ஒரே ஒரு நாள்தான். அது என் கல்யாணத்துக்கு முதல் நாள்னு ரஹ்மான் சொல்லிருக்காரு. அதான் பதட்டத்துல ஆஸ்கார் மேடைல அவரோட மனைவி பேரை சொல்லாம விட்டுட்டாராம். ‘என் பேரை மறந்துட்டல்ல ராஸ்கல்’னு இப்பவும் மனைவிகிட்ட திட்டுவாங்கிட்டு இருக்காரு இசைப் புயல்.

பாலிவுட் நடிகர்கள் ஏ.ஆர்.ரஹ்மானை ஒரண்டை இழுப்பதும் பதிலுக்கு அவர் சம்பவம் செய்வதும் அடிக்கடி நடக்கும். ஒரு விழாவில் சல்மான் கான் ‘ஏ.ஆர். ரஹ்மான் மியூசிக் ஆவரேஜாதான் இருக்கும்’ என்று நக்கலாக சொல்ல அதற்கு ரஹ்மானின் ரியாக்‌ஷனை கீழ இருக்க வீடியோல பாருங்க.

அதே போல ஒரு பிரஸ்மீட்டில் இப்போ வர்ற பாடல்கள்ல இசையெல்லாம் ஒரே இரைச்சலா இருக்கே என்ன காரணம்னு கேக்க அதற்கு ரஹ்மான் நல்ல மியூசிக் சிஸ்டம் வாங்கி கேளுங்க என்று அதிரடியாக ரிப்ளை கொடுத்தார்.

இப்போ இவ்ளோ தக் லைஃப் பண்ற தலைவர், ஒரு காலத்துல அமைதியோ அமைதி.. மோடில இருந்து ஜெயலலிதா வரைக்கும் கேள்வி கேட்டு தண்ணி குடிக்க வச்ச வட இந்திய ரங்கராஜ் பண்டே கரண் தப்பார் தன் இண்டர்வியூ எடுத்ததுலயே டஃப்பான செலிபிரட்டி ஏ.ஆர்.ரஹ்மான் தான் சொல்றாரு. காரணம் எல்லாக் கேள்விக்கும் ஏ.ஆர். ரஹ்மானோட சுருக்கமான பதில் ம்ம்ம் நீளமான பதில் ம்ஹூம்.

இவ்வளவு சைலண்டா இருந்த நீங்க சமீபத்தில கொஞ்சம் நல்லாவே பேச ஆரம்பிச்சிருக்கீங்களே அது எப்படிங்க என்று அவரிடம் கேட்டால் அவர் நடத்தும் கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரியை கை காட்டுறாரு. “ஸ்கூல் நடத்துறதால பசங்க எதாச்சும் கேள்வி கேட்டா ம்ம்ம் ம்ஹ்ஹூம்னு பதில் சொல்ல முடியாது. அவங்களுக்குப் பதில் சொல்லியே நிறைய பேச ஆரம்பிச்சுட்டேன்”னு சிரிக்கிறார்.

அதே போல ட்ரெஸ்லயும் தொள தொள டீசர்ட்.. கட்டம் போட்ட சட்டைனு இருந்த ஏ.ஆர். ரஹ்மான் எப்படி இப்படி மாறினாருனு ஆச்சர்யமா இருக்குல. அதுக்கும் மாஸா ஒரு பதில் சொல்றாரு ரஹ்மான். “ஆரம்ப காலங்கள்ல டிரெஸ் பத்தியெல்லாம் கவலைப்பட மாட்டேன். ஆனா ஆஸ்கருக்கு அப்பறம் நம்மளை இந்தியனா பாக்க ஆரம்பிக்குறாங்க. நம்ம தமிழ் கலாசாரத்தை ரெப்பரசண்ட் பண்றோம்னு உணர்ந்து உடையில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். வெளிநாட்டுக்காரன் நம்மளை பாத்து சிரிக்கக்கூடாதுல”. ஏ.ஆர் ரஹ்மான் அணியும் சூப்பரான காஸ்ட்யூம் எல்லாமே மனைவியின் செலக்சன்தான்.

Also Read : AR Rahman: ஏ.ஆர்.ரஹ்மான் செய்த 5 தரமான `thug life’ சம்பவங்கள்!

80ஸ் தபேலா இசை கேட்டு பழகியிருந்தவர்கள் ரோஜா பாடல்களின் டிஜிட்டல் இசையை டேப் ரெக்கார்டரில் கேட்டபோது இது நம்ம டேப் ரெக்கார்டுதானா என்று ஆச்சர்யப்பட்டனர் அப்படி ஒரு புதுமை.. அப்படி ஒரு துல்லியம். ஆனால் இப்போ வர்ற பாடல்களோட வெற்றி எத்தனை மில்லியன் வியூஸ்ங்குறதை வச்சுதானே சொல்றாங்க. இதை எப்படி பார்க்குறீங்க என்று ரஹ்மானிடம் கேட்டால் “ஒரு வாட்டி நான் வெளிநாட்டுக்கு போனப்போ தமிழே தெரியாத ஒருத்தர் மரியான்ல வர்ற எங்க போன ராசா பாட்டை பாராட்டினாரு. மக்களுக்கு பிடிக்குறதுதான் பாட்டோட வெற்றி. ஒரு பாட்டு பில்லியன் வியூஸ் போகுதுனா அதை எப்படி ப்ரொமோட் பண்றாங்கன்றதை வச்சிதான். சில சமயம் இந்த பாட்டெல்லாம் இவ்வளவு வியூஸானு ஆச்சர்யமா இருக்கு” என்கிறார்.

To Watch Special Video

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top