நடிக்க மறுத்த ஹீரோ.. சவாலை ஏற்ற லெஜண்ட் சரவணாவின் கதை!

‘தி லெஜண்ட்’ படத்திற்கான ட்ரெய்லர் வந்ததில் இருந்து இண்டர்நெட்டின் சென்சேஷன் லெஜண்ட் சரவணா அண்ணாச்சிதான். யார் இந்த சரவணா அருள்? இவருடைய வரலாறு என்ன? எப்படி நடிக்க வந்தார்? இவரைப் பற்றிய ட்ரோல்களுக்கு இவருடைய ரியாக்‌ஷன் என்ன? 

50 வருடங்களுக்கு முன்பு அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தில் பணிக்கர் குடியிருப்பு என்ற கிராமத்தில் விவசாயம் செய்துகொண்டிருந்தார் சண்முக சுந்தரம். நவரத்தினம், யோகரத்தினம், ராஜரத்தினம், செல்வரத்தினம் என இவருக்கு மொத்தம் 4 மகன்கள். இதில் இளையவரான செல்வரத்தினத்திற்கு ஊரில் இருந்து விவசாயம் செய்வதைவிட மெட்ராஸ்க்குச் சென்று மளிகைக் கடை தொடங்கினால் என்ன என்று தோன்றியது. உடனே ரயில் ஏறி மாம்பலம் ரயில் நிலையம் வந்த அவர் முதலில் சந்தித்தது உஸ்மான் ரோட்டில் சுந்தரம் காபி என்ற கடையை நடத்தி வந்த தன் உறவினர் சோம சுந்தரம் என்பவரை. ‘இங்க மளிகைக்கடையெல்லாம் வச்சா வேலைக்காகாது. ஒரு பாத்திரக்கடை விலைக்கு வருது. அதை எடுத்து நடத்து’ என்று அறிவுரை சொன்னார் சோம சுந்தரம். 

அப்போதைய ரங்கநாதன் தெருவில் மொத்தம் மூன்றே மூன்று கடைகள்தான் இருந்தது. ஒன்று கும்பகோணம் பாத்திரக்கடை, லிப்கோ புத்தகக்கடை, கல்யாணி ஸ்டோர்ஸ் என்று ஒரு கடை. இதில் கும்பகோணம் பாத்திரக்கடையை விலைக்கு வாங்கி அதை சரவணா ஸ்டோர்ஸ் என்று மாற்றி மெட்ராஸில் 1970 ஆம் ஆண்டு தன் முதல் வியாபாரத்தைத் தொடங்கினார் செல்வரத்தினம். ஒரு கட்டத்திற்குப் பிறகு இவருடைய சகோதரர்கள் யோகரத்தினமும் ராஜரத்தினமும் இவருடன் இணைந்துகொள்ள பாத்திரக்கடை, ஜவுளிக்கடை, நகைக்கடை என சரவணா ஸ்டோர்ஸ் சாம்ராஜ்யம் மாபெரும் வளர்ச்சி அடைந்தது. 

ஒரே கடையில் எல்லாப் பொருட்களும் கிடைக்கும் என்ற மல்ட்டி ஸ்டோர்ஸ் கான்சப்டை அறிமுகப்படுத்தி பிரபலமடைந்தது சரவணா ஸ்டோர்ஸ். 2000 ஆம் ஆண்டு இந்தக் கடையை நேரில் பார்த்து ஆச்சர்யப்பட்ட  கிஷோர் பியானி என்ற மும்பைக்காரர் அதையே இன்ஸ்பிரேசனாக வைத்து ஆரம்பித்ததுதான் பிக் பஜார். ஒரு கட்டத்தில் செல்வரத்தினம் பக்கவாதம் வந்து இறந்துவிட மூன்று சகோதரர்களின் மகன்களும் ஆளுக்கொரு கடையாக பிரித்து எடுத்துக்கொண்டார்கள். செல்வரத்தினத்தின் குடும்பத்திற்கு சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ், ராஜரத்தினம் குடும்பத்திற்கு சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், யோகரத்தினம் குடும்பத்திற்கு சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் எலைட் என்று பிரிக்கப்பட்டது. இதில் யோகரத்தினத்திற்கு பல்லாக்குதுரை, பொன்துரை, செல்வா அருள் துரை, சண்முகதுரை என்ற நான்கு மகன்கள். இதில் பொன் துரை என்பவர்தான் சரவணா அருள், நமக்கெல்லாம் தெரிந்த லெஜண்ட் சரவணா. 

சிறு வயதில் இருந்தே படிப்பு முடித்தவுடன் டியூசனுக்கோ விளையாடவோ போகாமல் நேராக கடைக்கு வந்துவிடுவார் சரவணா அருள். வியாபார நுணுக்கங்களைக் கற்று வளர்ந்த அவர் தொடங்கியதுதான் இந்தியாவிலியே பெரிய மல்ட்டி ஸ்டோர் கடை, உலகிலேயே அதிகளவு தங்கநகை டிஸ்ப்ளே செய்யும் கடை என தொட்டதில் எல்லாம் பிரமாண்டம் காட்டி அசத்தினார் லெஜண்ட் அண்ணாச்சி. கலர்ஃபுல்லான பிரமாண்ட விளம்பரங்களை எடுத்துவந்தவர். ஒரு பெரிய நடிகரை தனது விளம்பரத்தில் நடிக்கச் சொல்லி கேட்டிருக்கிறார். அவர் இழுத்தடிக்கவே பேசாமல் நானே நடிச்சுட்டா என்ன என்று கேட்டு அவரே நடிக்கவும் செய்தார். ஏகத்துக்கும் விமர்சனங்கள் கிளம்பியது. இவரது நிறம் பற்றியும், தோற்றம் பற்றியும் கலாய்த்துத் தள்ளினார்கள். சோசியல் மீடியாவில் வந்த ட்ரோல்களை அவரிடம் காட்டியபோது அவர் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? 

Also Read : Tom & Jerry-ல நம்மள அழ வைச்ச எபிசோடு நியாபகம் இருக்கா?!

“என் கடை விளம்பரத்துல நான் நடிக்குறேன். இதில் என்ன தப்பு இருக்கு. இந்த மாதிரி கிண்டல் பண்றவங்க ஒரு மாசம் பண்ணுவாங்களா.. அப்பறம் மறந்துடுவாங்க. ஃப்ரீயா விடுங்க” என்று கூலாக சொல்லியிருக்கிறார். 

கடை விளம்பரங்களுக்கே ஜேடி-ஜெர்ரி இயக்குநர், ஓம் பிரகாஷ் கேமரா, பிருந்தா மாஸ்டரின் நடனம், ஹன்சிகா, தமன்னா என்று பெரிய பெரிய ஆட்களாக பிடித்து பிரமாண்ட விளம்பரங்கள் எடுப்பார் சரவணா அருள். அவரே ஒரு படம் எடுத்தால் சும்மா விடுவாரா? சங்கரின் சிவாஜி படத்திற்கு இணையாக எக்கச்சக்க பொருட்செலவில், ஏகப்பட்ட நடிகர்களுடன், டாப் கிளாஸ் டெக்னீசியன்கள், ஹாரிஸ் ஜெயராஜ் இசை என பிரமாண்டமாக தயாராகிறது ‘தி லெஜண்ட்’ படம். ட்ரைலரை இதுவரை ஒரு கோடிக்கும் மேலானவர்கள் பார்த்திருக்கிறார்கள். படம் எப்படி வருகிறது, வியாபாரத்தில் ஹிட் அடித்த லெஜெண்ட் அண்ணாச்சி சினிமாவில் ஹிட் அடிப்பாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்

2 thoughts on “நடிக்க மறுத்த ஹீரோ.. சவாலை ஏற்ற லெஜண்ட் சரவணாவின் கதை!”

  1. Saravanansuper Saravanansuper

    கண்டிப்பாக ஹிட் அடிப்பார் அவருடைய பெயர் அப்படி அருள் சரவணன்( அருள் சரவணன்) 100/100 வெற்றி நிச்சயம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top