அடேய் சும்மா இருங்கடா… டெலிவரி பாய்ஸ் ரீல்ஸ் அலப்பறைகள்!

டிஸ்கிளைமர்: சிங்கிள்ஸ், காதலர்களால் கழட்டி விடப்பட்டவர்கள், காதலர்களுக்காக ஏங்குபவர்கள் இந்த வீடியோவை உங்களது சொந்த அபாயத்துக்கு உட்பட்டு பார்க்கவும். இப்படி கிரிஞ்சா பேசக்கூட ஆள் இல்லையேனு வீடியோ பார்த்து பின்னர் நொந்துபோனால் சமூகம் பொறுப்பாகாது.

“உங்கூட நான் 700 வருஷம் சேர்ந்து வாழணும்னு நினைக்கிறேன்டா”, அதென்ன திமிங்கலம் 700 வருஷம்? அப்டினுதான யோசிக்கிறீங்க. நானும் அதான் யோசிக்கிறேன். அதுக்கு நம்ம ஸ்விக்கி லவ்வர்ஸ் என்ன சொல்றாங்கனு கேப்போமா… “ஒவ்வொருத்தருக்கும் 7 ஜென்மம்னு சொல்லுவாங்க. ஒரு ஜென்மத்துக்கு 100 வருஷம்னாகூட. ஒவ்வொரு ஜென்மத்துக்கும் 700 வருஷம் உன்கூட சேர்ந்து வாழ்வேன்லடா?” – கணக்கு இடிக்குதுல! இவங்க பண்ற காதலுக்கு இந்த கணக்கு போதும். பாட்டைப் போட்டு விடுங்க. “நூறு சென்மம் நமக்கு போதுமா? வேற வரம் ஏதும் கேப்பமா? சாகாவரம் கேப்போம் அந்த சாமியை. சாமியை”. கமல் சார் எனக்கும் இவங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது பேட்டைக்காரன் மேல சத்தியம். இப்படித்தான் ஊருக்குள்ள பொய்யா சொல்லிட்டி திரியுறாங்க. அதனால, இந்த வீடியோல டெலிவரி பாய்ன்ற பேருல காதல் பண்ணிட்டு திரியுற சில கிரிஞ்சுகளைப் பத்திதான் பார்க்கப்போறோம்.

காதல்ன்ற டாபிக் மட்டும் எவ்வளவு வருஷம் ஆனாலும், டைப் டைப்பா எவ்வளவு அதைப் பத்தி சொன்னாலும் அலுக்கவே அலுக்காது. ஏன்னா, மனித உறவுகள்ல காதல் எப்பவுமே ஸ்பெஷலானது. ஆனால், இன்னைக்கு அதையே கிரிஞ்சுத்தனமா மாத்தி, அந்த டாப்பிக்கை எடுத்தாலே கடுப்பாகுற மாதிரி சில ரீல்ஸியன்ஸ் பண்ணி வைச்சிருக்காங்க. அதுல முக்கியமானவங்க இந்த ராஜன் வகையறா. வடசென்னைல வர்ற ராஜன் மாதிரி மாஸான பீஸ்ஸோ, அவங்க காதல் மாதிரி கிளாஸ்ஸான பீஸ்ஸோ இவங்க இல்லை. இவங்க எல்லாம் அல்ட்டி கிரிஞ்சு. ஸ்விக்கி பாய்ஸ் எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறாங்க. அவங்க பேரைச் சொல்லி ஊர்ல இருக்குறவங்களை கடுப்பேத்துறாங்க, இந்த ஸ்விக்கி லவ்வர்ஸ். என்ன கொடுமை சார் இது. உனக்கு பொறாமைடா. அதனாலதான் இப்படி பேசுறனு நீங்க நினைக்கலாம். அது தவறு. நான் இப்படி வன்மத்தைக் கொட்டுறன்னா அதுக்கு காரணம் இவங்க பண்ற வீடியோஸ் மட்டும்தான்.

Rajan Vaigaiyara
Rajan Vaigaiyara

ஸ்விக்கி லவ்வர்ஸ் வீடியோல சில எக்ஸாம்பிள்ஸ் நம்ம இப்போ பார்ப்போம். காண்டாகி வீடியோவை ஸ்க்ரோல் பண்ணிடாதீங்க. கண்டிப்பா என்டர்டெயின்மென்ட் இருக்கு. ஒரு வீடியோல நம்ம ஸ்விக்கி அண்ணே, “எங்க அம்மா உன்னை தேடிக்கிட்டு இருக்காங்க”ன்னுவாரு. உடனே, நம்ம அண்ணி, “என்னடா சொல்ற? உங்க அம்மா ஏண்டா என்ன தேடணும்?”னு கேப்பாங்க. அதுக்கு நம்ம ஸ்விக்கி அண்ணே, “இல்லை வீட்டுல பூஜை பண்ண போறாங்க. சிலை இல்லையாம்”னு சொல்லுவாரு. அதோட கட் பண்ணா ஓகே. அதுக்கு அண்ணி செல்லமா, “போடா பொறுக்கி”னு சொல்லுவாங்க பாருங்க. அப்புறம் ஃபுல்லா லவ் வைப்ஸ்தான். நமக்கில்லை அண்ணனுக்கும் அண்ணிக்கும். அன்று காதல் பண்ணியது… உந்தன் கண்ணம் கிள்ளியது…னு கவர் சாங் வேற பேக்ரௌண்ட்ல போடுவாங்க. அவனவன் கஷ்டப்பட்டு மூச்சைப் புடிச்சு கவர் வெர்ஷன் பாடுனா. கொஞ்சம்கூட அலட்டிக்காம கிரிஞ்ச் டயலாக்ஸுக்கு துரை யூஸ் பண்ணிக்குவீங்களோ? நான் கேக்கலை ஐயாச்சாமி கேக்கச்சொன்னாரு.

எனக்கு ஒரு டவுட்டு… நம்ம சென்டிமென்ட் வில்லன் மாதிரி உண்மையிலேயே இவங்க சீரியஸா நடிக்கிறாங்களா? இல்லை லவ் பண்றவங்களையெல்லாம் கலாய்க்கிறாங்களா? அப்டினு பார்த்தா ஒவ்வொரு வீடியோலயும் உண்மையிலேயே உள்ளத்துல இருந்து கூவுறாங்க. கமெண்ட்ல வந்து கழுவி கழுவி ஊத்துறாங்க. ஆனால், இவங்க இக்னோர் நெகட்டிவிட்டினு விழுந்து விழுந்து லவ் பண்றாங்க. டேய்… யார்ரா நீங்களாம்? சரி, என்ன வேணும்னாலும் பண்ணுங்கடா… ஆனால், நல்ல நல்ல பாட்டையெல்லாம் போட்டு அந்தப் பாட்டை கேட்க முடியாதபடி பண்ணாதீங்கடா. ஒருதடவை உங்க ரீல்ஸ பார்த்தா, அடுத்து அந்த பாட்டைக் கேட்கும்போதுலாம் உங்க முகம்தான்டா நியாபகம் வருது. ஒவ்வொரு நாளும் நொந்து போய் நைட்டு கொஞ்ச நேரம் ரீல்ஸ் பார்த்து மனசுல இருக்குற வடுக்களை ஆற்றலாம்னு நிறைய பேர் நினைச்சு, ரீல்ஸ், யூ டியூப் பக்கலாம் வர்றாங்க. அவங்களை நோகடிக்காதீங்கடா!

Rajan Vaigaiyara
Rajan Vaigaiyara

ஸ்விக்கி லவ்வர்ஸாவது பரவால்ல உருகி உருகி உளறிட்டு திரிவாங்க. ஆனால், இன்னொருத்தங்க இருக்காங்க. சாய் – கார்த்திக்னு. ரெண்டு பேரும் பண்ற வேலைகள் இருக்கே. அதாவது டாக்ஸிக்கா இருக்குறதை நார்மலைஸ் பண்ணுவாங்க. இதுல இன்னொரு கொடுமை என்னனா அந்த சாய் ஸ்கூல் யூனிஃபார்ம்ல வரும். ஏன்டா, அந்தப் புள்ளய படிக்க விடுடா கார்த்தி. லைஃப் நினைச்சு பயப்படுறியானு கேப்பாங்க. அப்போ அடுத்து அவங்க என்ன சொல்ல போறாங்கனு நமக்கு ஒரு பயம் வரும் பாருங்க. உடனே, ஸ்க்ரோலிங்தான். இதேமாதிரிதான் ஆட்டோக்காரன் காதல், பீரியட்ஸ் காதல்னு ரீல்ஸ் பக்கம் போனால்கூட சிங்கிள்ஸ நிம்மதியா இருக்க விடமாட்டாங்க. பட் அந்த ஆட்டோக்காரன் காதல்ல வர்ற பொண்ணு இஸ் பியூட்டிஃபுல். ஆக மொத்தத்துல இவங்க மத்தில நம்ம உயிரைக் காப்பாத்துறது ரொம்ப சிரமம்டா. ரைட்டு நடத்துங்க!

காதல் வைபோக ரீல்ஸ்களில் நீங்கள் பார்த்து நொந்த ரீல்ஸ் எதுனு கமெண்டுங்க! உங்கள் துன்பத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம்.

Also Read – இளைஞர்களின் கனவுக் கன்னியா இருந்து…தலைமறைவான ஹீரோயின்ஸ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top