பேசில் ஜோசப்

இப்படி படம் எடுத்தா லைஃப் டைம் செட்டில் மெண்ட்.. பேசில் ஜோசப் இவ்வளவு மாஸா?

புருஷன்கிட்ட பேசும்போது மரியாதையா பேசணும்னு சொல்லி மனைவியை கண்ணத்துல அரையுற டெரர் புருஷன், மனைவி கிக் ஒண்ணு விடும்போது பறந்து போய் விழுந்து, அவங்களை பழிவாங்கணும்னு மனசுலயும் வயித்துலயும் வலியோட முகத்தை அந்நியன் அம்பி மாதிரி வைச்சிட்டு பாவம் புருஷன்னு ஜெய ஜெய ஜெய ஜெய ஹேல சுத்துற நடிகர். நடிப்புல பட்டையை கிளப்புற அதேநேரம், மின்னல் முரளி மாதிரி இந்தியாவே கொண்டாடுற சூப்பர் ஹீரோ படம் ஒண்ணு எடுத்து மாஸ் காட்டி, ‘இப்படியொரு படத்துல நடிக்கணும்டா’னு மற்ற நடிகர்களை ஏங்க வைக்கிற டைரக்டர். அதாங்க, தி நேம் இஸ், பேசில் ஜோசப். அவரோட சினிமா ஜர்னி, காதல் கதை, எய்ம்லா கேட்டா குஷி ஆயிடுவீங்க. அப்படி என்ன அவர் கதைல இருக்கு?

பேசில் ஜோசப்

எல்லார் வாழ்க்கைலயும் ஒரு கட்டத்துல நாம பண்றது சரியா, நமக்கு இந்த வேலைலாம் புடிச்சிருக்கான்ற கேள்வி வரும். ஆனால், நிறைய கமிட்மெண்ட்ஸ்னால கனவுகளையெல்லாம் கை விட்ருவோம். இருந்தாலும் மனசுக்குள்ள எங்கயாவது பொறி தட்டிட்டேதான் இருக்கும். அப்படிதான், இன்ஃபோசிஸில் சாப்ட்வேர் என்ஜினியரா வேலை பார்த்துட்டு இருந்த ஒருத்தருக்கு, “நாம என்ன பண்றோம். நமக்கான வேலை இது இல்லையே, சினிமாதான நம்ம கனவு. நாம ஏன் வேலையை ரிசைன் பண்ணிட்டு சினிமா எடுக்க போகக்கூடாது”னு இன்னைக்கு சினிமால முன்னணி டைரக்டர்களா, நடிகர்களா இருக்குற பலரையும் போலவே முடிவெடுக்கிறார்.  சினிமாதான் நம்ம கனவுன்னு முடிவெடுத்த அவருக்கு சினிமா பின்னணி கிடையாது. சினிமான்ற வார்த்தையவே கொஞ்சம் தள்ளி நின்னு பார்க்குற குடும்பம்தான். அவங்கப்பா கிறித்துவப் பாதிரியார். அப்பாவோட படத்துக்குப் போனால், என்ன சர்ச் பாதிரியார் சினிமாக்கு போறார்ன்னு சொல்றதால, சினிமாவே பார்க்காமதான் வளர்ந்துருக்காரு. அப்புறம், புதுப்படங்கள் திரையிடாத தியேட்டர்களைக் கொண்ட சின்ன ஊர். சினிமா ஷூட்டிங்க்லாம் அடிக்கடி நடக்காத ஊர், சினிமா நடிகர்கள் யாரும் அந்த ஏரியாவைச் சேர்ந்தவங்க இல்லை, இந்த ஊரைப் பத்தியே சினிமாக்கள் வந்தது இல்லை, தப்பி தவறிக்கூட அந்தப் பையனுக்கு சினிமா ஆசை வரறதுக்கு எந்த காரணமும் இல்லாத சூழல்லதான் வளர்ந்தான். இப்படியிருந்தும் அவனுக்கு எப்படி சினிமா ஆசை எப்படி வந்ததுன்னா, தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வெளியான சினிமாக்களை பார்த்துதான். 

சினிமா ஆசையால டக்னு வேலையை விட்டா வீட்டுல பொளந்துருவாங்கனு, இன்ஃபோசிஸ் வேலையை முழுசா வேலையை விடாமல், ‘ஷ்ஷ்ஷ், ஒரு துண்டுப்படம்’னு 2,3 ஷார்ட் ஃபிலிம் எடுக்கிறான். அதைப் பார்த்து சினிமா உலகம் அவனை உள்ளே சேர்த்துக்குது. ஹிருதயம்னு ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த வினீத் ஸ்ரீனிவாசன்கிட்ட உதவி இயக்குனரா சேர்ந்து ஒருசில படங்கள் வேலை பார்க்குறாரு. அப்புறம் நிறைய படங்கள்ல கேமியோ ரோல்கள்ல நடிக்கிறாரு. கடைசில டைரக்டராவும் ஆகிடுறாரு. இதுவரைக்கும் அவர் வெறும் மூன்றே மூன்று படங்கள் எடுத்துருக்காரு. எல்லாமே வேறலெவல் ஹிட்டு. டைரக்டரா மட்டுமில்லாமல் நடிகராவும், திலீஷ் போத்தன், வினித் ஶ்ரீனிவாசன், ரஞ்சித், லிஜோ ஜோஸ் பெல்லிசேரி என மலையாள சினிமாவில் நடிப்பு, இயக்கம் என இரண்டிலும் கலக்கும் இயக்குநர்களின் வரிசையில் அந்தப் பையன் சேர்ந்திருக்கிறார். இந்தியால, குறிப்பா சவுத் இந்தியால மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொண்டாடப்பட்ட ஒரே சூப்பர் ஹீரோ படமான ‘மின்னல் முரளி’ படத்தை இயக்கிய பேசில் ஜோசப்தான் அந்த நடிகர், இயக்குநர். 

Also Read : மலையாள சினிமாவின் சூப்பர் ஹீரோ… டொவினோ தாமஸின் கதை!

வினீத் ஸ்ரீனிவாசன்கிட்ட ஒரு இண்டர்வியூல, “நீங்க பேஸில் ஜோசப்போட குருநாதன்”ல்லனு கேப்பாங்ஜ. அதை அப்படியே கட் பண்ணி, “பேஸில் எங்கிட்ட ஏ.டியா இருந்தான். அவ்வளவுதான். அவன்தான் எனக்கு குருநாதன். மின்னல் முரளி படம் பார்த்துட்டு, அவனைக்கூப்பிட்டு, இந்த ஷார்ட்லாம் எப்படிடா எடுத்தனு கேட்டுட்டு இருந்தேன். அவன் அவ்வளவு சினிமாவைப் பத்தி தெரிஞ்சுட்டுதான் வந்தான்”னு சொல்லுவாரு. பேசில் ஜோசப் கூட வொர்க் பண்றது எனக்கு அவ்வளவு புடிக்கும்னும் சொல்லுவாரு. மாதவன்கிட்ட ஒரு இண்டர்வியூல நீங்க சமீபத்துல பார்த்து எஞ்சாய் பண்ண மலையாள படம் என்னனு கேட்டாங்க. அதுக்கு அவர், “நிறைய மலையாள படங்கள் எனக்கு புடிக்கும். ஆனால், பார்த்துட்டு என்ன இப்படி பண்ணிருக்கீங்க அப்டினு யோசிச்சது மின்னல் முரளி பார்த்துட்டுதான். பேஸில் ஜோசப்கூட எனக்கும் படம் பண்ணனும்”னு சொல்லுவாரு. இப்படி ஆர்டிஸ்ட்களைக்கூட வாயை பிளக்க வைச்ச படம்னா அது மின்னல் முரளிதான். டைரக்டரா இவன் கோதானு ஒரு படம் பண்ணியிருப்பாரு. அதுல பால சரவணன் கூட நடிச்சிருப்பாரு. அது என்னடா உங்க ஊர்காரங்க பரோட்டா, பீஃப்னா அப்படி அலையுறீங்கனு கேப்பாரு. அதுக்கு டொவினோ விளக்கம் ஒண்ணு கொடுப்பாரு பாருங்க. பரோட்டாவும் பீஃப் ரோஸ்டும் சாதாரண ஃபுட் இல்லை. அதுவொரு விகாரம், அப்டினா செண்டிமெண்ட்னு சொல்லலாம். பீஃப் ரோஸ்ட் எப்படி பண்ணனும்னு அவர் சொல்லி முடிக்கும்போது நம்ம வாய்ல எச்சி ஊரியிருக்கும். அதேமாதிரி மின்னல் முரளிலயும் சீன்லாம் கொஞ்சம் பிசகியிருந்தாலும், மத்த ஹீரோ படங்கள் மாதிரி சொதப்பியிருக்கும். எதுவும் சொதப்பால், அபிபாஸ் கம்பெனியை பார்த்து காப்பியடிச்சுதான் அடிடாஸ் வந்தாங்கனு சொல்றதுல இருந்து சூப்பர் பவர் யூஸ் பண்றது வரை எல்லாமே செதுக்கியிருப்பாரு. இப்படி டைரக்டரா இறங்கி விளையாடுனாலும், இன்னொரு பக்கம் நடிகரா சத்தமே இல்லாமலும் சம்பவம் பண்ணிட்டு இருந்தாரு. 

பேசில் ஜோசப்

‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படம்தான் அதுல எப்பவும் டாப். படத்தில் பெண் பார்க்கப் போகும் போது, கோழி விலையை எல்லாம் பேசி குலுங்கி  சிரிக்க வைத்த பேஸில், நிஜ வாழ்க்கையில் எப்படி புரபோஸ் பண்ணியிருக்கார் தெரியுமா? நீங்க முதல்ல புரபோஸ் பண்ணீங்களா, அவங்க புரபோஸ் பண்ணாங்களானு ஒரு பேட்டியில் கேட்கும் போது, “என் முகத்தைப் பாருங்க. நான் என்ன துல்கர் சல்மானா, எனக்குலாம் ஒரு பொண்ணு வந்து புரப்போஸ் பண்ணவா போறாங்க. நான் தாங்க புரபோஸ் பண்ணேன். பிரெண்ட்ஸ் மூலமா எலிசபெத்தோட ஹேண்ட் பேக்ல சில பரிசுகளை முன்னாடியே ஒளிச்சு வச்சிட்டு, அவங்க கிட்ட புரபோஸ் பண்ணும்  போது, உன் பையைத் திறந்து பாருன்னு சொல்லி, ரொம்ப சீப்பான டெக்னிக்லாம் யூஸ் பண்ணி தான் புரபோஸ் பண்ணேன். அதுவரைக்கும் அவங்க போன்ல என் பேரை ‘பேஸில் ப்ரோ’ன்னு தான் சேவ் பண்ணி வச்சிருந்தாங்க. அப்புறம் சரியாகிருச்சு”ன்னு சிரிச்சுகிட்டே சொல்வார்.

பேசில் ஜோசப்

மனுஷனை இன்னைக்கு சாக்லேட் பாயாலாம் கொண்டாடிட்டு செலிபிரேட் பண்றாங்க. ஆனால், தர்ஷனா ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்ல குட் மார்னிங்னு சொல்லும்போது, ‘கெட் லாஸ்ட்’னு சொன்னாராம். அதுமட்டுமில்ல டியர் ஃப்ரெண்ட் ஷூட்டிங் அப்போ இவரோட கேரவனுக்கு தர்ஷனா வந்துருக்காங்க, “இறங்கி போடி, இனி இவிட வரப்பிடாது”ன்ற ரேஞ்ச்ல பேசியிருக்காரு. சரியான ரக்கர்ட் பாயா இருப்பாரு போலனு எல்லாரும் நினைச்சு தான் பழகியிருக்காங்க. அப்புறம்தான் மனுஷன் பாவம்னு தெரிஞ்சுருக்கு. எதையும் பிளான் பண்ணி வாழாமல் ஜாலியா இருக்குற ஆள்தான் இவரு. ஜெய ஜெய ஜெய ஜெய ஹேலாம் அவரோட பெர்ஃபாமென்ஸ் உச்சம்னு சொன்னாலும், அதுக்கு முன்னாடி வந்த பால்து ஜான்வர்லயும் அட்டகாசம் பண்ணியிருப்பாரு. சட்டிலா ரோல்ஸ ஹேண்டில் பண்றதுல மனுஷன் வேறலெவல். 

பால்து ஜான்வர்ல மாட்டுக்கு பிரசவம் பார்க்குற சீன் ஒண்ணு வரும். அதுல பேசில் அட்டகாசம் பண்ணியிருப்பாரு. பேசில் ஜோசப் நல்லா நடிக்கிறாருனு சொல்றதுக்குலாம் விதைப் போட்டது, மிமிக்ரிதான். மோகன்லால், சுரேஷ் கோபி வீட்டுல உள்ள நாய்லாம் எப்படி குரைக்கும்னு மிமிக்ரி பண்ணுவாராம். பெர்ஃபாமென்ஸ்லாம் வொர்ஸ்ட்தான். ஆனால், அவரை சுத்தி இருந்தவங்களுக்கு அது பெரிய விஷயம்தான். வீட்டுல யாராவது வந்தால், அவங்கப்பா இப்படி மிமிக்ரிலாம் பண்ண சொல்லுவாராம். 

கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் கேன்சருக்கு அமெரிக்கால ட்ரீட்மெண்ட் எடுக்கும்போது, லெட்டர் ஒண்ணு எழுதுனாரு. நான் பெரிய புகழை அடைஞ்சேன், பணம் சம்பாதிச்சேன். ஆனால், எதுவும் இப்போ பயன்படலை. நான் இதுக்கு முன்னாடி என்ன பண்ணேன்றதுதான் இப்போ விஷயமாவே இருக்கு. அப்டினு சொல்லிருந்தாரு. அதை குறிப்பிட்டு, நம்ம கையில ஒரு வாழ்க்கைதான் இருக்கு. அதை அடிச்சு பொழிச்சு வாழணும்ன்றதுதான் அவரோட வாழ்க்கை தத்துவம். அதையே நாமளும் பண்ணுவோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top