‘ஊரெல்லாம் ஒரே பேச்சு; பாரதியோட டிஎன்ஏ மேட்ச் ஆச்சு’னு பாரதி கண்ணம்மா சீரியல்தான் இணையத்தில் வைரல் டாக். இது ஒன்னும் பாரதி கண்ணம்மாவுக்கு புதுசு இல்லைங்க. சிறப்பான தரமான பல சம்பவங்கள் செஞ்சு அடிக்கடி ட்ரெண்டிங்ல வரது பாரதி கண்ணம்மாவுக்கு பழக்கப்பட்ட விஷயம்தான். விரைவில் 1000 – எபிசோடு என்கிற மைல்கல்லை எட்டப்போகும் பாரதி கண்ணம்மா இந்த மாதிரி எந்தெந்த விஷயங்கள் செய்து ட்ரெண்ட் ஆச்சுனுதான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.
டிஎன்ஏ டெஸ்ட்
எப்போதெல்லாம் பாரதி கண்ணம்மாவின் டிஆர்பி குறைகிறதோ அப்போதெல்லாம் பாரதிக்கு கண்ணம்மா மேல் சந்தேகம் அதிகரித்துவிடும். புரியலையா, பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்போவார்னு சொல்றேன். ஏன்னா, வில்லி வெண்பா பண்ணுன ஏமாற்று வேலையால தனக்கு பிள்ளை பெறும் பாக்கியம் இல்லைனு நம்பிட்டு இருக்கிற பாரதி, கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தை என்னோட இல்லைனும் நம்பிட்டு இருக்கார். இதை அப்போ அப்போ டெஸ்ட்டும் எடுத்து பார்ப்பார். பாரதி எப்போதெல்லாம் டெஸ்ட் எடுக்குறாரோ அந்த ரிசல்ட்டை வெண்பாவும் மாத்திடுவாங்க. சென்னையில் வழக்கமா டெஸ்ட் எடுத்திட்டு இருந்த பாரதி, இந்த முறை யாருக்கும் தெரியாமல் டெல்லியில் இருக்குற லேப்பில் டெஸ்ட் எடுத்தார். அதோட ரிசல்ட்டை வாங்குறதுக்காக டெல்லிக்கு போன பாரதிகிட்ட, டிஎன்ஏ மேட்ச் ஆகிடுச்சுனு சொல்ற ப்ரோமோவும் வந்திருச்சு. இந்த முறையாச்சும் அது உண்மையா இருக்கணும்னுதான் சீரியல் பார்க்கிற எல்லாரும் ஆசைப்படுறாங்க. ஏன்னா, இந்த விஷயத்தை வெச்சு பல எபிசோடுகள் போனதால்தான் இந்த சலிப்பு.
பீஸ்ட் சம்பவங்கள்
விஜய் நடிச்ச பீஸ்ட் படத்தோட சாட்டிலைட் ரைட்ஸ் சன் டிவிகிட்ட இருந்தாலும், விஜய் டிவிகிட்ட இருக்கிற கூர்கா படம்தான் பீஸ்ட்டுக்கே இன்ஸ்பிரேஷன்னு சொல்லி அந்த சீன்ஸை எல்லாம் அப்படியே பாரதி கண்ணம்மா சீரியலிலும் எடுத்தாங்க. அதுவும் பெரிய பேசுபொருளாக மாறுச்சு. கண்ணம்மா அட்மினாகவும் பாரதி டாக்டராகவும் இருக்கும் மருத்துவமனையில் அரசியல்வாதி ஒருத்தர் அட்மிட்டாக, அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டு ஒரு பயங்கரவாத கும்பல் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அவரை டார்கெட் செய்து மருத்துவமனையையே தங்களின் கண்ட்ரோலில் எடுப்பார்கள். பாரதிவும் கண்ணம்மாவும் எப்படி அதனை சரிசெய்கிறார்கள் என பல எபிசோடுகள் எடுத்தார்கள். பீஸ்ட் படம் வெளியாகி 3 மாதங்களுக்கு பிறகு சீரியலில் இது வந்தாலும் இதனை பீஸ்ட் படத்தோட கம்ப்பேர் செய்து கலாய்க்க ஆரம்பித்தார்கள் நெட்டீசன்கள்.
இவருக்கு பதில் இவர்
மெகா சீரியல்களைப் பொறுத்தவரைக்கும் இவருக்கு பதில் இவர் என்பது அடிக்கடி நடக்கும் ஒன்றுதான். 10 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஹீரோ, ஹீரோயினை தவிர மற்ற முக்கிய கதாபாத்திரங்கள் எல்லாம் அடிக்கடி மாறும். அந்த சமயங்களில் இவருக்கு பதில் இவர் என போடுவார்கள். ஆனால், சமீபகாலமாக பார்த்தால் ஹீரோ, ஹீரோயினே மாறுகிறார்கள். அப்படி மாறும் போது அதுவும் ஒரு பெரிய டாக்கை ஏற்படுத்தும். அப்படித்தான் பாரதி கண்ணம்மாவில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி இந்த சீரியலில் இருந்து வெளியேறும் போதும் ஒரு டாக் கிரியேட் ஆச்சு. கண்ணம்மா கேரக்டர்தான் சீரியலோட பலம்.அதில் நடிக்கும் ரோஷினி மாறினால நிச்சயம் சீரியல் அடிவாங்கும் பல விமர்சனங்கள் வந்தது. ஆனால், அதை இதன் இயக்குநர் ப்ரவீன் சூப்பராக கையாண்டார். பாரதிக்கும் கண்ணம்மாவுக்குமான விவாகரத்து வழக்கிற்காக கோர்ட்டுக்கு கிளம்புற வரைக்கும் ரோஷினியையும் கோர்ட்டுக்கு வந்ததும் இப்போது கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷாவையும் நடிக்க வைத்திருப்பார். சரியான இடத்தில் மாற்றத்தை வைத்து ஆடியன்ஸோடு கனெக்ட் செய்திருப்பார். வினுஷாவும் ஆரம்பத்தைவிட இப்போது நன்றாகவே நடிக்கிறார் என்கிற விமர்சனமும் வருகிறது.
ட்ராவல் பேக்
பாரதி கண்ணம்மாவில் எத்தனை சம்பவங்கள் நடந்தாலும் இந்த சம்பவத்தை அடிச்சுக்க முடியாது என்கிற அளவுக்கு ஒரு பயங்கரமான சம்பவம் இருக்கு. அதுதான், ‘ஓ ஒரு தென்றல் புயலாகி வருமே’னு பாட்டை பேக் க்ரவுண்ட்டில் போட்டுவிட்டு கையில் ட்ராவல் பேக்கை எடுத்துக்கிட்டு கண்ணம்மா நடந்த சம்பவம். அது சம்பவம் இல்லை சரித்திரம்கிற ரேஞ்சுக்கு கண்ணம்மாவை விண்வெளி வரைக்கும் நடக்க வைத்த பெருமை மீம்ஸ் கிரியேட்டர்களுக்கே சேரும். இப்படி ஒரு சம்பவம்தான் பாரதி கண்ணம்மாவில் நடந்த முதல் சம்பவம் என்றே சொல்லலாம். இதற்குப் பிறகுதான் பலரது கவனமும் இந்த சீரியலின் மேல் விழத்தொடங்கியது என்றே சொல்லலாம். சீரியலின் ஆரம்பத்தில் லவ்வபிள் கப்பிலாக இருந்தவர்கள் இந்த ஒரு பாயிண்டில்தான் டாம் அண்ட் ஜெர்ரியாக மாறத்துவங்கினார்கள்.
பாரதி கண்ணம்மாவில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் எது? ஏன்?னு கமெண்ட்ல சொல்லுங்க.