Harris Jayaraj

ஹாரிஸ் ஜெயராஜ் மாம்ஸும் அந்த மூணு பேரும்.. இப்படி காம்போலாம் இனி கிடைக்காது!

ஹீரோ ஹீரோயின் கெமிஸ்டரிகளை விட இந்தியா சினிமாவுக்கே இயக்குநர்- இசையமைப்பாளர் கெமிஸ்டரி ரொம்ப முக்கியம். தமிழ் சினிமாவில் அந்த மாதிரியான கெமிஸ்டரிகள் எக்கச்சக்கமா இருந்தாலும் ஹாரிஸ் ஜெயராஜ்-க்கு அப்படி அமைஞ்ச சில இயக்குநர்கள் ஏராளம். இந்த காம்போல அடுத்த படம்னாலே பரபரப்பு தொத்திக்கும், இந்த காம்போ உடைஞ்சிருச்சுனு நியூஸ் வந்தாலே பல இதயங்கள் நொறுங்கிடும். இந்த காம்போ திரும்ப வருமான்னு யோசிக்க வைக்கும். அப்படியான ஹாரிஸ் ஜெயராஜின் சில காம்போக்களை இந்த வீடியோல பாப்போம்

ஹாரிஸ் ஜெயராஜோட முதல் படமே இன்னும் வெளியவரலை. மொத்தமா மூன்றே மூன்றே பாடல்களைத்தான் ஹாரிஸ் கம்போஸ் பண்ணியிருந்தார். ஆனா அவரைத் தேடி ஒரு இயக்குநர் வரார். இயக்குநரா அவருக்கு அது முதல் படம். ஆனா, ஒளிப்பதிவாளரா அவர் ஒ ரு பெரிய லெஜண்டா இருந்தார். அவ்வளவு பெரிய ஆளா இருந்தும் ஹாரிஸைத் தேடி வந்து என்னோட முதல் படத்துக்கு நீங்கதான் மியூசிக் டைரக்டர்னு சொல்லி இருக்கார். ஹாரிஸ் பதறிப் போய், “இருங்க… என் முதல் படமே இன்னும் வரலை. இதுவரை நான் கம்போஸ் பண்ணியிருக்க மூன்று பாட்டுகளையும் கேக்காம, என்னை புக் பன்றீங்களே…” அப்படின்னு பதறிப் போய் கேட்டிருக்கார் ஹாரிஸ். “உன் கிட்ட ஒரு ஸ்பார்க் இருக்கு… அது எனக்குத்தெரியுது… நீதான் என் முதல் படத்துக்கு இசையமைப்பாளர்” அப்படின்னு பேசிட்டு அந்த இயக்குநர் ஹாரிஸை புக் பண்ணியிருக்கார். இவங்களோட காம்போல வந்த அத்தனைப் பாட்டுகளுமே பதினைந்து வருஷம் கழிச்சும் இன்றும் கொண்டாடப்படுது.

90S கிட்ஸ் கொண்டாடி முடிச்ச அந்தப் பாடல்களை, “ஹாரிஸ் மாம்ஸ்”னு இன்னைக்கு 2K Kids வைப் பண்ணிகிட்டிருக்காங்க. யார் அந்த இயக்குநரா இருக்கும்னு யோசிங்க. வீடியோவோட கடைசியில் பார்ப்போம்.

ஹாரிஸ் ஜெயராஜ், இந்த மூன்று இயக்குநர்கள் காம்போ தமிழ் சினிமா இசைக்கு கொடுத்தது “அள்ள அள்ள திகட்டாத அமுதம்” ஹாரிஸ்-கௌதம், ஹாரிஸ்-ஜீவா, ஹாரிஸ்-கேவி.ஆனந்த் காம்போல நடந்த மேஜிக்கை இந்த வீடியோல பாக்கலாம்.

ஹாரிஸ் - கௌதம்
ஹாரிஸ் – கௌதம்

ஹாரிஸ் ஜெயராஜ் – கௌதம்

இந்தக் காம்போவோட முதல் பாடல் வெளிவந்து 22 வருஷம் ஆச்சு, இந்தக் காம்போவோட கடைசி பாடல் வெளிவந்து 8 வருஷம் ஆச்சு. ஆனா, இந்த காம்போ தந்த பாட்டுகள் இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் கொண்டாடப்படும். அதுக்கு ஒரு எக்ஸாம்பிள் சொல்லவா, இந்த வீடியோ ரிலீஸ் ஆகுற இன்னைக்கு தேதில இன்ஸ்டாகிராம் ரீல்களில் வைரலா பயன்படுத்தப்படுற முதல் ஐந்து ஆடியோக்களில் ஒன்று “நான் கேட்டது இது… ஆனா அவர் எனக்குக் கொடுத்தது இது…” அப்படின்னு கௌதம் சொல்ற டயலாக் தான். கௌதமுடைய படங்களுக்கு கொடுக்குறதுக்காகவே எப்பவுமே ஹாரிஸ் கொஞ்சம் எக்ஸ்ட்ராவே ஒரு ட்யூன் வச்சிருப்பாரு.

ஒருபக்கம், வசீகரான்னு உருகி உருகி காதலிக்க வைக்க ஒரு பாட்டு இருந்தா, இன்னொருபக்கம் 90ஸ் கிட்ஸோட சூப் சாங்காவே “என்ன இருந்தபோதும் அவள் எனதில்லை”னு பலகாலம் இருந்தது, இப்பவும் பல பேருக்கு அது மறக்கவே முடியாது. மின்னல் வெட்டும் போது, ரீமா சென்னை மாதவன் ரசிக்கும் போது “பூப்போல் பூப்போல்”னு ஹாரிஸ் நம்மளை உருக வச்சாரு.

வசீகரா பாட்டை இன்னைக்கு உருகி உருகி காதலிக்குறதுக்கானப் பாட்டாப் பார்த்தாலும், அந்தப் பாட்டுல ஒரு சம்பவம் இருக்கு. வசீகரா பாட்டோட ஷூட்டிங் சமயத்தில் மாதவனுக்கும் ரீமா சென்னுக்கும் ஏதோ பிரச்னை, ரெண்டு பேரும் பேசிக்காம இருந்தாங்களாம், ஒரு அரை நாள் மட்டும் தான் இரண்டு பேரையும் ஒரே ஷாட்ல ஷூட் பண்ண முடிஞ்சிருக்கு, மீதியை எல்லாம் கௌதம் டேன்ஸர்ஸ் வச்சி ஒப்பேத்தி இருக்காரு. ஆனா, இந்த எந்த விஷயங்களும் பார்க்கும் போது நமக்கு தெரியவே தெரியாது. அந்த சம்பவத்தை செஞ்சதே ஹாரிஸோட மியூஸிக் தான். இந்த பாட்டு மட்டுமில்லை, “அழகிய தீயே..” பாட்டுலயுமே ரீமா சென் வராம போக, கௌதம் சமாளிச்சிருக்காரு. ஆனா, இது எதுவுமே பாக்குற நமக்குத் தெரியாத அளவுக்கு மாத்திக்காட்டின வித்தைக்காரன் ஹாரிஸ் தான்.

மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் அப்படின்னு வரிசையா ஒரு எட்டு வருஷம் தமிழ் சினிமா இசையை மொத்தமா குத்தகை எடுத்து “என்னைக் கொஞ்சம் மாற்றி”னு லட்சக்கணக்கான இதயங்களை அதுக்கு முந்தைய பாடல்கள்ல இருந்து மாற்றிக் கூட்டிவந்து கட்டிப் போட்டது ஹாரிஸ்-கௌதம் கூட்டணி. “தூது வருமா”னு இந்தக் கூட்டணில இன்னொரு பாட்டு எப்போ வரும்னு பல பேரை ஏங்க வச்சாங்க. “கரு கரு விழிகளால்”னு பச்சைக்கிளி முத்துச்சரம் ஆல்பம் ஆரம்பிச்சது, “உன் சிரிப்பினில்…” பாட்டு வரியைக் கொஞ்சம் மாத்தி சொல்லனும்னா “உன் இசையினில்…” அப்படின்னு நாம மாத்தி ஹாரிஸ் இசைக்கு பாடலாம், கச்சிதமா பொருந்தும். வாரணம் ஆயிரம் பட ஆல்பம் பத்திப் பேசவே தனியா ஒரு வீடியோ போடனும். ஒரு வார்த்தைல சொல்லனும்னா என்ன சொல்லலாம்னு டிக்‌ஷனரில அர்த்தம் தேடிகிட்டிருக்கேன்… நீயெல்லாம் மனுஷனே இல்லை போயா ஹாரிஸுன்னு சொல்லிடலாம்.

இந்தக் கூட்டணியோட இந்த மேஜிக்குக்கு இன்னுமொரு தவிர்க்க முடியாத ஒரு அம்சம், பாடலாசிரியர் தாமரையோட வரிகள்.

ஹாரிஸ்-கௌதம் உடைஞ்சிருச்சு, கௌதம் அடுத்த படம் ரஹ்மான் கூடன்னு சொன்னப்போ, ரஹ்மான் வெறியர்களே உச்சுக்கொட்டினாங்க. கௌதம், ரஹ்மான் கிட்ட இந்தப் படம் பத்தி பேசும் போது, “கௌதம், ஹாரிஸ் கூட உங்க காம்போ பெஸ்ட், நீங்க அவர் கூடவே வொர்க் பண்ணுங்க”ன்னு ரஹ்மானே சொல்லி இருக்கார். அந்தளவுக்கு இவங்க காம்போவை அடிச்சுக்க ஆளே கிடையாது. ரஹ்மான், ராஜான்னு கௌதம் சில படங்கள் பண்ணாலும் “என்னை அறிந்தால்” திரும்ப சேர்ந்தப்போ நடந்ததுமே ஒரு பெரிய மேஜிக். “ஒரு மனம் நிற்கச் சொல்லுதே”ன்னு துருவ நட்சத்திரம் கம்ப்ளீட் ஆல்பத்துக்காக ஹாரிஸ்-கௌதம் கன்னிகள் மரண வெயிட்டிங்க்ல இருக்காங்க.

ஹாரிஸ் – ஜீவா

ஹாரிஸ்
ஹாரிஸ்

ஜீவாவுக்கும் ஹாரிஸுக்கும் இருந்த கெமிஸ்ட்ரி தான் தமிழ் சினிமாவோட ஆகச்சிறந்த பெஸ்ட் காம்போனு நான் அடிச்சு சொல்வேன். 2001ல இருந்து 2008 வரை எட்டு வருஷங்கள், நாலே நாலு படம். ஆனா, இன்னும் என்பது வருஷத்துக்கு இந்தப் பாட்டுகள் நிண்ணு பாடும்ன்ற அளவுக்கு ரெண்டு பேரும் பண்னதுலாம் மேஜிக்கல் காம்போ. ஹாரிஸோட முதல் படம் வெளிவரதுக்கு முன்னாடியே, அவரை தன்னுடைய முதல் படத்துக்கு இசையமைப்பாளரா புக் பண்ண இயக்குநர்தான் ஜீவா. 12B படமும் சரி, உள்ளம் கேட்குமே படமும் சரி, அந்தப் பாடல்கள் எல்லாம் இன்னைக்கும் செம வைபான ஆல்பம். “எங்கயோ போற மேகத்தை இழுத்து வந்து ரெண்டு பேர் பேரை சொல்ல வச்சுச்சு… அதுக்காச்சும் என்னை லவ் பண்ணு”னு 90s கிட்ஸ் அன்னைக்கு ஃபயர் விட்டாங்கன்னா, இன்னைக்குப் பொடியனுங்க ஹார்டின் எமோஜி விட்டு வைப் பண்ணிகிட்டிருக்காங்க.

“உன்னாலே உன்னாலே” பட ரிலீஸுக்கு சில மாசங்கள் முன்னாடி ஆடியோ ஆல்பம் வெளிவந்தது. அந்தக் காலகட்டம் எஃப்.எம் ரேடியோக்கள் உச்சத்தில் இருந்த சமயம், “ஜூன் போனால் ஜூலைக்காற்றே”, “ஹலோ மிஸ் இம்சையே”, “முதல் நாள் இன்று” அப்படின்னு படத்தோட எல்லா பாடல்களும் FM ரேடியோக்களில் பயங்கர ஹிட். ஒரு மணி நேரத்துல நாலு சேனலுக்கு நீங்க மாத்தினா இந்தப் படத்தோட எல்லா பாடல்களையும் கேட்கலாம்ன்ற அளவுக்கு பாட்டெல்லாம் அப்பவே வைரல். ஆனா, ஒரிஜினல் ஆடியோ சிடி வாங்கினவங்களுக்கு ரெண்டு இண்ப அதிர்ச்சியை ஹாரிஸ் ஒளிச்சு வச்சிருந்தாரு. “சிறு சிறு உறவுகள்…”, “இளமை உல்லாசம்”னு ரெண்டு சின்ன பாட்டுகள் டிராக் லிஸ்ட்ல இருந்தது, கேக்க ஆரம்பிச்சா, தலைவன் பிண்ணியெடுத்திருந்தான். ஆல்பம்ல ஹாரிஸ் ஆச்சர்யத்தைக் கூட்டினா, விஷ்வல்ல ஜீவா இன்னொரு ஆச்சர்யத்தை ஒளிச்சு வச்சிருந்தாரு… தியேட்டர்ல பாக்கும் போது “இளமை உல்லாசம்” பாட்டுல தலைவி லேகா வாஷிங்டன் வெள்ளைக் கவுன்ல தேவதையா ஒரு சிரிப்பு சிரிப்பாங்க. றெக்கை இல்லாத தேவதை சார்… ஒரிஜினல் ஆல்பம் கேக்காதவங்க படத்தை தியேட்டர்ல பாக்கும் போது இந்தப் பாட்டுக்கு ஒன்ஸ்மோர் கேட்ட வரலாறுலாம் இருக்கு.

ஜீவா ஹாரிஸ் காம்போல வந்த சின்ன சின்ன பாடல்கள்னே ஒரு பிளே லிஸ்ட் போட முடியும். உள்ளம் கேட்குமே படத்தோட கடைசி சீன்ல “மழையத் தானே யாசித்தோம்”னு சோகமா ஆரம்பிச்சு “லைக்க லைமா”னு கொண்டாட்டமா ஹாரிஸ் மாத்தி சந்தோஷமா தியேட்டரை விட்டுப் போங்கடான்னு அனுப்பி வைப்பார்.

“தாம் தூம்” படத்தோட ஷூட்டிங் சமயத்தில் ரஷ்யாவில் ஜீவா அகால மரணமடையை எல்லாருக்குமே அதிர்ச்சி. அவருக்கான ட்ரிப்யூட்டாகவே அந்தப் படம் பார்க்கப்பட்டது, ஜீவாவின் மனைவி அனீஸ், ஜீவாவோட அஸிஸ்டண்ட் ஜி.கே மணிகண்டன் இரண்டு பேரும் இயக்க, ஜீவாவோட குரு பி.சி.ஶ்ரீராம் மேற்பார்வை பார்த்து படத்தை வெளியிட்டாங்க. ஹாரிஸ் ஜெயராஜ் அவருடைய ட்ரிப்யூட்டா, அவர் மறைந்த 9 மாதங்கள் கழிச்சு ஆடியோ ஆல்பம் வெளியிட்டார். ஜீவா இல்லாம இந்தப் படத்துக்கு பாட்டுகளை எப்படி கம்போஸ் பண்ணப் போறேன்னு யோசிச்சிருக்கார் ஹாரிஸ். அவர் இல்லாத அந்த உணர்வைப் பேசுறதே ரொம்ப கஷ்டம்னு அவர் பேசுன பேட்டிகள் இருக்கு. ஆனாலும், ஹாரிஸ் தாம் தூம் ஆல்பத்துல போட்ட அத்தனை பாடல்களுக்குப் பின்னாடியும் ஜீவாவே அவர் பக்கத்துல உட்கார்ந்து கம்போஸ் பண்ண மாதிரிதான் இருக்கும். ஜீவா ஹாரிஸோட அந்தளவுக்கு உணர்வில் கலந்தவர். ஹாரிஸுக்கு மட்டுமில்ல, நமக்கும் தானே.

ஹாரிஸ் ஜெயராஜ் – கே.வி.ஆனந்த்

கே.வி.ஆனந்த் படங்கள்ல குறிப்பா அவர் படத்துல வர்ற எதாவது ஒரு பாட்டுல உலகத்துல எங்கயாவது அழகா இருக்குற இடத்தை புடிச்சு ஷாட் எடுத்துருவாரு. ஹாரிஸ் சிச்சுவேஷனுக்கு போடுற மாதிரி அந்த சீனுக்கும் சேர்த்து பாட்டுப் போட்ட மாதிரி ஃபீல் ஒண்ணு வரும். அவங்கக்குள்ள இருக்குற வேவ்லெந்த் போல அந்த விஷயம்.

அயன்ல நெஞ்சே நெஞ்சே பாட்டுல பாலைவனம் வரும், காதல் பாட்டுதான். பாலைவனத்துல தண்ணீர் இருக்குற லொகேஷன். பாட்டைக்கேட்டால் அவ்வளவு சூடான உணர்வு வரும். அடுத்து கோ படத்துல வெண்பனியே பாட்டு. மியூசிக்கே சில்னு இருக்கும். லொகேஷன் முழுக்கவே பனி கொட்டும். லிரிக்ஸ், லொகேஷன், மியூசிக்னு எதையுமே பிரிச்சுப் பார்க்க முடியாது. அவ்வளவு மெர்ஜ் ஆகியிருக்கும். மாற்றான்ல, நானி கோனி பாட்டுல வெரைட்டியா இருக்கும் லொகேஷன்ஸ். அங்கயும் மியூசிக் கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டே வரும். அனேகன்ல ரோஜாக்கடலே பாட்டு. ஆரம்பத்துல டக் டக்னு மாண்டேஜ் வரும். அதுக்கு ஏற்ற மாதிரி மியூசிக்கும் டக் டக்னு போட்ருப்பாரு. பாட்டு முழுக்கவே செம சீரியஸான மோட்ல இருக்கும். காப்பான் அதைப் பத்தி நம்ம பேச வேணாம் விடுங்க.

KV Anand - Harris
KV Anand – Harris

கே.வி.ஆனந்த் மரணம் எல்லாரையும் உலுக்குச்சுன்னே சொல்லலாம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையவுமே அவருடைய இழப்பு பெருசா பாதிச்சுருச்சுன்னே சொல்லலாம்.

ஹாரிஸ் ஜெயராஜ்-கௌதம், ஹாரிஸ்-ஜீவா, ஹாரிஸ்-கேவி.ஆனந்த் காம்போல எது உங்களுக்குப் புடிக்கும்னுலாம் கேட்க மாட்டேன், என்னா ஒன்னும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்லை. இந்த காம்போல உங்களுக்கு ரொம்ப புடிச்ச 5 பாடல்களை கமெண்ட்ல சொல்லுங்க. ஹாரிஸ் மாம்ஸ் பழைய பண்ணீர் செல்வமா வரனும், அந்த விண்டேஜ் ஹாரிஸ் திரும்ப வரனும்னு ஆசைப்படுறவங்க இந்த வீடியோவுக்கு ஒரு ஹார்டின் போடுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top