இந்தப் பாட்டுலாம் இவங்க பாடுனதா… ரஞ்சிதமே ‘மானசி’யின் இன்ட்ரஸ்டிங் ஜர்னி!

ரஞ்சிதமே பாட்டுல ராஷ்மிகாவைவிட அதிகமான ஹார்ட்டின்களை அள்ளியது, மானசிதான். “அப்புறம் என்ன ப்பா, கிரஷா அறிவிச்சிடலாமா?, என்னங்க மானசி இவ்ளோ அழகா இருக்காங்க?, யாருமா நீ தளபதிக்கே டஃப் கொடுத்து பாடியிருக்க!”னுலாம் மீம்ஸ்  போட்டு மானசியையும் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்கு முன்னாடி என்ன பாட்டுலாம் மானசி பாடியிருக்காங்கனு தேடி பார்த்தா, நமக்கு புடிச்ச நிறைய பாடல்களை பாடிருக்காங்க. அதெல்லாம் என்ன பாட்டு? விஜய்கூட முன்னாடியே மானசி சேர்ந்து பாடியிருக்காங்க. அது என்ன? மானசி வெறும் சிங்கர் மட்டுமில்ல டப்பிங் ஆர்டிஸ்டும் கூட. திரிஷா, சமந்தா, தமன்னானு நிறைய ஹீரோயின்களுக்கு பிரபல படங்கள்ல டப்பிங் பேசியிருக்காங்க. அந்த படங்கள்லாம் என்ன?

மானசி
மானசி

மானசி பாடுன பாட்டுல டக்னு சொன்னதும் நமக்கு ஆச்சரியமா இருக்குறது, “ஸ்டைலிஷ் தமிழச்சி’ பாட்டு தான். செம பெப்பியான பாட்டு. பாட்டுல எனர்ஜி, கான்ஃபிடன்ஸ் எல்லாமே இருக்கும். ஆனால், எல்லாத்தையும் தாண்டி அந்த வாய்ஸ்ல இருக்குற செக்ஸினஸ் சான்ஸே இல்லை. அஜித் படத்துல யுவன் மியூசிக்ல மானசி பாடுன இந்தப் பாட்டு எல்லாருக்கும் தெரிஞ்சாலும் தமிழ்ல இவங்க பாடுன முதல் பாட்டு, ஜி.வி.பிரகாஷ் மியூசிக்லதான். அன்னக்கொடி படத்துல பாடியிருப்பாங்க. ஜி.வி.பிரகாஷ், புதுசா எதாவது வாய்ஸ் கிடைக்குமானு தேடிட்டி இருக்கும்போது ஹரிசரண் இவங்களை ரெஃபர் பண்ணியிருக்காங்க. மானசி பாடுனதும் அந்த வாய்ஸ் ஜி.விக்கு பாரதிராஜாக்கு புடிச்சுப்போய் அதையே வைச்சிட்டாங்க. முதல் பாட்டே செம ஃபீலான பாட்டு. காதலர்கள் பிரிஞ்சுப்போற அந்த உணர்வு வாய்ஸ்ல அப்படி தெரியும். அவங்க பிளஸ் வாய்ஸ்தான். ஏன்னா, சிலர் மெலடி பாட்டு பாடுவாங்க, சிலர் குத்து பாட்டு மட்டும்தான் பாடுவாங்க, சிலர் டிவோஷனலா மட்டும்தான் பாடுவாங்க. ஆனால், மானசி என்ன டைப் பாட்டு கொடுத்தாலும் பாடுவாங்க. மெலடி பாட்டுக்கு வி.ஐ.பி-2 ல வந்த இறைவனாய் தந்த இறைவியே பாட்டு சொல்லலாம். ப்பா, அப்படி உருகி பாடியிருப்பாங்க. ஷான் ரோல்டன் – மானசி செம காம்போ.

மானசி
மானசி

அஞ்சான் படத்துல சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டினு ஒரு பாட்டு இருக்கு. எத்தனை பேர் கேட்ருப்பீங்கனு தெரியல. மொவனே, செம மாஸா இருக்கும். ரூம்லயே செம வைப் பண்ற மூட்ல இருந்தீங்கனா, இந்தப் பாட்டை கண்டிப்பா கேளுங்க. முழுக்க முழுக்க மானசி ராஜ்ஜியமாதான் இருக்கும், இந்தப் பாட்டுல. தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்துல ரோபோ ரோமியோ பாட்டும் இவங்க பாடுனதுதான். மானசி பாடுனதுல வேற மாறி ஹிட்டான பாட்டு, காக்கி சட்டை படத்துல வர்ற கட்டிக்கிடும் முன்னே பாட்டு. புலி படத்துல சொட்டவாலனு பாட்டு வரும். அதுவும் இவங்க பாடுனதுதான். விஜய்கூட ஏற்கெனவே ஒரு பாட்டு பாடியிருக்காங்கனு சொன்னேன்ல, அது தலைவால வர்ற வாங்கணா வணக்கங்கணா பாட்டுதான். அதுல ஒரு ஹம்மிங் மட்டும் இவங்க பாடுனது. அப்போவே, ஆசையாம் விஜய்கூட சேர்ந்து டூயட் பாட்டு ஒண்ணு பாடணும்னு. இப்போதான் அவங்களுக்கு நிறைவேறியிருக்கு. தெலுங்குல இவங்கள இன்ட்ரோ பண்ணது, தேவி ஸ்ரீ பிரசாத். அப்புறம், தமனோட ஆஸ்தான பாடகராகவே மாறிட்டாங்க. தமன் – மானசி கூட்டணில வந்த பெரும்பாலான பாடல்கள் செம ஹிட்டு. கன்னடால இளையராஜா இவங்கள அறிமுகம் பண்ணாரு. அப்புறம், மாரி-2ல அவர்கூட சேர்ந்து ‘மாரீஸ் ஆனந்தி’ பாட்டை பாடியிருப்பாங்க.

வாரிசு பாடகி
வாரிசு பாடகி

கழுகு-2 படத்துல ஏலமல காத்து பார்த்து வீசுதேனு ஒரு பாட்டு பாடியிருப்பாங்க. அப்பா, என்ன பாட்டு? உண்மைலயே அந்தப் பாட்டைக் கேட்டா, மனசுல மயில்தோகை விரியும். மானசியா இந்தப் பாட்டை பாடுனாங்கனு தோணும். இன்னைக்கு நிறைய பேருக்கு ஃப்ரெண்ட்ஷிப் ஆந்தம், அதாவது ஆண் – பெண் நட்புக்கு ஒரு ஆந்தம்னு சொன்னா, அது ஓ மை கடவுளே படத்துல வர்ற பாட்டுதான். அதுல அனிருத், லியோன் ஜேம்ஸ்கூட சேர்ந்து ஃப்ரெண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு பாட்டை பாடியிருப்பாங்க. அல்ட்டி மேட்டா இருக்கும். அப்புறம் கடைசியா ரஞ்சிதமே பாட்டு. அதுல மானசி வர்ற அந்த போர்ஷனை மட்டும் அலேக்கா தூக்கி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போட்டு நம்ம பயலுக சில்லறைய சிதற விட்ருக்காங்க. அவங்க இண்டர்வியூஸ்லாம் பார்க்கும்போதுதான் தெரியுது, பாட்டுல எந்த எனர்ஜியோட இருக்காங்களோ, அதே எனர்ஜிலதான் நிஜத்துலயும் இருக்காங்க. இன்னைக்கு சிங்கரா எல்லாத்துக்கும் தெரியுற மானசி, செமயான டப்பிங் கலைஞரும்கூட. நிர்ணயம்னு ஒரு படத்துல மானசி பாடும்போது, அவங்க டைரக்டர்கூட பேசிருக்காங்க. அப்போ, அந்த டைரக்டர், “உங்க வாய்ஸ் நல்லாருக்கே. நீங்க ஏன் டப்பிங் பண்ணக்கூடாது”னு கேட்ருக்காரு. சரி, ட்ரை பண்ணலாம்னு சொன்னதும், நிர்ணயம் படத்துலயே டப்பிங் பேசியிருக்காங்க.

மானசி
மானசி

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்துல ஸ்வாதிக்கு டப்பிங் பேசியிருந்தாங்க. அதுதான் இவங்களுக்கு ஃபஸ்ட் ரிலீஸ் ஆன படம். அந்தப் படத்துக்கு அப்புறம் அஞ்சான்ல சமந்தாவுக்கு பேசுனாங்க. சமந்தா செமயா இருக்குனு கூப்பிட்டு பேசியிருக்காங்க. பாகுபலில தமன்னாவுக்கு இவங்கதான் டப்பிங். அவங்க வாய்ஸ் ரொம்ப க்ளோஸா இருக்குனு தமன்னாவே ஃபீல் பண்றாங்களாம். தமன்னா டைரக்டர்கிட்ட மானசியை பேச வைங்கனு சொல்லுவாங்களாம். மானசி கரியர் எடுத்து பார்த்தா, நிறைய தமன்னா படங்களுக்கு அவங்களுக்கு பேசியிருப்பாங்க. தோழா, தர்மதுரை, தேவி எல்லாத்துக்கும் இவங்க வாய்ஸ்தான். திரிஷாவுக்கு கொடி படத்துல பேசியிருப்பாங்க. அவங்களும் கூப்பிட்டு செமயா பேசியிருக்கீங்கனு சொல்லியிருக்காங்க. திருமணம் என்னும் நிக்காஹ் படத்துல நஸ்ரியாக்கு டப்பிங் பண்ணது இவங்கதான். அப்புறம், மாரி படத்துல காஜல், தனி ஒருவன்ல முக்தா தாஸ், மிருதன்ல லக்‌ஷ்மி மேனன், ஓ மை கடவுளேல ரித்திகா, மாநகரம்ல ரெஜினா இவங்களுக்குலாம் டப்பிங் பேசுனது இவங்கதான். ஆனால், ஒவ்வொரு படத்துலயும் அவ்வளவு வெரைட்டிய வாய்ஸ்ல காமிச்சிருப்பாங்க.

Also Read: கேரளா பாக்ஸ் ஆஃபீஸை அலற வைத்த டைரக்டர்… அட்டகாசமான அஞ்சலி மேனன் ஜர்னி!

மானசி, சின்ன வயசுல இருந்தே  பாட்டுலாம் பயங்கரமா பாடுவாங்க. அதுக்கு காரணம் அவங்க அப்பாம்மா தான். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானோட வெறித்தனமான ஃபேன், அவங்க அப்பாம்மா. எந்த ஆடியோ கேஸட் வந்தாலும் முதல்ல வாங்கிட்டு வந்துருவாங்களாம். கேட்டு கேட்டே பாட ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க அப்பா மானசிக்கு ஃபஸ்ட் சொல்லிக்கொடுத்தப் பாட்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாட்டுதானாம். ஸ்கூல் டேஸ்ல அவ்வளவு போட்டிகள்ல கலந்துப்பாங்களாம். ஒரே நாள்ல அவ்வளவு போட்டிகள் வருமாம். லஞ்ச்லாம் பேக் பண்ணி எடுத்துட்டு வந்து கார்ல போகும்போது சாப்பிட்டுட்டு இன்னொரு போட்டில போய் கலந்துப்பாங்களாம். அவங்க அப்பாம்மா, “போட்டில ஜெயிக்கிறதுலாம் முக்கியம் இல்லை. அதுல வர்ற எக்ஸ்பீரியன்ஸ்தான் முக்கியம்”னு சொல்லுவாங்களாம். அந்த போட்டிகள்தான் அவங்கள செதுக்கிச்சுனு சொல்லலாம். கத்தில செல்ஃபி புள்ள, காத்துவாக்குல ரெண்டு காதல்ல டு டு டு, கில்லில ஷால்லலா, நண்பன்ல இருக்கானா இடுப்பிருக்கானா, மான் கராத்தேல டார்லிங் டம்பக்கு, அனேகன்ல ரோஜா கடலே பாட்டுலாம் பாடுனாங்கள்ல சுனிதி சௌகுன், இவங்க வாய்ஸ் அவங்களோட ரிலேட் பண்ணிக்க முடியும்னு சொல்லுவாங்க. அவங்க அம்மா உஷா உதுப் வாய்ஸ்னு சொல்லுவாங்களாம்.

இளையராஜால தொடங்கி யுவன் வரைக்கும் பாடிட்டாங்க. ஆனால், அவங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்ல பாடணும்னுதான் ஆசையாம். சொந்தக்காரங்கலாம் பிறந்தநாள்க்கு வாழ்த்து சொல்லும்போது, நீ அவர் மியூசிக்ல பாடணும்னு நாங்க வேண்டிக்கிறோம்னு சொல்லுவாங்களாம். சரி, மானசி பாடுனதுல உங்களோட ஃபேவரைட் பாட்டு எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top