இங்கிலீஷ்ல வேகத்துக்கு ஒரு பெயர், ‘Hurry’. தமிழ் சினிமாவுலயும் வேகம் அப்படின்னா இயக்குநர் ஹரினு சொல்றது பொருத்தமா இருக்கும். அந்த பெயருக்கேத்த மாதிரி எப்பவுமே வேகமா செயல்படக்கூடியவர். முன்னணி ஹீரோக்கள் சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்புவை வைத்து ஹிட் கொடுத்தவர். தியேட்டர் செலிப்ரேசன் மோடுக்கு ஏற்ற இயக்குநரும் கூட. கார்ல எந்த பிராண்டா இருந்தா என்ன? ரவுடி குரூப்னா டாடா சுமோ, போலீஸ் குரூப்னா பொலிரோ, இதுதான் இவரோட ட்ரேட்மார்க் அடையாளம். தமிழ் சினிமாவை மாஸ் மசாலாக்களால அலறவிட்ட இவரோட வெற்றிக்கான 5 காரணங்களைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.
ஃபாஸ்ட் பார்வேர்டு திரைக்கதை
தியேட்டர்ல இருந்து வெளியில வந்த உடனேதான் அங்க இந்த தப்பு இருக்குனு யோசிக்கவே தோணும். தியேட்டர்ல படம் ஓடி முடியுற வரைக்கும் லாஜிக் பார்க்கவே தோணாது. அதுக்குக் காரணம், படத்துடைய ஃபாஸ்ட் பார்வேர்டு திரைக்கதைதான். படம் ஆரம்பிக்கிறப்போ கோவில் கோபுரத்துமேல பெயரைப் போட்டு, மணி சத்தம் மூணுமுறை ஒலிக்கும். அங்கவே நாம ஒன்ன புரிஞ்சுக்கணும். அப்போ ஆரம்பிச்சு, அடுத்த மூணு மணிநேரத்துக்கு ஸ்பீக்கர்ல அலறல் சத்தம்தான்னு. ரன்னிங், சேசிங், ஜம்பிங், பயரிங்னு என்னென்ன பண்ண முடியுமோ, எல்லாத்தையும் பண்ணிடுவார். ஹரியைப் பொறுத்தவரைக்கும் ‘டிஸ்கஷனப்போ ஒரு மூடும், ஷூட்டிங் அப்போ ஒரு மூடும் இருக்கும்’. ஸ்பாட்ல கிடைக்கிறதையும் எடுத்து திரைக்கதைக்கு பயன்படுத்திக்குவார். அதேபோல திரைக்கதைக்கு தேவையான நடிப்பை வாங்க, இவரே விழுந்து நடிச்சுக் காட்டுவார். ஹரியோட திரைக்கதையில ஆடியன்ஸை கன்வீன்ஸ் பண்ற மாதிரி ஒரு மேஜிக் பண்ணுவார். அது வில்லனுக்கு வெயிட்டேஜ் கொடுக்குறதா இருக்கலாம், ஹீரோவுக்கு நியாயம் சேர்க்குற காட்சிகளா இருக்கலாம்.. எப்படி வேணாலும் இருக்கலாம். அந்த மேஜிக்தான் ஹரியோட பலம். சாமி முதல் பாகத்துல வில்லன் கூட மோதாத ஹீரோவை இண்டர்வெல் ப்ளாக் தாண்டி மோத வைப்பார். ஆனா, அதுவரைக்கும் சுவாரஸ்யம் குறையாமலே இருக்கும். இதுதான் ஹரியோட திரைக்கதை மேஜிக்.
Dance Number Songs
ஒரு பாட்டைக் கேட்டாலே குத்தாட்டம் போட வைக்கணும். இதுவும் ஹரி படங்கள்ல வரிசையா நடந்துகிட்டு வந்த ஒண்ணுதான். ஆனா, யானை படத்துல, நான் கொஞ்சம் அப்கிரேட் ஆகிட்டேனு சொல்லி விட்டுட்டார். சாமியில திருநெல்வேலி அல்வாடா, கல்யாணம்தான் கட்டிகிட்டு, கோவில்ல கொக்கு மீன திங்குமா, அருள் ஒட்டியாணம் செஞ்சுத்தாரேன், ஐயா தாமிரபரணி ராணி, ஆறு நெஞ்சம் எனும் ஊரினிலே, தாமிரபரணியில கருப்பான கையாலே என்ன பிடிச்சான், வேல் கோவக்கார கிளியே, சிங்கம் காதல் வந்தாலே, வேங்கைல பெத்தவங்க பார்த்து வச்ச, சிங்கம் 2ல கண்ணுக்குள்ள கண்ண வச்சு, சிங்கம் 3ல ஏ சோனே சூப்பர் சோனேனு பல பாடல்களை உதாரணமா சொல்லலாம். எல்லா பாட்டுகளுக்கும் செட்டும், பாட்டும், ஹீரோயினோட ஒரு டான்ஸ்னு வித்தியாசமா இருக்கும்.
சமீபத்துல வந்த பொன்னியின் செல்வன் படத்துல நடிச்சிருந்த நடிகரோட கடைசி சோலோ ஹிட் படத்தை இயக்கினது ஹரிதான். அந்த படத்தோட பேரை யோசிச்சு வைங்க அதை வீடியோவோட கடைசியில சொல்றேன்.
Extra Large Family
ஹரியோட படங்கள்னு பார்த்தா குடும்பத்துல அப்பா, சித்தப்பா, மாமா, ஒண்ணுவிட்ட மாமா, நண்பர்கள், அடியாட்கள்னு ஒரு 50 பேருக்கு குறைவில்லாம இருப்பாங்க. இது யானை வரைக்கும் தொடர்ச்சியாவே இருக்கு. அதுலயும் வேல் படத்துல உச்சமா போய், அப்பத்தா, சித்தி, சித்தப்பா, பசங்க இதுதான் என் குடும்பம்னு டயலாக்லாம் பேசியிருப்பார் சூர்யா. ஒரு ஊரே சொந்தமா இருக்கும் அந்த அளவுக்கு நட்சத்திரப் பட்டாளம் ஒரு பிரேம்லயாவது இருக்கும். வில்லன் மொத்தக் குடும்பத்தையும் போட்டுத்தள்ள பார்ப்பார். அப்படி இல்லைனா ஒரு உசுரயாவது எடுப்பேன்னு சவால் விடுவார். இந்த சவால்கள்ல எல்லாம் குடும்பத்தைக் காப்பாற்ற ஒத்த ஆளா போராடுவார் ஹீரோ. வேல் படத்துல சூர்யா வீட்டு சோத்துல கலாபவன்மணி விஷம் வைச்சு வில்லத்தனம் செய்வார். சிங்கம்2 படத்துல மொத்த குடும்பத்தையும் போட்டுத்தள்ள வர்ற சீன்ல காக்கியில இருந்து ட்ரான்ஸ்பராகி வேஷ்டியைக் கட்டிக்கிட்டு, மொத்த ரெளடிகளையும் போட்டு பொளந்தெடுப்பார் சூர்யா. அதேதான் அருள் படத்துல கடையில இருந்து வெளிய வர்ற குடும்பத்தை போட்டுத்தள்ள பசுபதி கேங் வெளியிலயே வெயிட் பண்ணும். அவரையே ஹீரோ போட்டுத் தள்ளிடுவார். சாமியில த்ரிஷாவோட பெரிய குடும்பத்தை எஸ்கேப் ஆக வைப்பார், விக்ரம். அதேபோல சிங்கம், வேங்கை, பூஜை, யானைனு எல்லா படங்கள்லேயும் வில்லன் ஆட்கள் ஹீரோ குடும்பத்தை அழிக்க நினைப்பாங்க. ஆனா, அவங்ககிட்ட இருந்து காக்கிறது ஹீரோதான்.
High Decibel பன்ச்
இதுதான் இயக்குநர் ஹரியோட பலம். ஓங்கி அடிச்சா, ஒன்றரை டன் வெயிட்டுடா, நான் போலீஸ் இல்ல பொறுக்கி, நீ வெட்டுனா கொலை, நான் வெட்டுனா விசாரணை கமிஷன், கண்டிக்கிற உரிமை மட்டும்தான் மனுஷனுக்கு இருக்கு, தண்டிக்கிற உரிமை கடவுளுக்கு மட்டும்தான் இருக்கு, பருப்புல உசந்தது முந்திரி, பதவியில ஒசந்தது மந்திரினு பஞ்ச் டயலாக்குகளையும், வசனங்களையும வெரைட்டியா கொடுக்குறதுல ஹரி எப்பவுமே கில்லிதான். அதேபோல ஹீரோவுக்கு கோபம் வந்தா அவர் பேசுற வசனங்கள் ஹைடெசிபல்லதான் இருக்கும். இதுவும் பரபரனு போற திரைக்கதையோட சேர்ந்து மக்களை கட்டிப்போட்டது. அதை பேசுற ஹீரோவோட சட்டைக்கு மட்டும் கஞ்சி போட்டிருக்க மாட்டாங்க. ஹீரோவையே தூக்கி அதுக்குள்ள முக்கி எடுத்த மாதிரி ஒரு விறைப்பான உடல்மொழியும் இருக்கும். இதுதான் ஹரிக்கு ஸ்பெஷல். ஏன்னா என்னோட ஹீரோ இப்படித்தான் இருக்கணும்னு நினைக்கிறது ஹரியோட பலமும் கூட.
ஹீரோக்கள்!
சாக்லேட் பாயா இருந்த பிரசாந்த் கைல முதல்முதலா அருவா கொடுத்து நடிக்க வைச்சது, பிரபல பத்திரிக்கையோட திரை விமர்சனத்துல ‘சிம்பு இந்த படத்துல நடிச்சிருக்கார்’னு சொல்ல வச்சது. விக்ரமை கமர்சியலா ஒரு உச்சத்துக்கு கொண்டுபோனது, அதே மாதிரி கெரியர்ல கமர்சியல் படங்கள் பண்ண வாய்ப்பு தேடிக்கிட்டு இருந்த சூர்யாவோட் கைகோர்த்து 5 படங்கள் பண்ணது, சரத்குமார் நடிச்ச கடைசி ஹிட் படமான ஐயாவை உருவாக்குனதுனு 20 வருடங்கள்ல 16 படங்களை இயக்கியிருக்கார்.
Also Read – ஷங்கர் படத்தில் இத்தனை மன்னர்களா!? – ஷங்கரின் வரலாற்று காதல்!
இதுபோக போலீஸ்னா எப்பவுமே கெத்துதான்னு காட்டுனது, பெரிய குடும்பத்து ஹீரோன்னா அய்யனார் மாதிரி காவல் காக்க தயாரா இருக்கார்னு காட்டுனது, சுமோக்களை பறக்கவிட்டதுனு ஏகப்பட்ட சம்பவங்களுக்கு சொந்தக்காரர். சிங்கம் வரிசையில மூன்று பாகங்களை எடுத்து வெற்றியடைய வைச்சதும் ஹரி ஒருத்தர்தான்.
இவரோட கமர்சியல் பேக்கேஜ் இன்னைக்கு வர்ற இளம் கமர்சியல் இயக்குநர்களுக்கான ஒரு பாடமாத்தான் இருக்கும். இதுல பாதியை தாண்டிட்டாலே அந்த படம் வெற்றிதான்.
இடையில சின்ன கேள்வி கேட்டிருப்பேன். ஒரு நடிகருக்கு சோலோ ஹீரோவாக வந்து ஹிட் கொடுத்த கடைசி படத்தை இயக்கியிருந்தார்,ஹரி. அந்த நடிகர் சரத்குமார். அந்த படம் ஐயா.
இயக்குநர் ஹரியோட படங்கள்ல பிடிக்கும் பிடிக்காதுனு எதுவும் இல்ல, ஹரின்னாலே பிடிக்கும். உங்களுக்கு அவரோட படங்கள்ல எது பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.