டாம் அண்ட் ஜெர்ரி

Tom & Jerry-ல நம்மள அழ வைச்ச எபிசோடு நியாபகம் இருக்கா?!

இந்த உலகத்துல முடிவே இல்லாத சில விஷயங்கள் இருக்கு… அதுல ஒண்ணுதான் ‘ஜெர்ரி’யை ‘டாம்’ துரத்திக்கிட்டே இருக்குறது. ஏன் டாம், ஜெர்ரியை துரத்துது தெரியுமா? இந்த ஐடியா உருவானதுக்கு பின்னாடி பொய்யயோ, உண்மையோ, ஆனால், ஒரு இண்டரஸ்டிங்கான கதை இருக்கு என்ன தெரியுமா? குழந்தைங்க கார்டூனான டாம் & ஜெர்ரி மேல கூட பெரிய பெரிய கம்ப்ளெயிண்டுலாம் வந்திருக்கு தெரியுமா? முதலில் டாம் அண்ட் ஜெர்ரிக்கு என்ன பெயர் வைச்சாங்க தெரியுமா? இந்த கார்டூன்ல டாம் அண்ட் ஜெர்ரி பெரும்பாலும் அமைதியாதான் இருப்பாங்க. அவங்க பேசுன ஃபஸ்ட் வார்த்தை என்ன தெரியுமா? டாம் அண்ட் ஜெர்ரியின் சோகமான எபிசோடு நியாபகம் இருக்கா? இதெல்லாம் தெரிஞ்சுக்க முழுசா படிங்க

டாம் & ஜெர்ரினு சொன்னதும் டிவில ஓடுற கார்ட்டூன் நெட்வொர்க் சேனல்தான் நமக்கு நியாபகம் வரும். ஆனால், இந்த கார்டூன் முதல்ல வெளியானது பெரிய திரையில்தான். 1940-ல ‘Puss Gets the Boot’ன்ற பெயரில் திரைப்படமாக வெளியானது.  William Hanna, Joseph Barbera and Rudolf Ising ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் ஈசாப் நீதிக்கதையான ‘எலியும் பூனையும்’ கதையை மையமாக வைத்துதான் வெளியானது. ஆனால், வில்லியம் ஹான்னா ஒருநாள் கிச்சன்ல வேலைப் பார்த்துட்டு இருக்கும்போது ஒரு எலி டக்னு வந்துருக்கு. அதைப் பார்த்து பயந்து ஓடியிருக்காரு. அப்புறம் ரிலாக்ஸ் ஆகி யோசிக்கும்போது இதையே கான்செப்டா பண்ணா என்னனு தோனியிருக்கு. அப்படி வந்ததுதான் டாம் அண்ட் ஜெர்ரி. இந்தக் கதை உண்மையானு தெரியாது. கேக்க இன்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு.60-Seconds Visual Puzzle: Can you tell which Tom and Jerry cartoon is  different?

‘Puss Gets the Boot’ படத்துல டாம் பெயர் Jasper, ஜெர்ரி பெயர் Jinx. இந்தப் பெயர்கள்லாம் அவ்வளவு சுவாரஸ்யமா இல்லையேனு எம்.ஜி.எம் ஸ்டுடியோ ஃபீல் பண்ணியிருக்காங்க. அப்புறம் இந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான பெயர் கொண்டுவரவங்களுக்கு $50 பரிசுனும் அறிவிக்கிறாங்க. அப்போ, ஜான் கார் என்ற அனிமேட்டர் டாம் அண்ட் ஜெர்ரி பெயரோட போய்ருக்காரு. இந்த கார்ட்டூன் ஐடியாவை சொல்லும்போதே எம்.ஜி.எம் ஸ்டுடியோ இது ரொம்ப பொதுவான விஷயம்தான. இது எப்படி வொர்க் அவுட் ஆகும்னு சொல்லியிருக்காங்க. ஆனால், வெளியானதுக்கு அப்புறம் 7 ஆஸ்கர் வாங்கிச்சு. உடனே, இதை கன்டினியூ பண்ணுங்கனு சொல்லியிருக்காங்க.

ஒருவேளை நீங்க டாமுக்கும் ஜெர்ரிக்கும் நம்ம ஊர் பேரா ஒன்னு வைக்கலாம்னு நினைச்சா என்ன வைப்பீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க…

டாம் & ஜெர்ரிக்கு குழந்தைங்க ஃபேன்ஸ்தான் அதிகம். இருந்தாலும் அதன் மீது எக்கச்சக்க விமர்சனங்கள் இருந்தன. வன்முறை அதிகளவில் இருப்பதால், குழந்தைங்க இதைப் பார்த்து கெட்டுப் போறாங்கனு குறைகள் சொன்னாங்க. இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு நாளடைவில் டாமும் ஜெர்ரியும் கொஞ்சம் மென்மையாக சண்டை போட ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு எபிசோடில் நண்பர்களாககூட இருப்பாங்க. உலகத்தையே சுத்துவாங்க. நிறைய பேருக்கு அந்த எபிசோட் ரொம்பவே ஃபேவரைட்.

Also read : ப்ப்பா… நெட்ஃபிளிக்ஸ்க்கு இப்படி ஒரு வரலாறா?

 இன்னொரு மிகப்பெரிய குற்றச்சாட்டு ‘நிறவெறி’. அமெரிக்காவில் ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர்கள் மீது நிறவெறி தாக்குதல் இன்னைக்கு வரைக்கும் நடக்குது. நிறவெறிக் கண்ணோட்டத்தில் மட்டுமே உருவம் முதல் குரல் வரை உருவாக்கப்பட்ட ஒரு பெண் கதாபாத்திரம் டாம் அண்ட் ஜெர்ரியில் முதலாளி கேரக்டரில் வருவாங்க. எந்த எபிசோடுக்கு பேரு, ‘Saturday Evening Puss’. இதன்பிறகு இவற்றையும் தவிர்த்திருக்காங்க. அந்த எபிசோடுல முதலாளியம்மாவோட முகத்தையும் சில நொடிகள் காட்டியிருப்பாங்க.

டாம் அண்ட் ஜெர்ரி வந்து கிட்டத்தட்ட 80 வருஷம் ஆச்சு. இன்னைக்கும் பலரோட ஃபேவரைட் கார்ட்டூன் டாம் அண்ட் ஜெர்ரிதான். டாமும் ஜெர்ரியும் எப்போவுமே ஒருத்தரை ஒருத்தர் ஏன் துரத்திகிட்டும், இன்னொருத்தரை காலி பண்ணவும் பிளான் பண்ணிகிட்டே இருக்காங்க தெரியுமா? ஒரு கதையில் ஹீரோன்னு ஒருத்தன் இருந்தா வில்லன்னு ஒருத்தன் இருக்கனும்ல அதனாலதான். என்ன ஒண்ணு இந்தக் கதையில நம்மள பொருத்தவரைக்கும் டாம், ஜெர்ரி ரெண்டு பேரும் ஹீரோதான். 

ரொம்பவே சோகமான எபிசோடுனா ‘ப்ளூ கேட்ஸ் ப்ளூ’தான். டாம் அண்ட் ஜெர்ரி – ரெண்டு பேரும் சோகமா போய் ரெயில்வே டிராக்ல உக்காருவாங்க. அதோட எண்ட்னு போடுவாங்க. அப்போ அவங்களைப் பார்த்து நமக்கே அழுகை வந்துரும். அதைப் பத்தி சிலர் ரிசர்ச்லாம்கூட பண்ணியிருக்காங்க. இப்படி ஒரு முடிவு இருந்துருக்க வேணாம்னுலாம் சொல்லுவாங்க. ஆனால், அவங்க உண்மையிலேயே suicideன்றதை மீன் பண்ணலயாம். அதேமாதிரி ஒருவார்த்தைக்கூட பேசாமல் நம்மள சிரிக்க வைப்பாங்க. மொத்த எபிசோடுலயும் ரொம்ப கம்மியாதான் பேசியிருப்பாங்க. முதல்முதல்ல அவங்க பேசல,பாடுனாங்க. அந்த வரி என்னனா, “is you is or is you ain’t my baby” அப்டின்றதுதான்.

அம்மான்னா யாருக்குதான் புடிக்காது?னு கேப்பாங்கள்ல. அப்படிதான் ‘டாம் அண்ட் ஜெர்ரினா யாருக்குதான் புடிக்காது. பிறந்த குழந்தைல இருந்து நம்மளோட தாத்தா, பாட்டிங்க வரைக்கும் வயசு வித்தியாசம் இல்லாமல், மொழி வித்தியாசம் இல்லாமல் பார்க்கக்கூடிய ஒரே கார்ட்டூன்னா அது டாம் அண்ட் ஜெர்ரிதான். அதுக்கு ஃபேனா இருக்குறதே பெருமைதான?!’

உங்களால மறக்கவே முடியாத டாம்&ஜெர்ரி சீன் எதுன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

50 thoughts on “Tom & Jerry-ல நம்மள அழ வைச்ச எபிசோடு நியாபகம் இருக்கா?!”

  1. best canadian online pharmacy [url=https://canadapharmast.com/#]safe reliable canadian pharmacy[/url] pet meds without vet prescription canada

  2. canadapharmacyonline legit [url=https://canadapharmast.online/#]canadian neighbor pharmacy[/url] canada drug pharmacy

  3. pharmacies in mexico that ship to usa [url=http://foruspharma.com/#]mexican pharmaceuticals online[/url] buying prescription drugs in mexico online

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top