தமிழ் சினிமாவின் பெஸ்ட் இண்டர்வெல் சீன்கள்!

தமிழ் சினிமால இண்டர்வெல் சீன்ஸ்க்கு எப்பவுமே தனி பவர் இருக்கு. ஏன்னா, அடுத்த பாதி படத்தைப் பார்க்கலாமா? இல்லை, பாப் கார்ன் வாங்குற சாக்குல அப்படியே வெளிய ஓடிப்போலாமானு நிறைய நேரங்கள்ல இண்டர்வெல் சீன்ஸ்தான் முடிவு பண்ணும். அதுவும், முக்கியமான நடிகர்கள், டைரக்டர்கள் படங்கள்ல வர்ற இண்டர்வெல சீன்ஸ்க்கு தனியான ஃபேன் பேஸே இருக்கு. தமிழ் சினிமால வந்த பெஸ்ட் இண்டர்வெல் சீன்ஸ் பத்திதான் பார்க்கப்போறோம். 

ஜிகர்தண்டா இண்டர்வெல் சீன்

ஜிகர்தண்டா – தமிழ் சினிமா பிரியர்கள் எல்லாத்துக்குமே, இண்டர்வெல் சீன்ஸ்னு சொன்னதும் டக்னு ஒரு செகண்ட்ல மைண்டுக்கு வர்றது ஜிகர்தண்டா இண்டர்வெல் சீன்தான். கொலை பண்றது, பேசுறதுனு எல்லாத்தையும் இன்னொருத்தன் தெரிஞ்சுகிட்டு இருக்கான்னு சேதுவுக்கு தெரிஞ்சதும், கார்த்திக்கும் அவன் ஃப்ரண்டும் உடனே அங்க இருந்து எஸ்கேப் ஆக நினைப்பாங்க. வெளிய மழை கொட்டும். ஓடி வந்து கதவை திறந்தா சேது நின்னுட்டு இருப்பான். மாஸா பி.ஜி.எம் வரும். இண்டர்வெல்னு போடுவாங்க. 

துப்பாக்கி – விஜய் ஃபேன்ஸால மறக்க முடியாத இண்டர்வெல் சீன்கள்ல துப்பாக்கிக்கு ஸ்பெஷல் இடம் உண்டு. வில்லன் யாருனு ஹீரோவுக்கு தெரியாது, ஹீரோ யாருனு வில்லனுக்கு தெரியாது. இப்படியே படம் போய்ட்டு இருக்கும். வில்லன்கிட்ட இருந்து ஃபோன் வரும். விஜய் எடுத்து ஹலோனுகூட சொல்லமாட்டாரு. அங்க இருந்து வில்லன், “எனக்கு நீ யாருனு தெரியாது. எங்க இருக்கனு தெரியாது. என்னோட தம்பி உட்பட என் ஆள் 12 பேரை கொன்றுக்க. ஒருவேளை உன்னை நான் புடிச்சிட்டேன்னா, உன்னை கொன்றுவேன்”னு வில்லன் மிரட்டுவான். விஜய் சிம்பிளா, “ஐ எம் வெயிட்டிங்”னு சொல்லுவாரு. செம மாஸா இருக்கு. உடனே, லைட்ட போட்ருவாங்க.

துப்பாக்கி இண்டர்வெல் சீன்

மங்காத்தா – செஸ் போர்டுக்கு முன்னால உட்கார்ந்து சரக்கடிச்சிட்டே அஜித் பிளான் போடுவாரு. ஒவ்வொருத்தரையா இமேஜின்ல வர வைச்சு, என்னென்ன பண்ணுவாங்கனு யோசிச்சு பார்ப்பாரு. அப்போ, அஜித் மட்டும் துப்பாக்கியோட வந்து ஒவ்வொருத்தரையா சுட்டு தள்ளுவாரு. இல்லை, இந்த பிளான் சொதப்பிரும்னு, ரீவைன் பண்ணி முதல்ல இருந்து போட்டுதள்ள ஆரம்பிப்பாரு. எல்லாத்தையும் இமேஜ் பண்ணி முடிச்சதும், மாஸா சிரிப்பு ஒண்ணு சிரிச்சிட்டு, கேமராவைப் பார்த்து கடிக்கிற மாதிரி வைப்பாரு. இண்டர்வெல் போடுவாங்க. 

மங்காத்தா

விக்ரம் – படத்துல முதல் சீனே கமலை கொல்றதுதான். அதேமாதிரி சீரியல் கில்லிங் நடக்கும். அப்புறம் ஃபகத் வந்து யாரு கொன்னாங்க. எதுக்கு இப்படி கொல்றாங்கனு தேடுவாரு. இண்டர்வெல் அப்போதான், ஃபகத் முகமூடி போட்டவன்கிட்ட தைரியமான ஆளா இருந்தா முகத்தைக் காட்டிப்பாருனு சவால் விடுவாரு. முகமூடியை கழட்டுனா கமல், நாயகன் மீண்டு வரான்னு அனிருத் பிரிச்சு விட்ருப்பாரு. அப்படியே இண்டர்வெல் போட்ருவாங்க. எனக்கு தெரிஞ்சு தேவர்மகன், நாயகன், விருமாண்டி படங்களுக்குலாம் பிறகு செமயா கமலுக்கு அமைஞ்ச இண்டர்வெல் சீன்னா அது விக்ரம்லதான். 

அசுரன் இண்டர்வெல் சீன்

அசுரன் – மாரி, வி.ஐ.பி படங்கள்லயெல்லாம் தனுஷ்க்கு செமயான இண்டர்வெல் சீன்ஸ் அமைஞ்சிருக்கு. ஆனால், அசுரன் என்னைக்குமே ஸ்பெஷல் படம்தான். இண்டர்வெல் சீனும் ஸ்பெஷல்தான். தனுஷ் பத்தின எதுவுமே தெரியாமல், அப்பாவியா மட்டுமே பார்க்குற ரெண்டாவது பையன், அண்ணன் செத்ததுக்கு பதிலா நீ செத்து போய்ருக்கலாம்னு டயலாக் பேசிட்டு போவான், அப்போ அடியாட்கள் நிறைய பேர் அவனை கொலை பண்ண வருவாங்க. அப்படியே டிரான்ஸ்ஃபர்மேஷன் எடுத்து எல்லாரையும் போட்டு பொளந்து எடுப்பாரு. ஜி.வி.பிரகாஷ் மியூசிக் பட்டைய கிளப்பியிருப்பாரு. மாஸ்னா இப்படி இருக்கணும்னு தோணும். 

Also Read : ‘பேய் படத்துக்கு இன்னொரு டிரெண்ட் செட்டர்..’ – `டிமான்ட்டி காலனி!

மாநாடு – விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன் படங்கள் எல்லாதாம்தான் சிம்புவோட இண்டர்வெல் ப்ளாக் செமயா இருக்கும். ஆனால், சமீபத்துல வந்த படங்களை எடுத்து பார்க்கும்போது மாநாடுல வர்ற சீன் செமயா இருக்கும். எஸ்.ஜே.சூர்யாக்கு ஒரே விஷயம் திரும்ப திரும்ப நடக்குற மாதிரி ஃபீல் ஆகும். ஆனால், ஏன்னு தெரியாது. கடைசில சிம்பு வந்து, வர்றேன், திரும்ப வர்றேன்னு துப்பாக்கியை வைச்சு சுட்டுப்பாரு, அப்போ, எஸ்.ஜே.சூர்யா, இதுதான் ரீசனானு சொல்லி முடிப்பாரு. அந்த டயலாக் அவர் கம்பேக் டயலாக் மாதிரி வேற இருக்கும். சிம்பு ஃபேன்ஸ்க்கு இதைவிட வேற என்ன வேணும்.

கைதி – எனக்கு தெரிஞ்சு இண்டர்வெல் சீன்ஸ் எல்லா படத்துலயும் சூப்பரா வைக்கிறது, லோகேஷ்னே தைரியமா சொல்லலாம். கைதிலயும் இண்டர்வெல் சீன்ஸ் செமயா இருக்கும். ஃபைட் சீன் முடிச்சிட்டு, கார்த்தி பொண்ணை பார்க்கணும்னு சொன்னதும், ஹாஸ்பிடல் பக்கம்தான்னு சொல்லுவாங்க. இன்னொரு பக்கம் ரௌடி கேங் போலீஸ் ஸ்டேஷனை போட்டு பொளந்துட்டு இருப்பாங்க. அப்படியே, இன்னொரு சைடு பொண்ணு அப்பாக்காக வெயிட் பண்ணும். அப்படியே கட் ஆகி, இண்டர்வெல் போடுவாங்க. அடுத்து என்ன நடக்கப்போகுதுனு எமோஷனலா சீன் வைச்சதுலாம் செம ஐடியா.

கைதி

உறியடி – தமிழ் சினிமால வந்த சின்ன படங்கள், அதாவது டைம் அடிப்படைல பார்த்தா உறியடியும் ஒண்ணு. மொத்த படமே ஒன்றரை மணி நேரம்தான். ஆனால், அந்தப் படத்துல பேசுன விஷயங்கள் அவ்வளவு முக்கியமான ஒண்ணு. ரௌடிகள்லாம் சேர்ந்து ஹீரோவையும் அவன் கேங்கையும் அடிக்க வந்துருப்பானுங்க. ஆனால், அதுக்கு முன்னாடி, அதை தெரிஞ்சுட்டு இவனை போட்டு பொளக்க ஸ்டார்ட் பண்ணிடுவாங்க. தத்தகிட தத்தகிட தத்தகிட தித்தோம்னு வர்ற பி.ஜி.எம்க்குலாம் நிறைய பேர் அடிக்ட். 

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – செம என்கேஜிங்கான படம். நிறைய ட்விஸ்ட் வந்துட்டே இருக்கும். மத்த படத்துக்கும் இந்தப் படத்துக்கும் செம டிஃப்ரண்டான இண்டர்வெல் இருக்கு. என்னனா, ஹீரோவையும் அவன் ஃப்ரெண்டையும் ஏமாத்திட்டு போய்டுவாங்க. அப்பதான், ஹீரோயின் திருடினே தெரிய வரும். அந்த இடத்துலதான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்னு டைட்டிலே போடுவாங்க. ஹீரோயின்ஸ்க்கு இண்டர்வெல்ல செம மாஸா சீன் வைக்கிறதுலாம், எப்பயாவதுதான் நடக்கும். 

பரியேறும் பெருமாள் – தமிழ் சினிமால பரியேறும் பெருமாள் ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் இருக்கு. அதுல பரியனை அடிச்சு, அவன் மேல சிறுநீர்லாம் கழிச்சு ரொம்ப அசிங்கப்படுத்துவாங்க. ரூம்குள்ள போட்டு அடிஅடினு அடிப்பாங்க. எழும்ப முடியாமல் ரூம்குள்ள அடிபட்டு தவழ்ந்து வந்து கதவை தட்டுவான். ரொம்ப அழ வைக்கிற சீன் இதுதான்.

https://fb.watch/hF1B7N9KJd/

இன்னும் சொல்லனும்னா சொல்லிட்டே இருக்கலாம். அவ்வளவு இருக்கு. அதுமட்டுமில்ல கொஞ்சம் ஃபெமிலியரா, கடந்த ஒரு 10 வருஷத்துல வந்த படங்களைதான் லிஸ்ட்லயும் எடுத்துருக்கேன். இந்த லிஸ்ட்ல நான் மிஸ் பண்ண, உங்களோட ஃபேவரைட் சீனை மறக்காமல் கமெண்ட்ல சொல்லுங்க. இந்த சீனை கொஞ்சம் மாத்திருக்கலாம்னு நீங்க ஃபீல் பண்ற படங்களையும் மென்ஷன் பண்ணுங்க. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top