வெங்கட் பிரபு

‘தி கோட்’ வெங்கட் பிரபு… தமிழ் சினிமாவுக்கு எப்பவும் ஸ்பெஷல்.. ஏன்?

லோகேஷ் கனகராஜ், நெல்சன் எல்லாம் இன்னைக்குதான் பல ஹீரோக்களை ஒரே படத்துல கொண்டு வந்து டைரக்ட் பண்ணிட்டு இருக்காங்க. ஆனால், முதல் படத்துல இருந்தே இதை பண்ணிட்டு இருக்குற ஒரே ஆளு தலைவன் வெங்கட் பிரபுதான். பல பர்னிச்சர்களை உடைச்சு புதுசா பல விஷயங்களை நிறைய இயக்குநர் இன்னைக்கு ட்ரை பண்றாங்க. ஆனால், அன்னைல இருந்து இன்னைக்கு வரை பர்னிச்சர்களை தொடர்ந்து உடைக்கிறதுல வெங்கட் பிரபு ஸ்பெஷல்னே சொல்லலாம்.

வெங்கட் பிரபு ஏன் தமிழ் சினிமாவுக்கு ஸ்பெஷல்?

தமிழ் சினிமா கிளீஷேக்களை உடைச்சு வெற்றிபெற்ற குறைந்த இயக்குநர்கள்ல வெங்கட்பிரபு ரொம்ப முக்கியமான ஆள். ஸ்போர்ட்ஸ் படங்களுக்குனு சில டெம்ப்ளேட்ஸ் இருக்கு. ஆரம்பத்துல கஷ்டப்பட்டு கடைசில கப்பு வாங்கனும். இப்பவும் அப்படிதான். ஆனால், கிளைமாக்ஸ்ல செமி ஃபைனல் நடத்தி அன்னைக்கு கிளைமாக்ஸ் முடிவை நம்ம கையில விட்ட டைரக்டர்னா வெங்கட்பிரபுதான்.

சரோஜா… இவ்வளவு சீரியஸான த்ரில்லர் படத்துல காமெடி. ஒருநாள்ல என்ன நடக்குதுன்றதுதான் படம். அதுவே அன்னைக்கு புதுசுதான். கோவா போணும்ன்றது அன்னைக்கு பலரோட கனவு. அதை திரை வழியா சாத்தியப்படுத்துனது வி.பிதான். இங்கிலீஷ் காமெடிலாம் அப்படியே இன்னைக்கும் கனெக்ட் ஆகும்.

ஒரு ஹீரோ வில்லனானா… ஏன், வில்லனானான்றதுக்கு முன்கதை வைச்சு ஜஸ்டிஃபை பண்ணுவாங்க. அதை உடைச்சு… அவன் வில்லன் அவ்வளவுதான்னு. ஆகச்சிறந்த நல்ல மனமா மட்டுமே நடிச்ச ஹீரோவை வில்லனா களம் இறக்கி தமிழ்நாட்டையே கொண்டாட வைச்சாரு. அதுக்கப்புறம் வில்லன் ஃபேஸே மாறிச்சு.

ஒரே ஒரு சீன் ரிப்பீட்டடா நடக்கும். ஏன் நடக்குது? எதுக்கு நடக்குது? அதெப்படி இவங்க ரெண்டு பேருக்கும் மட்டும் நடக்குது? இப்படி லாஜிக்கான எந்த கேள்விக்கும் பதில் இருக்காது. ஆனால், லூப் மோட்ல படத்தை எடுத்து லூப் மோட்ல நம்மள பார்க்க வைச்சு, ரசிக்க வைச்சு பட்டைய கிளப்பியிருப்பாரு.

பிரியாணி, மாஸ், மன்மத லீலை, கஸ்டடிலாம் பத்தி நான் பேசமாட்டேன். ஆனாலும், அதுலயும் அவர் கையாண்ட ஜானர்ஸ் வித்தியாசமானது. முதல் படத்துல இருந்த அதே கேங்க்தான் இன்னைக்கு கோட் படம் வரைக்கும் டிராவல் ஆகிட்ருக்கும். மாநாடு தவிர மற்ற படங்கள்ல யாரு ஹீரோ, யாரு வில்லன், யாரு காமெடியன், யாரு ஹீரோயின்ற எந்த பிரிவும் இருக்காது. எல்லாரும் எல்லாமே பண்ணுவாங்க. எல்லாருக்கும் சமமான ஸ்பேஸ் ஸ்கீரின்ல இருக்கும். அதுனாலதான், அந்த வி.பி கேங்க் தமிழ் சினிமால அவ்வளவு ஸ்பெஷல். மங்காத்தலயும் அதேதான்.

எல்லா படத்துலயும் நம்மளை பெர்சனலா கனெக்ட் பண்ணிக்கிற சில விஷயங்கள் இருக்கும். சென்னை 28ல் நம்ம ஏரியாவையும், அட்டி கேங்கையும் கனெக்ட் பண்ணிக்கலாம். கோவால நம்ம ட்ரீம் டெஸ்டினேஷனைக் கனெக்ட் பண்ணிக்கலாம். சரோஜால வீட்டை சமாளிச்சு கிளம்புற டிராவல், மங்காத்தால நமக்குள்ள உள்ள அந்த வில்லன், மாஸ்ல நம்ம திரும்ப மீட் பண்ணனும்னு நினைக்கிறவங்க இப்படி நிறைய விஷயங்களைக் கனெக்ட் பண்ணிக்கலாம்.

வி.பி பாய்ஸ் அண்ட் டீம்னாலே பசங்களுக்கான படம்தான்னு இருக்கும். ஆனால், குடும்பங்கள் ரசிக்கவும் சில பாயிண்ட்ஸ் இருக்கும். குறிப்பா காமெடிகள் ரொம்ப முகம் சுளிக்கிற மாதிரி இருக்காது.  ரசிக்கும் படியான டச்ச கொடுத்துருவாரு.அதுவே அவரோட ஸ்பெஷலாதான் இருக்கும். கல்யாணம் ஆனப் பசங்க சந்திக்கிற சவால்கள், கணவன் – மனைவி காதல் இருக்கும்.  இப்படி எல்லாருக்குமான படமாவும் இருக்கும்.

பாண்டிச்சேரி, இ.சி.ஆர்னு பசங்க எங்க பிரைவேட் ஃப்ளாட் எடுத்து ஒருநாள் தங்க எஞ்சாய் பண்ண நினைச்சாலும், அங்க போடுற முதல் பிளே லிஸ்ட் வி.பி – யுவன்தான். ஜல்சா பண்ணுங்கடா, சொப்பன சுந்தரி, கோடான கோடி பாடல்கள் எல்லாம் தரமான சம்பவம். மிஸ்ஸானது கோட் மட்டும்தான். இந்த காம்போ எல்லா ஜானருக்கும், எல்லா எமோஷனுக்கும் பாட்டு போட்ருக்கு. 

மாஸ் படம் மொக்கைப்படம். ஆனால், அந்தப் படத்துலயும் ப்ளூப்பர்ஸ் செம ஹிட்டு. மங்காத்தாதான் இன்னைக்கு வரைக்கும் ஒன் ஆஃப் தி பெஸ்ட் ப்ளூப்பர் கட். கோட்லயும் தரமான சம்பவம் இருக்கு. தலைவன் ப்ளூப்பர்னே தனி படம் எடுக்கலாம். ப்ளூப்பர்ஸ் போட்டுக்கூட எஞ்சாய் பண்ண வைக்கிற டைரக்டர்.

அன்னைக்கு அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸுக்கு சம்பளம் கொடுக்குறது, ஹெல்தியான டிஸ்கஷன் வைச்சுக்கிறது, கோவப்படாமல் எப்பவும் ஜாலியா இருக்குறது, தப்பை ஒத்துக்குறதுனு ஆஃப் ஸ்கிரீன்ல போனாலும் மனுஷன் தங்கம்தான்.

கதை, காமெடி, கேங்க், ஏரியானு பல விஷயங்களை கனெக்ட் பண்றது, வித்தியாசமா பண்றேன்னு எதாவது பண்ணாமல்.. ரசிக்கும்படியா பண்றது, பாடல்கள், பெர்சனல் விஷயங்கள்னு பல விஷயங்கள்தான் அவரை தமிழ் சினிமால ரொம்பவே ஸ்பெஷலான டைரக்டரா மாத்துது. 

Also Read – `தி கோட்’ விஜய்… ஆடியோ லாஞ்சை ஏன் மிஸ் பண்றோம்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top