செய்தித்தாள் விற்பனையாளர் டூ குணச்சித்திர நடிகர் – கிஷோரின் சினிமா பயணம்!

சினிமாக்களில் கதாநாயகன், வில்லன்னு ரெண்டு கதாபாத்திரங்களை தாண்டி, மத்த கதாபாத்திரங்களும் ஆழமா பதியும். அந்த கதாபாத்திரம் வந்து போற கொஞ்ச காட்சியா இருந்தாலும், அது ஆகச் சிறந்த காட்சிகளா அமைஞ்சிடும். அப்படித்தான் 2007-ம் வருஷம் ஒரு காட்சியில ஒரு நடிகர் வந்தார். கொஞ்ச நேரம் வந்திருப்பார். ஆனா படம் முழுக்க தன்னோட இருப்பை நிலைநிறுத்திட்டு போயிருப்பார். அந்த கதாபாத்திரத்தோட பெயர் செல்வம். எல்லோரும் நடிக்கலாம்… ஆனா மெனெக்கெடல் இல்லாம போற போக்குல அசால்ட்டா நடிக்கிறது சிலருக்கு மட்டும்தான் வரும். அப்படித்தான் செல்வம் கேரெக்டர்ல கிஷோர் பண்ணியிருந்தார். செய்திதாள் விற்பனையாளரா ஆரம்பிச்சு, இன்னைக்கு நடிகர், விவசாயினு பல உயரங்கள் தொட்டிருக்கார். அவரைப் பத்திதான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.

ஆரம்ப காலகட்டம்!

சொந்த ஊர் கர்நாடக மாநிலம், ராம் நகர் மாவட்டம், மாகடி. அப்பா கல்லூரி முதல்வர். காலேஜ் படிப்பை பெங்களூரு நேஷனல் காலேஜ்ல முடிச்சார். கல்லூரி காலத்திலேயே மேடை நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். அதுக்குப் பின்னால பெங்களூரு பல்கலைக்கழகத்துல கன்னட இலக்கியத்துல மாஸ்டர் டிகிரி முடிச்சார். படிப்பு முடிச்ச கையோட ஒரு காலேஜ்ல டீச்சரா வேலைக்கு ஜாய்ன் பண்ணிட்டார். அதுக்குப் பின்னால நேஷனல் பேசன் டெக்னாலஜியின் பேராசிரியரான ஆடை வடிவமைப்பாளர் வித்யாசாகர்கிட்ட உதவியாளரா சேர்ந்தார். அப்புறம் கல்லூரி காதலியான விசாலாட்சியை கல்யாணம் செய்துகிட்டார். அதுக்கப்புறமா டெக்கான் ஹெரால்டு மற்றும் பிரஜாவானிங்குற செய்திதாள்கள்ல விற்பனையாளரா வேலை பார்த்திருக்கார்.

Kishore
Kishore

காஸ்ட்யூமர் டூ நடிகர்!

2004-ம் வருஷம் 'காந்தி'ங்குற கன்னட திரைப்படம் தயாராகுறதைக் கேள்விப்பட்டு அங்க காஸ்ட்யூமரா வேலைக்கு ஜாய்ன் பண்ணார். ஆனா இவரைப் பார்த்த இயக்குநர் படத்தோட முக்கியமான கதாபாத்திரத்துக்கு நடிக்க வர்றீங்களானு கேட்க, கிஷோரும் ஓகே சொல்லி அந்த படத்துல நடிக்கிறார். படமும் முடிஞ்சு ரிலீஸாகுது. அதோட கர்நாடக அரசோட மாஇல விருதும் கிஷோருக்கு கிடைக்குது. ஏதோ அதிர்ஷ்டம் என எல்லோரும் நினைக்க, அடுத்து வெளியான  ராக்‌ஷசா படத்துக்காக மாநில அரசோட சிறந்த துணை நடிகர் விருதும் வாங்குறார். தொடர்ச்சியான இரண்டாவது மாநில அரசோட விருது வாங்கி கன்னட திரையுலகத்தைக் கவனிக்க வைச்சார், கிஷோர். அடுத்த 3 வருஷத்துல 18 படங்கள் நடித்து முடிச்சார், கிஷோர்.

தேசிய நெடுஞ்சாலை டூ பொல்லாதவன்!

வெற்றிமாறன் முதல்முதலாக தேசிய நெடுஞ்சாலை (உதயம் என்.எச்.4) படத்தை படமாக்கும் முயற்சியில் இருந்தார். அதற்காக கன்னடமும் தமிழும் பேசத் தெரிந்த ஒரு நடிகரை தேடிக் கொண்டிருந்தார். அப்போது பெங்களூரில் நடிகர் கிஷோரைச் சந்தித்து அந்த படத்துக்காக பேசியிருந்தார். ஆனால் இறுதியில் பொல்லாதவன் கதை படமாக்க முடிவானது. ஆனாலும் கிஷோரை விட மனமில்லை. அப்படித்தான் கிஷோர் செல்வமாக பொல்லாதவனுக்குள் வந்தார். செல்வம் கதாபாத்திரம் வரவேற்பைப் பெற காரணம் கதையின் தனித்தன்மை மட்டுமல்ல. நடிகர் கிஷோரின் அசாத்திய நடிப்புத் திறமையும்தான். ‘அந்த பையனுக்கு பயம் இல்ல, ‘அவனைல்லாம் அப்டியே போக விட்ரணும்’, நான் இல்லனா உன்னைப் போட்ருவாங்கடா’ ‘டேய் ரவி நீ லைப்ல செட்லாகணும்னு நினைச்சனைனா அந்த பையனோட பிரச்னையை இத்தோட விட்ரு’னு கொஞ்ச நேரமே வந்தாலும் தெறிக்க வைக்கும் பெர்பார்மன்சைக் கொடுத்திருப்பார். அடிதடியில் ஈடுபடும் ரவுடின்னாலும் தேவையில்லாமல் யார் வம்புதும்புக்கும் போகக் கூடாது, ஆள்பலம் இருக்குதுங்குறதுக்காக வெட்டி வீராப்பு காட்டக் கூடாதுங்குற நிதானத்தோட ஒரு ரவுடிக் கூட்ட தலைவனை இதற்கு முன் தமிழ்சினிமா பார்த்ததில்லை. இதை வெற்றிமாறன் கிஷோர் எனும் நடிகன் மூலமாக
வெற்றிமாறனோட திரைக்கதைக்கு நியாயம் சேர்க்கும் நடிப்பு கிஷோருடையது. அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’, ‘விசாரணை’, ‘வட சென்னை’ படங்களிலும் முக்கியமான வேடங்களில் கிஷோர் நடித்திருக்கிறார். அதிலும் வடசென்னை செந்தில் மிரட்டல் கதாபாத்திரமா இருக்கும். ராஜனை கொலை செஞ்சதுல இவருக்கு முக்கியமான பங்குனு தெரிஞ்சும், இண்டர்வெல் சீன்ல அவரோட ப்ளாக்ல இருந்து வெளியில வர்றப்போ ஆடியன்ஸ்கிட்ட செந்தில் வெளிய வரக் கூடாதுனு ஒரு பதட்டம் இருக்கும். அது கிஷோர் மாதிரியான ஆட்கள் மட்டுமே கொண்டுவர முடியும். அவன் கொண்டு வர்ற பொருளை வாங்கி அவனையே செய்யணும்னு சொல்லிட்டு அசால்ட்டான பாடிலாங்வேஜ்ஜோட நடந்து வர்றதெல்லாம் கிஷோரோட அக்மார்க் நடிப்புக்கு உதாரணம்.

Also Read -கவுண்டர் டு கோளாறு… செலிபிரிட்டி மா.கா.பா-வின் பயணம்!

யுனிக் கேரெக்டர் செலக்‌ஷன்!

கிஷோரைப் பொறுத்தவரைக்கும் கேரெக்டர் செலக்‌ஷன் கொஞ்சம் யுனிக்கா இருக்கும். ஹீரோ ஆனாலும் சரி, வில்லன் ஆனாலும் சரி. கதையோட்டத்துக்கு அந்த கேரெக்டர் உதவியா இருக்கணும். ஓரமா நின்னு வேடிக்கை பார்க்குற மாதிரி இருக்கக் கூடாது. இப்படித்தான் பொல்லாதவன் வெற்றிக்குப் பின்னால தென்னிந்திய சினிமாவோட பிசியான நடிகரா மாறினார், கிஷோர். ஜெயம் கொண்டான் படம் வணிக ரீதியிலா தோல்வியடைந்திருந்தாலும், கிஷோரோட நடிப்பு ரொம்பவே அபாரமா இருக்கும். முரட்டுத்தனமான வில்லன் அதோட எக்ஸ்ட்ரீமுக்குபோனா என்ன பண்ணுவானோ அதை கச்சிதமா பண்ணியிருப்பார். அதே வருஷம் வெண்ணிலா கபடிக்குழு படத்துல கபடி பயிற்சியாளரா வர்ற ரோல் கதாநாயகனுக்கு இணையானது. அதையும் செம்மையா பண்ணியிருப்பார். இதுதவிர, போர்க்களம், ஹரிதாஸ், வனயுத்தம், ஹவுஸோனர்னு பல படங்கள்ல தன்னோட முத்திரையை பதிச்சிருக்கார். குறிப்பா, ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையோட அப்பா, துணிவு மிக்க காவல்துறை அதிகாரினு வெரைட்டியான லீட் கேரெக்டர்ல  சிறப்பா பண்ணியிருந்தார், கிஷோர்.தூங்காவனம், கபாலி, ஆரம்பம், புலிமுருகன்னு பல படங்கள் முண்ணனி நடிகர்களோடவும்,  இப்போ தியேட்டர்கள்ல ஓடிட்டிருக்குற பொன்னியின் செல்வன்லயும், காந்தாராங்குற கன்னட படத்துலயும் நடிச்சிருக்கார். இதுதான் எனோட இமேஜ் இப்படித்தான் நடிப்பேன்னு பாலிசி எல்லாம் இல்ல. எந்த கேரெக்டர்னாலும் செய்வேன் என இறங்கி அடிப்பதில் கில்லாடி. படங்கள் மோசமானதா இருந்தாலும்கூட கிஷோரோட கேரக்டர் பாராட்டும்படியாகவே இருக்கும்.

உடல்மொழியும், வாய்ஸும்!

ஒரு நடிகராக எந்தவகையான கதாபாத்திரத்திலும் இயல்பாகப் பொருந்தவும் மிகையில்லாத நடிப்பைக் கொடுக்கக் கூடிய நடிகர்கள் தென்னிந்திய சினிமாவிலேயே ரொம்ப கம்மி. கிராமத்து கெட்டப்னாலும் சரி, சிட்டி கெட்டப்னாலும் சரி இவர் கச்சிதமா பொருந்திடுவார். உடல்மொழி, வசன உச்சரிப்பு, பார்வைனு எல்லாத்துலயும் அந்த கதாபாத்திரத்தோட தாக்கம் அதிகமா இருக்கும். குறிப்பா டயலாக் சொல்றப்போ கிஷோரோட கண்ணும் சேர்ந்து நடிக்கும். சொல்லப்போனா இதுதான் அவரோட தனித்தன்மைனுகூட சொல்லலாம்.

இயற்கை விவசாயி!

Kishore
Kishore
கர்நாடக மாநிலம், பெங்களூருவின் புறநகர் பகுதியான கரியப்பனதொட்டி கிராமத்தில் தனது எட்டரை ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார், கிஷோர். முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்தான். பாலேக்கர், நம்மாழ்வார்னு முழுக்க முழுக்க அவங்களைப் பாலோ பண்ணி விவசாயம் செய்துகிட்டு வர்றார். ஓய்வு நேரங்கள்ல எந்தவிதமான அலட்டலும் இல்லாம தனது மனைவியோட நிலத்துக்குப் போய் விவசாய வேலைகளைச் செய்யுறார். ரியல் ஹீரோங்குறதுக்கு இன்னொரு சம்பவம்கூட உதாரணமா சொல்லலாம். இவரோட நிலத்துக்கு மேல ஒரு கல்குவாரி அமைய இருக்குது, அதுக்கு நிலத்துக்குப் பக்கத்துல பாதைக்காக நிலம் வாங்க போறாங்கனு கேள்விப்பட்டதும், அந்த இடத்தை தான் வாங்கி அந்த கல்குவாரியை தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்கினார். ஆனால் பணம் படைத்தவர்கள் வேற நிலம் வாங்கி அதன் மூலமாக பாதை அமைச்சுக்கிட்டாங்க. ஆனாலும் இந்த முயற்சிக்காகவே அவரைப் பாராட்டினாங்க, அந்த ஊர் மக்கள். தாத்தா ஒரு விவசாயி, நானும் ஒரு விவசாயியா இருக்கத்தான் ஆசைப்படுறேன். கொஞ்ச வருஷத்துல முழுசா ஒரு விவசாயியா மாறிடணும்ங்குறதுதான் அவரோட ஆசை.

இவர் நடிப்புல எனக்கு பிடிச்சது பொல்லாதவன் செல்வம், வடசென்னை செந்தில் கதாபாத்திரங்கள். உங்களுக்கு எந்த கதாபாத்திரம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top