தமன்னா

உடல் எடைகூடிய தமன்னா.. விஷயம் தெரியாமல் கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..!

தமன்னா என்றாலே அந்த பால் வண்ண மேனியும் அவரது சிற்றிடையும்தான் நம் நினைவுக்கு வந்துபோகும். அப்படிப்பட்ட தமன்னா இப்போது உடல் எடை கூடிப்போயிருக்கிறார். இடையில் அவரது `இடையில்’ என்ன நடந்தது..? பார்க்கலாம்.

எல்லோரது வாழ்விலும் எப்படி கொரோனா வைரஸும் அதனால் ஏற்பட்ட ஊரடங்குகளும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதோ அதேபோலத்தான் தமன்னா வாழ்விலும் விளையாடியிருக்கிறது.கொரோனாவுக்கு முன்புவரை தனது உடல் வாகை பக்காவாக பராமரித்துவந்தார் தமன்னா.  ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா இரண்டாம் அலையில் தமன்னாவுக்கும் தொற்று ஏற்பட்டது.  கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபரில் கொரோனா தொற்றுக்குள்ளான தமன்னா, இதனால் பெரும் அவஸ்தைகுள்ளானார். அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடும் சிகிச்சைகளுக்குப் பிறகே அதிலிருந்து மீண்டார்.

தமன்னா
தமன்னா

அதன்பிறகு அடுத்த சில மாதங்கள் முழுக்க ஓய்வில் இருந்த தமன்னா, இந்த ஆண்டு தொடக்கத்தில் தன்னுடைய வழக்கான பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். அப்போது வெளியான புகைப்படங்கள் எல்லாவற்றிலும் தமன்னா முன்புபோல ஸ்லீம்மாக இல்லாமல் சற்றே எடைகூடியவராகத் தெரிருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் விஷயம் தெரியாமல் கிண்டலடிக்கத் தொடங்கினார்கள். இதனால் மிகவும் மனவருத்தமடைந்த தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எப்படி அவர்களால் இப்படியெல்லாம் பேசமுடிகிறது..? கொரோனா தொற்றுக்குள்ளானதில் நான் மிகவும் பயந்துபோய்விட்டேன். தொடர்ந்து மரண பயத்தில் இருந்தேன். கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களுக்கு இருந்த அனைத்து கடுமையான அறிகுறிகளும் எனக்கும் இருந்தது. மருத்துவர்கள்தான் என்னை போராடி மீட்டனர்’ என வருத்தத்துடன் பகிர்ந்திருந்தார். அதாவது கொரோனா தொற்றுக்கொள்ளானதில் தமன்னா எடுத்துக்கொண்ட சிகிச்சைகளும்  அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்களும் பக்கவிளைவுகளுமே அவரது உடல் எடை கூட காரணமாக அமைந்திருக்கிறது.

தமன்னா
தமன்னா

இதைத்தொடர்ந்து தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என முடிவெடுத்த தமன்னா. அடுத்த இரண்டே  மாதங்களில் கடுமையான ஜிம் வொர்க் அவுட்டில் மூழ்கி வெகு விரைவில் தனது பழையத் தோற்றத்துக்கு மாறிப்போனார். அதன் போட்டோக்களை சந்தோஷமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடச் செய்யவே, அவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் ஆங்கில சேனலுக்கு தமன்னா பேட்டி கொடுத்திருந்தபோது அதில் உடல் எடைக் கூடிப்போய் காணப்பட்டார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை மீண்டும் கிண்டலடிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இடைப்பட்ட காலத்தில் என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தமன்னா தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, நெட்டிசன்களை விடுவோம், தமன்னாவின் எந்தத் தோற்றம் அவருக்கு மிகப் பொருத்தமாக இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்..?

Also Read – தமன்னா ஃபேனா நீங்க… அவங்களைப் பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும்… டெஸ்ட் பண்ணிடலாமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top