Vibe-னா Vibe, என்னா vibe… பக்தி பாடல்கள் Vibe – Part 2

“தாயே திரிசூலி, அங்காள மாரி, ஓம்காரி மாரியம்மா”-னு மாஸ்டர் விஜய் டான்ஸ் ஆடுற மாதிரி ஒரு வீடியோ செம டிரெண்டா போய்ட்டு இருந்துச்சு. அதைக் கேட்டு நிறைய பேர் வைப் பண்ணிட்டு இருந்தாங்க. கரெக்டா அந்த சமயத்துல நாமளும் எதார்த்தமா கேட்டதும் நம்மள பக்தி வைப்-க்கு கூட்டிட்டுப் போற சில பாடல்களை வீடியோவா போட்ருந்தோம். அந்த வீடியோ கமெண்ட்ஸ்ல நிறைய பேர் வந்து பார்ட்-2 போடுங்கனு கேட்ருந்தீங்க. உங்களுக்காகதான் இந்த வீடியோ மக்களே!

ஆடி வந்தேன் ஆடி வந்தேன் – பாளையத்தம் படத்துல இந்தப் பாட்டு வரும். செம நாஸ்டால்ஜியா பாட்டு. மீனா இந்தப் பாட்டுல செமயா டான்ஸ் ஆடுவாங்க. பாட்டு, குரல், லிரிக்ஸ் எல்லாம் பட்டையைப் பிரிக்கும். இந்தப் பாட்டைக் கேக்கும்போது கண்ணை மூடி உட்கார்ந்தீங்கனு வைங்க, அப்பையே அம்மன் கோயில்ல இருக்குற ஃபீல் வரும். உடம்பு அப்படியே 360 டிகிரில நம்மள அறியாமல் சுத்திக்கிட்டு இருக்கும். செம வைப் ஏத்தும். “வேப்பஞ்சேல இடுப்பில் கட்டுற, வஞ்சியற்க்கு வாழ்வு தந்து, வாழ வைக்க என்னை விட்டா, வையத்திலே யாரடியம்மா” வரிலாம் வரும்போது செம வைப்ல இருப்போம்.

கண்ணபுர நாயகியே மாரியம்மா – எல்.ஆர்.ஈஸ்வரி பாடுனா வைப்க்கு சொல்லவா வேணும். அதெல்லாம் தானா நடக்கும். அப்படியொரு பாட்டுதான் கண்ணபுர நாயகியே. ஆடி மாசம் எங்கேயும் கேட்கும் பாட்டுல ஒண்ணுதான் இது. மேளம் மியூசிக் ஒண்ணு வரும் இடைல, சூப்பரா இருக்கும். அம்மன் பக்தர்கள்கிட்ட போய் உங்க ஃபேவரைட்டான அம்மன் பாட்டு எது?னு கேட்டுப் பாருங்க. அவங்க சொல்ற லிஸ்ட்ல இந்தப் பாட்டும் கண்டிப்பா இருக்கும்.

அங்க இடி முழங்குது – வார்த்தையே எவ்வளவு பவர்ஃபுல்லா இருக்குப் பாருங்க. கருப்பசாமி பத்துன பாட்டு தான் இது. உடுக்கை சவுண்டோட இந்தப் பாட்டு ஆரம்பிக்கும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வைப் ஏறும். அங்க இடி முழங்குதுனு ஆரம்பிக்கும்போது முரட்டு வைப் ஆகும். ஊர்ல பசங்கலாம் கோயில் கொடை சமயத்துல டெய்லி முதல்ல இந்தப் பாட்டை போட்டு ஆடிட்டுதான் அடுத்தப் பாட்டுக்குப் போவோம். அப்படி இருக்கும் பாட்டு. மலையா மலையழகா வரிலாம் வேறமாரி வேறமாரி இருக்கும்.

அழகர் வராரு – மதுரை மக்கள் ஃபேவரைட் இந்தப் பாட்டாதா இருக்கு. இதை எந்த ஊர்ல வைச்சு மதுரை மக்கள் கேட்டாலும் அவங்க ஊர் நியாபகம் வந்து அழகர் ஆத்துல இறங்குற சம்பவம்லாம் எல்லாம் டக்னு வந்துட்டுப் போகும். நம்மள வைப் பண்ண வைக்கதுக்குனே பிறந்த தேவாதான் இந்தப் பாட்டை பாடியிருப்பாரு. அப்புறம் வைப்-க்கு சொல்லவா வேணும். வைப் பண்ண பஞ்சமே இல்லாத பாட்டு இது.

ஹரிவராசனம் – சபரிமலையிலயே ஒலிக்கிற பாடல் இதுதான். யேசுதாஸ் பாடியிருப்பாரு. துள்ளல் வைப் இந்தப் பாட்டு தராது. ஆனால், அமைதியான வைப் கொடுக்கும். இந்தப் பாட்டை கேக்குற அந்த நிமிடங்கள் நம்மளை அறியாமலேயே கண்ணை மூடிட்டு வேற உலகத்துல இருப்போம். நிறைய பாடல்கள் அந்த மன அமைதியை கொடுக்காது. இந்த ஹரிவராசனம் பாட்டுக்கு அந்த சக்தி இருக்கு. சும்மா, ஒருநாள் இந்தப் பாட்டை கேட்டேன். கொஞ்சம் நேரத்துக்கு லூப்லயே போய்ட்டு இருந்துச்சு. யேசுதாஸ் வாய்ஸ்ல நம்மள மயக்குற அந்த மேஜிக் இருக்கு.

ஓம் மாகாளி – சூலம்னு ஒரு சீரியல் வந்துச்சு நியாபகம் இருக்கா? அந்த சீரியல்ல அனுராதா ஸ்ரீராம் பாடுன பாட்டுதான் ஓம் மாகாளி பாட்டு. ஞாயிற்றுக்கிழமை எப்படா இந்த சீரியல் போடுவாங்கனு காத்திருந்த 90’ஸ் கிட்ஸ் எல்லாருக்கும் தெரியும், இந்தப் பாட்டோட மகிமை.

காமாட்சி அம்மனுக்கு – கண்ணாத்தாள் படம். நம்ம கரண் நடிச்ச படம்ங்க. அந்தப் படத்துல வர்ற பாட்டுதான் இது. செம வைப் கிரியேட் பண்ணும் இந்தப் பாட்டு. இந்தப் பாட்டை வீடியோவோட கேளுங்க, அப்புறம் அதே ஸ்டெப் போட்டு நீங்களும் வைப் பண்ணிட்டு இருப்பீங்க.

சந்தண மல்லிகையில் – சாஃப்ட் வைப் பாட்டு இது. வடிவேலு நடிப்பு, கௌசல்யா சென்டிமென்ட், அம்மனா ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஏ.ராஜ்குமார் மியூசிக் வைப் பண்ண வேற என்ன வேணும். இன்னொரு பிளஸ் இந்தப் பாட்டுக்கு, வடிவேலுவோட குரல். ஒரு வாய் சோறு உனக்கு ஊட்டி விட்டேன்னு வரிகள் வரும்போது ப்பா, என்ன வைப்யானு தோணும். புல்லரிக்கும் அப்படி. செம பாட்டு.

பால் காவடி – நம்ம அட்மன் சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடிச்ச ‘எங்க வீட்டு வேலன்’ படத்துல இந்தப் பாட்டு வரும். சிம்புதான் காவடி தூக்கி டான்ஸ் ஆடியிருப்பாரு. டி.ஆர் தான் இந்தப் படத்துக்கு மியூசிக்கும் போட்ருப்பாரு. செமயா இருக்கும். பால் கவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி-னு பாட்டு கேட்டதும் லூப்ல நம்மள இந்த வரிகள் சுத்திக்கிட்டே இருக்கும்.

Also Read: வேறலெவல்… பொன்னியின் செல்வன் மீம்ஸ் கலெக்‌ஷன்!

பக்தி வைப் பாடல்கள் பத்தின லிஸ்ட்டை சொல்லிட்டே போகலாம். அதுக்கு என்ன எண்ட் இருக்கு? அதனால, இந்த லிஸ்ட்ல நான் மிஸ் பண்ண பாட்டை கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top