வேறலெவல்… பொன்னியின் செல்வன் மீம்ஸ் கலெக்‌ஷன்!

ஊரெங்கும் பொன்னியின் செல்வன் பற்றிய பேச்சுதான். சிறு வயதில் இருந்து கேட்டு வளர்ந்த கதையை திரைப்படமாக பார்த்த பூரிப்பில் நெகிழ்ந்து கலங்கியிருக்கியிருக்கிறது ஒரு க்ரூப். நாவலை வாசிக்காத இன்னொரு க்ருப் நல்லாத்தான் இருக்கு, ஆனா இது யாரு.. அது யாரு என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு பிராண்டிக்கொண்டிருக்கிறார்கள். எது எப்படியோ பொன்னியின் செல்வன் சக்கை ஹிட் அடித்துவிட்டது என்பது நிதர்சனம். பொதுவாக ஒரு படம் வந்தாலே மீம் கிரியேட்டர்கள் மௌஸைக் கையிலெடுத்து களமாடுவார்கள். இந்த முறை ஒரு ஸ்பெசல். வழக்கம்போல படத்தை ட்ரோல் செய்யாமல் படத்தில் இருக்கும் கேரக்டர்களை வைத்து நிறைய மீம்ஸ் குவிந்திருந்தது. வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன், பழுவேட்டரையர் என 9-ஆம் நூற்றாண்டு கதாபாத்திரங்களெல்லாம் 21-ஆம் நூற்றாண்டில் வச்சு செய்திருக்கிறார்கள். அவற்றில் நாம் ரசித்த குபீர் மீம்கள் இங்கே.

பொன்னியின் செல்வன் போஸ்டர்கள்
பொன்னியின் செல்வன் போஸ்டர்கள்
  • ‘உயிர் உங்களுடையது தேவி’ என்று காதல் ரசம் பொங்கும் வசனத்தைக் கொண்டு குந்தவையை உசார் பண்ணும் வந்தியத்தேவனுக்கு ஹார்ட்டீன்கள் பறந்தது. அதே நேரம் தென்னை மரத்துல ஒரு குத்து பனைமரத்துல ஒரு குத்து என பார்க்கும் பெண்களையெல்லாம் சகட்டுமேனிக்கு லவ் பண்ணும் அவருடைய ப்ளேபாய்த்தனத்தை வைத்து மீம்ஸ் கொட்டியது. அதுல ஒருத்தர் ‘என்னடா பெரிய வந்தியத்தேவன்… நான் அவன் இல்லை தெரியுமா?’ என்று கேட்டு பிரம்மன் வரைந்த ஓவியம் நீ என்று சினேகாவிடம் ஜீவன் ரொமான்ஸ் பண்ணும் வீடியோவைப் போட்டு டபுள் கொட்டு கொட்டியிருந்தார்.
  • நந்தினியை மறக்க போர் புரிந்து சுற்றிக்கொண்டிருக்கும் ஆதித்த கரிகாலன் ஹெவியாக தாக்கப்பட்டார். “ஏன்டா உன் ஆளு உன்னைய விட்டுட்டு போனதுக்கு எங்களை ஏன்டா போட்டு பொளக்குற?” என்று எதிரி நாட்டு மன்னர்கள் எரிச்சலுடன் கேட்பது போல நிறைய மீம்கள் வந்திருந்தது.

Also Read: பொன்னியின் செல்வன் கதை நாயகர்கள் – சமுத்திரகுமாரி `பூங்குழலி’

  • அடுத்த அட்டாக் பெரிய பழுவேட்டையருக்கு. வெளியில் ராஜநாகமாக சீறுவதும் நந்தினியைப் பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்குவதையும் எக்குத்தப்பாக கலாய்த்துத் தள்ளியிருந்தார்கள். குறிப்பாக உழைப்பாளி படத்தில் ‘கிழவன்’ வேஷத்தில் இருக்கும் ரஜினி கவுண்டமணியிடம் சொல்லும் குபீர் வசனத்தை பெரிய பழுவேட்டையர் வந்தியத்தேவனிடம் சொல்வது போல மாற்றி ரவுசு காட்டினார்கள்.
  • அப்பா சுந்தர சோழராக பிரகாஷ்ராஜூம், மகன் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்திருக்கிறார்கள். இதே அப்பா – மகன் கதாபாத்திரத்தில் ஏற்கனவே இந்த காம்போ சில படங்களில் நடித்திருக்க அதையும் இதையும் ஒப்பிட்டு மீம்ஸ் தெறித்தது. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் அப்பா சொல் தட்டாத மகனாக ‘இப்போகூட என் கை உங்க கைக்குள்ளதான்ப்பா இருக்கு’ அருள் மொழி கதறல் மொழியில் சொல்வது செம்ம கனெக்சன்.
  • ‘என்னடா மீன் டாலர் போட்டிருக்க நீ பாண்டியனா?’ ‘யோவ் நான் மீன ராசியா?’ என்று பாண்டியர் சோழர் பஞ்சாயத்தும் போய்க்கொண்டிருந்தது. இது இல்லாமல் வெற்றிக்களிப்பில் நடனமாடும் மணிரத்னம், ரஹ்மான் என்று வீடியோ எடிட்டிங்கில் பட்டையைக் கிளப்பியிருந்தார்கள். இதற்கு நடுவில் ‘என்ன இருந்தாலும் பாகுபலி மாதிரி வராதுங்க.. இதையே ராஜமௌலி எடுத்திருந்தா எப்படியிருக்கும் தெரியுமா?’ என்று சில அங்கலாய்ப்புகளும் எட்டிப்பார்க்க இதோ இப்படி இருக்கும் என ஆதித்த கரிகாலன் யானையைத் தூக்கி ரங்கராட்டினம் சுற்றுவது போல கிராஃபிக்ஸ் செய்து மெர்சலாக்கினார்கள்.

யப்பா கிரியேட்டர்களா நிஜமாவே கலக்கிட்டீங்கயா!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top