வெளிநாட்டில் படிக்க ஆசைப்படுறீங்களா… இந்த மோசடிகளில் சிக்கிக்காதீங்க!

வெளிநாட்டில் படிக்க விண்ணப்பிக்கும்போது, எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

வெளிநாட்டில் படிப்பு

வெளிநாட்டில் படிப்பது எத்தனையோ மாணவர்களின் கனவாகவே இருக்கும். மிடில் கிளாஸ் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களும் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இதில் முதலீடாகச் செய்வார்கள். வீடு வாங்குவதும் மிடில் கிளாஸ் மக்களின் பெரிய முதலீடுதான். ஆனால், சில நேரங்களில் இப்படியான வெளிநாட்டில் படிப்பு என்பது வீடு வாங்குவதைவிட மிகப்பெரிய கனவாக சிலருக்கு இருக்கும். வெளிநாடுகளில் படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் குடும்பத்தில் இருந்து அப்படி படிக்கும் முதல் நபராக இருப்பார்கள். இதனால், அதற்கான நடைமுறைகள் என்னென்ன, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படுவதற்கான வழிமுறைகள் என பல விஷயங்கள் குறித்து அவர்களுக்கு சரியான புரிதல் இல்லாமல் இருக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.

வெளிநாட்டில் படிப்பு
வெளிநாட்டில் படிப்பு

வெளிநாட்டில் படிக்க விண்ணப்பிக்கும்போது கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

நடைமுறையைப் புரிந்துகொள்ளுதல்

முன்னேறிய நாடுகளில் இருக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அட்மிஷன் நடைமுறை என்பது இந்தியாவில் இருப்பதை விட வித்தியாசமானதாக இருக்கும். இந்தியாவில், ஒரே ஒரு நுழைவுத் தேர்வையோ அல்லது மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு நடக்கும். அதேநேரம், வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், கடந்த சில ஆண்டுகளில் உங்களின் கல்விசார்ந்த செயல்பாடுகள், விளையாட்டு உள்ளிட்ட பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகள், ஆய்வுகள் மீதான ஈடுபாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே, அட்மிஷன் முடிவு செய்யப்படும். அதிக பணம் கட்டினால், அட்மிஷன் புராசஸில் நீங்கள் நினைக்கும் ஸ்கோரை வாங்கி விடலாம் என்று ஒரு கும்பல் ஆசைகாட்டும். அந்த மாதிரியான மோசடிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். அட்மிஷன் முடிந்து குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் நீங்கள் சேர்ந்தபிறகு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், உங்களின் அட்மிஷன் ரத்து செய்யப்பட்டு, உடனடியாக நீங்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வெளிநாட்டில் படிப்பு
வெளிநாட்டில் படிப்பு

முகவர் Vs ஆலோசகர்

வெளிநாட்டில் படிக்க நீங்கள் முகவர் அல்லது ஆலோசகர் ஒருவரின் உதவியை நாடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள், பாட்னர்ஷிப் வைத்துக்கொள்ளாத பல்கலைக்கழகங்களில் சேர நீங்கள் நினைத்தால், அதை அனுமதிக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை அனுமதிக்கவில்லை என்றால், அப்படியான் ஏஜெண்டுகளிடம் இருந்து விலகி இருப்பது நலம். இது அவர்களின் உண்மைத் தன்மையை சோதிக்க சிறந்த வழி.

நிதி ஆவணங்களில் மோசடி

வெளிநாடுகளில் மேற்படிப்பை மேற்கொள்வதற்கு ஒரு பெரிய தொகையை நீங்கள் செலவழிக்க வேண்டி வரும். அதற்காக, நிதி தொடர்பான சில ஆவணங்களையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டி வரும். அந்த மாதிரியான ஆவணங்களை, தேவைக்கேற்றபடி மாற்றிக்கொள்ளலாம்; நாங்கள் உங்களுக்கு அட்மிஷன் வாங்கித் தருகிறோம் என்று சொல்பவர்களிடம் கவனமாக இருக்கள் மக்களே. உங்கள் படிப்பை முழுமையாக முடிக்கும் அளவுக்கு பொருளாதாரம் உங்களிடம் இருக்கிறதா என்பதை சோதிக்கவே, நிதி ஆவணங்கள் உங்களிடம் கேட்கப்படும். ஒருவேளை அதில் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், ஆயுள் முழுவதும் உங்களுக்குத் தடை விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

வெளிநாட்டில் படிப்பு
வெளிநாட்டில் படிப்பு

விசா மோசடி

மாணவர்களுக்கு வெளிநாடுகளில் படிப்பதற்கான விசாவை நாங்கள் ஈஸியா எடுத்துக் கொடுத்து விடுவோம் என சில ஏஜெண்டுகள் வாக்குறுதி கொடுப்பார்கள். அப்படியான பொய்யான வாக்குறுதிகளை நம்பிவிட வேண்டாம். விசா பெறுவதற்கான நடைமுறைகள், விதிகள் ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும். விசா பெறுவதில் அந்த விதிகள் கட்டாயமாகக் கடைபிடிக்கப்படும் என்பதால், அதையும் மீறி Influence மூலம் ஒருவரால் விசாவை வாங்கிக் கொடுக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top