சத்யபாமா பல்கலைக்கழகம்

எந்த படிப்புகளுக்கு அதிக வேலைவாய்ப்பு… ஆண்டுக்கு 53 லட்சம் சம்பளம்..!- வழிகாட்டும் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக கேம்பஸ் பிளேஸ்மெண்ட்

காலேஜ் படிப்பைப் பொறுத்தவரைக்கும் ஃபைனல் இயர்ல மாணவர்களுக்கு பிளேஸ்மெண்ட் ரொம்பவே முக்கியம்னு சொல்வாங்க. இன்னிக்கு இருக்க போட்டியான சூழல்ல அவங்க படிச்சு முடிச்சு வெளில வரும்போதே ஒரு வேலையோட வர்றது, அவங்களோட எதிர்காலத்துக்கும் சரி; கரியருக்கும் சரி மிகப்பெரிய அங்கீகாரமாவும் வளர்ச்சிக்கு அடிப்படையாவும் இருக்கும். இதனாலதான் பிளேஸ்மெண்ட்-க்கு முக்கியத்துவம் கொடுக்குற காலேஜை பெரும்பாலான பெற்றோர்கள் தேர்வு பண்றாங்க.


நல்ல கல்லூரி அல்லது பல்கலைகழகங்களுக்கு அடையாளமே, அங்க நடக்குற ப்ளேஸ்மெண்ட் தேர்வுகளுக்கு வரும் நிறுவனங்கள் கொடுக்கிற வேலைவாய்ப்பு மற்றும் சம்பளம் உள்ளிட்ட பல பலன்களின் அளவுகோல்தான். எதிர்காலத்துக்கேற்ற வேலைவாய்ப்பு, பாதுகாப்பான பணிச் சூழல்னு பல அளவுகோல்கள் கேம்பஸ் பிளேஸ்மெண்ட்லதான் நிச்சயமாகும்.

அப்படியான பிளேஸ்மெண்ட்ல ஒவ்வொரு வருசமும் முத்திரை பதிக்கும் சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இந்த வருசம் சத்யபாமா பிளேஸ்மெண்ட்ல என்னலாம் முத்திரை பதிச்சிருக்காங்கனு விசாரிச்சோம். அதோட தொகுப்பு இங்கே…

சத்யபாமா பல்கலைக்கழகம்
சத்யபாமா பல்கலைக்கழகம்

சத்யபாமா பல்கலைக்கழகத்துல படிச்சுட்டு வர்ற இறுதியாண்டு மாணவர்களில் வேலைவாய்ப்புக்குனு பதிவு பண்ணவங்கள்ல கிட்டத்தட்ட 91.8% மாணவர்களுக்கு வேலை கிடைச்சிருக்கு.  HCL, Capgemini, TCS, Mindtree, PWC ஆகிய நிறுவனங்களுடன் சத்யபாமா மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 300 மாணவர்களுக்கு பணி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்துகொண்ட 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சார்பில் IT, Software development, Logistics, Consulting, Financial Management, Processing, Sales and Promotion-னு பல துறைகள்லயும் மாணவர்களை வேலைக்கு எடுத்திருக்காங்க. இந்த துறைகளில்தான் இப்போ வேலைவாய்ப்பு அதிகமா இருக்கு. இந்த கேம்பஸ் இண்டர்வியூவில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 53 லட்சம் ஊதியத்தில் 6 பேர் தேர்வாகியுள்ளனர். மேலும் சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, அயர்லாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் மேற்படிப்பைத் தொடங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சத்யபாமா பல்கலைக்கழகம்

கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன், துணை தலைவர்கள் அருள் செல்வன், மரிய பெர்னதெத் தமிழரசி, மரிய கேத்ரின் ஜெயப்ரியா ஆகியோர் கலந்துகொண்டு கிட்டதட்ட 2823 மாணவர்களுக்கு பிளேஸ்மெண்ட் ஆர்டர்களை வழங்கியிருக்கிறார்கள்.,

மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top