லவ் புரோபோசல்கள்

தமிழ் சினிமாவில் வசீகரித்த லவ் புரபோசல் சீன்கள்!

லவ் புரபோசல் | தமிழர்கள் எப்படி காதலை சொல்றாங்கன்றதை நிறைய தமிழ்ப் படங்கள் பதிவு செய்திருக்கிறது. அதேபோல், எப்படி காதலை வெளிப்படுத்தணும்னு தமிழ் சினிமாவும் சொல்லிக் கொடுத்திருக்கு. அந்த வகையில், க்யூட்டான, வெயிட்டான, மிரட்டலான, மெச்சூர்டான, வித்தியாசமான ல்வ ப்ரொப்போசல் காட்சிகளை இந்த வீடியோ ஸ்டோரியில் பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் லவ் புரபோசல் பண்ற காட்சி என்றாலே நமக்கு டிஃபால்டாக முதலில் நினைவுக்கு வருவது மணிரத்னம் படங்கள்தான். இதுக்கு முக்கியமான காரணம், அந்தக் காட்சிகள் அவ்வளவு வசீகரத்தன்மையுடன் இருக்கும். இயல்பு வாழ்க்கையில் எளிதில் சாத்தியமில்லாத ஒன்றை நம்பும்படி காட்சிப்படுத்திக் காட்டுவதுதான் சினிமாவின் தன்மைகளில் ஒன்று. அதை ரொமான்ஸ் வகையில் நடைமுறைப்படுத்தி அசத்தியவர்தான் மணிரத்னம். சாம்பிளுக்கு இங்கே ரெண்டு காட்சிகளை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

ஒன்று. 1986-ல் வெளிவந்த மெளன ராகம். அந்தப் படத்தில் ரேவதிக்கு கார்த்திக் ப்ரொப்போஸ் பண்ற காட்சி மிகவும் அதகளமாக இருக்கும். லைப்ரரில உட்கார்ந்து ‘ஐ லவ் யூ’ சொல்வார் கார்த்திக். அதுக்கு கடுப்போட ‘ஒண்ணு பண்ணு… ஊரைக் கூட்டி மைக் போட்டு எல்லார் முன்னாடியும் சொல்லு’ன்னு ரேவதி சொல்வாங்க. உடனே கார்த்திக், பிரின்சிபல் ரூமுக்கு போய் மைக்ல சொல்லி மிரள வைப்பார்.

அது அப்போவே வேற லெவல்னா, அப்படியா ஃபாஸ்ட் ஃபார்வர்டு செஞ்சு 2000-க்கு வந்தோம்னா ‘அலைபாயுதே’ல அடுத்த லெவல். அந்தப் படத்தோட ப்ரொப்போஸ் பண்ற சீன் இன்று வரை செம்ம ஹிட். ‘சக்தி… நான் உன்னை விரும்பலை. உன் மேல ஆசைப்படலை. நீ அழகா இருக்கேன்னு நினைக்கலை. ஆனா, இதெலலம் நடந்துருமோன்னு பயமா இருக்கு’ன்னு ஷாலினிகிட்ட மாதவன் சொல்லும்போது அப்போ தியேட்டர்ல ஆர்ப்பரிப்பு செம்மயா இருக்கும். அப்படியே 15 வருஷம் தாண்டி 2015-க்கு வந்தா ‘ஓகே கணிமணி’. வழக்கமா படத்தோட ஆரம்பத்துலதான் ப்ரோப்போசல் காட்சிகள் இருக்கும். ஆனா, இந்தப் படத்துல ரொம்ப இன்டென்சான இறுதிகாட்சில தான் இருக்கும். பவானி ஆன்ட்டியை தேடும்போது கார்ல இந்த சீன் வரும். ரொம்ப மெச்சூர்டான ப்ரோபசல் அது.

மணிரத்னத்துக்கு அப்புறம் ப்ரோப்போசல் சீன் ஸ்பெஷலிஸ்ட்னா, அது கெளதம் வாசுதேவ் மேனன்தான். அவரோட படங்கள்ல ப்ரொப்போசல் சீன்ஸ்தான் ரொம்பவே ஹைலைட்டானதா இருக்கும். இப்ப கூட யூடியூஃப், இன்ஸ்டால ப்ரொப்போசல் சீன்ஸ் ரீல்ஸ் அதிகமா வைரல் ஆகுறது இவரோட சீன்ஸ்தான்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், வாரணம் ஆயிரம் படத்தில் பார்த்த உடனே ப்ரோப்பஸ் பண்ற சீன் சிறப்பா இருக்கும். கெளதம் வைக்கிற ப்ரோப்போசல் சீன்ஸோட ஸ்பெஷலாட்டி என்னென்னா… அவர் படத்துல முதன்மைக் கேரக்டர்கள் ப்ரொப்பஸ் பண்ணும்போது, அவங்க யார்கிட்ட ப்ரொப்போஸ் பண்றாங்களோ, அவங்களுக்கு வரக் கூடிய ரியாக்‌ஷன்ஸ் அப்படியே ஆடியன்ஸான நமக்கும் வரும். அதான் ஸ்பெஷல். ‘வாரணம் ஆயிரம்’ படத்துலயும் அப்படித்தான்.

அதுக்கும் முன்னாடியே ‘காக்க காக்க’ படத்துல கெளதம் வெச்ச சீன் செம்ம மாஸ் அண்ட் க்ளாஸ். ரசிகர்கள் எல்லாரும் ஜோதிகா கிட்ட சூர்யாதான் லவ்வ முதல்ல சொல்வாருன்னு எதிர்பார்த்துட்டு இருக்குறப்ப, “நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கணும். உங்க கூட என் வாழ்க்கையை வாழணும். உங்க கூட நான் இருக்கணும்’-னு ஜோதிகா சொல்லும்போது சூர்யா மாதிரியே நாமளும் பிரமிச்சி நிப்போம்.

பொதுவா, பெண்கள் ப்ரொப்போஸ் பண்ற காட்சிகள் வைக்கிறது தமிழ் சினிமால ரொம்பவே கம்மிதான். அப்படி வெச்சாலும் அது ஒரு மாதிரி காமெடியாதான் காட்டுவாங்க. அந்த வகையில பார்க்கும்போது ‘காக்க காக்க’ சீன் செம்ம வெயிட்டானது. கெளதம் படங்களின் ப்ரோப்போசல் சீன்களுக்காகவே தனி வீடியோ ஸ்டோரி பண்ணலாம். அவ்ளோ இருக்கு பட்டியல். குறிப்பாக, இவரோட பெண் கதாபாத்திரங்கள் லைவ்வை சொல்ல அழகே தனிதான். மெச்சூர்டான ஆண் கதாபாத்திரங்கள் தடாலடியா – டைரக்டா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றதும் க்யூட் மிரட்டலா இருக்கும். இதுக்கு ‘வேட்டையாடு விளையாடு’, ‘உன்னை அறிந்தால்’ படங்களைச் சொல்லலாம்.

இதெல்லாம் சிட்டி பேஸ்டு படங்கள். ரத்தமும் சதையுமா மட்டும் இல்லாம கவித்துவமாவும் காதலைச் சொல்றதுன்னுதான் கிராமத்துப் படங்கள்லதான். கிராமத்துப் படங்கள்ல வர்ற ப்ரோப்போசல் காட்சிகள் தமிழ்ல அவ்ளோ க்யூட்டா இருக்கும். அதுக்கு மிகச் சிறந்த உதாரணம் ‘பருத்திவீரன்’. கார்த்தி சொல்ற அந்தக் கவிதை, கார்த்தி நெஞ்சுல இருக்குற முத்தழகைப் பார்த்துட்டு பண்ற ப்ரியா மணி ரியாக்‌ஷன்ஸ், அப்போ வரக் கூடிய யுவன் பேக்ரவுண்ட்… இப்படி எல்லாமே வாவ் சொல்ல வைக்கும்.

அப்படியே ஸ்டார்ஸ் பக்கம் ஒதுங்கினா, விஜய்யோட லவ் புரபோசல் காட்சிகளை லிஸ்ட் பண்ண ஆரம்பிச்சா நாலைஞ்சு வீடியோ ஸ்டோரீஸ் பண்ணலாம். என்னதான் காதலுக்கு மரியாதை, லவ் டுடேன்னு கவித்துமா காதலை சொல்ற காட்சிகள் நிறைய இருந்தாலும் ‘திருமலை’ல ஜோதிகா கிட்ட தன்னோட பயோடேட்டாவை அடுக்கிவெச்சு லவ் ப்ரோப்போஸ் பண்றதுதான் ரொம்ப ரேர் பீஸ் ரகம்.

ஆசை தொடங்கி முகவரி, காதல் மன்னன், அமர்க்களம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்னு எத்தனையோ படங்களை அஜித்துக்கு இருக்கு. ஆனாலும், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்துல சிம்ரன்கிட்ட அஜித் ப்ரொப்போஸ் பண்ற சீன்தான் அல்டிமேட்னு சொல்லலாம். அந்த சீனே தனி ஸ்டோரியோட செம்மயா இருக்கும்.

விக்ரமோட கம்பேக்குக்கு அடித்தளம் அமைச்சதே ஒரு ப்ரொப்போசல் சீன்தான். யெஸ்… சேது படத்துல விக்ரம் காதலை சொல்ற அந்த நீளமான சீன் ரொம்பவே வயலன்ட்டா ஸ்டார்ட்டாகி பொயட்டிக்கா முடியும். ரியல் லைஃப்ல அப்படி பிஹேவ் பண்ணினா எப்படி இருக்கும்னு எல்லாம வில்லங்கமா யோசிக்காமல், பாலா படத்தோட ஹீரோன்ற ஆஸ்பக்ட்ல மட்டும் இப்போ அந்த சீனை பார்க்கத் தோணுது.

தமிழ் ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமான அனுபவங்களைத் தரக்கூடியது தனுஷ் படங்களில் வர்ற லவ் ப்ரொப்போசல் சீன்கள். இந்த விஷயத்துல நடுத்தர மக்களோட பிரதிநிதின்னே அவரைச் சொல்லலாம். அவரோட ப்ரோபசல் சீன்களிலேயே ரொம்ப ரொம்ப ஜாலியான – அதேநேரத்துல அதிகமா கொண்டாடப்பட்ட சீன்னா, அது ‘படிக்காதவன்’ படத்துல தமன்னா கிட்ட லவ்வை சொல்லிட்டு, திட்டு வாங்கி முடிக்கும்போது, ‘என்ன மாதிரி பசங்களை பார்த்தா பிடிக்காது; பாக்க பாக்கதான் பிடிக்கும்”னு சொல்றதுதான் அந்த சீனுக்கு செம்ம ரெஸ்பான்ஸ் கிடைக்க காரணம்.

சிம்புவை எடுத்துகிட்டா இப்ப வரைக்கும் கெளதம் காம்பினேஷன்ல சொன்ன லவ்தான் டாப்பு. அதுவும், ‘விடிவி’ல த்ரிஷாகிட்ட லவ்வ சொல்லும்போது பேசுற டயலாக் ரொம்ப க்ளீஷேதான்னாலும், ‘லவ் யூ ஜெஸ்ஸி’ன்னு சொல்லி ரசிகர்களையும் கரையவெச்சுடுவார் சிம்பு.

80ஸ், 2கே-க்கு இடைக்காலத்துலதான் தமிழ் சினிமாவுல நிறைய ரொமான்ட்டிக் படங்கள் வந்தன. அதுல தவிர்க்க முடியாதவை பிரபுதேவா நடித்த பல படங்கள். அதுல ஒரு படம்தான் ‘மின்சார கனவு’. அந்தப் படத்தோட கதையையும் காட்சிகளையும் முழுமையா உள்வாங்கிகிட்டே அந்த ஒரு காட்சியை பார்க்கும்போது செம்ம இம்பாக்ட் கொடுக்கும். யெஸ்… காஜோல், பிரபுதேவாவுக்கு ப்ரொப்போஸ் பண்ற சீன் அவ்ளோ அழகாவும் அழுத்தமாகவும் இருக்கும். அந்தப் ப்ரோப்பசலை ஏத்துகவும் முடியாம, தவிர்க்கவும் முடியாம பிரபுதேவா சிறப்பா எக்ஸ்பிரஷன் காட்டியிருப்பாரு.

இன்னும் இன்னும் டெப்தா நீங்க லவ் ப்ரொப்போசல் சீனைப் பார்க்க ஆசப்பட்டா அதுக்கு 70ஸ், 80ஸுக்குதான் டிராவல் பண்ணன்னும். அதுக்கு மிகச் சிறந்த உதாரணம்: ஜானி படத்துல ரஜினிக்கு ஸ்ரீதேவி ப்ரொப்போஸ் பண்ற அந்த 3 நிமிட காட்சிகள். ஸ்ரீதேவி ப்ரொப்போஸ் பண்றதுக்கும், அந்த ப்ரொப்போசலை ரஜினி அக்சப்ட் பண்றதுக்கும் இடையிலான அந்த மூன்று நிமிட காட்சிகள்… க்ளாஸிக்!!!

Also Read – முத்துப்பாண்டி – தனலட்சுமி காதலுக்கு வில்லனாக வந்த விஜய்.. மரணக் காதல் ப்ரோ!

எத்தனையோ இன்ட்ரஸ்டிங்கான லவ் புரபோசல்கள் காட்சிகளை நான் மிஸ் பண்ணியிருக்கலாம். அதையெல்லாம் மறக்காம கமெண்ட்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க. குறிப்பா, உங்களுக்குப் பிடிச்ச ப்ரொப்போசல் காட்சிகளை சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top