ஹாலிவுட் நடிகர்கள்

ஆக்‌ஷன்லாம் சும்மா தெறிக்கும்.. தமிழர்களின் ஃபேவரைட் ஹாலிவுட் நடிகர்கள்!

ஹாலிவுட் நடிகர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவங்களா இருந்தாலும், நம்ம தமிழ்நாட்டுல அவங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கு. விஜய், அஜித் மாதிரியான நம்மூர் நடிகர்களைக் கொண்டாடுற அளவுக்கு ஹாலிவுட் நடிகர் சிலரையும் நம்ம கோலிவுட் ரசிகர்கள் கொண்டாடிக்கிட்டு இருக்காங்க… அப்படி, தமிழர்கள் கொண்டாடுற முக்கியமான சில ஹாலிவுட் நடிகர்கள்லாம் யாரு, அவங்களோட ஃபெஸ்டான பெர்ஃபாமன்ஸ், மாஸான சீன்ஸ், ஆக்‌ஷன் அதகளம் இதையெல்லாம்தான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம். ஹாலிவுட் ஹீரோக்களா இல்லாம இருந்தாலும் இன்னும் சில பேருக்கு நம்மூர்ல எக்கச்சக்க ஃபேன்ஸ் இருக்காங்க.. அவங்களைப் பத்தியும் வீடியோவோட கடைசில சொல்றேன்.

ஜானி டெப்

ஜானி டெப்
ஜானி டெப்

ஃபைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் சீரிஸ் படங்களை இவர் இல்லாம நினைச்சே பார்க்க முடியாது. கேப்டன் ஜாக் ஸ்பாரோவுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மனசுல அசைக்க முடியாத இடமே இருக்குனு சொல்லலாம். இவரோட கேரக்டரே எப்படி இருக்கும்னு எப்பவுமே ஸ்டெடியா இல்லாம, பகடி பண்ணிட்டே கடந்துபோற அசால்ட் சேது நம்ம ஜாக் ஸ்பேரோ. அவரோட டிரெஸ்ஸிங், ஸ்டைலான அந்த முக்கோணத் தொப்பி உள்ளூர் மார்க்கெட் வரைக்கும் ஃபேமஸ்னா பார்த்துக்கோங்க. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் சீரிஸ் படங்கள்ல தலைவரோட என்ட்ரியே மாஸா இருக்கும். ஃபர்ஸ்ட் பார்ட்ல ஒரு படகோட உச்சில இருக்க மரத்தைப் பிடிச்சபடியே கரைக்கு வருவார். கரையில் அவர் கால் வைக்குறதுக்கும் படகு மூழ்குறதுக்கும் டைமிங் கரெக்டா இருக்கும். செகண்ட் பார்ட்ல கடல்ல மிதந்துட்டு இருக்க ஒரு பெட்டியை காக்கா ஒண்ணு கொத்தி உடைக்கப் பார்க்கும், அந்தக் காக்காவை சுட்டு வீழ்த்திட்டு, அதேபெட்டில இருக்க ஒரு மனித எலும்புக் கூடோட காலையே துடுப்பாக்கி தப்பிப்பார். மூணாவது பார்டுதான் அல்டிமேட், பைரேட் கேங் ஒரு தீவுல மாட்டுக்கிட்டு இருக்கப்ப, மணல்ல ஒரு கப்பல் டிராவல் பண்ணி வரும். பார்த்தா அங்க இருக்க நண்டுகளையே பயன்படுத்தி கப்பலை கடல்ல சேர்ப்பார். இப்படி ஒவ்வொரு படத்துலையும் அவரோட என்ட்ரியிலேயே மாஸ் காட்டியிருப்பாங்க.

வில் ஸ்மித்

வில் ஸ்மித்
வில் ஸ்மித்

ஹாலிவுட்லயே கொஞ்சம் வித்தியாசமான நடிகர்னு இவரைச் சொல்லலாம். மியூஸிக்கல் பேக்ரவுண்ட்ல இருந்து சினிமாவுல நடிகரா உருவெடுத்த இவரை பேட் பாய்ஸ் சீரிஸ் படங்கள், ஹேன்காக்னு ஆக்‌ஷனும் பண்ணுவார். பர்ஷுயூட் ஆஃப் தி ஹேப்பினஸ்னு ஒரு தந்தையும் உணர்வுகளையும் நம்மளுக்குக் கடத்துவார். ஆல் ஏரியாவுலயும் அய்யா கில்லி. இவரோட ஹேர் ஸ்டைல் 90ஸ், மில்லினியத்தோட தொடக்கத்துல டிரெண்ட் செட்டரா இருந்துச்சு. அந்த அளவுக்கு 90ஸ் கிட்ஸ் நிறைய பேரு வில் ஸ்மித்த வெறித்தனமா ஃபாலோ பண்ணாங்க. இவரோட பர்ஷூயூட் ஆஃப் தி ஹேப்பினஸ் படம் பெர்சனலாவும் ஒரு கனெக்ட் இருக்கும். அதுல மகனோட சேர்ந்து நடிச்சிருப்பாரு.. இன்டர்வியூ சீன்ல மிரட்டியிருப்பார். எவ்வளவு தேடியும் வேலை கிடைக்காத நிலையில், கடைசியா வேலை கிடைச்சபிறகு அந்த உணர்ச்சியை அவ்வளவு அழகா வெளிப்படுத்தியிருப்பார். `என்னோட வாழ்க்கைல இந்தப் பார்ட்டுக்குப் பேரு ஹேப்பினஸ்’னு பின்னணில வாய்ஸ் ஓட கம்பெனில இருந்து இறங்கி கூட்டத்துக்குள்ள வந்த பிறகு ஒரு நிமிஷத்துல அவ்ளோ எமோஷன்ஸ் காட்டியிருப்பார்.  

ராபர்ட் டௌனி ஜூனியர் (அயர்ன் மேன்)

ராபர்ட் டௌனி ஜூனியர்
ராபர்ட் டௌனி ஜூனியர்

ஸ்டைலிஷ் ஹீரோ `அயர்ன் மேன்’ ராபர்ட் டௌனி ஜூனியர் இல்லாட்டி எப்படி… அவருக்கும் இங்க தனி ஃபேன் பேஸே இருக்கு. எம்.சி.யூவோட ஸ்டைலிஷான கேரக்டரா கிட்டத்த 11 வருஷங்கள் வலம்வந்த அயர்ன் மேன் கேரக்டர்கள், 2019ல வந்த அவெஞ்சர்ஸ் எண்டுகேம் படத்துல இறக்குற மாதிரி ஒரு சீன் வைச்சிருப்பாங்க. அந்தப் படம் ரிலீஸான சமயம் ஃபேஸ்புக், ட்விட்டர்னு சோசியல் மீடியா அயர்ன் மேன் ரசிகள் கொந்தளிச்சு, கொதிச்சுப் போனதைப் பார்க்க முடிஞ்சது. அவெஞ்சர் இன்ஃபினிட்டி வார்ல வில்லன் தானோஸோட தனியாளா இவர் மோதுன சீனெல்லாம் மாஸ் காட்டியிருப்பார். அவெஞ்சர்ஸ் எண்ட்கேமுக்கான லீடு கொடுக்கப்பட்டிருக்கும் அந்த சீனில் தானோஸோடு மோதி கடுமையான காயத்தோடு இருக்கும் அயர்ன் மேனை, அவர் கொல்ல நினைக்கையில் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், கிரீன் ஸ்டோனைக் கொடுத்து அயர்ன் மேனின் உயிரை தானோஸிடம் இருந்து காப்பாற்றுவார். அந்த சீன் அவெஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு எமோஷனலான ஒரு சீனாக இருக்கும். அதேபோல், அவெஞ்சர்ஸில் அயர்ன்மேனை மட்டுமே தானோஸ், அவருடைய ஒரிஜினல் பெயரான ஸ்டார்க் என்று கூறி அழைப்பார். இதையும் பதிவிட்டு அயர்ன் மேன் ரசிகர்கள் ஃபயர் விட்டுக்கொண்டிருந்தார்கள்.

மார்கன் ஃப்ரீமன்

ஹாலிவுட் நடிகர்கள் - மோர்கன் ஃப்ரீமேன்
ஹாலிவுட் நடிகர்கள் – மோர்கன் ஃப்ரீமேன்

ஹாலிவுட்டோட மூத்த நடிகர்கள்ல ஒருத்தர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலா ஹாலிவுட்ல தனக்குனு ஒரு முத்திரை பதிச்சுட்டு வர்றவர். கஷ்டப்படுற சூழ்நிலைகள்ல ஒரு சீனியர், தன்னோட எக்ஸ்பீரியன்ஸ் வைச்சு உங்களுக்கு வழிகாட்டுனா எப்படி இருக்கும். அப்படியான ஒரு மெண்டார் ரோல்னு எடுத்துக்கிட்டா இவரை அடிச்சுக்க ஆளே கிடையாதுனே சொல்லலாம். ஷஷாங் ரிடெம்ஷன்ல மோர்கன் ஃப்ரீமன் பல சீன்கள்ல நம்ம மிரட்டியிருப்பார். குறிப்பா சொல்லணும்னா 40 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையாகும் ரெட், ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்ப்பார். அங்கு நிகழும் சம்பவங்கள் வெளி உலகத்தின் மீதான பயத்தை அவருக்கு ஏற்படுத்தும். ஜெயிலிலேயே 40 வருடங்களைக் கழித்து விட்டு வந்த ரெட், அந்த கட்டுப்பாடான சூழ்நிலையிலேயே வாழ்ந்து பழகிய நிலையில், ஒவ்வொரு முறையும் ரெஸ்ட் ரூம் போகும்போது மேனேஜரிடம் அனுமதி கேட்பார். ஒரு முறை மேனேஜர் சொல்லும் வார்த்தைகள் அவரை ரொம்பவே காயப்படுத்திவிடும், முதிர்ந்த வயதில் தனியாகப் பயத்தோடு வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பதை அப்படியே காட்டியிருப்பார்.

லியானார்டோ டிகாப்ரியோ

ஹாலிவுட் நடிகர்கள் - லியானார்டோ டிகாப்ரியோ
ஹாலிவுட் நடிகர்கள் – லியானார்டோ டிகாப்ரியோ

நம்ம டைட்டானிக் அழகு `ஜாக்’கை சேர்க்கலாட்டி இந்த லிஸ்டே முழுமையடையாதுன்னுதான் சொல்லணும். பின்னாட்களில் டிபார்டர், டிஜாங்கோ அன்செயின்ட், கிறிஸ்டோபர் நோலனோட இன்செப்ஷன், வொஃல்ப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்னு கேரக்டர்கள்லயும் வெரைட்டி காட்டிய டிகாப்ரியோ இன்னிக்கும் டைட்டானிக் ஜாக்தான். டைட்டானிக் படத்தை விட DJANGO UNCHAINED-ல மாஸ் காட்டியிருப்பார்னே சொல்லலாம். நிறவெறி ரத்தத்திலேயே ஊறிப்போன கால்வின் கேண்டிங்குற முதலாளி கேரக்டர்கள் கொடூர வில்லத்தனம் காட்டி நடிச்சிருப்பார். குறிப்பா தனது மனைவி ப்ரூம்ஹில்டாவை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கால்வினிடம் நண்பரான டாக்டர் King Schultz மூலமா விலைக்கு வாங்க வந்திருக்கும் சீனில், இருவருக்கும் முன்னரே அறிமுகம் இருக்கும் விஷயம் தெரியவரவே, அந்த இடத்தில் கோர முகத்தைக் காட்டி வில்லனாக மிரட்டியிருப்பார் டிகாப்ரியா. டின்னர் சீக்வென்ஸ் சீன்னு இப்பவும் அது ஃபேமஸான சீக்வென்ஸ்.

டேனியல் ரேட்கிளிஃப் (ஹாரிபாட்டர்)

ஹாலிவுட் நடிகர்கள் - டேனியல் ரேட்கிளிஃப்
ஹாலிவுட் நடிகர்கள் – டேனியல் ரேட்கிளிஃப்

எப்படிங்க அந்த முகத்தை மறக்க முடியும்… பெரிய விழிகள், உருண்டையான கண்ணாடியோடு சுட்டிப் பையன் செஞ்ச மாயாஜாலங்கள் ஹாரிபாட்டர் சீரிஸ் படங்கள் தமிழ்நாட்டுல பண்ண வசூல் அப்படி. எட்டு வயசு வரைக்குமே தன்னோட வரலாறு எதுவுமே இருக்க சூழல்ல, கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் ஹாரிபாட்டருக்குத் தெரியவரும்போது அவனோட புரடக்டர்ஸா இருந்த ஒவ்வொருத்தரா இறந்துட்டே வருவாங்க. ஒரு கட்டத்துல ஆரம்பத்துல இருந்து தன்னை வெறுக்குற மாதிரியே இருந்துட்டு வந்த புரஃபஸர் செவரஸ் ஸ்னேப்தான் தன்னோட புரடக்டரா இருந்து பல இடங்கள்ல காப்பாத்துனார்ங்குற உண்மை தெரியுற இடத்துல படத்தோட பிளாட்டே மாறும். அந்த இடம் டேனியல் ரேட்கிளிஃபோட ஹைமொண்டுனே சொல்லலாம்.

இந்த லிஸ்ட்ல கட்ட கடைசியா இன்னும் முக்கியமான சிலரைப் பத்தி சொல்லியே ஆகணும். இவங்க ஹாலிவுட் நடிகர்கள் இல்லைனாலும், தமிழ்நாட்டோட சேர்த்து உலக அளவில் இவங்க படங்களும் சரி, இவங்களும் சரி கலக்குனவங்க.

ஜாக்கி சான் – புரூஸ் லீ

ஜாக்கி சான் - புரூஸ் லீ
ஜாக்கி சான் – புரூஸ் லீ

ஃபைட்னா இப்படி இருக்கணும்யானு சொல்லவைச்சது ஜாக்கிசானோட சண்டைகள். காமெடியான டைமிங்கோட அடிவாங்கிக்கிட்டே அவர் அடிச்ச பல்டிகள் தமிழ் சினிமா ரசிகனோட ரசனைக்குத் தீனி போட்டதுன்னே சொல்லலாம். தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு இணையா அவரோட படங்கள் ஓடுன தியேட்டர்கள்லயும் கூட்டம் பெரிய அளவுல கூடுச்சு. ஜாக்கி சானோட பல படங்கள் இன்னிக்கும் தமிழ் ரசிகர்களோட ஃபேவரைட்தான். ரஷ் ஹவர், அரவுண்ட் த வேர்ல்டு இன் 80 டேஸ், போலீஸ் ஸ்டோரினு சொல்லிட்டே போகலாம். ஷாங்காய் நைட்ஸ் மிஷின் கன் ஃபைட், மிராக்கிள்ஸ் ரோப் ஃபேக்டரி பைட், ரஷ் ஹவர் சைனீஸ் மியூசியம் ஃபைட்னு எத்தனையோ சொல்லலாம். அதுல முக்கியமான Armour of God II – Operation Gondorல வர்ற பதுங்கு குழி சண்டையைச் சொல்லலாம். பொதுவா அந்த சுச்சுவேஷன்ல கைல கிடைக்குற எல்லா பொருட்களையும் கயிறு தொடங்கி பிரிட்ஜ், ஏணினு எது கிடைச்சாலும் அதை சண்டைல ஒரு பிராப்ர்ட்டியாவே பயன்படுத்துறது ஜாக்கியோட வழக்கம். அந்த வரிசைல இதுல அங்க இருக்கா எல்லா பொருட்களையும் பயன்படுத்தி வில்லன் கேங்கை துவம்சம் பண்ணுவாரு. கூடவே தன்னோட கிளாசிக் காமெடி டச்சோட…

Also Read – `வாய்ஸ்; ஹீரோயிஸம்.. வில்லத்தனம் எல்லாமும் இருக்கு! – நிழல்கள் ரவி பண்ண சம்பவங்கள்!

அவருக்கு முன்னாடி தன்னோட யுனீக்கான ஃபைட்ஸ் மூலமா கொண்டாடப்பட்ட நடிகர்தான் புரூஸ் லீ. அதிரடியான சவுண்டோட எதிராளியை துவம்சம் பண்ண புரூஸ் லீயும் நம்ம மக்கள் கொண்டாடுன நடிகர்கள்ல முக்கியமானவர். Enter the dragonல வர்ற கிளாஸ் ஃபைட், ஓகாரா ஃபைட், Game of death ஃபைட் சீன்ஸ்லாம் மாஸா இருக்கும். ஆனால் அதையெல்லாம் தாண்டி, Fist of Fury படத்துல வர்ற ஃபைட் சீக்வென்ஸை சூப்பரா கொரியோகிராஃபி பண்ணி எடுத்திருப்பாங்க. ஒரு மார்ஷியல் ஆர்ட் கிளப்ல இருக்க ஸ்டூடண்ட் 20-க்கும் மேற்பட்டோர வெறுங்கையாலயே சண்டை போட்டிருப்பார் லீ. சுத்துப்போட்டவங்களை கட்டம் கட்டி வெளுத்துவாங்குன அந்த ஃபைட் ரொம்பவே ஃபேமஸானது.

டேனியல் கிரெய்க் (ஜேம்ஸ் பாண்ட்)

டேனியல் கிரேக்
டேனியல் கிரேக்

இவரையும் நேரடி ஹாலிவுட் நடிகர்னு சொல்ல முடியாது. ஜேம்ஸ் பாண்ட் ஆக்சுவலி இங்கிலாந்து அரசோட உளவாளி கதாபாத்திரம். ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் படங்களோட மிகப்பெரிய மார்க்கெட் இந்தியா. அதுவும் குறிப்பா தமிழ்நாடுன்னே சொல்லலாம். பாண்ட்ங்குற பிராண்ட் நேம் சம்பாதிச்சிருக்க பேர் அது. சீன் கானரி தொடங்கி டேனியல் கிரெய்க் வரை நிறைய ஜேம்ஸ் பாண்ட்கள் இருந்தாலும், நம்ம ஆட்களோட ஃபேவரைட் அயர்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்ட பியர்ஸ் புரோஸ்னனும், இங்கிலாந்தைச் சேர்ந்த டேனியல் கிரெய்க்கும்தான். அதேமாதிரி டேனியல் கிரெய்க்கு இன்னொரு சம்பவமும் நடந்துச்சு, ஸ்பெக்டர் ரிலீஸப்ப கையில துப்பாக்கியோட நின்ன நம்ம பாண்டுக்கு பெரிய கடா மீசை வைச்சு, பட்டையைப் போட்டு ஒரு மீம் சுத்திட்டு இருந்துச்சு. அது ரொம்ப வைரலா போச்சு.

ஜேம்ஸ் பாண்ட் படங்கள் சேஸிங் சீனுக்கு ரொம்பவே ஃபேமஸ். ஆனால், அதையெல்லாம் தாண்டி கேசினோ ராயல் படத்துல கேசினோல வில்லன் Le Chiffre கூட விளையாடிட்டு இருக்கும்போது விஷம் கொடுக்கப்பட்ட பாண்ட், உயிர்பிழைச்சு மீண்டும் டேபிள்ல வந்து கெத்துகாட்டுற அந்த நிமிடங்கள் பரபரப்பா எடுத்திருப்பாங்க. கார்ல போய் கார்டியாக் அரெஸ்ட் ஆகுற சூழல்ல இருக்க பாண்டை ஹீரோயின் காப்பாத்திடுவாங்க.. மறுபடியும் டேபிள்ல வந்து கெத்தா உக்காந்து விளையாட ஆரம்பிக்குற சீன் மாஸா இருக்கும்.    

நேரம் கருதி இந்த லிஸ்டை இதோட முடிச்சுக்கிறோம்… லிஸ்ட்ல இருக்க நடிகர்கள்ல உங்களோட ஃபேவரைட் நடிகர் யாருன்னும்… இல்ல லிஸ்ட்ல விடுபட்ட நடிகர்கள் இருந்தாலும், அதையும் கமெண்ட்ல சொல்லுங்க.

1 thought on “ஆக்‌ஷன்லாம் சும்மா தெறிக்கும்.. தமிழர்களின் ஃபேவரைட் ஹாலிவுட் நடிகர்கள்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top