சும்மா ப்ரண்ட்ஸோட வாட்ஸ் ஆப் குரூப்ல, டேய் மச்சான் மறுபடியும் ஸ்கூல் படிச்சா எப்படி இருக்கும்’னு ஒருத்தன் கேட்டான்.. ஆள் ஆளுக்கு, அய்யோ நான் வரலை சாமி ..ஆள விடு சாமி’னு சொல்லிட்டு இருந்தாங்க.. எல்லாரும் பயந்துட்டு இருந்தப்போ ஒருத்தன் மட்டும், `நான் மறுபடியும் WWE கார்டு வெச்சு விளையாடுவே’னு மாஸா சொன்னான்.
இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறோம்னா பிரேக் டைம்லையோ.. டீச்சர் வராதப்போ கிளாஸ் ரூம்ல என்னனென்ன அராத்து பண்ணவோம்னு ஒரு லிஸ்ட் போடுவோம். அப்படி பள்ளி நாட்களில் கிளாஸ் ரூம்களில் நாம் விளையாடிய விளையாட்டுகள் பத்திதான் நாம பார்க்கப் போறோம்.
முதல்ல புக் வெச்சுட்டு படிச்சமோ இல்லையோ புக் கிரிக்கெட் ஆடுவோம்.. அதென்ன புக் கிரிக்கெட்.. என்ன மேட்டர்னா – `8 – 4- 6- 2 சூப்பரு சூப்பரு…அய்யோ அவுட்டுனு ஒரு டென்ஷன் வரும் பாருங்க.. கிரவுண்ல விளையாடுற விராட் கோலியைவிட நமக்கு தான் படபடனு இருக்கும்.

அடுத்தது.. அதே புக்கை வெச்சு இல்லைனா ஸ்லேட் இல்லாட்டி பரீட்சை அட்டைகளை வெச்சு ஆடுற கிரிக்கெட். பேப்பரைக் கிழிக்குறதுக்காகவே எக்ஸ்ட்ரா ஒரு ரஃப் நோட் இல்லாட்டி வீட்ல இருக்க பழைய நோட்டுகளைத் தூக்கிட்டு வருவோம். தாறுமாறா 6 பறக்கும். `நீ புடி .. நான் புடி’னு இங்குட்டும் அங்குட்டும் ஓடிட்டு இருப்போம். அது டீச்சர் மேல பட்டு முட்டி போட்ட சம்பவங்கள்லாம் நடந்துருக்கு.
பேனா சண்டை – அப்பா பேனா வாங்கிக்கொடுக்கும் போதே அது நல்லா எழுதுதானு பார்க்கிறதை விட, நல்லா ஹெவியா இருக்குனு பார்த்து வாங்குவோம் .. அப்போதான் இந்த pen fight la வின் பண்ணமுடியும்னு ஒரு நினைப்பு… பாஸ் இந்த பென் ஃபைட் ஆட சில டிப்ஸ் இருக்கு
1 கேரம் போர்ட் மாதிரி இருக்குற இந்த பென் ஃபைட் கேமுக்கு பென் நல்ல ஹெவியா இருக்கனும். யுனி பால் பென் இருந்தா வசதியா இருக்கும் – பென் மூடில மெட்டல் கிளிப் இருக்கனும் அப்போ தான் பென் கீழ விழாம Balance ஆகும்.

அப்பறம் பென்னுக்கு பதிலா சாக் பிஸ்லையும் விளையாடுவோம்.. ஒரு கட்டத்துல டீச்சர் டென்ஷன் ஆகி, கிளாஸ்ல இருக்க நல்ல பொறுப்பான பிள்ளையைப் பார்த்து, யாரெல்லான் பென் ஃபைட் விளையாடுறாங்களோ, அவங்க பேரை எல்லாம் போர்டு எழுத சொல்லிட்டாங்க.. அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் ஹிஸ்டரி. அந்த பென் கீழ விழுற சத்தம் இன்னும் கேட்டுட்டே இருக்குல?
மக்கா சோளத்த சாப்பிட்டு குப்ப தொட்டியில போடாம அதை பக்கத்து கிளாஸ் ரூம்ல தூக்கிப்போடணும்.. 2 ஊருக்கு நடுவுல வர வாய்க்கால் தகராறு மாதிரி சோளத்தை மாத்தி மாத்தி தூக்கிப் போட்டுப்பாங்க.. டீச்சர்வரும்போது யாரு கிட்ட சோளம் இருக்கோ அந்த கிளாஸ் அவுட்! இந்த கேம்ல சுவாரஸ்யம் என்னன்னா நம்ம பசங்க கொடுப்பாய்ங்க பாருங்க ஒரு பில்ட் அப்– என்னமோ கன்னிவெடிய தூக்கிப்போட்டா எவ்வளவு பரபரப்பு இருக்குமோ அப்படி இருப்பாங்க.. போன வேகத்துல திரும்ப வரும்.. யாரு மேல விழும்னு கணிக்கவே முடியாத கேம். குரூப்பா விளையாண்டாதான் நாம கிளாஸ் கெத்தைக் காட்ட முடியும்.
அடுத்தது Most Played Game எரி பந்து.. பேப்பர் பால், பிளாஸ்டிக் பால்னு எது கைல இருக்கோ, அதை வெச்சு விளையாட ஆரம்பிச்சுடுவோம். பார்க்க என்னவோ பேப்பர்தான், ஆனா ஃபோர்ஸா எரி விழுகும்போது வலிக்கும் பாருங்க… அய்யோ, அம்மானு சவுண்ட் எஃபெக்ட்லாம் வேற வரும். எந்த சைட்ல இருந்து வரும்னே தெரியாது. சும்மா தாறுமாறா வந்து முதுகைப் பதம் பார்க்கும். அப்புறம், தாத்தா குச்சி – மத்த குச்சிகளை அசைக்காம ஒரு குச்சிய மட்டும் தூக்குறதுக்குள்ள ஷப்பானு இருக்கும். இது கொஞ்சம் பொறுமையை சோதிக்குற ஒரு கேம்.

நம்மாளுகளுக்கு ஸ்கூல் டேஸ்ல WWE மேல இருந்த கிரேஸே வேற லெவல்ல இருக்கும். அதுவும் ஒவ்வொரு ஸ்டாரோட ரேங்கிங் தொடங்கி, அவங்களோட வெயிட் வரைக்குமான டீடெய்ல்ஸோட வர்ற கார்டுகளை வாங்கி கெத்து காட்டுவாங்க. அதுவும் கார்டு கேம்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு லெவல்ல Strategy பண்ணி மாஸ் கிளப்புவோம். நம்ம கிட்டதான் பிக் ஷோ இருக்காரே, வெயிட்டைச் சொல்லி எதிர்ல இருக்கவன் கார்டைப் புடுங்கிடலாம்னு காலரைத் தூக்கிவிட்டா, அங்க மார்க் ஹென்றியோட கார்டை வைச்சு கிலி கிளப்புவாங்க.. ஹென்றிகிட்ட தோத்துப் போற பிக்ஷோ கணக்கா, நம்ம கார்டை பறிகொடுத்துட வேண்டியதுதான். இதனால, ஆத்துல கால் வைக்குறப்ப ஆழம் பார்த்து கால் வைக்கணும்ன்ற மாதிரி, எதிர்ல இருக்கவன் ரியாக்ஷன் முதற்கொண்டு எல்லாத்தையும் கால்குலேட் பண்ணி கால் பண்ணணும் பாஸ்… ஏன்னா கார்டு ரொம்ப முக்கியம்ல!
இது இல்லாம திக் டேக் டோ – Name place Animal Things – Country Memory Games அவ்வளவு ஏன் ராஜா ராணி கூட விளையாடி இருக்கோம்.. இப்ப நான் மேல சொன்ன கேம்ஸ்தான் நாம அதிகமா விளையாடி இருக்கோம்.. இதுல ஏதாவது கேம்ஸ் நீங்களும் விளையாடியிருக்கீங்களா… இதைத் தவிர வேற கேம்ஸ் உங்களுக்குத் தெரியும்னாலும் கமெண்ட்ல சொல்லுங்க..!
Also Read – கே.ஜி.எஃப் ராக்கிக்கும் சீவலப்பேரி பாண்டிக்கும் 3 ஒற்றுமை, 1 வித்தியாசம்!





Muchas gracias. ?Como puedo iniciar sesion?
iwin – nền tảng game bài đổi thưởng uy tín, nơi bạn có thể thử vận may và tận hưởng nhiều tựa game hấp
kuwin sở hữu kho game đa dạng từ slot đến trò chơi bài đổi thưởng, mang đến cho bạn những giây phút giải trí tuyệt vời.