கம்ப்யூட்டர் கேம்களின் பொற்காலமாகக் கருதப்படும் காலத்தில் வளர்ந்த 90ஸ் கிட்ஸ்களின் பொழுதுகளை ரம்மியமாக்கிய 8 கேம்களைப் பற்றிதான் இந்த கட்டுரையில் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
Mario
90ஸ் கிட்ஸின் ஆதர்ச கேம்களில் முதன்மையானது Mario. ராணி Peaches-ஐக் காப்பாற்ற இத்தாலிய பிளம்பர் Mario, வழிகளில் இருக்கும் தடைகளை எல்லாம் தாண்டி முயற்சிப்பதன் அடிப்படையிலேயே இந்த கேம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த கேமுக்குக் கிடைத்த வரவேற்பால் இதன் சீக்வெல், ப்ரீக்வெல் என பல வெர்ஷன்கள் வெளியாகின.
Road Rash
பல 90ஸ் கிட்ஸ், தங்களின் முதல் மோட்டார் சைக்கிள் டிரைவிங் அனுபவத்தை Road Rash கேம் வழியாகவே பெற்றனர் என்று சொன்னால் மிகையாகாது. ரேஸில் வெல்ல நீங்கள் ஹைஸ்பீடில் பைக் டிரைவ் பண்ணால் மட்டும் போதாது; எதிராளியைத் தாக்கி ஓரங்கட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.
Aladdin
Nintendo கன்சோல் கேமிங்கில் புதிய சகாப்தத்தையே ஏற்படுத்த இந்த கேம் முக்கியமான காரணமாக அமைந்தது. லாஞ்சுக்குப் பிறகு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த கேம், பல்வேறு அவார்டுகளை வென்று குவித்தது. உலக அளவில் 10 மில்லியன் காப்பிகள் விற்பனையானதாக ஒரு ரெக்கார்டையும் படைத்திருக்கிறது.
Dave
1998-ல் வெளியான இந்த கேம் 90ஸ் கிட்ஸோட ஃபேவரிட் கேம்களில் ஒன்று. எரியும் தீயில் மாட்டிக்கொள்ளாமலும், டிராகன்களிடமிருந்து எஸ்கேப்பாகியும் கோல்டு கப்களை சேகரிப்பதுதான் Dangerous Dave கேமோட கான்செப்ட்.
Contra
இப்போது பாப்புலாராக இருக்கும் பப்ஜி கேமிங் ஐடியாவுக்கெல்லாம் முன்னோடியே நம்ம Contra கேமோட ஐடியாதான். மிக மோசமான டெரரிஸ்ட் குரூப்பான ரெட் ஃபால்கான்ஸிடமிருந்து உலகத்தைக் காப்பாற்றுவதுதான் கேமின் நோக்கமே. உங்க டீமோட இணைஞ்சு ரன்னிங் – கன்னிங்கோட எதிராளியைத் துவம்சம் பண்ணணும். Nintendo கேமிங் கன்சோல்ல பல ஆண்டுகள் ஆட்சிபுரிஞ்ச கேம் இது.
Adventure Island
Aladdin மாதிரியே ஆபத்தில் சிக்கியிருக்க ராணியைக் காப்பத்துறதுதான் இதோட கான்செப்டும். ஆனால், கதை நடக்குற இடம் ஒரு அபாயகரமான தீவு. நத்தை முதல் பல உயிரினங்களை சமாளிச்சு கடைசில ராணியை மீட்டுட்டா நீங்கதான் வின்னர்.
Street Fighter
WWF மாதிரியான சண்டைதான் இந்த கேமோட அடிப்படை. அர்கேடு டைப் கேமான இதுல மார்ஷியல் ஆர்டிஸ்ட் Ryu-தான் உங்க ஹீரோ. உலக லெவல்ல நடக்குற மார்ஷியல் ஆர்ட்ஸ் டோர்னமெண்ட்ல அவர் ஒரு போட்டியாளர். 5 நாடுகளைச் சேர்ந்த 10 போட்டியாளர்களை சமாளிச்சு வெற்றிவாகை சூடணும். ஹீரோ Ryu – Ken இப்படி இரண்டு பேர் இடையிலான கற்பனையான ரைவல்ரியும் போட்டியை சுவாரஸ்யமாக்கப் பயன்பட்டுச்சு.
Duck Hunt
உங்களோட நாய்க்கு உணவு கொடுக்குறதுக்காக வாத்துகளை சுட்டு வீழ்த்துற கான்செப்ட்தான் இந்த கேம். திரையில் பறக்கும் வாத்துகளை சுட உங்களுக்கு 3 ஷாட்கள் கொடுக்கப்படும். நீங்கள் சுட்டுவீழ்த்துற வாத்துகளோட எண்ணிக்கையைப் பொறுத்து பாயிண்ட்ஸும் அடுத்த லெவலுக்கான எண்ட்ரியும் கிடைக்கும்.
Also Read – லவ் ஃபெயிலியரையும் ஓவர்கம் பண்ணலாம் பாஸ்… இதை டிரை பண்ணிப் பாருங்க!
Very interesting information!Perfect just what I was searching for!Raise blog range