child

`குழந்தைகளுக்கு ஏன் டூ மச் வொர்க்?’ – 6 வயது சிறுமி பிரதமரிடம் புகார்; ஆளுநரின் ரெஸ்பான்ஸ்! #Viral

ஆன்லைன் கிளாஸ்கள் நீண்டநேரம் நடப்பதாகவும் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அதிகமான வேலைப்பளு இருக்கிறது என்று கேட்டு ஆறு வயது சிறுமி பிரதமர் மோடியிடம் கம்ப்ளெய்ண்ட் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கொரோனா பெருந்தொற்று சூழல் நம் அன்றாட வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. ஆன்லைன் கிளாஸ் தொடங்கி வொர்க் ஃப்ரம் ஹோம் சூழலுக்குப் பழகியாக வேண்டிய சூழல். கொரோனா கால நியூ நார்மலுக்குப் பலரும் பழகிவிட்ட நிலையில், அன்றாடங்காய்ச்சிகள் பலரும் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த சூழலில் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் அதிகப்படியான சுமை இருக்கிறது என பிரதமர் மோடியிடம் ஜம்மு காஷ்மீர் சிறுமி ஒருவர் புகார் கூறும் க்யூட் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Modi

பத்திரிகையாளர் ஔரங்கசீப் நக்‌ஷ்பண்டி என்பவர் பகிர்ந்திருக்கும் 6 வயது சிறுமியின் வீடியோதான் சோசியல் மீடியாவின் டாக் ஆஃப் தி டே. 45 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் பேசும் சிறுமி, காலை 10 மணி தொடங்கி மதியம் 2 மணி வரை ஆன்லைன் கிளாஸ்கள் நீளுவதாகக் குறிப்பிட்டிருந்தார். `ஆங்கிலம், கணிதம், உருது, சுற்றுச்சூழல் அறிவியல் என பல பாடங்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சுமை… என்ன செய்யலாம் பிரதமர் அவர்களே’ என்று அந்தக் குழந்தை கேட்டிருந்தது.

இந்த வீடியோ வைரலான நிலையில், அந்தக் குழந்தையின் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்திருக்கிறார். `அடுத்த 48 மணி நேரத்துக்குள் குழந்தைகளின் சுமையைக் குறைக்கும் வகையில் அவர்களின் வீட்டுப்பாடங்களைக் குறைக்கும் நடவடிக்கையை பள்ளிக்கல்வித் துறை அறிவிக்க வேண்டும்’ என்று அவர் உத்தரவு பிரப்பித்திருக்கிறார்.

Also Read – உங்க போன் யூஸேஜ் உங்களைப் பத்தி சொல்லிடும்… செக் பண்ணலாமா?

46 thoughts on “`குழந்தைகளுக்கு ஏன் டூ மச் வொர்க்?’ – 6 வயது சிறுமி பிரதமரிடம் புகார்; ஆளுநரின் ரெஸ்பான்ஸ்! #Viral”

  1. canadian pharmacy phone number [url=https://canadapharmast.com/#]canadian pharmacy tampa[/url] canada online pharmacy

  2. п»їlegitimate online pharmacies india [url=http://indiapharmast.com/#]indian pharmacy[/url] indianpharmacy com

  3. mexican rx online [url=http://foruspharma.com/#]mexican online pharmacies prescription drugs[/url] mexican drugstore online

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top