அமர்ஜீத் சின்ஹா

பிரதமர் மோடியின் ஆலோசகர் ராஜினாமா… யார் இந்த அமர்ஜீத் சின்ஹா?

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை ஆலோசகராக இருந்த அமர்ஜீத் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவருடைய பணிகாலம் முடிவடைய இன்னும் சுமார் ஏழு மாதங்கள் உள்ளது. இந்த நிலையில், அவரது ராஜினாமா அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு பி.கே.சின்ஹாவுக்குப் பிறகு தனது பதவியை ராஜினாமா செய்யும் இரண்டாவது உயர் அதிகாரி இவர் ஆவார். பி.கே.சின்ஹா தனிப்பட்ட காரணங்களைக் கூறி இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மோடியின் பிரின்சிபல் அட்வைஸராகப் பணியாற்றினார். இவர்கள் இருவருக்கும் முன்னதாக பிரதமரின் முதன்மைச் செயலாளராக இருந்த நிருபேந்திர மிஸ்ரா நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது பதவியில் இருந்து விலகினார். 

அமர்ஜீத் சின்ஹா
அமர்ஜீத் சின்ஹா

அமர்ஜீத் சின்ஹா 1983-ம் ஆண்டு பீகார் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாவார். ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்து கடந்த 2019-ம் ஆண்டில் ஓய்வு பெற்றவர். பீகார் பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இவர். பணி ஓய்வு பெற்றப் பிறகு 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமரின் ஆலோசகராக பணியில் சேர்ந்தார். இவரது ராஜினாமா தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், அரசின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் அவரது ராஜினாமாவை உறுதி செய்ததாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அவர் ராஜினாமா செய்ததற்கான தெளிவான காரணங்கள் எதுவும் தெரிவியவில்லை. 

அமர்ஜீத் சின்ஹா
அமர்ஜீத் சின்ஹா

சமூகம் தொடர்பான துறைகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர் அமர்ஜீத் சின்ஹா. சமூகம், நல்வாழ்வு, கிராமப்புறம் மற்றும் விவசாயத் துறைகள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் பிரதமருக்கு சிறப்பான ஆலோசனைகளை இவர் வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. கிராமப்புற வளர்ச்சி செயலாளராக இருந்தபோது பிரதமரின் ஆவாஸ் யோஜனா உள்ளிட்ட பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளார். பிரதமரின் ஆலோசகராக இருந்த போது, கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கரிப் கல்யான் யோஜனா திட்டத்தின் மூளையாக இருந்து இவர் செயல்பட்டதாக நம்பப்படுகிறது. உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், நிர்வாகம், நிதி மற்றும் பொருளாதாரம் என பல விஷயங்களிலும் சிறப்பான பணிகளை மேற்கொண்டுள்ளார். டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் முன்னாள் மாணவரான இவர் கேபினட் செயலாளராகவும் பணியாற்றினார். அதற்கு முன்பாக கப்பல் அமைச்சகங்களில் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். 

Also Read : வாழ்நாள் முழுக்க வலி; உயிரோடு இருப்பதே குற்ற உணர்ச்சியாக இருக்கப் போகிறது… யாஷிகா வேதனை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top