விஜயகாந்த்

இரும்பு ராடு, கேட்டு உடைப்பு – விஜயகாந்த் ரியல் லைஃப் சம்பவங்கள்!

`ஹேய் தொலைச்சிருவேன், தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க, இங்க வாங்க சார், அடிக்க மாட்டேன் வாங்க’னு விஜயகாந்த் குப்பிடுறப்போ மனுஷன் இவ்ளோ கோபமாவாரானு தோணலாம். ஆனா அவர் கோபத்தின் உச்சியில போயிருந்தார்னா ரத்த ஆறே ஓடியிருக்கும். அப்படி ஓடின சம்பவங்களும் இருக்கு.

மனுஷன் வாழ்ந்த காலத்துல இப்படி வாழணும்னு பல சம்பவங்களை செஞ்சுட்டு போயிருக்காரு. அதுலயும் ரஜினியோட நண்பரையே இரும்பு ராடு எடுத்துக்கிட்டு ஓடவிட்ட சம்பவம் எல்லாம் நடந்திருக்கு. அதேபோல ஒரு காமெடி நடிகரை வம்பிழுத்தாங்கனு ஆன் ஸ்பாட்ல 20 பேரையும் ஒரே ஆளா சேர்த்து பொளந்துருக்காரு. இதுல உச்சகட்ட சம்பவம் என்னன்னா கல்லூரியில பிரச்னையாக காரை வைச்சு கேட்டை உடைச்சு சம்பவம் பண்ணவர். இப்படி பல சம்பவங்கள் பண்ணியிருக்கார், அதுலயும் ரஜினி நண்பருக்கு நடந்தது எல்லாம் உச்சக்கட்ட சம்பவம் இப்படி விஜயகாந்தோட சம்பவங்களைத்தான் இந்த வீடியோவுல பார்க்க போறோம்.

செம அதிரடியா, பலப்பல கெட்டப்ல நடிக்கிற மாதிரி ஒரு கதை விஜயகாந்துக்கு கதை வந்தது. ஆனா, அவர் ரொம்ப யோச்சி நடிக்கலை. அவர் விட்டுக் கொடுத்த ஒரு படத்துல அஜித் நடிச்சு மிகப்பெரிய ஹிட் ஆச்சு. அது என்னனு ஈஸியா கண்டுபிடிக்கலாம்… வீடியோ முடியிறதுக்குள்ள கண்டுபிடிங்க பார்க்கலாம்… இப்போ கேப்டனோட அடுத்த அதிரடிய பார்க்கலாம்…

தமிழ்ச்செல்வன் படத்தோட சூட்டிங் கர்நாடகாவுல இருகிற கொள்ளேகால்ல நடந்துக்கிட்டிருக்கு. முதல் நாள் காட்சியை இயக்குநர் பாரதிராஜா எடுத்துட்டு ரூமுக்கு வந்துட்டார். அந்த கெஸ்ட் ஹவுஸ்ல விஜய்காந்த், பாரதிராஜா உள்பட 10 பேர் இருக்காங்க. இப்போ 50 பேர் கொண்ட ஒரு கேங் ஒன்னு அந்த கெஸ்ட் ஹவுஸ் வாசல் முன்னால வருது. அதுக்கு தலைவனா வாட்டாள் நாகராஜ் இருக்கார். கூட்டம் மொத்தமா சத்தம் போட்டு கத்த ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நேரத்துல கூட்டம் கட்டுக்கடங்காம உள்ள வர்ற நிலையில இருக்காங்க. பாரதிராஜா எல்லோரும் சத்தம் போடாம அமைதியா தூங்குங்க. போலீஸ் இருக்காங்க அவங்க பார்த்துப்பாங்கனு சொல்ல, வெளியில 4 போலீஸ் கையை கட்டிட்டு நிற்குது. அப்போ சத்தம் எல்லைமீறிப்போகவே உள்ள இருந்து என்னடா அங்க சத்தம்னு விஜயகாந்த் கேட்டுக்கிட்டே வெளில வர்றார். மொத்தக் கூட்டமும் இன்னும் சத்தத்தை அதிகமாக்குது. இவந்தான் நம்மளை தப்பா பேசுனவன்னு சிலர் கத்த ஆரம்பிக்கிறாங்க. தமிழ்ச்செல்வன்னு பெயர் வச்சு சூட்டிங் நடத்தக் கூடாதுனு வாட்டாள் சொல்லி முடிக்க, விஜயகாந்த்க்கு பளீர்னு கோபம் வருது. அப்போ மேக்கப் மேன், டிரைவர்கள்கிட்ட டேய் வண்டியை ஓப்பன் பண்ணுங்கடானு சொல்லியிருக்கார். கதவு திறக்குது, உள்ள பார்த்தா 3 அடிக்கு மேல கடப்பாரை சைசுல இரும்பு ராடுகள் இருக்கு. ரப்பர்ல கைப்பிடி போட்டு தயாரா இருக்கு. அபந்த ராடோட நுனியை பிடிச்சு வெளியில எடுக்கிறார், விஜயகாந்த். அதைப்பார்த்த கூட்டம் சத்தத்தை குறைக்க ஆரம்பிக்குது. ஏண்டா நடிகன்னா இப்படில்லாமா இருப்பாங்கனு வாட்டாள் நாகராஜ் தன் சகாக்கள்கிட்ட பேசுறார். ராடை எடுத்த விஜயகாந்த் நிற்கவே இல்லை. கூட்டத்தைப் பார்த்து தமிழன்னா எளக்காரமானு கத்திட்டே ஓடியிருக்கார். மொத்த கூட்டமும் வந்த திசைய நோக்கி ஓடுது. ஓடினவர் கேட்ல ஓங்கி ராடை அடிச்சார், கேட்டு கம்பிகள்லாம் தெறிச்சு போய் தனியா விழுந்தது. நிச்சயமா அந்த அடி அவங்க மேல விழுந்திருந்தா ஸ்பாட்லயே அவுட்டாகியிருப்பாங்க. தமிழ்நாட்டை தாண்டி செஞ்ச சம்பவம் எல்லாம் கேப்டனுக்கு மட்டுமே சொந்தமானது. இன்னொன்னு அந்த இரும்பு ராடை எப்பவுமே வண்டியில வச்சிருப்பாராம், விஜயகாந்த்.

இந்த படங்கல்ல எல்லாம் ஹீரோக்கள் எல்லாம் வில்லன் வீட்டு கேட்டை உடைச்சிட்டு வர்றதை வாடிக்கையா வச்சிருக்காங்க. ஆனா அதை ரியலாவே பண்ணவர் விஜயகாந்த்.

விஜயகாந்தும் அவர் நண்பர்களும் சேர்ந்து பூண்டி காலேஜுக்கு பேசப் போயிருக்காங்க. மொத்தம் 5 பேரும் தனித்தனியா கார்கள்ல அழைச்சு வரப்பட்டாங்க. கல்லூரி நிர்வாகம் தடபுடலா ஏற்பாடுகளை கவனிச்சாங்க. அப்போ எழுந்து மேடையில பேச ஆரம்பிச்சாங்க. அவங்கள்ல சந்திஅர்சேகர் பேசுறப்போ மாணவர்கள் சத்தம்போ, பதிலுக்கு மாணவர்கள் எழுந்து மேடையை நோக்கி வர ஆரம்பிச்சிருக்காங்க. இதைப் பார்த்த விஜயகாந்த் மாணவர்களை பகைச்சுக்க விரும்பலை. அதனால நண்பர்களை கூட்டிட்டு ஒரு கார்ல ஏத்திட்டு புறப்படுறார். கலையரங்கத்துல இருந்து 2 கி.மீ தூரம் அந்த காலேஜோட என்ட்ரன்ஸ் இருக்கும். அதுக்குள்ள மாணவர்கள் தகவல் கொடுத்து கேட்டை பூட்டிட்டாங்க. இதைப் பார்த்த விஜயகாந்த் ஆடிப்போனார். என்ன பண்றது இப்போ மாணவர்கள் இருக்கிற நிலையில சொல்லி புரிய வைக்க முடியாது. பார்க்கிறார், கண்முன்னால் கேட் இருக்கு. காரை கொஞ்சம் ரிவர்ஸ் எடுத்தார். இப்போ மாணவர்கள் விஜயகாந்த் பயந்துட்டதா நினைக்கிறாங்க. ஆனா அப்படியே பர்ஸ்ட் கியரை போட்டு ஆக்சிலேட்டரை கதற விட்டார். அரண்மனை கேட் மாதிரி இருந்த கதவு தனியா பிச்சுக்கிட்டுப்போய் விழுந்தது. இதை விஜயகாந்த் கண்டுக்கவே இல்லை. விஜயகாந்த் செஞ்ச அந்த சம்பவத்தால அடுத்த மூணு மாசத்துக்கு அந்த காலேஜ் லீவு விட்டாங்க.

Also Read – ரஜினி ரசிகர்கள் மறக்கமுடியாத சிங்கப்பூர் மருத்துவமனை நாட்கள்!

விஜயகாந்த் நடிக்காம அஜித்க்கு விட்டுக் கொடுத்த படம் சிட்டிசன். அது முதல்ல விஜயகாந்த் கேட்டு ஓகே சொல்லிட்டு அதுல இருந்து பின்வாங்கிட்டார், அதுக்கப்புறம் அதுல அஜித் நடிச்சார் படம் செமஹிட் ஆச்சு. விஜயகாந்த் அரசியல்ல பண்ண அதிரடிகள், நிஜ வாழ்க்கையில பண்ண சம்பவங்கள் அடுத்தடுத்த பாகங்கள்ல காத்துக்கிட்டிருக்கு, நடிகர் விஜயகாந்த் மாஸ்னு நீங்க நினைக்கிற சம்பவங்களை கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top