குன்றத்தூர் முருகன் கோயில்

`யார் முதலில் தாலி கட்டுவது…’ குன்றத்தூர் கோயிலில் அடித்துக்கொண்ட திருமண கோஷ்டியினர்!

குன்றத்தூர் முருகன் கோயிலில் இரண்டு திருமண வீட்டார் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. என்ன நடந்தது?

குன்றத்தூர் முருகன் கோயில்

ஆடி மாதம் முடிந்ததும் இன்று முதல் சுபமுகூர்த்த தினம் என்பதால், கோயில்களில் திருமணம் செய்வோர் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் கணிசமாக இருந்தது. கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கோயிலுக்குள் அனுமதிக்காததால், கோயிலுக்கு எதிரே இருந்த சாலைகளில் பல திருமணங்கள் நடைபெற்றன.

இந்தசூழலில், சென்னை குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் இன்று திருமணம் செய்வதற்காக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பதிவு செய்திருந்தனர். இதனால், கோயிலில் காலை முதலே கூட்டம் களைகட்டியது. கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுப்பதற்காகத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கும் நிலையில், விதிகளை மீறி உரிய இடைவெளியின்றி மக்கள் கூட்டம் கூடினர்.

குன்றத்தூர் முருகன் கோயில்
குன்றத்தூர் முருகன் கோயில்

கைகலப்பு

ஒருகட்டத்தில் அருகே அருகே பல திருமணங்கள் நடைபெறும் சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில், இரண்டு திருமண வீட்டார் இடையே யார் திருமணம் முதலில் நடப்பது என்று வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இடைவெளி விட்டு தள்ளிப்போய் திருமணத்தை நடத்திக் கொள்ளுமாறு இரண்டு வீட்டாரும் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்ததாகத் தெரிகிறது. வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் இரண்டு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். கூட்டத்தில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரைத் தாக்கிக் கொள்வதும், அதற்கு அவர்கள் தரப்பில் இருந்து பதில் தாக்குதல் நடத்துவதும் போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குன்றத்தூர் போலீஸார் கோயிலில் இருந்து அனைவரையும் வெளியேற்றினர். பின்னர் உரிய சமூக இடைவெளியைப் பின்பற்றி ஒவ்வொரு குடும்பமாக அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read – வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமி விரதம்… நேரம், பூஜை செய்யும் முறை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top