Lockdown

தமிழகத்தில் ஏப்ரல் 26 முதல் புதிய கட்டுப்பாடுகள்… எவற்றுக்கெல்லாம் அனுமதியில்லை?

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 26 முதல் புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்திருக்கிறது.

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 13,000-த்தைக் கடந்திருக்கிறது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தினசரி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த நேரத்தில் பொதுப்போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, டாக்ஸி சேவை உள்ளிட்டவற்றுக்கு அனுமதி இல்லை. அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த சூழலில் தமிழகத்தில் ஏப்ரல் 26-ம் தேதி முதல் மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 26 முதல் புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்திருக்கிறது.
இரவுநேர ஊரடங்கு

எவற்றுக்கெல்லாம் தடை?

  • சினிமா தியேட்டர்கள்
  • மால்கள்
  • பார்கள்
  • உடற்பயிற்சிக் கூடங்கள்
  • பெரிய கடைகள்
  • சென்னை உள்பட அனைத்து மாநகராட்சிகளிலும் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதியில்லை.
  • உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி.
  • இ – கமர்ஸ் சேவை வரையறுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் அனுமதி
  • அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதியில்லை.
  • திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேர்களுக்கு மேல் பங்கேற்க அனுமதியில்லை.
  • இறுதி ஊர்வலங்களில் 25 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம்.
  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை (IT, ITES Companies) நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்.
Night Curfew
இரவு நேர ஊரடங்கு
  • கோல்ஃப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம், குழுமங்கள் செயல்பட அனுமதியில்லை. அதேநேரம், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிக்கு மட்டும் அனுமதி.
  • புதுச்சேரி தவிர்த்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்தும் தமிழகம் வருபவர்கள் http://eregister.tnega.org என்ற தளத்தில் பதிவு செய்த விவரத்தைக் காட்டிய பிறகே தமிழகத்துக்குள் நுழைய அனுமதி.
  • வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு விமானம், கப்பல் மூலம் வரும் பயணிகள் அனைவரும் http://eregister.tnega.org என்ற தளத்தில் பதிவு செய்தபின்னரே அனுமதி.
  • பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிக்க அனுமதி என்ற ஏற்கனவே அமலில் இருக்கும் உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை.
  • வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி. ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும்.
  • தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top