கிரிப்டோ கரன்சி வாயிலாக பெறப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாகும் இந்த வரி விதிப்பின் நிபந்தனைகள் என்னென்ன.. வரியை எப்படிக் கணக்கிடுவார்கள்?

கிரிப்டோ வரி
டிஜிட்டல் சொத்துகள் என்கிற அடிப்படையில் கிரிப்டோ கரன்சி முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருமானத்துக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் வரி செலுத்த வேண்டி வரும். இதுகுறித்து, 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், `டிஜிட்டல் சொத்துகளில் இருந்து கிடைக்கும் வருமானத்துக்கு 30% வரி விதிக்கப்படுகிறது’ என்று அறிவித்தார்.
நிபந்தனைகள்
- ‘அத்தகைய வருமானத்தைக் கணக்கிடும் போது, கையகப்படுத்தும் செலவைத் தவிர, எந்தவொரு செலவினம் அல்லது கொடுப்பனவுக்கான எந்தக் கழிப்பையும் இந்தத் திட்டம் அனுமதிக்காது’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
- டிஜிட்டல் சொத்தை பணமாக மாற்றும்போது ஏற்படும் இழப்பை, வேறெந்த வருமானத்துக்கும் ஈடாகக் கணக்குக் காட்ட முடியாது.
- டிஜிட்டல் சொத்த பரிசாக ஒருவருக்கு அளிக்கும்போது, அதற்கான வரி அந்தப் பரிசைப் பெறுபவரிடம் இருந்து வசூலிக்கப்படும்.

எப்படி கணக்கிடுவார்கள்?
- நிதியாண்டு முடிவில் டிஜிட்டல் கரன்சிகளின் பரிவர்த்தனைகள் குறித்து கணக்கிடும்போது, அதிலிருந்து வருமானம் எதையும் பெறாமல், இழப்பு ஏற்பட்டிருந்தால் வரி எதையும் செலுத்த வேண்டாம்.
- கிரிப்டோ கரன்சியை முதலீட்டாளர் ஒருவர் வாங்கிய பிறகு, அதன் மதிப்பு உயர்ந்தும் சந்தை நிலவரத்தால் அதை விற்க முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கும் வரி விதிக்கப்படாது. அந்த கிரிப்டோ கரன்சியை லாபம் வைத்து விற்கும்போதுதான் வரி விதிக்கப்படும்.
- ஒரு கிரிப்டோவில் இருந்து நீங்கள் லாபம் பார்த்து, மற்றொரு டிஜிட்டல் சொத்து பரிவர்த்தணையில் உங்களுக்கு நஷ்டம் ஏற்படலாம். ஆண்டு முடிவில் வரி கணக்கீடு எப்படி இருக்கும் என்றால், நீங்கள் நஷ்டமடைந்ததற்கு வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை. அதேநேரம், லாபமடைந்ததற்கு 30% வரி கட்ட வேண்டும். இரண்டையும் ஒரே கணக்கில் சேர்த்து கணக்குக் காட்ட முடியாது.
- ஜூலை 1-ம் தேதி முதல் லாப, நஷ்ட கணக்கின்றி மொத்த பணபரிவர்த்தனை மதிப்பில் 1% TDS வரியாகப் பிடித்தம் செய்யப்படும்.
- விபாயாரிகள், தொழில் செய்வோர்கள் ஆகியோர் தங்களின் மொத்த வருமானத்தில் இருந்து கிரிப்டோ கரன்சி வருமானம் அல்லது நஷ்டத்தைக் கழித்துக் கொள்ள முடியாது.
Also Read – பான் கார்டு முதல் வருமான வரித் தாக்கல் வரை… மார்ச் 31-க்குள் இதையெல்லாம் முடிச்சுடுங்க!
I think this is among the most vital info for me.
And i’m glad reading yur article. But wanna remark on few general
things, The site style is wonderful, the articles is really excellent :
D. Good job, cheers https://glassi-app.Blogspot.com/2025/08/how-to-download-glassi-casino-app-for.html
Hello, Neat post. There’s an iasue with your website in internet explorer, would test this?
IE nonetheless is the marketplace leadder aand a good
part of folks will omit your excellent writing due to this problem. https://Topdubaijobs.ae/employer/tonebet-casino