மத்திய பட்ஜெட் 2022: டிஜிட்டல் சொத்துகளுக்கு 30% வரி; வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை – முக்கிய அம்சங்கள்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் 2022-23 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். 2022-ம் ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 9.2% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.

சுமார் ஒரு மணி நேரம் 32 நிமிடங்கள் பட்ஜெட் உரையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்தார். மத்திய பட்ஜெட் 2022-23 -முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
  • தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் எதுவுமில்லை.
  • நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சாலை, ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், நீர்வழித் தடங்கள், பொதுப்போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்து என 7 முக்கிய துறைகளை உள்ளடக்கிய பிரதமரின் கதி சக்தித் திட்டம் தொடக்கம்.
  • நாடு முழுவதும் மாணவர்கள், குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் 2 ஆண்டுகளை இழந்திருக்கிறார்கள். ஒரு வகுப்பு ஒரு கல்வி சேனல் என்கிற வகையில் தற்போதுள்ள 7 சேனல்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்த்தப்படும். கற்பதில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை சீர்செய்ய இது உதவும்.
  • நாடு முழுவதும் குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.60,000 கோடி ஒதுக்கீடு. 3.8 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.
  • பள்ளிக் கல்வித் துறையில் டிஜிட்டல் முறையில் கற்பது ஊக்குவிக்கப்படும். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்படும்.
  • ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாநில மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும்.
  • நாடு முழுவதும் மேலும் 1.5 லட்சம் அஞ்சலக வங்கிகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க புதிய மையங்கள் திறக்கப்படும்.
  • வெளிநாட்டுப் பயணங்களை எளிதாக்கும் வகையில் சிப்கள் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும்.
  • பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வரும் நிதியாண்டில் ரூ.84,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
  • நாடு முழுவதும் முதற்கட்டமாக 75 மாவட்டங்களில் வங்கிகளின் டிஜிட்டல் யூனிட்டுகள் நிறுவப்படும்.
  • 5ஜி சேவை 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும். இதற்காக அலைக்கற்றைகளை ஏலம் விடும் பணிகள் நடந்து வருகின்றன.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
  • மின்சார வாகனங்களுக்காக ஊரகப் பகுதிகளில் எலெக்ட்ரிக் சார்ஜிங் மையங்கள் ஏற்படுத்தப்படும். மின் வாகனங்களில் பேட்டரிகளை மாற்றிக்கொள்ளும் வசதி கொண்டுவரப்படும்.
  • ராணுவத் தளவாடங்கள் இறக்குமதி குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தவகையில், 68% ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும். இதற்காக, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கவும் அனுமதி.
  • 2025-க்குள் நாட்டின் அனைத்து கிராமங்களும் இணைய வசதி மூலம் இணைக்கப்படும்.
  • பத்திரப்பதிவு ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, ஒரே நாடு ஒரே பதிவு முறை அமலாக்கப்படும்.
  • ரிசர்வ் வங்கி மூலம் 2023-ல் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும். அதன்மூலம், இணையப் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும்.
  • டிஜிட்டல் சொத்துகள் மூலம் பெறப்படும் வருமானங்களுக்கு 30% வரி விதிக்கப்படுகிறது. டிஜிட்டல் சொத்துகளை பரிசாக அளித்தால், அதைப் பெறுபவர் வரி செலுத்த வேண்டும்.
  • மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்காக வட்டியில்லா கடன் வழங்க ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. அரசின் மூலதன செலவுகள் ரூ.7.5 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.
  • ஏர் இந்தியா விற்பனை வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. இனி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும்.
  • கடந்த ஜனவரி மாத ஜி.எஸ்.டி வரி வருவாய் ரூ.1,40,986 கோடியாகும். இது, ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து வந்த அதிகபட்ச வருவாயாகும். பெருநிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12%-ல் இருந்து 7% ஆகக் குறைவு.
  • குடைகளுக்கான வரி 20% ஆக உயர்த்தப்படுகிறது. வைரங்கள், ரத்தினங்களுக்கான சுங்க வரி 5% ஆகக் குறைக்கப்படுகிறது. செல்போன்கள் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கான இறக்குமதித் தீர்வை 7.5% ஆகக் குறைப்பு.
  • 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்க முடிவு.

Also Read – Indian Currency: இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது… 5 காரணிகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top