ஏப்ரல் 1 முதல் அமலாகும் 30% கிரிப்டோ வரி… எப்படி கணக்கிடுவார்கள்?

கிரிப்டோ கரன்சி வாயிலாக பெறப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாகும் இந்த வரி விதிப்பின் நிபந்தனைகள் என்னென்ன.. வரியை எப்படிக் கணக்கிடுவார்கள்?

Crypto Tax
Crypto Tax

கிரிப்டோ வரி

டிஜிட்டல் சொத்துகள் என்கிற அடிப்படையில் கிரிப்டோ கரன்சி முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருமானத்துக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் வரி செலுத்த வேண்டி வரும். இதுகுறித்து, 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், `டிஜிட்டல் சொத்துகளில் இருந்து கிடைக்கும் வருமானத்துக்கு 30% வரி விதிக்கப்படுகிறது’ என்று அறிவித்தார்.

நிபந்தனைகள்

  • ‘அத்தகைய வருமானத்தைக் கணக்கிடும் போது, கையகப்படுத்தும் செலவைத் தவிர, எந்தவொரு செலவினம் அல்லது கொடுப்பனவுக்கான எந்தக் கழிப்பையும் இந்தத் திட்டம் அனுமதிக்காது’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
  • டிஜிட்டல் சொத்தை பணமாக மாற்றும்போது ஏற்படும் இழப்பை, வேறெந்த வருமானத்துக்கும் ஈடாகக் கணக்குக் காட்ட முடியாது.
  • டிஜிட்டல் சொத்த பரிசாக ஒருவருக்கு அளிக்கும்போது, அதற்கான வரி அந்தப் பரிசைப் பெறுபவரிடம் இருந்து வசூலிக்கப்படும்.
Crypto Tax
Crypto Tax

எப்படி கணக்கிடுவார்கள்?

  • நிதியாண்டு முடிவில் டிஜிட்டல் கரன்சிகளின் பரிவர்த்தனைகள் குறித்து கணக்கிடும்போது, அதிலிருந்து வருமானம் எதையும் பெறாமல், இழப்பு ஏற்பட்டிருந்தால் வரி எதையும் செலுத்த வேண்டாம்.
  • கிரிப்டோ கரன்சியை முதலீட்டாளர் ஒருவர் வாங்கிய பிறகு, அதன் மதிப்பு உயர்ந்தும் சந்தை நிலவரத்தால் அதை விற்க முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கும் வரி விதிக்கப்படாது. அந்த கிரிப்டோ கரன்சியை லாபம் வைத்து விற்கும்போதுதான் வரி விதிக்கப்படும்.
  • ஒரு கிரிப்டோவில் இருந்து நீங்கள் லாபம் பார்த்து, மற்றொரு டிஜிட்டல் சொத்து பரிவர்த்தணையில் உங்களுக்கு நஷ்டம் ஏற்படலாம். ஆண்டு முடிவில் வரி கணக்கீடு எப்படி இருக்கும் என்றால், நீங்கள் நஷ்டமடைந்ததற்கு வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை. அதேநேரம், லாபமடைந்ததற்கு 30% வரி கட்ட வேண்டும். இரண்டையும் ஒரே கணக்கில் சேர்த்து கணக்குக் காட்ட முடியாது.
  • ஜூலை 1-ம் தேதி முதல் லாப, நஷ்ட கணக்கின்றி மொத்த பணபரிவர்த்தனை மதிப்பில் 1% TDS வரியாகப் பிடித்தம் செய்யப்படும்.
  • விபாயாரிகள், தொழில் செய்வோர்கள் ஆகியோர் தங்களின் மொத்த வருமானத்தில் இருந்து கிரிப்டோ கரன்சி வருமானம் அல்லது நஷ்டத்தைக் கழித்துக் கொள்ள முடியாது.

Also Read – பான் கார்டு முதல் வருமான வரித் தாக்கல் வரை… மார்ச் 31-க்குள் இதையெல்லாம் முடிச்சுடுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top