வினீத் ஸ்ரீனிவாசன்

படம்தான் ஃபீல்குட்.. சாப்பாட்டு தட்டுல கை வச்சா ஆக்‌ஷன்தான்.. வினீத் ஸ்ரீனிவாசன் ஜாலி ஜர்னி!

வினீத் ஸ்ரீனிவாசன், முகுந்தன் உண்ணி அஸோசியேட்ஸ் படத்தில் அவ்வளவு Dark Shade உள்ள கதாபாத்திரத்தில் நடித்தாலும், கடந்த 15 ஆண்டுகாலமாக Feel Good Malayala சினிமாக்களின் முகமாகப் பார்க்கப்படுபவர். அவர் படங்கள் அவருடைய குரலைப் போலவே அவ்வளவு மெண்மையா, அழகா, ஆர்ப்பாட்டமில்லாம இருக்கும். அவர் படங்கள் ஏன் ஃபீல் குட்டா இருக்குன்றதுக்கு காரணமா அவர் ஒரு விஷயம் சொல்றாரு… அதைக் கடைசியில் பார்ப்போம். இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், டப்பிங் ஆர்டிஸ்ட், தயாரிப்பாளர்னு வினீத்தேட்டனுக்கு பல முகங்கள் இருக்கு. அதுல அவர் பயங்கரமான இம்பேக்ட் கொடுத்த இயக்குநர், நடிகர், அவதாரங்களைப் பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம். இசையில் அவரைப் பற்றிப் பேச தனி வீடியோவே போடனும்.

சேட்டன்களையும் சேச்சிகளையும் தமிழ்ப்படங்களில் தவறாக சித்தரிப்பதும், தமிழர்களை பாண்டிகள் என்றும், தீய கதாபாத்திரங்களாகவும் மலையாள சினிமாக்களில் சித்தரிப்பதும் காலங்காலமாக இருந்து வரும் வழக்கம். ஆனால், மலையாள சினிமாவில் இந்தப் போக்கை மாற்றி தமிழர்களையும் சென்னையையும் நல்லவிதமாக காட்சிப்படுத்தத் துவங்கியவர் வினீத் ஶ்ரீனிவாசன்தான். சென்னைக்கும் அவருக்கும் ஒரு பெரிய ரிலேஷன்ஷிப்பே இருக்கு… அது ஏன்? சென்னை தவிர தமிழ்நாட்டில் இன்னொரு ஊரும் அவருக்குப் பிடிக்குமாம்… இந்த ஒரு விஷயம் மட்டும் இருந்தா அந்த ஊருக்கே நான் போய் செட்டில் ஆகிருவேன்னு அவர் சொல்லி இருக்கார்… அது என்ன விஷயம், என்ன ஊர்னும் கடைசியா பாப்போம்.

வினீத் ஸ்ரீனிவாசன்
வினீத் ஸ்ரீனிவாசன்

மலையாள 90S kids-ன் மனசுக்கு நெருக்கமான ஒரு காதல் கதைனா “தட்டத்தின் மறயத்து” படத்தைச் சொல்லலாம். அப்டியே 10 வருஷம் கழிச்சு வந்து 2K kids-க்கு கேட்டா, தர்ஷனானு பாடிகிட்டு “ஹிருதயம்” படத்தைச் சொல்றாங்க. மலையாள சினிமாவில் ஒரு புதிய அலையை உருவாக்கிய இயக்குநர்களில் ஒருத்தரா இருக்கும் வினீத் இயக்கிய படங்களின் எண்ணிக்கை மொத்தமே ஐந்து தான். ஆனா, ஒரு இயக்குநரா மட்டுமில்லாம, அவருடைய உதவி இயக்குநர்கள், நண்பர்கள் மூலமாகவும் கடந்த 15 ஆண்டுகாலமா மலையாள சினிமாவின் முகத்தை மாத்தினதுல முக்கியப் பங்கு வினீத்துக்கு உண்டு.

மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், நிவின் பாலி அறிமுகமான படம் இதுதான். ஐந்து நண்பர்கள், அவர்களுடைய உலகம்னு மலையாள சினிமாவோட புது அலையை உருவாக்க இளைஞர்கள் வந்துட்டோம்னு ஊருக்கு உரக்கச் சொன்ன படமா அது இருந்தது. முன்னாடி சொன்ன, தட்டத்தின் மறயத்து 90S kids-ன் காதல் கீதமாகவே இருந்தது. வினீத்தின் தம்பியை வைத்து அவர் இயக்கிய ‘திர’ வழக்கமான வினீத்தின் படங்கள் போல இருக்காது, ஃபீல்குட் வினீத் அதில் மிஸ்ஸாகி இருப்பார், அந்தப் பாதையில் இருந்து விலகி வந்து மீண்டும் ஜேக்கப்பிண்டே சுவர்க்கராஜ்யம், ஹிருதயம் என ஹிட்டடித்தார் வினீத். இப்போ என் பசங்களோட நான் ஜாலியா டைம் செலவழிக்க வேண்டிய நேரம் இது, இப்போ நானும் ஜாலியா இருக்கனும், அதனால ஒன்லி ஃபீல் குட் படங்கள் தான் என அவருக்கே உரிய பிரத்தியேக சிரிப்பை உதிர்த்து ஃபீல்குட் மலையாள சினிமாவின் அம்பாஸிடராக இருக்கிறார் வினீத்.

இயக்குநராக மட்டுமல்லாமல், ஒரு வடக்கன் செல்ஃபியின் கதையும் வினீத்துடையதுதான். அவருடைய அப்பா ஶ்ரீனிவாசன், மலையாள திரையுலகின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். வினீத்தின் சின்ன வயதில் இருந்தே அவருடைய அப்பாவும் நண்பர்களும் அவருடைய அடுத்த படங்களின் கதைகளைப் பற்றிப் பேசும் போது உடன் இருந்தே கேட்டு பழக்கப்பட்டு வளர்ந்த வினீத்துக்கு அந்தத் திறமை இயல்பாகவே ஒட்டிக்கொண்டது. மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் திரைக்கதையை எழுதியதும் அவருடைய தந்தையிடம் காட்டி, எப்படி இருக்கிறது என கேட்டிருக்கிறார்… “அதுல ஒன்னும் இல்லை கீழ போட்ரு…” என சொல்லி இருக்கிறார். அப்போ, அந்தக் கதையில் எதோ தவறிருக்கிறது என உணர்ந்து மீண்டும் மீண்டும் மெருகேற்றி தந்தையிடம் காட்டி இருக்கிறார். அப்படி ஆரம்பித்த வினீத் சமீபத்தில் வெளியான ஹிருதயம் படத்தின் திரைக்கதையை அவர் தந்தையிடம் படிக்கக் கொடுக்காமல், கதையாக சொல்லி எப்படி இருக்கிறது எனக்கேட்டிருக்கிறார். வினீத்தின் சில கதைகளுக்கு இந்தக் கதை எனக்குப் புடிக்கலை, ஆனா ஆடியன்சுக்கு புடிக்குறதுக்கான விஷயங்கள் இதுல இருக்கு… என அவர் கதைகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார் ஶ்ரீனிவாசன்.

வினீத் ஸ்ரீனிவாசன்
வினீத் ஸ்ரீனிவாசன்

ஜேக்கப்பிண்டே சுவர்க்கராஜ்ஜியம் படத்தை வினீத் தவிர வேறு யார் இயக்கி இருந்தாலும் அந்தப் படம் ஒரு சீரியலாக மாறி இருக்க வாய்ப்பு உண்டு. ஹிருதயம் படத்தின் பேசு பொருளைப் போல இதற்கு முன்பு எத்தனையோ படங்கள் அத்தனை மொழிகளிலும் வெளியாகி இருக்கின்றன. சில படங்கள் வென்றிருக்கின்றன, சில படங்கள் தோல்வியைத் தழுவி இருக்கின்றன. அத்தனையும் தெரிந்தும் வினீத் வெர்ஷனாக ஹிருதயம் இருக்கும் என்ற முடிவோடு படத்தை எடுக்கிறார். வினீத்தின் முடிவு சரி என்பதை படத்தின் ரிசல்ட் சொல்லியது.

ஹிருதயம் படத்தின் கதையை யோசித்துவிட்டு, இந்தக் கதாபாத்திரம் இந்த சீன்ல எப்படி ரியாக்ட் பண்ணும், எப்படி பேசும், என்ன முடிவெடுக்கும்னு யோசிப்பாராம், அந்தக் கதாபாத்திரங்கள் செய்யுறதை நாம எழுதிட்டாப் போதும்னு தான் வினீத் எழுதி இருக்கார். கிட்டத்தட்ட அவரோட எழுதுற ஸ்டைலே அப்படித்தான் போல. அதனால தான் அவருடைய பெரும்பாலான படங்களில் பார்வையாளர்களால் ஒன்றினைய முடியுதுன்னு ஒரு கருத்து இருக்கு.

Also Read – லியோவுடன் மோதத் தயாரான ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் கதை!

வினீத் நடிகராக அறிமுகமான சைக்கிள் படத்தின் முதல் காட்சி ஷூட்டிங்கின் போது வினீத் பயங்கரமாக சொதப்பி இருக்கிறார். பதட்டத்தில் எக்கச்சக்க டேக்குகள் வாங்கிக் கொண்டு இருந்திருக்கிறார். இவ்வளவு கஷ்டப்பட்டு நாம நடிக்கனுமா, இது நமக்கு வேண்டாம் என உள்ளுக்குள் உடைந்து போய் இருக்கிறார். படத்தின் இயக்குநர் ஜானி ஆண்டனி இதைப் புரிந்துகொண்டு, வினீத்திடம் வந்து அமைதியாக மிஸ்டர் கூல் போல “வினீத் பதட்டப்படாத, உண்ணால முடியும், நல்லா பண்ணு…” என ஒரு பெப் டாக் கொடுத்திருக்கிறார். உற்சாகமான வினீத் அடுத்த டேக்குக்கு தயாராகி இருக்கிறார்… நமக்கு இவ்வளவு உற்சாகம் கொடுத்த டைரக்டருக்கு ஒரு தேங்க்ஸ் சொல்வோம் என வினீத் திரும்பிய போது இயக்குநர் தலையிலடித்துக்கொண்டு மேலே இறைவனை நோக்கி கையைக் காட்டிக்கொண்டு போய் இருக்கிறார். ஹிருதயம் படத்தில் ஜானி ஆண்டனியை நடிக்கவைத்து இயக்கி இருக்கிறார் வினீத்.

முதல் படத்தின் முதல் ஷாட்டில் இப்படி சொதப்பிய வினீத், ஓர்மயுண்டோ ஈ முகம், ஓம் ஷாந்தி ஒஸானா, குஞ்சி ராமாயணம், அரவிந்தண்டே அதிதிகள், தன்னீர் மாத்தன் தினங்கள், முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ், தங்கம், மனோகரம் என நடிப்பிலும் அவர் கலக்கிய படங்களின் பட்டியலும் ஏராளம். முழு படத்தையும் தாங்கிப் புடிக்குற தூனாக பல படங்களைத் தாங்கி இருந்தாலும், Guest appearance ஆகவும் ஒரு முத்தஷ்ஷி கத, ஜேக்கப்பிண்டே சுவர்க்கராஜ்ஜியம், ஹெலன், நாம் அப்படின்னு அவர் நண்பர்கள், உதவி இயக்குநர்களுடைய பல படங்களிலும் வந்து நட்புக்காக லாலா பாடி இருப்பார்.

ஒரு நடிகராக வினீத்தின் திறமையைப் புரிந்துகொள்ள “அரவிந்தண்டே அதிதிகள்” படத்தில் அவருக்கும் அவர் தாய்க்கும் இடையிலான சில காட்சிகளையும், சீசன் முடிந்த ஊரின் காலியான பேருந்து நிறுத்தத்தில் வினீத் செல்லும் சில நொடிகளையும் பார்த்தாலே போதும். ஒரு பக்கம் முகுந்த உண்ணி அசோஸியேட்ஸில் படம் முழுக்க வலம் வந்து பார்ப்பவர்களை மிரட்டினாலும், ‘தங்கம்’ படத்தில் மொத்தமாகவே திரையில் அரை மணி நேரமே வினீத் வந்தாலும், படம் நெடுக வினீத் இருக்கும் ஒரு இம்ப்ரஷனை அவர் கொடுத்திருப்பார், அதிலும் இறுதிக்காட்சியில் “நான் எவ்வளவோ ட்ரை பண்ணிட்டேன்னு சொல்லு” என்ற ஒற்றை வசனத்தை அவர் உச்சரிக்கும் காட்சியில் அவர் கண்கள் நம்மை என்னமோ செய்திருக்கும்.

வினீத் ஸ்ரீனிவாசன்
வினீத் ஸ்ரீனிவாசன்

வழக்கமான மலையாள சினிமாக்கள் மாதிரி இல்லாம, வினீத்தின் படங்களில் தமிழர்களை இழிவுபடுத்துற மாதிரியான காட்சிகள் இருக்காது, மாறாக சென்னையைக் கொண்டாடுற விதமான படங்கள் தான். அதுக்கான காரணம் என்னன்னு பார்த்தா, அவருக்கு சென்னையை ரொம்பவே புடிக்குமாம்.

“கேரளாவில் இருந்ததை விட சென்னையில் தான் அதிகமான வருஷம் வாழ்ந்திருக்கேன்… கேரளாவில் என்னால, ஃப்ரியா சுத்த முடியாது, ஆனா, சென்னையில் எந்த பிரியாணி கடையிலயும் என்னால போய் சாப்பிட முடியும். இந்த ஊர் ரொம்ப அமைதியான ஊர். நீங்க வேணா கொஞ்ச நாள் அங்க இருந்து பாருங்க உங்களுக்கே புடிச்சிரும்”, என மலையாள சினிமா நடிகர்கள் பலரையும் பிரியாணி வாங்கி கொடுத்து சென்னைக்கு இலவச மார்கெட்டிங் பன்றதை ஒரு சேவையாவே வச்சிருக்கார் வினீத். சென்னைக்கு அடுத்து தமிழ் நாட்டில் அவருக்கு ரொம்ப புடிச்ச ஊர் கும்பகோணம். அங்க மட்டும் ஒரு ஏர்போர்ட் இருந்தா, நான் மொத்தமா குடும்பத்தோட அங்க போய் செட்டில் ஆகிருவேன்னு சொல்ற அளவுக்கு அவருக்கு அந்த ஊரைப் பிடிக்குமாம்.

சினிமா, சென்னை மாதிரியே அவருக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்கள் சாப்பாடு, ஊர் சுத்துறது… ஒரு பேட்டியில் பிஜூ மேனன் சொல்லி இருப்பார், “சென்னையை விட்டு கேரளாவுக்கே வரலாம்லன்னு வினீத் கிட்ட கேட்டா, சென்னையோட சாப்பாட்டையும், பிரியாணியையும் மிஸ் பண்ண வேண்டி இருக்குமேன்னு ஃபீல் பன்றாரு வினீத்… வினீத் ஒரு ஹோட்டல்ல சாப்பாடு ஆர்டர் பன்றதே செமையா இருக்கும், அதைக் கேக்கும் போதே நமக்கு வாய்ல எச்சில் ஊறும். வினீத்தோட சாப்பாட்டுத் தட்டில் இருந்து சாப்பாட்டை எடுத்தா, நீங்க பாக்குற சாந்தமான வினீத்தைப் பார்க்க முடியாது…”

வினீத்தோட படங்களை விடவும், Feel good ஆன ஒரு விஷயம் பாக்கனும்னா அவரோட இன்ஸ்டாகிராம் புரஃபைல் போயிட்டு பாருங்க… அவர் பசங்களோடவும் நண்பர்களோடவும் அவர் செய்யுற அத்தனை சேட்டைகளுமே ஃபீல்குட் தான்.

வினீத் படங்களில் உங்களுக்கு ரொம்பவே புடிச்ச ஒரு Feel good scene என்னன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

1 thought on “படம்தான் ஃபீல்குட்.. சாப்பாட்டு தட்டுல கை வச்சா ஆக்‌ஷன்தான்.. வினீத் ஸ்ரீனிவாசன் ஜாலி ஜர்னி!”

  1. oru vadakan selfie la ultimate ah comedy panirupaapla,then jacobinte swarga raajiyam guest appearance semayah irukum,finally om shaanti oshaana la kaatu mooliyoh song avaroda voice kaaghave ketukite irupen my fav evergreen malayalam song

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top