அன்பறிவு மாஸ்டர்ஸ்

லோகேஷின் ட்வின் டிராகன்ஸ்.. ஸ்டன்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு தரமான செய்கைகள்!

லோகேஷ் வளர்க்குற டிராகன்ஸ் கூட்டத்துல முக்கியமான ட்வின் டிராகன்ஸ் ரெண்டு பேர் இருக்காங்க. அவர் படம்னாலே அக்‌ஷன்தான். அந்த ஆக்‌ஷனை அடுத்து லெவலுக்கு மாஸா தூக்கி நிறுத்துறது அந்த டிராகன்ஸ் தான். லோகேஷ் படங்களுக்கு மட்டுமில்ல.. பா.ரஞ்சித்தோட மெட்ராஸ்ல தொடங்கி உலகமே கொண்டாடுன கே.ஜி.எஃப் வரைக்கும் இந்த டிராகன்ஸ் தரமான பல செய்கைகளை பண்ணியிருக்காங்க.

விக்ரம் படத்துல 90 சதவீதம் ஸ்டன்ட்ஸ்தான் இருக்கும். அடி ஒவ்வொண்ணும் இடி மாதிரி விழும்னு கேள்வி பட்ருப்போம். அதை விக்ரம்ல அவ்வளவு மாஸா காட்டியிருப்பாங்க. குறிப்பா ஏஜெண்ட் டீனாவோட சீனை மட்டும் எடுத்துப்போம். வீட்டுக்குள்ள ரௌடிகள் வருவாங்க.. டீனா அவங்க எல்லாரையும் சமாளிக்கணும். அப்போ, வீட்டுல என்னென்ன பொருட்கள்லாம் இருக்கும்னு யோசிச்சு.. சேர், லைட் ஸ்டாண்ட், மேசை மேல இருக்குற கூஜாவைலாம் வைச்சு மாஸா அந்த ஃபைட்டை கொண்டு போய்ருப்பாங்க. ரௌடிகள் டீனாவை செமயா எத்து ஒண்னு விடுவாங்க.. சுருண்டு போய் விழுவாங்க. திரும்ப ரௌடிகள் வந்து அடிக்கும்போது, டேபிள் ஸ்பூனை எடுத்து தொண்டைலயே குத்து விடுவாங்க. கொலை மாஸ். அதுக்கப்புறம் அவங்க சாகுற வரைக்கும் அந்த ஃபோர்க் ஸ்பூன்தான் அவங்க ஆயுதம். லோகேஷ் இந்த ஐடியாவை பேப்பர்ல எழுதிடலாம். ஆனால், அதை கரெக்டா மனசுல நினைச்ச மாதிரி ஸ்கிரீன்ல கொண்டு வரணும்ல.. அங்கதான் அன்பறிவின் பிரில்லியண்ட்ஸ் தேவைப்படுது. அதுக்கப்புறம் கமல் வீட்டுக்கு வந்துடுவாரு. குழந்தைக்கு சவுண்ட் கேட்காம சண்டை போடணும். செம சேலஞ்ச்ல.. இங்கதான் அன்பறிவோட பீக் சென்ஸ் இருக்கு. நாக்கை கடிச்சுட்டு கமலை அடிக்க வருவான்.. கைய முறுக்கி நாடிலயே குத்து. நாக்கு துண்டா விழும். வரிசையா அடுத்தடுத்து வர்ற ரௌடிகளோட தொண்டையை உடைப்பாங்க. பேனா இருக்குற கப்புல அப்படியே ஆளை குத்து சவுண்ட் வராமல் அடிப்பாங்க. இப்படியேதான் போகும். கிளைமாக்ஸ்ல விஜய் சேதுபதிக்கும் கமலுக்கு நடக்குற ஃபைட் சீன்லாம் ப்பா.. சான்ஸே இல்லை. கமலை அடி பொளந்துருவாங்க. ஃபகத் ஃபாஸில் குழந்தையை தூக்கிட்டு வந்ததும் மூணு பேரும் ஒரே ஃப்ரேம்ல நிப்பாங்க. அப்போ, கமல் குத்து ஒண்ணு விடுவார்ல. த்தா.. ஃபைட்ரா! இப்படி கமலை இவ்வளவு ஸ்டைலிஷா ஆக்‌ஷன் பண்ண வைச்ச பெருமைலாம் அன்பறிவு மாஸ்டர்ஸ்க்குதான் சேரும். அவங்களோட இன்ஸ்பிரேஷனும் விருமாண்டி, தேவர்மகன்லாம்தான்.

அன்பறிவு மாஸ்டர்ஸ்
அன்பறிவு மாஸ்டர்ஸ்

அன்பறிவு மாஸ்டர்ஸ் லோகேஷ்கூட மாநகரம்ல இருந்தே வொர்க் பண்றாங்க. சாரி, அவரோட ஷார்ட் ஃபிலிம் காலத்துல இருந்தே வொர்க் பண்றாங்க. ஆனால், அதுக்கு முன்னாடி எக்கச்சக்கமான படங்கள்ல வொர்க் பண்ணியிருக்காங்க. இவங்களுக்கு எப்படி ஸ்டன்ட் மேலலாம் ஆசை வந்துருக்கும்? சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேருக்கும் ஆக்‌ஷன்னா ரொம்ப புடிக்குமாம். பாக்ஸிங், ஜிம்னாஸ்டிக்னு ஏகப்பட்ட விஷயங்களை கத்துக்கிட்டே இருந்துருக்காங்க. ஸ்டேஜ்ல ஏறி பெர்ஃபார்ம் பண்ணனும்னு ஆசை. ஆனால், பெரியவங்கலாம் சேர்ந்து, போட்டிக்குனுலாம் போனா அடிபடும். போகக்கூடாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்காங்க. அப்பவே, ரெண்டு பேரும் டேய் ஸ்டண்ட் மேனாதான் ஆகணும்னு முடிவு பண்ணி படிக்கும்போது நிறைய மாஸ்டர்ஸ்கிட்ட சேர்ந்து ஃபைட்டரா வொர்க் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. ஆரம்பத்துல ட்வின்ஸ்ல ஒருத்தருக்கு கைலாம் முறிஞ்சதும், வீட்டுல பதட்டமாகி, இனிமேல் நீங்க இந்த மாதிரிலாம் பண்ணக்கூடாது. ஒழுங்கா படிச்சு வேற வேலைக்குப் போக வழிய பாருங்கனு சொல்லிருக்காங்க. அன்பறிவு மாஸ்டர்ஸ் அப்போ சரினு சொல்லிட்டு, ஷுட்டிங் கிளம்பி போய்டுவாங்க. அடி பட்டா, அந்த காயம் குணமாகுற வரைக்கும் வீட்டுக்கே போக மாட்டாங்களாம். இப்படி முன்னணில இருந்த ஸ்டண்ட் சிவா, பீட்டர் ஹெய்ன், தினேஷ் சுப்பராயன், சில்வானு ஏகப்பட்ட மாஸ்டர்ஸ்கிட்ட வேலை பார்த்துருக்காங்க. நான் மகான் அல்ல படத்துல இவங்களும் அஸிஸ்டண்டா வொர்க் பண்ணியிருக்காங்க. அந்தப் படத்தோட கிளைமாக்ஸ் ஃபைட் அவ்வளவு ரியலிஸ்டிக்கா இருக்கும். அதுக்கு முக்கியமான காரணம் என்னனா, நான் மகான் அல்லக்கு முன்னாடி கிட்டத்தட்ட 30 மலையாள படங்கள்ல வொர்க் பண்ணிட்டாங்க. மலையாள படங்களோட ரியாலிஸ்டிக்க சொல்லவே வேணாம். அப்போ, தமிழ்ல ப்ராப்பரா ஒரு படம் பண்ணலாம்னு ஞானவேல் ராஜாகிட்ட பேசியிருக்காங்க. அவர் நான் மகான் அல்லா வொர்க் ஏற்கனவே பார்த்ததால, அட்டக்கத்தி டைரக்டர் பா.ரஞ்சித் அடுத்த படம் எடுக்குறாரு. அதுல ரியலிஸ்டிக்கா டைட்லாம் வேணும். அவரைப் போய் பாருங்கனு அனுப்பி வைச்சிருக்காரு.

Also Read – வருஷக்கணக்கா வைப்லயே வைச்சுருக்காரே.. விஜய் ஆண்டனி பெஸ்ட் பாடல்கள்!

பா.ரஞ்சித்கூட நடந்த ஃபஸ்ட் மீட்டிங்லயே செம க்ளோஸ். ஏன்னா, ரெண்டு பேரும் ஒரு படத்துக்காக அல்ரடி மீட் பண்ணி பேசியிருக்காங்க. பார்த்த பிறகு நீங்க இப்படி இங்க.. கரெக்ட்டா வந்துட்டீங்கனு பேசிருக்காங்க. மலையாள படம்லாம் பண்ணியிருக்கீங்களா.. அப்போ, சரி.. எனக்கு ரியலிஸ்டிக்கா தான் இந்தப் படத்துல ஃபைட்லாம் வேணும்னு ரஞ்சித் சொன்னதும்.. ஸ்கிரிப்ட் வாங்கிட்டுப் போய் படிச்சுட்டு சில டவுட்லாம் மார்க் பண்ணிட்டு.. திரும்ப ஆஃபிஸ் போய்ருக்காங்க. ரஞ்சித் இவங்களைக் கூப்பிட்டு, தல நேத்து கூட கேட்டாங்க. புதுசா இருக்காங்க. ஸ்டண்ட்லாம் பண்ணிடுவாங்களா.. உங்களுக்கு ஓகேவானும் கேட்டாங்க.. ஒரு நிமிஷம் இருங்கனு சொல்லிருக்காரு. புரொடக்‌ஷன் கம்பெனிக்கு ஃபோன் பண்ணி, இவங்க தான் என் படத்துக்கு மாஸ்டர்.. எனக்கு இவங்கதான் வேணும்னு சொல்லியிருக்காரு. என்ன சார், உடனே சொல்லிட்டீங்கனு அன்பறிவு கேட்டதுக்கு.. ஸ்கிரிப்ட கொடுத்த உடனே படிச்சுட்டு வந்து டவுட் கேக்குறீங்க. நீங்கதான் எனக்கு வேணும்னு சொல்லியிருக்காரு. மெட்ராஸ்ல ஸ்டண்ட்னு சொன்னா தனியா எந்த சீனும் நியாபகம் வராது. ஏன்னா, அந்தக் கதையோட அவ்வளவு மெர்ஜ் ஆகியிருக்கும். இண்டர்வெல் ஃபைட் சீன், அவ்வளவு இண்டென்ஸா இருக்கும். தெருத்தெருவா ஓடுறது.. தெருவுல சைட்ல என்னலாம் கிடைக்குமோ.. அதெல்லாம் எடுத்து அடிக்கிறது.. எல்லாமே வேறமாறி.. வேறமாறி..! கிளைமாக்ஸ் ஃபைட் சீனுமே அல்டிமேட்டா இருக்கும். ஃபுட்பால் பிளேயர்தான் காளி. கிரவுண்ட்ல ஃபைட் நடக்கும். ஃபுட்பால் ஆடுற மாதிரி நினைச்சுட்டு எல்லாரையும் அடி வெளுத்து வாங்குவாரு.. பின்னாடி, கமெண்ட்ரி மாதிரி ஓடும். செம இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். அப்புறம், கபாலில வொர்க் பண்ணியிருக்காரு. இருந்தாலும் சார்பட்டா பரம்பரை செமயா இருக்கும். ரெண்டு பேருக்கும் பாக்ஸிங்லாம் தெரியும்ன்றதால.. சும்மா வீடுகட்டி புகுந்து விளையாடியிருப்பாங்க. டான்ஸிங் ரோஸோட போர்ஷன் செமயா இருக்கும். அவங்க ஃபைட்ல கொஞ்சம் கொஞ்சமா பில்டப் ஏத்தி ஒவ்வொரு அடியா இன்கிரீஸ் பண்ணிட்டுப் போய் கடைசில நாக் அவுட் பண்றதுலா தி ரியல் ஃபைட்டர்ஸோட ஹை மொமண்ட்.

அன்பறிவு மாஸ்டர்ஸ்
அன்பறிவு மாஸ்டர்ஸ்

மெட்ராஸ் படத்துல இவங்க போட்ட ஹார்ட் வொர்க்தான் பான் இந்தியா அளவுல கொண்டாடப்பட்ட யஷ்-ன் கே.ஜி.எஃப் படத்துக்கு இவங்களை கூட்டிட்டுப் போச்சுனு சொல்லணும். நேரா கே.ஜி.எஃப் செட்டுக்குதான் போய்ருக்காங்க. போனதும் பேசிட்டு வேலையை ஆரம்பிக்க சொல்லியிருக்காங்க, ஒரு தடவை செட்டை சுத்திட்டு வரோம்னு அன்பறிவு சொல்லிட்டு, சுத்திட்டு வந்து பிளான்ஸ் சொல்லியிருக்காங்க. பிரஷாந்த் நீல் எந்த கரெக்‌ஷனும் சொல்லாமல் டபுள் ஓகேனு சொல்லியிருக்காரு. இப்படிதான் ஸ்டார்ட் ஆகியிருக்கு. அந்த படத்துல ஹீரோவை பில்டப் பண்ண சீன்ஸ் இருக்கு, மாஸான டயலாக்ஸ் இருக்கு, பாட்டு வரிகள் இருக்கு, மியூசிக் இருக்கு.. அப்போ, ஃபைட்னு ஒண்னு வந்தா, இது எல்லாத்தையும் தூக்கி சாப்பிடுற மாதிரி தான இருக்கணும்? யோசுச்சுப் பாருங்க.. அப்போ.. ஸ்டண்ட்ஸ்லாம் எவ்வளவு மாஸா இருக்கணும்னு. அதை நம்ம இரட்டையர்கள் தட்டி தூக்கிட்டு வந்துட்டாங்கனுதான் சொல்லணும். சுரங்கத்துக்குள்ள நடக்குற ஃபைட்லாம் பியூரா தீ வெளிச்சத்தை மட்டுமே வைச்சு ஷுட் பண்ணியிருக்காங்க, இண்ட்ரோ ஃபைட் சீன், மே ஐ கம் இன்னு சொல்லிட்டு பார்குள்ள நடக்குற துப்பாக்கி ஃபைட் எல்லாமே சும்மா புழுதி பறக்கும். பார்ட் – 2லயும் அதிராகூட போடுற ஃபைட்லாம் ங்கொய்யால போட்ரான்ற மோட்லதான் இருக்கும். கே.ஜி.எஃப் படத்துக்கு அன்பறிவு மாஸ்டர்ஸ் நேஷனல் அவார்டும் வாங்கியிருக்காங்க. எல்லாம் பேசிட்டு அவங்க 100 வது படத்தை பேசாமல் விட்டா தப்புல.. அதாங்க கைதி. பத்து வருஷம் உள்ள இருந்தேன்னு தான தெரியும்.. உள்ள போறதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தேன்னு தெரியாதுலனு இறங்கி வந்து வேட்டியை மடிச்சுக் கட்டி ஃபைட் ஒண்ணு போடுவாருல.. கூஸ்பம்ப்ஸ். எல்லாம் நம்ம அன்பறிவு மாஸ்டர்ஸ் பண்ண வேலைதான். அப்புறம் பீஸ்ட், டாக்டர், சிங்கம் 3, 24, தடம், ஜெய் பீம்னு ஏகப்பட்ட படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர்ஸா வொர்க் பண்ணிட்டு இருக்காங்க. அவங்கக்கிட்ட இருக்குற மிகப்பெரிய பிளஸ், புதுசா ஃபைட் சீனுக்கு தேவையான விஷயங்களை இறக்கமாட்டாங்க. அந்த சிச்சுவேஷன்ல என்னென்ன பொருள் இருக்குமோ.. அதையே ஆயுதமா மாத்தி ஃபைட் பண்ணுவாங்க. அது இன்னும் நம்மள கனெக்ட் ஆக்கும். பீஸ்ட்ல டோர், விக்ரம்ல ஷீல்டு, டாக்டர்ல டாக்டர்ஸ் வெப்பன்ஸ்னு சொல்லிட்டே போகலாம். இந்தியாலயே இப்போ மோஸ்ட் வாண்டன் மாஸ்டர்ஸா மாறியிருக்காங்க. வெயிட்டிங் ஃபார் லியோ!

அன்பறிவு மாஸ்டர்ஸ் பண்ண ஃபைட் சீன்ஸ்ல உங்களோட ஃபேவரைட் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top