சூர்யவம்சம்

காலம் கடந்து நிற்கும் சூர்யவம்சம் – மேஜிக் இதுதான்!

1997 காலகட்டம் அது. அப்போ டூரிங் டாக்கீஸ்கள் அதிகமா இருந்தது. அப்போலாம் நல்லா ஓடுற படம் செகண்ட் ரிலீஸ் டூரிங் டாக்கீஸ்லதான். அப்படி சின்ன வயசுல இருந்தப்போ அப்பா குடும்பத்தையே கூட்டிட்டு ஒரு படத்துக்குப் போனார். அன்னைக்குதான் கடைசி நாள் போல, கூட்டம் ரொம்பவே அதிகமா இருந்தது. மொத்தக் கூட்டம் உள்ளே வர முயற்சி செய்ததால, ஷோவைக் கேன்சல் பண்ணிட்டாங்க. அங்க இருந்து திரும்புன கூட்டத்தோட முகங்கள் இன்னும் நியாபகத்துல இருக்கு. முகத்துல அவ்ளோ கவலையோட திரும்பிச்சு அந்த முகங்கள். அதுக்குப் பின்னால வேற படம் ரிலீஸ் ஆச்சு. ஆனா, அது சரியா போகாததால என்னவோ, ஒரு வாரம் கழிச்சு மறுபடியும் சூர்யவம்சமே ரிலீஸ் ஆனது. இந்த முறை ’10 நபர்கள் வந்து பார்க்குற வரைக்கும் காட்சிகள்’ங்குற அறிவிப்போட, கூட்டத்தைக் கட்டுப்படுத்துறதுக்காக கூட இருக்கலாம். ஆனா, அப்புறமா அந்த படத்தை தியேட்டர்ல இருந்து தூக்க இரண்டு மாசத்துக்கு மேல ஆச்சு. முழுக்கவே ரிப்பீட் ஆடியன்ஸ்தான்… இப்படி நகரங்கள்ல இருந்து கிராமம் வரைக்கும் பல சம்பவங்களை செஞ்சு தெறிக்கவிட்ட சூர்யவம்சம் படத்தைப் பத்திதான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம். இத்தனை வருஷத்துக்கப்புறம் என்ன புதுசா சொல்லப் போறேனு நீங்க நினைக்கலாம்.  ஆனா, புதுசா சில விஷயங்களும் இருக்கு.  

சாதனைகள்!

விக்ரமன் – ஆர்.பி செளத்ரி கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். முதல்முதலா தன்னை அறிமுகம் செய்தவர்ங்குறதாலே என்னமோ, ஆர்.பி.செளத்ரிக்குனு ஒரு மெனக்கெடல் இருக்கும். அந்த மெனக்கெடல்ல நடந்த மேஜிக்தான் சூர்யவம்சம். மொழிபெயர்க்கப்பட்ட எல்லா படங்களுக்கும் பேரு சூர்யவம்சம்தான் வச்சாங்க. அதே மாதிரி தமிழ் தொலைக்காட்சி வரலாற்றுல ப்ரைம் டைம்ல அதிகமா டெலிகாஸ்ட் ஆன, டெலிகாஸ்ட் ஆகிட்டு இருக்குற, டெலிகாஸ்ட் ஆகப்போற சினிமான்னா அது சூர்யவம்சம்தான். நாட்டாமையில் இமயமலை மேல ஏற ஆரம்பிச்சவரை அலேக்கா தூக்கி எவெரெஸ்ட் சிகரத்தோட உச்சியில அமர வைத்தது சூர்யவம்சம். ஒரு படம் ஏன் ஓடுது, எதுக்கு ஓடுதுனே காரணம் தெரியாம ஓட வச்சது விக்ரமனோட ஸ்கிரீன்பிளே மேஜிக்.

மோர் ஒன்லைன்ஸ்!

ஒவ்வொரு ஆணோட வெற்றிக்குப் பின்னாடி ஒரு பெண் இருக்காங்கனு சொல்றது வழக்கம். ஆனா, ஒரு பெண்ணோட வெற்றிக்குப் பின்னால ஒரு ஆண் இருப்பார்னு ஒரு ஒன்லைன் இருக்கும். அதை தமிழ்சினிமாவுல அழுத்தமா சொன்னது சூர்யவம்சம்தான். இதை ஒரு டயலாக்காவே படத்துல வச்சிருப்பாரு, விக்ரமன். அதேபோல காதலி வேண்டாம்னு சொன்ன ஒருத்தன் வாழ்க்கையில முன்னேறுறது, அப்பா மகனாவே நினைக்காத ஒருத்தனை அப்பா என் மகன்னு பெருமையா சொல்ல வைக்குறது, பெண் நினைச்சா ஒருத்தரை சமுதாயத்துல முன்னேத்தலாம்னு பல ஒன்லைன்கள் ஒளிஞ்சு கிடைக்குது.

பாடல்கள்!

அன்னைக்கு விழாக்கள்ல அதிகமா ஒலிச்ச பாடல்கள் சூர்யவம்சம் பாட்டுக்கள்தான். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில பாடல்கள் இன்னைக்கு கேட்டாலும் சொக்க வைக்குற ரகம். அதுவும் நட்சத்திர ஜன்னலில்ங்குற ஒரே பாட்டுல வாழ்க்கையில முன்னேறி வர்றது விக்ரமனோட அக்மார்க் முத்திரை. அந்த பாட்டுலகூட நிறைய சம்பவங்களை ஓடவிட்டு ஒரு 5 வருசம் பாஸ்ட் பார்வேர்டுல போன மாதிரி இருக்கும். படத்தோட பர்ஸ்ட் ஆஃப்ல ஒரு கல்யாணத்துல முன்னால் காதலி கெளரி, சின்ராசை அசிங்கப்படுத்தியிருப்பாங்க. அப்புறமா நட்சத்திர ஜன்னலில் பாட்டுல காதலி கலந்துக்குற கல்யாணத்துல சரத்குமார் வரும்போது மக்கள் எல்லோரும் எந்திரிச்சு நிப்பாங்க. வணக்கம் வச்சிட்டு நடந்து வந்து திரும்பி கெளரியை ஒரு லுக் விடுவாரு. அப்போ ‘வானம்பாடி வாழ்விலே வருந்தி அழுவதில்லை, வணங்கி விழுவதில்லலை’னு சிச்சுவேஷன்கு ஏத்த மாதிரி வரியும் இருக்கும். அந்த ஒரு செகண்ட் ஷாட் ஆயிரம் அர்த்தம் சொல்லும். அதே மாதிரி ரோசாப்பூ பாட்டு பர்ஸ்ட் ஆஃப்ல சோகம், சந்தோஷம், ஏக்கம்னு  மூணு சிச்சுவேஷன்ல வரும். அந்த பாட்டை கடைசியா தேவயானி பாடுற மாதிரி காட்டியிருப்பாங்க. மியூஸிக் டைரக்டர் எஸ்.ஏ.ராஜ்குமார், ரொம்ப ஸ்லோவான அந்த பாட்டை இத்தனை இடங்கள்ல வைக்க வேணாம்னு சொல்லியும் விக்ரமன் பிடிவாதமா இருந்தார். தேவயானி திடீர்னு பாட முடியாது. அதுக்கு சின்ராசு பாடுறதை முன்னாடியே கேட்டிருக்கணும். அதுக்குத்தான் முதல்ல சின்ராசு பாடட்டும், அதுல காதலியோட நினைப்புல பாடுற மாதிரி இருக்கட்டும், இரண்டாவது காதல்ல சின்ராசும் கெளரியும் பாடுற மாதிரி இருக்கட்டும், மூணாவதா சின்ராசை காதலிக்குற தேவயானி பாடுற மாதிரி இருக்கட்டும்னு விக்ரமன் சொல்லி கன்பார்மா ஹிட்டடிக்கும்னும் சொல்லியிருக்கார். சொல்லி வச்ச மாதிரி மூணு இடங்கள்ல பாட்டு வந்தும் போரடிக்கல.

மீம் டெம்ப்ளேட்

 ‘சின்ராசை கையிலயே பிடிக்க முடியது’, பாயாசம் சாப்டுறீங்களா ப்ரெண்ட், எங்கப்பாவுக்கு நான் புள்ளையா பொறந்ததுக்கு நான்தான் தவம் பண்ணியிருக்கணும், கார்ல ஏறும்போது மரிக்கொழுந்து வாசம் வந்ததுடா, பரவால்ல ப்ரெண்ட் யாராவது வேணும்னே மை ஊத்துவாங்களானு ஏகப்பட்ட காட்சிகள் இன்னைக்கும் மீம்டெம்ப்ளேட்டா யூஸ் ஆகிட்டு இருக்கு. இதுபோக சூர்யவம்சம் மூலமா பேமஸ் ஆனதுல இட்லி உப்மாவும் ஒன்னு. இட்லி உப்மா பத்தி அன்னைக்கு காலக்கட்டத்துல பெண்கள் பேசாத இடமே கிடையாது.

நாட்டாமை தாக்கம்!

சூர்யவம்ச குடும்பத்தை அழிக்க நினைக்குற மிரட்டலான வில்லன் ஆனந்தராஜ் இருந்தும்கூட படத்துல ரெண்டு பைட்டுதான். பைட்டு நமக்கு முக்கியம் இல்லனு நினைக்குற விக்ரமன், அதுக்கு முன்னால வந்த நாட்டாமையோட தாக்கத்தால ரெண்டு பைட் சீன்ஸ் இருக்கும். இல்லைனா அதைக் கூட வச்சிருக்கமாட்டாரு விக்ரமன்.

ஹியூமர்!

படத்துல இருந்த ஹியூமர் சீன்ஸ் எல்லாமே ரியல் லைப்ல கேள்விப்பட்ட இன்சிடண்ட்கள்தான். உதாரணமா மணிவன்னனும், சுந்தர்ராஜனும் ஒண்ணா தண்னி அடிக்கிற சீன் நிஜமா நடந்த சீன். நிறைய ப்ரொடியூசர்ஸ் குற்றாலம் போய்ட்டு திரும்பி வர்றப்போ டிரெயின்ல நடந்த சம்பவம் அது. அதைக் கேள்விப்பட்ட விக்ரமன் தன்னோட படத்துல மாத்தி வச்சுக்கிட்டார்.  திருநெல்வேலியில காலேஜ்ல படிக்கிறப்போ விக்ரமன் பஸ்ஸ்டாண்ட்ல பண்ற அலப்பறைதான், மணிவண்ணன் பஸ் ஸ்டாப்ல நின்னு கலாய்க்கிற மாதிரி மாத்தி படத்துல வச்சிருப்பார், விக்ரமன்.  இப்படி பல காட்சிகள் ரியல்லைப்ல இருந்து எடுத்து வச்சிருக்கார்.

என்னடா புதுசா சொல்றேன்னு சொல்லிட்டு உருட்டுறனு நீங்க நினைக்கிறது புரியுது. ஆனா, சூர்யவம்சம் பத்தி பேசும்போது இதெல்லாம் பேசித்தானே ஆகணும். உங்களுக்கு சூர்யவம்சம்னா என்ன தோணுதுனு கமெண்ட்ல சொல்லுங்க மக்களே..

Also Read: `மொரட்டு சிங்கிள்களின் முன்னோடி’ – `மௌனம் பேசியதே’ கௌதம்!

1 thought on “காலம் கடந்து நிற்கும் சூர்யவம்சம் – மேஜிக் இதுதான்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top