மிஷ்கின் மியூஸிக் டைரக்டர்ஸ்

கண்ணதாசன் காரைக்குடி, குடி வாழ்த்து.. மிஷ்கின் மியூசிக் டைரக்டர்ஸின் தரமான பாடல்கள்!

மிஷ்கின் பட பாடல்களுக்கே செமயான ஃபேன் பேஸ் இருக்கு. ஒருபக்கம்.. கண்ணதாசன் காரைக்குடி, கத்தாழ கண்ணால, பார் ஆந்தம், வாள மீனுக்கும் விலங்க மீனுக்கும், கன்னித்தீவு பொண்ணானு குத்தாட்டம் போட வைச்சு வைப்லயே வைச்சிருக்குற பாடல்கள், இன்னொரு பக்கம்.. தாலாட்டு கேட்க நானும், போகும் பாதை, ஒண்ணுக்கொண்னு துணை இருக்கும் உலகத்துலனு அழ வைக்கிற பாடல்கள் இருக்கும். இந்த பாட்டுக்குலாம் மியூசிக் டைரக்டர்ஸ் யாரு? அவங்க வேற என்ன படம்லாம் மியூசிக் போட்ருக்காங்க?

மிஷ்கின்

மிஷ்கின் மியூஸிக் டைரக்டர்ஸ்

சுந்தர் சி பாபு

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்கள்ல தரமான சம்பவங்களை பண்ணது இவர்தான். மியூசிக் பின்னணில இருந்து வந்ததால சுந்தர் சி பாபுவுக்கு மியூசிக் மேல மிகப்பெரிய ஆர்வம் இருந்துச்சு. ஆளவந்தான் உட்பட பல படங்கள்ல பிரபல மியூசிக் டைரக்டர்ஸ்கூட சேர்ந்து வொர்க் பண்ணியிருக்காரு. குறிப்பா, ஆளவந்தான் பி.ஜி.எம்லா இவர் பண்ணதுதான். அந்த நேரத்துலதான் மிஷ்கின் தன்னோட படத்துக்கு ஃபேமஸ் ஆகாத மியூசிக் டைரக்டர்ஸ் யாரயாவது புடிக்கணும்னு தேடிட்டு இருந்துருக்காரு. அப்போ, அவருக்கு கிடைச்ச தங்கம் தான் சுந்தர் சி பாபு. சித்திரம் பேசுதடிதான் அவரோட முதல் படம். அந்தப் படத்துல வந்த வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாட்டு இன்னைக்கும் பலரோட ஃபேவரைட்தான். என்ன மாதிரி மியூசிக் பண்ணலாம்னு டிஸ்கஷன் அப்போ, புரியுற மாதிரி நல்ல கானா பண்ணனும்னு மிஷ்கின் – கபிலன்லாம் முடிவு பண்ணி. கானா உலகநாதனை வரவைச்சிருக்காங்க. அவர்கிட்ட இந்தப் பாட்டுல கதை இருக்கணும் அப்டினு சொல்லியிருக்காங்க. உலகநாதன் ஏற்கனவே, அந்தப் பாட்டை வைச்சிட்ருந்துருக்காரு. கரெக்ட்டா வாய்ப்பு கிடைச்சதும் பிளேஸ் பண்ணியிருக்காங்க. இந்தப் பாட்டுலாம் ஹிட்டே ஆகாதுனு கேட்ட எல்லாரும் சொல்லியிருக்காங்க. மிஷ்கின் கான்ஃபிடன்ஸா பந்தயம் அடிக்கும்னு சொல்லி இறக்கியிருக்காரு. அவர் சொன்ன மாதிரி இந்தப் பாட்டு இன்டஸ்ட்ரி ஹிட்டு. அந்தப் படத்துல வேற பாட்டுலாம் அவ்வளவு நல்லா இருக்காது. ஆனால், ஹென்ச்மேன் தீம், வாய்ஸ் ஆஃப் ஹார்ட் தீம்லாம் அட்டகாசமா இருக்கும். இந்தப் படத்தை ரெண்டு தடவை ரிலீஸ் பண்ணாங்க. முதல் ரிலிஸ்ல ஃப்ளாப். ரெண்டாவது ரிலீஸ்ல படம் 100 நாள் ஓடியிருக்கு. குறிப்பா அந்த வாள மீனுக்கும் பாட்டுக்காகவே இந்தப் படத்தை நிறைய பேர் பார்த்துருக்காங்க.

அஞ்சாதே.. மிஷ்கின், நரேன், சுந்தர் சி பாபுனு எல்லாரோட கரியர்லயுமே முக்கியமான படம். சித்திரம் பேசுதடில ஒரு பாட்டைத் தவிர வேற எதுவும் நல்லாருக்காதுனு சொன்னேன்ல.. ஆனால், அஞ்சாதே படத்துல எல்லாமே செமயா இருக்கும். ஒவ்வொரு பாட்டையும் அவ்வளவு எஞ்சாய் பண்ணி சுந்தர் சி பாபு போட்ருக்காரு. மிஷ்கின் செம டீட்டெயிலா சீன்ஸ் எல்லாத்தையும் எக்ஸ்பிளெயின் பண்ணியிருக்காரு. எந்த அளவுக்குனா கண்ணதாசன் காரைக்குடில வாந்தி எடுக்குற சவுண்ட் வரைக்கும். அந்த சவுண்டை வைச்சுதான் மியூசிக்கே பண்ணியிருக்காரு. அப்புறம் கபிலன் வரிகள் எழுதியிருக்காரு. அந்தப் பாட்டு வரி சர்ச்சையாச்சு. கண்ணதாசனைப் பத்தி இப்படிலாம் எழுதுறீங்கனு எம்.எஸ்.வி உட்பட பலரும் திட்டினதும், கபிலன்.. அந்த கண்ணதாசன் பரமக்குடி.. நாங்க எழுதுனது காரைக்குடினு சொல்லி சமாளிச்சிருக்காரு. மிஸ்கின் வைப்ஸ்ல கண்ணதாசன் காரைக்குடிக்கும் இன்னொரு பாட்டுக்கும் எப்பவும் ஸ்பெஷலான இடம் உண்டு. இன்னொரு பாட்டு என்னனு சொல்றேன். வெயிட் பண்ணுங்க. கத்தாழ கண்ணால குத்தாத பாட்டும் செம வைப் ஒண்ணை கிரியேட் பண்ணிவிடும். விஜய் தன்னோட படத்துல இந்த மாதிரி பாட்டு ஒண்ணு இருக்கணும்னு ரொம்ப நாளா ஆசைபட்ருக்காரு. எல்லா மியூசிக் டைரக்டர்கிட்டயும் இந்தப் பாட்டை ரெஃபரன்ஸ்க்கு சொல்லுவாரு. அந்தப் படத்துல மனசுக்குள் மனசுக்குள்னு மெலடி ஒண்ணு போட்ருப்பாரு. ப்பா.. செம ஃபீல் கொடுக்கும். அஞ்சாதேல நிறைய மியூசிக் இன்டன்ஸா இருக்கும். மியூசிக் சீனை எலிவேட் பண்ணும்னு சொல்றதையெல்லாம் மிஷ்கின் படத்துல பார்க்கலாம். அஞ்சாதேவும் பெஸ்ட் எக்ஸாம்பிள். மியூசிக் அன்டர்பிளே பண்ணனும், அப்போதான் டச் ஆகும்னு சுந்தர் சி பாபு சொல்லுவாரு. அவரோட எல்லா படங்களும் அப்படிதான். அவரோட இன்னொரு ப்ளாக்பஸ்டர் ஹிட் படம்னா நாடோடிகள்தான்.

ஒருநாள் திடீர்னு எல்லாமே ஆஃப் ஆன மாதிரி இருக்கும். அந்த நேரத்துல சம்போ சிவ சம்போ கேட்டா சும்மா வேறமாதிரி அந்த நாளை மாத்தி விட்ரும். படமே வேகமா போற படம்தான், அதை அந்த ஒரு பாட்டு இன்னும் வேகமா எடுத்துட்டுப் போய்ருக்கும். படத்துல முதல்ல சமுத்ரகனி திருவிழா பாட்டு கேட்ருக்காரு. ஆனால், இந்தப் பாட்டுதான் வந்துருக்கு. அதை போட்டு காமிச்சதும் கூஸ்பம்ப்ஸ் ஆகி ட்யூனை வாங்கிட்டுப் போய் அந்த மியூசிக்கை போட்டுதான் ஷூட்லாம் பண்ணியிருக்காங்க. அப்படி ஒரு பாட்டு அது. ஆடுங்கடா பாட்டு அடுத்த மாஸ் பாட்டு. விஷூவலாவும் செம ஃபீலிங்கை அந்தப் பாட்டு கொடுக்கும். அதுக்கப்புறம் பெருசா வெளிய சொல்ற மாதிரி மியூசிக் எதுவும் அவர் பண்ணல.

கிருஷ்ண குமார் (கே)

பி.சி.ஸ்ரீராமோட அஸிஸ்டண்ட் சாவின்ற படம் எடுத்தாரு. அந்தப் படத்துக்குதான் முதல்ல கிருஷ்ண குமார் மியூசிக் பண்ணாரு. அப்புறம் நிறைய விளம்பரங்கள், ஷார்ட் ஃபிலிம்ஸுக்குலாம் மியூசிக் பண்ணிருக்காரு. கிருஷ்ண குமாருன்ற கே-வை சின்ன வயசுல இருந்தே மிஷ்கினுக்கு தெரியும். மிஷ்கின் அவங்கப்பாவைப் பார்க்க போகும்போதுலாம் கீ போர்டு வாசிச்சுட்டு இருப்பாராம். அப்பவே, எம்படத்துக்கு நீ மியூசிக் பண்றனு சொல்லியிருக்காரு. கேவோட அப்பாவும் இவரும் லைப்ரரில மீட் பண்ணி ஃப்ரண்ட்ஸ் ஆகியிருக்காங்க. ரெண்டு பேரும் நிறைய புக் பத்தி பேசுவாங்களாம். அப்புறம் கிருத்திகா உதயநிதி, சசிகுமார், மிஷ்கின்லாம் சேர்ந்து எடுத்த ஷார்ட் ஃபிலிம்ல இவரு மியூசிக் பண்ணியிருக்காரு. அப்புறம் யுத்தம் செய் படத்துக்காக மியூசிக் பண்ண கூப்பிட்ருக்காரு. கன்னித்தீவு பொண்ணானு பாட்டு போட்டு.. கண்ணாபின்னானு நம்மள வைப் பண்ண வைச்சிருப்பாரு. ஆராரோ ஆரிரோனுன்ற பாட்டு எத்தனை பேருக்கு நியாபகம் இருக்கும்னு தெரியல. கேட்டதும் வித்தியாசமான ஃபீல் ஒண்ணை நமக்குள்ள ஏற்படுத்தும். அதை மிஷ்கினே வேற பாடி அசத்தியிருப்பாரு. கபிலன் ஜெம்.. வரிகள்லாம் அவ்வளவு எமோஷனலா இருக்கும். டார்க் தீம், பாண்டோரா தீம், பாக்ஸ் தீம், கோஸ் ஆன் தீம், ஆர்டர் தீம், தி லாஸ்ட் ரிசார்ட் தீம்னு எல்லா தீமும் பின்னியிருப்பாரு.

கே கரியர்ல முக்கியமான ஆல்பம் முகமூடிதான். தமிழ் சினிமால மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில இந்தப் படம் வெளியாச்சு. ஆனால், செம ஃப்ளாப். படம்தான் ஃப்ளாப். பாட்டுலாம் வேறமாறி இருக்கும். குடி வாழ்த்து இல்லைனா பார் ஆந்தம்னு சொல்ற பாட்டு ஒண்ணு இருக்கு. இந்தப் பாட்டுக்கு முதல்ல நிறைய ட்யூன்ஸ் போட்ருக்காங்க. ஒருகட்டத்துல வேணாம் இந்த பாட்டுனு முடிவு பண்ணியிருக்காங்க. அப்புறம் செம ட்யூன் ஒண்ணு சிக்கியிருக்கு. அதுக்கு மிஷ்கினே லிரிக்ஸும் எழுதியிருக்காரு. பாட்டைக் கேட்டுட்டு எல்லாரும் செம ஹேப்பி. பார் ஆந்தம்னு சொன்னதாலயே அதை அவங்கதான் கொண்டாடனும்னு இல்லை. எல்லாருமே செலிபிரேட் பண்ற மாதிரிதான் மியூசிக் பண்ணியிருப்பாரு. ஸ்லோ பாய்சன் வைப்னா என்னனு தெரியணும்னா.. அதுக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள் இந்தப் பாட்டுதான். ஒவ்வொரு வரியும் சின்ன சின்ன மியூசிக் சவுண்டும் நிறைய அர்த்தங்களை அந்தப் பாட்டுல கொடுக்கும். ஆட்டம் போடாத சந்தோஷமா, ராஜா இல்லாத சங்கீதமானு லைன் முடிஞ்சதும் ஒரு வயலின் மியூசிக் வரும்ல.. கே நீங்க வேற லெவல். அந்த இன்னொரு ஸ்பெஷல் பாட்டு இதுதான். வாயை மூடி சும்மா இருடா அப்படியே நம்மள போட்டு தாக்குற மெலடி. அதுவும் பாட்டு முடியும் போது வர்ற கோரஸ்லாம் செமயா இருக்கும். மிஷ்கின் படங்கள்ல தீம் எப்பவும் இன்டன்ஸா இருக்கும். முகமூடிலயும் லாஸ் லல்லபி, மாயாவி ஃப்ளூட், ப்ளூ பாந்தர் ஆன் தி ப்ரால், டோண்ட் டிரைவ் யுவர் கார் வித் திஸ், கேப் ஆஃப் குட்ஹோப், ஹெல் ஹெவன் அண்ட் தி லேடர்னு டைட்டிலுக்கு ஏத்த மாதிரி எல்லா தீமும் வேற மாறி இருக்கும்.

கே தமிழ் சினிமால மட்டுமில்ல மலையாள சினிமாலயும் பல தரமான சம்பவங்களை பண்ணியிருக்காரு. மலையாள மக்கள் மட்டுமில்ல தமிழ் மக்களும் கொண்டாடுன ஒரு படம் அன்னயும் ரசூலும் அந்த படத்துக்கு கேதான் மியூசிக் பண்ணாரு. கண்டு ரெண்டு கண்ணு பாட்டுலாம் செம ஹிட்டு. டார்க்கான காதல் படம். அந்த இண்டன்ஸ அப்படியே மியூசிக்ல எடுத்துட்டு வந்து நம்மள ஃபீல் பண்ண வைச்சிருப்பாரு. அப்புறம் கம்மட்டிப்பாடம். பாட்டைவிட தீம்லாம் இந்தப் படத்துல கூஸ்பம்ப்ஸ்தான். டெரரான படம், அதை உணர்ந்து சும்மா மியூசிக்ல விளையாடியிருப்பாரு. இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய பெயர் வாங்கிக்கொடுத்துச்சு. தமிழ்ல 49 ஓ, கிருமி, அம்மிணி, ஆண்டவன் கட்டளைனு நிறைய நல்ல படங்களை கொடுத்துருக்காரு. கள்ள படம்ல நடிக்கவும் செய்துருக்காரு.

அரோல் கரோலி

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பார்த்துட்டு மிஷ்கினை எப்படியாவது மீட் பண்ணனும்னு ட்ரை பண்ணிட்டே இருந்துருக்காரு. கடைசில மீட் பண்ண சான்ஸ் கிடைச்சதும், கம்போஸ் பண்ண மியூசிக் சி.டிலாம் எடுத்துட்டு மிஷ்கின்கிட்ட போய்ருக்காரு. நான் உன் சி.டிலாம் கேட்க மாட்டேன். இந்த சிச்சுவேஷனுக்கு தீம் கம்போஸ் பண்ணிட்டு வானு அனுப்பி விட்ருக்காரு. அந்த தீம் மிஷ்கினுக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அடுத்து இன்னொரு சிச்சுவேஷன் சொல்லிருக்காரு. அந்த தீமும் அவருக்கு புடிச்சிருக்கு. உடனே, நீதான் என்னோட அடுத்த படத்துக்கு மியூசிக் டைரக்டர்னு சொல்லியிருக்காரு. அந்தப் படம்தான் பிசாசு. ஒரு பேயை லவ் பண்ண வைச்ச பெருமைலாம் மிஷ்கினுக்குதான் சேரும். அந்த பேய்க்கு அழகான ஃபீல்குட் மியூசிக் போட்டு நம்மள ஃபீல் பண்ண வைச்சது அரோல் கரோலிதான். அந்தப் படத்துல ஒரோயொரு பாட்டுதான். போகும் பாதையில்.. உத்ரா பாடியிருப்பாங்க. அந்த வாய்ஸ் நம்ம உயிரை உருக்குனாலும். இடைல வர்ற வயலின் மியூசிக் நம்மள என்ன பண்ணனும்ன்ற கரெக்டான ஃபீலிங்கை சொல்லவே முடியாது. கிளைமாக்ஸ்ல அந்த ஆவி வந்து கார்குள்ள போய் எரியும்போது பி.ஜி.எம் ஒண்ணு போட்ருப்பாரு பாருங்க. நம்ம உடம்புலாம் அப்படி சிலிர்த்துரும். கண்ணுல தண்ணி கொட்டும், அடுத்து பிசாசு 2க்கும் அவர்தான் பண்றாரு. துப்பறிவாளன்லயும் இவர்தான் மியூசிக். ஆனால், பாட்டுலாம் பிசாசை கம்பேர் பண்ணி பார்த்தா கம்மிதான். பசங்க 2, சவரக்கத்தி, அண்ணனுக்கு ஜே, இக்லூ, லாக்கப் படங்களுக்குலாம் மியூசிக் பண்ணியிருக்காரு.

Also Read -வசீகரா, உனக்குள் நானே, ஒன்றா ரெண்டா ஆசைகள்… இதெல்லாம் பாம்பே ஜெயஸ்ரீ பாடுனதா?!

இளையராஜா

மிஷ்கினோட சிச்சுவேஷன் எல்லாமே வித்தியாசமானதா இருக்கும். அதுக்குலாம் இளையராஜா மியூசிக் போட்டது பத்தி தனியா பேசணுமா என்ன? நந்தலாலா படத்துல தீம் மியூசிக், தாலாட்டு கேட்க நானும், ஒண்ணுக்கொண்ணு பாட்டுலாம் செமயா இருக்கும். ஓநாயும் ஆட்டுக்குட்டியும்ல பாட்டு கிடையாது. எல்லா தீமும் நல்லாருக்கும். அதுவும் சுடுகாட்டுல உட்கார்ந்து கதை சொல்ற சீன்லலாம் சான்ஸே இல்லை. சைக்கோ படம், இளையராஜாவுக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்லா பாட்டு போட்ருக்காருலனு பெயர் வாங்கிக்கொடுத்த படம். இப்படி இளையராஜா காம்போவும் செமயா இருக்கும். ஆனால், மத்த மியூசிக் டைரக்டர்ஸ் எல்லாரையும் மிஷ்கின் அறிமுகப்படுத்தியிருப்பாரு. அதுதான் ஸ்பெஷலே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top