நயன் – விக்கி ஜோடிக்கு சீனியர் இந்த 5 ஜோடிகள்தான்!

Actually நயன் – விக்கி காதல் கதை எல்லாருக்கும் தெரிஞ்சது தான்.. ஒரு Fan Boy-அ நானும் ரௌடி தான் கதை சொல்லப்போனேன்.. அவங்க கதை ஓகே பண்ணலைநாலும் ஓகே.. ஒரு 2 மணி நேரம் கூட இருந்தா போதும்னு நினைச்சேன் அது மட்டுமா அவங்களை பார்க்க போகும் போது கொஞ்சம் படபிடிப்பா இருந்துச்சுனு க்யூட்டா சொல்லிருப்பாரு விக்கி.. இவங்களோட லவ் எப்படி வெளிய தெரிஞ்சுச்சு தெரியுமா?  ஒரு ஸ்டேஜில மன்சூர் அலிகான் போட்டுக்கொடுத்தாரு.. நாங்க எல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்ல உச்சி வெயில ஓடிட்டு இருப்போம்.. ஆனா 2 சிட்டு குருவி மட்டும் மணிக்கணக்கா பேசிட்டு இருக்கும்னு போட்டு விட்டாரு.. அப்பறம் நடந்தது லாம் நமக்கு தெரியுமே!

நயன் - விக்கி
நயன் – விக்கி

இப்போ ட்ரெண்டிங்ல இருக்கிற நயன் – விக்கிக்கு முன்னாடி ஷூட்டிங் ஸ்பாட்ல க்யூட்டா கெமிஸ்ட்ரி வொர்க் ஆகி ரியல் லைஃப்ல கல்யாணம் செஞ்ச இயக்குநர் – நடிகைகள் நிறைய பேரு இருக்காங்க பாஸ். அவங்களை பத்தி தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

பூர்ணிமா – பாக்யராஜ்! 

சினிமாவுல ரெண்டு பேரும் பிஸியா இருந்த நேரத்துலதான் பாக்யராஜ், பூர்ணிமாவை பொண்ணு கேட்டு போய்ருக்காரு. “என்ன சொல்லப்போறாங்கனு உள்ளுக்குள பயம்”னு பாக்யராஜ் ஒருபக்கம் படபடப்போட இருக்க… இன்னொரு பக்கம் பூர்ணிமா, “அவரு படத்துல எப்படியாவது நடிச்சே ஆகணும்”னு ஆசையோட இருக்க… இரண்டு பேரும் ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்துல மீட் பண்ணும்போது கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகி கல்யாணம் வரைக்கும் போய்டுச்சு. ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி கிட்டதட்ட 38 வருஷம் ஆகியிருந்தாலும், “நாங்க இன்னும் யங் லவ்ர்ஸ்தான்”னு பாக்யராஜ் சொல்ல, “எல்லா நாளும் காதலர் தினம்தான்”னு பூர்ணிமா ஒருபக்கம் கொண்டாட, அவங்க வாழ்க்கை ஜாலியோ ஜிம்கானாவா போகுது.

பூர்ணிமா - பாக்யராஜ்
பூர்ணிமா – பாக்யராஜ்

குஷ்பூ – சுந்தர்!

கோலிவுட்டின் ஃபேவரைட் Couple – Actually இவங்க காதலிச்சதே நிறைய பேருக்கு தெரியாதாம்.. கல்யாணம் ஆயிடுச்சுனு நியூஸ் கேட்ட அப்பறம் எல்லாருக்கும் பயங்கர ஷாக்.. 1995 ல முறை மாமன் ஷூட்டிங்ல இருந்தப்போ ஒரு நாள் லவ் எப்படி சொல்றதுனு யோசிச்ச சுந்தர் சி நேர குஷ்பு கிட்ட ” நமக்கு குழந்தை பொறந்தா உன்னை மாதிரி இருக்குமா..இல்லை என்னை மாதிரி இருக்குமானு கேட்டு இருக்காரு. குஷ்புக்கு ஷாக்கா இருந்தாலும் அந்த Guts புடிச்சி இருந்துச்சாம். சுந்தர் “Man of the Words”னு சொல்ற குஷ்பூ, 5 வருஷ லவ்ல எங்கள நாங்களே நல்லா புரிஞ்சுக்கிட்டோம்.. லவ் எவ்வளவு இருக்கோ அவ்வளவு Friendshipஉம் இருக்கு முக்கியமா எங்களுக்குள்ள ஈகோ பார்க்கமாட்டோம்னு சொல்றாங்க!

குஷ்பூ - சுந்தர்!
குஷ்பூ – சுந்தர்!

ரோஜா – செல்வமணி!

சினிமால வர மாதிரி ஒரு லவ் ஸ்டோரி.. 13 வருஷம் வெய்ட் பண்ணி ரோஜாவை கல்யாணம் செஞ்சுக்கிட்டாராம் செல்வமணி.. எனக்கு ரோஜாவை பிடிச்சுருந்ததுச்சு.. அப்போ அவங்க ரொம்ப பிஸியான ஆர்டிஸ்ட்.. “எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சுருக்குது – நான் உன்னை நல்லா பார்த்துப்பேன் – உன் ஆசை தீர நடி என்னை பிடிச்சுருந்தா அப்பறம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேன். ரோஜாவோ ஒரு மனுஷன் எனக்காக 13 வருஷமா காத்துருக்காரு.. வேற என்னங்க வேணும்? எனக்கு அந்த நேர்மை புடிச்சுருந்தது க்ரீன் சிக்னல் கொடுத்துட்டேனு சொல்றாங்க!

ரோஜா - செல்வமணி!
ரோஜா – செல்வமணி

தேவயானி – ராஜகுமாரன்:

கல்யாணம் முடிச்சுட்டு ஊருக்கு திரும்ப வரும் போது பெரிய களேபரமே ஆயிப்போச்சுனு சொல்ற ராஜகுமாரன் – தேவயானி காதல் டூ கல்யாணம் கதை கிட்டதட்ட ஒரு சினிமா லவ் ஸ்டோரி தான்.. ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கு நடுவுல தான் இவங்க கல்யாணம் பண்ணாங்க. இப்போ வரைக்கும் தேவயானி வீட்ல அவங்ககூட சரியா பேசுறது இல்லையாம். எல்லா பிரச்னைக்களுக்கும் நடுவுல எங்க வாழ்க்கை நல்லா போகுது. மரியாதை குறைந்த இடத்துல என் மனைவி இருக்கவே மாட்டாங்க, அவங்க ஒரு Perfectionist-னு ஒரு பேட்டில பெருமையா சொல்லிருக்காரு ராஜக்குமாரன்.

தேவயானி - ராஜக்குமாரன்:
தேவயானி – ராஜக்குமாரன்:

சரண்யா – பொன்வண்ணன்!

’எங்களுடையது காதல் கல்யாணம்னு யாரு சொன்னா? இது பக்கா Arranged Marriage ஆனா, அவரு என்னை காதலிச்சாரு’னு ரொம்ப க்யூட்டா ஒரு பேட்டில சொல்லிருப்பாங்க சரண்யா பொன்வண்ணன். அவரு propose பண்ணப்போ எதோ தெரியாம உளருராருனுக்கூட நினைச்சாங்களாம். எவ்வளவு தெளிவா நேக்கா propose  பண்ணியிருக்காரு தெரியுமா?  ” ஒரு படம் பண்றேன்.. கால் ஷீட் வேணும்னு கேட்டு இருக்காரு.. எவ்வளவு நாள்னு சரண்யா கேட்டப்போ .. 70 வருஷம்னு சொல்லி அதிரிபுதிரி பண்ணியிருக்காரு. அது மட்டுமில்லா பொண்ணு பார்க்கும்போது சரண்யாவைத்தான் பார்க்கப்போறோம்னு அவரு வீட்டுல சொல்லவே இல்லையாம். காஃபி கொடுக்கும்போது ” கல்யாண பொண்ணு பார்க்க அப்படியே நடிகை சரண்யா மாதிரி இருக்காங்கள’னு பொன்வண்ணன் வீட்டுக்காரங்க சொன்னாங்களாம்.

சரண்யா - பொன்வண்ணன்!
சரண்யா – பொன்வண்ணன்!

இதுல உங்களுக்கு புடிச்ச ஜோடி யாருனு கமெண்ட்ல சொல்லுங்க..!

Also Read: சென்னை 28 விளாசிய ஆறு சிக்ஸர்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top